வால்மீகி ராமாயணத்தில் தமிழர்கள்.; 3000 ஆண்டு தமிழ் வரலாறு (Post No.7930)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7930

Date uploaded in London – 6 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சங்க கால தமிழர் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் மிகப்பழைய நூல் புறநானூறு. இதில் 358ஆவது பாடலைப் பாடியவர் பெயர் வான்மீகி . இவர் சம்ஸ்க்ருதத்தில் உலகப் புகழ்பெற்ற ராமாயணத்தை எழுதிய வால்மீகி என்று பலரும் நம்புவர். ஏனெனில் அவர் பாடும் பாடலின் பொருளும் அப்படிப்பட்டது. தவ  வாழ்வே பெரியது. இல்லற வாழ்வு கடுகு அளவு சின்னது. தவத்தை மேற்கொள்ள முடியாதோரே இல்லற வாழ்வை நாடுவர் என்கிறார். இவர் ‘ஒரிஜினல்’ வால்மீகியாக இருந்தால் தமிழர் வரலாறு திரேதாயுகத்துக்குப் போய்விடும்.ஆனால் இவர் பிற்காலத்தவர் என்பதை இவருடைய மொழிநடை காட்டிக் கொடுத்துவிடுகிறது. எப்படியாகிலும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச் சங்கத்தில் ஒரு புலவர் இந்தப் பெயருடன் உட்கார்ந்து பாடல் இயற்றினார் என்பது மிகச் சிறப்பு வாய்ந்தது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று அய்யங்கார்கள் தமிழின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றினர். கனக சபைப் பிள்ளை போலவே ஆங்கிலத்தில் தமிழர் பெருமையைப் பறைசாற்றியவர்கள் கிருஷ்ணசாமி அய்யங்காரும் பி.டி .ஸ்ரீனிவாச அய்யங்காரும் ஆவர். ஆயினும் தமிழர் பற்றிய தகவலைப் பரப்புவதில் சிகரத்தில் நின்றவர் மு.ராகவ அய்யங்கார்தான். பாண்டித்துரை தேவர் ஸ்தாபித்த மதுரை நாலாவது தமிழ்ச் சங்கம் நடத்திய செந்தமிழ் பத்திரிகையில் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். இதோ அவர் தரும் தகவல்கள்:-

வால்மீகியும் தமிழ் வழக்குகளும்

சோழ அரசர்க்கு ஆத்திமாலை உரித்தாகச் சொல்லப்பட்டுள்ளது இவர்கள் சூரிய வம்சத்தாராகவும் ஸ்ரீ ராமனுடைய முன்னோர்களையே இவர்களுடைய முன்னோராகவும் கூறப்படுதலை கலிங்கத்துப் பரணி முதலிய நூல்களால் அறிக

இச் சோழற்கு ஆத்தி சின்னமாகக் கூறப்பட்டிருத்தல் போலவே இராமர் வம்சத்திற்கும் ஆத்தி சின்னமாகக் கூறப்படுகிறது . இதனை வால்மீகம், அயோத்யா காண்டம் 84-ம் சருக்கத்தில், பரதனுடைய சைன்யத்தைப் பார்த்த குகன் இக்ஷ்வாகு வம்சத்து சக்கரவர்த்திகள் மலையாத்திக் கொடியுடைய மஹாரதம் – கோவிதார   த்வஜம் — இதோ தெரிகின்றது எனக்கூறுவதால் உணர்க.

இதனால் அவ்விக்ஷ்வாகு வமிசத்தவராகச் சொல்லப்படும் சோழர்கள் தம்முன்னோர் கொடியாகக் கொண்ட ஆத்தியையே தாம்  மாலையாகத் தரித்தவராதல் தெளியப்படும்.

இனிச் சேரர்க் கு பனம் பூ  மாலை கூறப்படுவதற்கும் வான்மிகத்தால் ஓர் பொருள் கொள்ளக் கிடக்கின்றது கிழக்கு, மேற்கு திசைகளின் எல்லையாக முத்தலையும்,பத்துத் தலையும் கொண்ட பனை மரங்கள் ஆண்டுத் தேவர்களால் நாட்டப்பட்டுள்ளன  என்று கிஷ்கிந்தா கா ண்டத்தில்  வானரங்களை நாடவிட்ட சருக்கங்களிற் காணப்படுகின்றது .

சேரர் மேற்றிசையாராதலின் கிழ மேலோடிய தேச முழுமைக்கும் தாங்களே உரியவரென்பதைச் சூ சிப்பதற்கு அத்திசைகளில் எல்லையாக வைத்த பனையைத் தங்கள் சின்னமாகக் கொண்டனர் எனல் தக்கது போலும் .

MY COMMENTS — என் கருத்து

ஏழு பொன் பனை மரங்கள்

ஆறு வருடங்களுக்கு முன்னால் ஜனவரி 27, 2014-ல் எழுதிய ‘பனை மரங்கள் வாழ்க’ கட்டுரையில் இராம பிரானுக்கு விபீஷணன் குட் பை (Good-Bye) சொல்லி ‘டாடா’ காட்டும் பொது 7 தங்க பனைமரங்கள் கொண்ட ஒரு மெமென்டோ (Memento) – நினைவுப் பரிசு கொடுத்தான் என்றும் இது ராமன் ஏழு மராமரங்களைத் துளைத்ததால் இருக்கலாம் என்றும் எழுதி இருந்தேன். ஆனால் ராகவ அய்யங்கார் கட்டுரையைப் படிக்கையில் இதுவும் காரணமாக இருக்கலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது. 7 பனை மரங்கள் தகவலை அடியில் இணைத்துள்ளேன்.

‘சோழர்கள் தமிழர்களா ?’  – என்று ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலை 15, 2013-ல் நான் எழுதிய கட்டுரையின் இணைப்பை அடியில் கொடுத்துள்ளேன் அதையும் படிக்கவும் . வடமேற்கிலுள்ள இந்தியப்   பகுதியிலிருந்து அவர்கள் வந்ததை புறநானுற்றின் பல பாடல்கள் தெளிவாகச் சொல்வதைக் காணவும்.

‘கரதளம்’ என்றால் பனை. இதிலிருந்துதான் கேரளம் என்ற சொல் உண்டானதோ என்றும் ஆராயவேண்டும்.

Xxx

தமிழ் மக்கள் பூச்சூடும் வழக்கம் பற்றி வால்மீகி

தமிழர்கள் தலையில் பூச்சூடும்  வழக்கம் பற்றி வால்மீகி பாடியிருக்கிறார் .

தமிழரசர் போர்க்குச் செல்லும்போது அதற்கென்று ஒரு வகைப்பூவும், தம் குலத்திற்கென்று அடையாளப்  பூவும் — ஆக இருவகைப் பூவுடையாரென்பது பழைய தமிழ் நூல்களால் அறியப்படுகின்றது. அன்றியும் ஆநிரை கவர்தல், நிரை மீட்சி முதலாக நிகழும் போர்த் தொழில்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு பூச்சூடி செல்லுதலும்  மரபாம். இப் பூ  பற்றியே வெட்சி, கரந்தை , உழிஞை என அப்போர்த்துறைகள் பெயர் பெறுதலும் காண்க

இவ்வாறே அகப்பொருட்டுறைகளாகிய புணர்தல், பிரிதல் முதலியவைகளும் குறிஞ்சி, பாலை என அந்நிலத்துக்கேற்ப பூப்பெயராலே வழங்கப்படும். இவற்றால் தென்னாட்டார் பூவணிதனிற் கொண்டிருந்த பெரு விருப்பம் புலனாம்

இவ்வழக்கத்தையே வான்மிகி முனிவர் அயோத்யா காண்டம் 96-ம் சர்க்கத்தில் பரதன் கூற்றில் வைத்து ,  “நமது யுத்த வீரர்கள் மேகங்களைப்  போன்ற கருத்த கேடயங்களுடன் தென்னாட்டாரைப்  போலத்  தலைக்கணியாக பூக்களைச்  சூடுகின்றனர்” — எனக்கூறுதல் கவனிக்கத்  தக்கது .

சேனை வீரர்கள் பூச்சூடுதற்குத் தென்னாட்டு மக்கள் சூடுதலை உவமையாக்குதலால் அம்மக்களை வீரராகக் கொள்ளுதலே பொருத்தம். இங்கனம் பூச்சூடுதல் தென்னாட்டிற்கு மிகக் சிறந்த வழக்கமென்பதை வால்மீகியார் நன்கறிந்து கூறுதல் கண்டு கொள்க.

—செந்தமிழ் தொகுதி – 8

கபாடபுரம்

இரண்டாவது தமிழ்ச் சங்கம் இருந்த இடம் கபாடபுரம் .

ஸீதையைத் தேடுவதற்காகப் போகும் வானர அணிகளுக்கு ஒவ்வொரு திசையிலும் உள்ள காடு, மலை, நகர, நதிகளைச் சொல்லுகையில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள இடங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஆந்திரர் , புண்ட்ரர் , சோழர், பாண்டியர், கேரளர் சொல்லப்படுகின்றன. மேற்காக செல்லுவோருக்கு முரசி பட்டணம் சொல்லப்படுகிறது. இது கேரள முசிறியாக இருக்கலாம்.

இவை கிரிப்பித் (Griffith) மொழிபெயர்ப்பில் இல்லாததால் சிலர் தென்னக ராமாயண இடைச் செருகல் என்பர் .

இதே போல இன்னும் ஒரு இடத்தில் பாண்டிய நாட்டின் கடற்கரையில் தங்கமும் முத்தும் பொருந்திய பெரிய (கவாடம்) கதவுகளைக் காண்பீர்கள் என்கிறார். இது எல்லா பதிப்புகளில் உளது .

ததோ ஹேமமயம் திவ்யம் முக்தாமணி விபூஷிதம்

யுக்தம் கவாடம் பாண்ட்யானாம் கடா த்தரக்ஷ்யத வானராஹா

இதற்கு வியாக்கியானம் எழுதிய கோவி ந்தராஜர் இதை கபாடபுரம்  என்ற பாண்டிய நகரம் என்று எழுதுகிறார் . அவர் அப்படி சொல்வதற்கு பாண்டிய கவாடம் என்ற அர்த்த சாஸ்திர குறிப்பு உதவும். அங்கே சாணக்கியர் முத்து பற்றிச் சொ ல்லுகையில்  பாண்டிய கவாடம் என்பது கொற்கை முத்து என்ற பொருளில் வருகிறது.

இது தவிர விராதன் என்ற அசுரன் தன்னைப் புதைக்கச் சொன்னதையும் சிலர் தென்னக வழக்கம் என்பர். ஆனால் அது பசையற்ற வாதம் என்பது புறநானூ ற்றை யும் ம் ரிக் வேதத்தையும்  பயின்றோருக்குத் தெரியும். ரிக் வேதத்தில் கூட  சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லை. மனு ஸ்ம்ருதியும் இது பற்றி கதைக்கவே இல்லை. ஆனால் சங்கத் தமிழ் நூலில் பூதப்பாண்டியன் பெருந்தேவி எல்லோரையும் புறாக்கணித்து விட்டு கணவன் சிதையில் பாய்ந்து உயிர் துறந்ததை படிக்கிறோம். ஆக வேதத்திலும் சங்கத் தமிழ் நூல்களிலும் புதைப்பதும் எரிப்பதும் உள்ளதால் விராதன் உதாரணம் பசையற்றது.

XXX

வடக்கிருத்தல்

வடக்கிருத்தல் என்பது  வட திசை புனிதமானது–என்னும் நம்பிக்கையில் பிறந்தது இதை ராமாயணம், மஹாபாரதம், புறநானூ ற், காண்கிறோம்  .புறம் 65,66 பாடல்களிலும் 214 முதல் 220  வரையுள்ள பாடல்களிலும் வடக்கிருத்தல் போற்றப்படுகிறது. சேரன் பெருஞ் சேரலாதன், கோப்பெருஞ் சோழன் மற்றும் சோழனை ஆதரிக்கும் புலவர்கள் வட திசை நோக்கி அமர்ந்து உயிர் துறந்தார்கள் .

ராமாயணத்தில் அங்கதன் பற்றி இதே கருத்து வருகிறது அவன் எங்கு தேடியும் சீதையைக் கண்டு பிடிக்க முடியாததால் மற்ற வானரங்களுடன் சேர்ந்து உயிர் துறக்க எண்ணுகிறான். பூமியில் தெற்கு முகமாக தர்ப்பையைப் பரப்பி கிழக்கு நோக்கி இருந்து கொண்டு பி’ராயோபவேச விரதம்’ பூண்டான் என்று கிஷ்கிந்தா காண்டம் 56ம் சர்க்கத்தில் வருகிறது

மஹா பாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும், ஒரு நாய் புடை சூழ,வடதிசை நோக்கி பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர் துறக்கின்றனர் . மொத்தத்தில் இவைகளைக் கூட்டிக்கழித்துப்  பார்த்தோமானால் வட திசை புனிதமானது- அதை நோக்கி உட்கார்ந்தோ நடந்தோ உயிர்விடுதல் நலம் பயக்கும் என்பதாகும்

இவ்வாறு ஒரே மாதிரி நம்பிக்கைகள் இருந்ததால் இவைகளை பழங்கா லத்தவை என்று கணக்கிட  முடிகிறது .

XXX

சோழர்கள் தமிழர்களா? | Tamil and Vedas

tamilandvedas.com › 2013/07/15

15 Jul 2013 – சோழர்களின் மூதாதையர்கள் இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதில் இருந்து வந்தவர்கள்என்று தோன்றுகிறது. தமிழர்களின் …


தமிழர்கள் இழந்த நாடுகளும் …

tamilandvedas.com › 2015/02/15

15 Feb 2015 – தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும் … —இளங்கோ தந்த இதே செய்தியை முல்லைக் கலியில் சோழன் நல்லுருத்திரனும் (கலித் …


மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் …

tamilandvedas.com › 2014/09/19

  1.  

19 Sep 2014 – இவர்கள் யார் என்பதை ஆராய்வதும் ஏலாரன் (மனுநீதிச் சோழன்) … அனுப்பி, இது உன் நாடு, முதலில் தமிழர்களை விரட்டு என்றான்.


மகாவம்சம்-4 | Tamil and Vedas

tamilandvedas.com › tag › மகா…

  1.  

16 Sep 2014 – மகாவம்சத்தில் தமிழர் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன. சங்க காலப் … சங்க இலக்கியப் புலவர்களோ நிகழ்ச்சிகளோ அல்ல:–. 1. … (( கீழே காண்க எண் 11: கோப்பெருஞ் சோழன் கதை)).


2500 ஆண்டுக்கு முன் தமிழர் …

tamilandvedas.com › 2014/09/17 › 2…

  1.  

17 Sep 2014 – கட்டுரையின் முதல் பகுதியில் மனுநீதிச் சோழன், குமணன் முதலிய 16 விஷயங்களைக் கண்டோம். இது … 2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு! … இப்போதைய மதுரை அல்ல).


பனை மரங்கள் வாழ்க! | Tamil and Vedas

tamilandvedas.com › 2014/01/27

27 Jan 2014 – பனை மரம் தண்ணீர் ஊற்றாமலேயே பழம் தருகிறது. அதே போல … இந்த ஏழு பொன் பனை மரங்கள் என்ன, ஏன் என்று விளக்கப்படவில்லை. இது …


இலக்கியத்தில் மரங்கள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › இலக்…

பனை மரம் தண்ணீர் ஊற்றாமலேயே பழம் தருகிறது. அதே போல … இந்த ஏழு பொன் பனை மரங்கள் என்ன, ஏன் என்று விளக்கப்படவில்லை. இது ஒரு …

tags – வால்மீகி ,தமிழர்கள், கபாடபுரம், பூச்சூடும் வழக்கம்,ஆத்திமாலை, வடக்கிருத்தல்

—subham —

ஹிந்தி படப் பாடல்கள் – 28 – முகேஷின் இரண்டு முத்துக்கள்! (Post No.7929)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7929

Date uploaded in London – – – 6 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 28 – முகேஷின் இரண்டு முத்துக்கள்!

R. Nanjappa

முகேஷின் இரண்டு முத்துக்கள்!

பொதுவாக பெரிய ஹிட் பாடல்கள் பெரிய ஸ்டார் நடிகர் மீது படமாக்கப் பட்டதாகவே இருக்கும். இப்படி அமையாத இடத்தில் பல சிறந்த பாட்டுக்களும் உரிய மதிப்பைப் பெறுவதில்லை. இசைஞர்களும் பெரிய நட்சத்திர நடிகர் இல்லாத படத்திற்கு எவ்வளவுதான் நன்றாக இசையமைத்தாலும் உரிய கவுரவம் பெறுவதில்லை. இசைஞர்களுக்குப் பின்னால் பெரிய தயாரிப்பாளர் இருக்கவேண்டும். இல்லையெனில் அவர்களும் முதல் வரிசையில் வைத்து எண்ணப்படமாட்டார்கள். இவ்வளவு தடைகளையும் மீறி சில பாடல்கள் அழியா வரம் பெற்று நிற்கின்றன இவை ICONIC. அந்தஸ்தைப் பெறுகின்றன. அப்படிப்பட்ட இரு பாடல்களை இன்று பார்க்கலாம். இரண்டும் முகேஷ் பாடியவை. நல்ல ராகங்களில் அமைந்தவை.

iconic

adjective relating to or characteristic of a famous person or thing that represents something of importance:    AMERICAN DICTIONARY.

சாரங்கா தேரீ யாத் மே


सारंगा तेरी याद में नैन हुए बेचैन
मधुर तुम्हारे मिलन बिना
दिन कटते नहीं रैन, हो
सारंगा तेरी याद में..

ஸாரங்கா தேரீ யாத் மே நைன் ஹுவே பேசைன்

மதுர் தும்ஹாரே மிலன் பினா.

தின் கட் தே நி ரைன், ஹோ

சாரங்கா தேரீ யாத் மே

ஸாரங்கா, உன் நினைவில் கண்கள் நிம்மதியிழந்து விட்டன

உன்னுடைய இனிய உருவம் அருகில் இல்லாமல்

பகலோ இரவோ கழிவது கடினமாகிவிட்டது

वो अम्बुवा का झूलना, वो पीपल की छाँव
घूँघट में जब चाँद था, मेहंदी लगी थी पांव
आज उजड़ के रह गया, वो सपनों का गाँव
सारंगा तेरी याद में

வோ அம்புவாகா ஜூல்னா, பீபல் கீ சாவ்(ன்)

கூங்கட் மே ஜப் சாந்த் தா, மேஹந்தீ லகீ தீ பாவ்(ன்)

ஆஜ் உஜட் கே ரஹ் கயா, ஸப்னோ(ன்) கா காவ்(ன்)

ஸாரங்கா தேரீ யாத் மே..

அந்த மாமரத்தில் ஊஞ்சலாடியது,

அந்த அரச மரத்தின்  நிழல்,

சேலையின் பகுதி மறைத்திருந்த அந்த  நிலவு போன்ற முகம்,

மருதாணி பூசியிருந்த பாதங்கள்

இவையெல்லாம் இன்று மறைந்துவிட்டன

அந்த கிராமம் கனவாகிவிட்டது!

ஸாரங்கா, உன் நினைவில்……


संग तुम्हारे दो घड़ी, बीत गये जो पल
जल भरके मेरे नैन में, आज हुए ओझल
सुख लेके दुःख दे गयीं, दो अखियाँ चंचल
सारंगा तेरी याद में…  

ஸங்க் தும்ஹாரே தோ கடீ, பீத் கயே ஜோ பல்

ஜல் பர் கே மேரே நைன் மே, ஆஜ் ஹுயீ ஓஜல்,

சுக் லேகே துக் தே கயீ, தோ அகியா(ன்) சலத்

ஸாரங்கா தேரீ யாத் மே….

உன்னுடன் கழித்த  இரண்டு வினாடிகள்அவை சென்றுவிட்டன

கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டதுபார்வை மறைக்கிறது!

உன்னுடைய குறுகுறுத்த  இரு கண்கள்சுகத்தை எடுத்துக்கொண்டு 

துக்கத்தைத் தந்து சென்றன

ஸாரங்கா உன் நினைவில்…..

Song: Saranga teri yaad mein Film: Saranga 1961 Lyrics: Bharat Vyas

Music: Sardar Malik  Singer: Mukesh  Raga: Yaman Kalyan

இன்று சாரங்கா படம் யாருக்கும் தெரியாது! ஸர்தார் மாலிக்கும் யாருக்கும் தெரியாது-அனு மாலிக்கின் தந்தை என்றால் தெரியுமோ என்னவோ! இந்தப் பாட்டு ஹிந்தி திரை இசையில் ஈடுபாடுள்ள அனைவருக்கும் தெரியும்!

இந்தப் பாட்டு சுதேஷ் குமார் என்ற சாதாரண நடிகரின் மேல் படமாக்கப்பட்டது! படமும் B grade தான். ஆனால் பாட்டு பிரபலமாகி இன்றளவும் விரும்பிக் கேட்கப்பட்டு வருகிறது.

இசையமைத்த ஸர்தார் மாலிக் உஸ்தான் அலாவுதீன் கானிடம் முறையாக சங்கீதம் கற்றவர். உதய் சங்கரிடம் நடனப் பயிற்சி பெற்றவர் {அப்போது இவருடன் அங்கு படித்தவர் குரு தத்!]. இந்தப் பாட்டு அவரைக் கவர்ந்தது முகேஷை பாட வைப்பது என்று தீர்மானித்தார். பாடலை முகேஷிடம் காட்ட, அவருக்கும் பிடித்துவிட்டது..

ஆனால் துறையில் முகேஷ் ஸ்வரத்தில் நின்று பாடமாட்டார். பேசுர் (பேசுர் – பே – சுர் – சுரம் இல்லாமல் இருத்தல் அதாவது சுரத்தை விட்டு நழுவுதல் ) என்று பேச்சு இருந்தது! அவரை ரிஹர்சல் வாங்குவதே  கடினம் என்பார்கள்.

யமன் கல்யாண் ராகத்தில் இப்பாடலை அமைத்த ஸர்தார் மாலிக் நேரடியாகவே முகேஷிடம் சொல்லிவிட்டார்: “இதோ பார், உன்னைப்பற்றி இப்படிப் பேச்சு இருக்கிறது. நீ இந்தப் பாடலைப் பாட வேண்டுமானால் அதிகம் ரிஹர்சலுக்கு வரவேண்டும்! ” முகேஷும் வரிந்து கட்டிக்கொண்டு தயாரானார். அந்த வெயில் காலத்தில் ஜுஹுவில் இருந்த ஸர்தார் மாலிக் வீட்டிற்கு தினமும் செல்வார். இருவரும் அறையில் ஃபேனை அணைத்து விட்டு அமர்ந்து விடுவார்கள். ரிஹர்ஸல் முடிந்து எழுந்து வரும்போது இருவரும் வியர்வையில் தெப்பமாக நனைந்திருப்பார்கள்.. [இந்தத் தகவல்  ஸர்தார் மகன் அனு மாலிக்கே சொன்னது-அப்போது சிறுவன், வீட்டில் கவனித்தது.] முகேஷுக்கு ஒவ்வொரு ஸ்வரமும் அத்துபடியாகி விட்டது. பாடல் பதிவாகி, ரிலீசானவுடன் பெரிய ஹிட் ஆயிற்று!

இதில் இன்னொரு விசேஷம்- இந்தப் பாடலின் சில வரிகளை முஹம்மது ரஃபியும் படத்தில் பாடியிருக்கிறார். பின்னணி எதுவும் இல்லாமல் இனிய குரல் மட்டும் ஒலிக்கும்! 

யமன் கல்யாண் ராகத்தில் அமைந்த இந்தப் பாட்டு அந்த ராகத்தில் அமைந்த பாடல்களிலேயே முதல் இடத்தைப் பெற்றுவிட்டது! 60 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் மக்கள் மறக்காத பாடல்! அதன் பின் எத்தனை கடின  உழைப்பு!

ஆனால் மக்கள் ஸர்தார் மாலிக்கை மறந்துவிட்டார்கள்! 1965க்குப் பிறகு இவருக்கு வேலையில்லை! தன்மானம் மிக்க இவர் யாரையும் தேடிப் போகவில்லை. மனமுடைந்த அவர் தன்னிடமிருந்த எல்லா ரெகார்டுகளையும் கடலில் வீசி எறிந்துவிட்டார்!

பாடல் எழுதிய கவி பரத் வ்யாஸ் அதிக உருது கலப்பில்லாமல் ஹிந்தியிலேயே எழுதுவார். இந்தப் பாடலில் கிராமியச் சொற்களையே பயன்படுத்தி இருக்கிறார். 

இந்தப் பாடல் ஸர்தார் மாலிக், பரத் வ்யாஸ். முகேஷ் ஆகிய மூவருக்கும் ஒரு மைல்கல்! முகேஷ் பாடிய டாப் 10 பாடல்களில் இது நிச்சயம் இடம் பெறும்!

நான்கு நிமிஷம் வரும் இந்தப் பாடலுக்குப்பின் எத்தனை கடின உழைப்பு இருக்கிறது! அதுதான் அப் பொற்காலப் பாடல்கள் இன்றும் நிலைத்திருக்கின்றன! இப்பெரியவர்களுக்கு நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாதுதானே!

The heights by great men reached and kept were not attained by sudden flight, but they while their companions slept, were toiling upward in the night.

              -Henry Wadsworth Longfellow

இன்னொரு பாடல்

லௌட் கே ஆஜா மேரே மீத்

लौट के आजा मेरे मीत
तुझे मेरे गीत बुलाते हैं
मेरा सूना पड़ा रे संगीत
तुझे मेरे गीत बुलाते हैं

, லௌட் கே ஆஜா மேரே மீத்,

துஜே மேரே கீத் புலாதே ஹை

மேரா ஸூனா படாரே ஸங்கீத்

துஜே மேரே கீத் புலாதே ஹை

அன்பே! திரும்பி வா!

உன்னை என் கீதம் அழைக்கிறது

(நீ இல்லாமல்) என் சங்கீதம் ஒன்றுமில்லாமல் இருக்கிறது

உன்னை என் கீதம் அழைக்கிறது!

बरसे गगन मेरे, बरसे नयन
देखो तरसे है मन, अब तो आजा
शीतल पवन ये लगाये अगन
हो सजन अब तो मुखड़ा दिखा जा
तूने भली रे निभायी प्रीत
तुझे मेरे गीत..

பர்ஸே.ககன் மேரே பர்ஸே நயன்

தேகோ தர்ஸே ஹை மன் அப் தோ ஆஜா

ஸீதல் பவன் யே லகாயே அகன்

ஹோ ஸஜன் அப் தோ முக்டா திகா ஜா

தூனே பலி ரே நிபாயீ ப்ரீத்

துஜே மேரே கீத் புலாதீ ஹை

வானிலிருந்து மழை கொட்டுகிறது, என் கண்களும் நீரைப் பொழிகின்றன

மனம் தடுமாறுகிறது, பார்! இப்பொழுதாவது வந்துவிடு

வீசும் குளிர்ந்த காற்று என்னை எரிக்கிறது

அன்பே! இப்பொழுதாவது உன் முகத்தைக் காட்டு

இது தானா நீ உன் வாக்கைக் காப்பாற்றும் லட்சணம்!

உன்னை என் கீதம் அழைக்கிறது!

इक पल है हँसना, इक पल है रोना
कैसा है जीवन का खेला
इक पल है मिलना, इक पल बिछुड़ना
दुनिया है दो दिन का मेला
ये घडी जाए बीत

तुझे मेरे गीत… 

இக் பல் ஹை (ன்)ஸ்னா இக் பல் ஹை ரோனா

கைஸா ஹை ஜீவன் கா கேலா

இக் பல் ஹை மில்னா, இக் பல் பிசட்னா

துனியா ஹை தோ தின் கா மேலா

யே கடீ ஜாயே பீத்

துஜே மேரே கீத் புலா தே ஹை

ஒரு கணம் சிரிப்பு, ஒரு கணம் அழுகை

எப்படி இருக்கிறது பார் வாழ்க்கை என்னும் விளையாட்டு

ஒரு கணம் உறவு, ஒரு கணம் பிரிவு

இந்த உலகம் (கூடிப் பிரியும்) இரண்டு நாள் சந்தைக்கடை போன்றது

இந்தப் பொழுது வீணே கழியவேண்டாம்

உன்னை என் கீதம் அழைக்கிறது

Song: Aa laut ke aaja mere meet Film: Rani Roopmati 1957

Lyrics: Bharat Vyas 

Music: S.N. Tripathi   Raag: Madhmad Sarang

இத்தகைய பாட்டுக்கள் மனதை நிரப்பி, வாயை அடைத்து விடுகின்றன-ஏதும் பேசத் தோன்றுவதில்லை!

பரத் வ்யாஸின் அரிய கவிதைக்கேற்ற உயர்ந்த இசை! முகேஷின் குரலில் இப்பாடலின் பாவம் இயல்பாகவே – நன்றாக வெளிப்படுகிறது. அத்துடன் மதுமத் ஸாரங்க் ராகத்தின் பாவமும் இசைந்து ஒலிக்கிறது. இது மாலை வேளையில் பாடவேண்டிய ராகம். எத்தனை அருமையான மெட்டு!

பரத் வ்யாஸ் வழக்கம்போல் எளிய ஹிந்தியில் கவிதை படைத்துவிட்டார். கடைசி பத்தியில் தத்துவத்திற்குத் .தாவுகிறார். வாழ்க்கை நிலையில்லாதது என்பதை உணர்ந்தால் தான் காலத்தின் அருமை புரியும். இதை நம் கவிகள் பலவிதங்களில் சொல்கிறார்கள். 

எஸ்.என். திரிபாதி  இசையுலகில் ஒரு ஜாம்பவான். பல படங்களில் தரமான இசை வழங்கியிருக்கிறார். 

முகேஷ் தன் சாஸ்திரீய இசைத் திறமையை இப்பாடல் வாயிலாக நிலை நாட்டியிருக்கிறார். காலத்தால் அழியாத பாடல். முகேஷின் தலையாய 10 பாடல்களில்  நிச்சயம் இதுவும் இடம்பெறும்.

இந்தப் பாடல் லதா மங்கேஷ்கர் குரலிலும் படத்தில் வருகிறது, ஆனால் எடுபடவில்லை!

மதுமதி 1958 படத்தில் வரும் “சட் கயோ பாபி பிச்சுவா” என்ற பாடலும் [இசை: சலீல் சௌதுரி; பாடியது: லதா-மன்னா டே] இந்த ராகத்தில் அமைந்தது, வேறு மெட்டு!

பாடல்கள் ராகத்தில் அமைவது பெரிதல்ல- அவை நல்ல கவிதையாகவும் இருந்து, ஜனரஞ்சகமாகவும்   அமைவது அவ்வளவு எளிதல்ல. இவ்விரண்டு பாடல்களும் முகேஷுக்குக் கிடைத்த நன்முத்துக்கள்!

tags — ஹிந்தி படப் பாடல்கள் – 28 , முகேஷ்

***

யாளி! (Post No7928)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7928

Date uploaded in London – – – 6 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

25-12-2019 அன்று கட்டுரை எண் 7379 – ‘கற்பணிக் கோவிலும் எண்கோணமான குளமும் அமைத்த கட்டி முதலி’ என்ற கட்டுரையில் யாளி மீது அமர்ந்த வீரனின் படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ணுற்ற அன்பர் கிருஷ்ணமூர்த்தி, “அற்புதமான விசயங்கள். இதில் சில வீரர்கள் ஆரோகணித்து இருக்கும் யாளி என்ற விலங்கினத்தைப் பற்றி ஏதேனும் ஆய்வுகள் இருந்தால் எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தார். தனிக் கட்டுரையில் தருவதாகச் சொல்லி இருந்தேன். கட்டுரை இதோ:

யாளி!

ச.நாகராஜன்

yali

தென்னிந்தியக் கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் விசித்திரமான ஒரு சிற்பத்தை நம்மால் காண முடியும்.

யாளி என்று அழைக்கப்படும் இந்த சிற்பத்தில் சிங்கம், யானை, குதிரை ஆகிய மூன்று மிருகங்களின் சேர்க்கை கொண்டுள்ள ஒரு விசித்திர மிருகம் தோன்றும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் யாளியின் சிற்பம் உள்ளது.

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் யாளியின் சிற்பம் உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலும் யாளியைக் காணலாம்.

இதே போல பெரிய கோவில்களில் பிரதான மண்டபங்களில் யாளியின் சிற்பத்தைப் பார்க்கலாம்.

ஒரு காலத்தில் இது போன்ற மிருகங்கள் இருந்திருக்கலாமோ என்ற ஊகமும், ஆராய்ச்சியும் ஒரு புறம் இருக்க, இந்த விசித்திரமான மிருகம் இந்திய இலக்கியத்தில் இடம் பெறும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

வாஸ்து சாஸ்திரத்தில் பதினாறு விதமான யாளி சொல்லப்படுகிறது.

யாளியில் பல்வேறு அமைப்புகள் உள்ளன.

சுமார் 48 யாளியின் படங்களை பின்ட்ரெஸ்ட் சித்திரங்களில் காணலாம். யாளிகளின் தொகுப்பு இது எனலாம்.

இன்னும் நூற்றுக்கணக்கில் யாளியின் சிற்பங்களைத் தொகுத்துச் சேர்க்க முடியும்.

வியாலம், வியாழம், விதலம் என்றெல்லாம் கூட யாளி கூறப்படுவதுண்டு.

யானைத்தலை கொண்ட கஜ வியாலம், சிங்கத் தலை கொண்ட சிம்ம வியாலம், குதிரைத் தலை கொண்ட அஸ்வ வியாலம், மனிதத் தலை கொண்ட நிர் வியாலம், நாயின் தலை கொண்ட ஸ்வான வியாலம், பாம்பைக் கொண்டுள்ள யாளி என இப்படிப் பல சிற்பங்களைக் காண முடியும்.

சிம்ம யாளியை குஜராத்தில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மெஹ்ஸனா கோவிலில் காணலாம்.

கஜ யாளியை கஜுராஹோவில்  பார்ஸ்வநாத் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் காணலாம்.

முதலையின் மீது ஆரோகணம் செய்யும் யாளியையும் கூடக் காணலாம்.

இப்படிப் பல்வேறு அமைப்புகளைக் காண்பிக்கும் சித்திரங்கள் பாரதம் முழுவதும் உள்ளன.

யாளியின் காலில் மிதிக்கப்பட்டு இருக்கும் மனிதனை வைத்து யாளி இயற்கையின் மகத்தான சக்தி என்றும் மனிதன் இப்படிப்பட்ட சக்திகளுடன் போராட வேண்டியிருக்கிறது என்றும் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது.

இந்த யாளியின்  மீது ஏறி ஆரோகணிக்கும் வீரர்களையும் சில சிற்பங்களில் காண்கிறோம்.

அந்தக் காலத்தில் கஜ கேசரி போன்ற பட்டங்களை இப்படி யாளி போன்ற மிருகங்களை அடக்கி வென்று அதன் மீது அமர்ந்து ஆரோகணிக்கும் வீரர்களுக்கு மட்டுமே தருவர் என சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அதி பயங்கர மிருகமான யாளியை வென்றவர் உண்மையில் சிறந்த வீரர் தானே!

இன்னொரு கருத்து யாளி கோவிலைக் காக்கும் முக்கிய அம்சம் என்று கூறுகிறது.

சங்க இலக்கியங்களில் யாளி பற்றிய குறிப்புகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக நற்றிணையில் (பாடல் 205) இளநாகனார் பாடிய கீழ்க்கண்ட பாடலைக் கூறலாம்.

அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து

ஆளி நன் மான், வேட்டு எழுகோள் உகிர்ப்

பூம் பொறி உழுவை தொலைச்சிய வைந் நுதி

ஏந்து வெண் கோட்டு வயக் களிறு இழுக்கும்

துன் அருங்கானம் என்னாய் நீயே

குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய

ஆள் வினைக்கு அகறி ஆயின் இன்றொடு

போயின்று கொல்லோ தானே, படப்பைக்

கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்

நீர் மலி கதழ் பெயல் தலைஇய

ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே

தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னதாகவோ அல்லது தோழி தலைவனிடம் சொன்னதாகவோ அமைந்த இந்தப் பாடல்

இதில் ஆளி என்ற விலங்கு புலியோடு சண்டை போட்டு கொல்லப்பட்ட யானையை இழுத்துச் செல்லும் என்பது கூறப்படுகிறது. ஆளி பயங்கரமான ஒரு விலங்கு என்பதை இதில் காணலாம்.

“கடுமையான கானகம் வழியே மலைச் சரிவில் நீ செல்ல வேண்டும். அங்கு நீர்வீழ்ச்சிகள் ஆர்ப்பரிக்கும். அங்கு புலியால் கொல்லப்பட்ட யானையை ஆளி இழுத்துச் செல்லும். செல்வத்தைச் சேர்க்கக் கருதி நீ சென்றால் அழகிய நிறம் கொண்ட இந்தக் கன்னியின் அழகு இன்றொடு உன்னுடன் போய் விடும் அல்லவா!” என்பது இந்தப் பாடலின் பொருள்.

அடுத்து பொருநராற்றுப்படையில் 139 முதல் 142 வரிகளைப் பார்ப்போம்

ஆளி நன்மான் அணங்குடைக் குருளை

மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி

முலைக்கோள் விடா அ மாத்திரை ஞெரேரென

தலைகோள் வேட்டம் களிறு அட்டா அங்கு

இதில் வரும் ஆளியை மான் என்று பொருள் கொள்வர்.

சுமார் 25000 ஆண்டுகளுக்கு முன்னர் யாளி இந்தியாவில் இருந்திருக்கலாம் என ஒரு ஊக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. (டைனோஸர் இனம் அழிந்தது போல யாளியும் அழிந்து விட்டதோ?!)

யாளியை ஹிந்து புராணங்கள் கூறும் கின்னரர், யக்ஷர், கந்தர்வர், அப்ஸரஸ்கள், திக்பாலர்கள் வரிசையில் சேர்த்துப் பேசப்படுவதும் உண்டு.

எது எப்படியானாலும் யாளியின் சிற்பத்தை எந்தக் கோவிலில் கண்டாலும் அதை வியப்புடனும், பயத்துடனும் சில நிமிடங்கள் பார்க்காமல் அகல முடியாது!

***

yali vahana

புருஷோத்தம கோப்ரித், சர்வேஷ் காந்த் தாகூர் உள்ளிட்ட பல ஆர்வலர்கள் யாளி பற்றிய தங்கள் கருத்துக்களை இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர். படிக்க சுவையாக உள்ள பல செய்திகளை இணையதளத்தில் காணலாம்.

Vedic Lion around the World! | Tamil and Vedastamilandvedas.com › 2014/11/09 › vedic-lion-around-t…

9 Nov 2014 – Yali in Hindu temples. English word Leo is derived from Yali. Ariel = Ari Hari is a Sanskrit word for lion. Hebrew and Tamil use this word as Ari.

tag — யாளி

—-subham—

AGASTYA’S TRAVEL TO KARAI TIVU IN SRI LANKA FROM KASI (Post No.7927)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7927

Date uploaded in London – 5 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Jataka Tales in Pali language gives Buddha’s previous life as Bodhi satva. There are over 500 tales in the collection. All religious fanatics use the previous beliefs, customs and stories of the peoples to convert them to their religion . Buddhists were the first people to abuse Hindu stories. They have shown Ramayana and Mahabharata as Buddhist stories in the Jataka tales. To take revenge upon them 1000 years later, Jayadeva of Orissa made Buddha himself an avatar of Lord Vishnu and that finished the Buddhism in the land of its birth.

But there are some benefits in such thefts. If foreigners did not plunder Indian treasures and take them to their countries and display them beautifully in London, Paris and New York Museums, we wouldn’t know anything about our own treasures. All would have been melted by our own people. In the same way Jataka tales, though pirated from the Hindus 2500 years ago, show the ancient life of Hindus in minute details.

Panini’s grammar book Asthadyayi , Kautilya’s Arthashastra and the Hindu epics portray the life that was 3000 years ago. We have complimentary and supplementary information from the Jataka tales. Three or four Jataka tales and some episodes in Hindu epics give very interesting details about Tamil culture. Two Tamil scholars M. Raghava Iyengar and P.T.Srinivasa Iyengar have listed those references in books and periodicals.

Now let’s look at the Jataka Tales where we get extra accounts about the Tamils.

The tales, dated to approximately fourth century BCE, speak of voyages of merchants to Tambapanni that is Sri Lanka. The Yakshinis, who were cannibals, lived in the island and Buddha civilised them. According to the Jataka tales the Yaksini women attract the shipwrecked people, marry them and then kill and eat them.

These Yakshinis scoured the coast from Kalyani to Nagadwipa for victims according to Valaahassa Jataka No 196.

Not withstanding the fact that the Island was infested with Yakshinis, a party of men travelled to Ceylon and there became sanyasis according to Hattipala Jataka No. 509.

Nagdwipa and Tambapanni were few names given to Ceylon in Jataka tales.

The Buddha himself when he was born as a bowman, learnt Vedas and completed his education at Takshasila and went to the Andhra country for practical experience according to Bhimasena Jataka No.80.

There is another Seri vanya Jataka which may refer to Sera country, modern Kerala and this is Jataka tale No.3.  Buddha was born as a dealer in pots and pans in the Seri country. In his travels as a hawker he crossed the river Talavaha and reached Andhapura. It may be Andhra. Sera country is not far from the Andhra country.

But more interesting is the Akitti Jataka numbered 480.

Bodhi satva, the future Buddha, was born as a Brahmin in Kasi, also known as Varanasi. He was the son of Brahmana Maha Sala and his name was Akitti (Agastya) . He turned an ascetic and along with his sister Yasavati went to a place three leagues from Kasi; but to escape from the benefactions of his admirers, he left the place by himself and went to the kingdom of Damila (Tamil Nadu), where he dwelt in a garden near Kavera patina.

Kaveri pumpattinam was a very famous port before it was devoured by the sea. It was at the place where Kaveri River enters the sea. River Kaveri is considered the daughter of Kavara rishi. It was the capital of Chola kingdom at one time .

Here too, Akitti was pestered by admirers and went to Kara dipa, also called Ahi dipa near the island of Tambapanni. There Akitti reached omniscience. This Akitti is Agastya of Vedas add Puranas.

Karai Tivu and Naga Tivu are very near Jaffna in Sri Lanka.

Sri Lankans believe that Buddha visited the island at least once.

Tivu is the Tamilised form of Sanskrit word Dwipa, which means island.

Agastya is not a personal name but a family (Gotra) name and so we come across many Agastyas; so one must be careful in dating him. From 6000 year old Rig Veda to 17th 18th century Siddhas we hear about so many Agastyas.

Kaveri- Kakam (crow)- Agastya Story is very popular among Tamils.

Looking at this story with Mahavamsa episode in the background we can be sure that Tamils were a civilised lot when Buddha was alive.

I will give the Tamil Stories from Mahavamsa and Valmiki Ramayana separately.

tags– Agastya, Kaveri, Karai Tivu, Kasi, Sri Lanka

–subham–

காசி முதல் காரைத் தீவு வரை அகஸ்தியர் பயணம், மிகப்பழைய நூல் தகவல் (Post No.7926)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7926

Date uploaded in London – 5 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

தமிழர்கள் பற்றி புத்த ஜாதகக் கதைகள் சொல்லும் அதிசய விஷயங்கள்

காசி முதல் காரைத் தீவு வரை அகஸ்தியர் பயணம், மிகப்பழைய நூல் தகவல் (Post No.7926)

இலங்கை சரித்திரத்தைச் சொல்லும் மஹாவம்சம் என்னும் பாலி மொழி நூல் சொல்லும் அதிசய விஷயங்களை  சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பல கட்டுரைகளாகத் தந்தேன். சுருக்கமாகச்  சொல்ல வேண்டுமானால் சிங்களவர்கள் என்னும் இனத்தவர், 50 சதம் தமிழர், 50 சதம் வங்களியர் . 2600 ஆண்டுகளுக்கு முன்னர் அடாத பாவச் செயல்களைச் செய்த வங்காள – ஒரிஸ்ஸா பகுதி மன்னன் விஜயனை நாடு கடத்தினர். அவன் பெரிய கும்பலுடன் முதலில் குஜராத்துக்குப் போய்விட்டு மறு கப்பல் ஏறி இலங்கையில் இறங்கினான்.

அங்கே மனிதர்களை ஏமாற்றி கல்யாணம் செய்து அடித்துக் கொல்லும் யக்ஷிணி இனத்தைச் சேர்ந்த அழகி குவேனியை மனம் புரிந்தான். அங்குள்ள பிராஹ்மணர்கள் “இது க்ஷத்திரிய தர்மத்துக்கு முரண் ஆனது; ஆகையால் பக்கத்திலுள்ள பாண்டிய நாட்டு மதுரையில் பெண் எடு” என்று அறிவுறுத்த மதுரை மாநகர விதிகளில் தண்டோரா போடப்பட்டது. உடனே மன்னன் மகள், மந்திரி மகள்கள் , சேனாதிபதிகளின் மகள்கள் அனைவரும் புறப்பட்டு இலங்கைக்குச் சென்று  அங்கிருந்த வங்காளி – ஒரிஸ்ஸா / கலிங்க கும்பலை கல்யாணம் செய்தனர். இதுவே அதாவது ‘உறவினில் fifty பிப்டி / உதட்டினில் fifty பிப்டி’ என்று கலப்பட மணத்தில் முடிந்தது ;இப்படி கலப்படத்தில் பிறந்தது  சிங்களவர்   இனம் என்பதை மஹா வம்சம் செப்பும். ஆனால் இது கண்ணகி எரித்த மதுரை அல்ல. அது கடல் சூழ் இலங்கை கஜ பாஹு விஜயம் செய்த மதுரை. விஜயன் பெண் எடுத்ததோ கடல் கொண்ட தென் மதுரை அல்லது கபாட புரம் ; நிற்க.

சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இரண்டு தமிழ் அய்யங்கார்கள் 2400 ஆண்டுகள் அல்லது அதற்கும் முந்தைய வால்மீகி ராமாயணத்திலும்,புத்த ஜாதகக் கதைகளிலும் தமிழர்கள் பற்றி வரும் விஷயங்களை விரிவாக எடுத்துரைத்தனர். வால்மீகி முனிவர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய விஷயங்களை ராகவ அய்யங்கார் , மதுரை தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அற்புதமான செந்தமிழ் பத்திரிகையில் எழுதினார். புத்தர் ஜாதகக் கதைகளில் சொன்னதை பி.டி ஸ்ரீனிவாச அய்யங்கார் ஆங்கிலத்தில் புஸ்தகமாக எழுதினார்.( M RAGAVA IYENGAR AND P T SRINIVASA IYENGAR)

இதோ ஜாதகக் கதை சொல்லும் விஷயங்கள்.

முதலில் மதம் மாற்றம் செய்யும் அயோக்கியர்கள் பற்றி ஒரு வரி—

இந்து மதத்தினரை வேற்று மதத்துக்கு மாற்ற விழைவோர் முதலில் ஒரு அண்டப் புளுகை அவிழ்த்து விடுவார்கள் . உங்கள் சாமிதான் எங்கள் மதத்திலும் உளது என்று காட்டுவர். இந்த ஏமாத்து வேலையை முதலில் செய்து இந்துக்களின் காதில் பூ சுற்றியவர்கள் பவுத்தர்கள் . இந்தியாவில் வழங்கிய அத்தனை புராண இதிஹாஸக் கதைகளையும் எடுத்து அவை எல்லாம் புத்தரின் பூர்வ ஜென்மத்தில் — அவர் போதி சத்துவராக அவதரித்தபோது நடந்தவை என்று புளுகினர்.

இப்படி அவர்கள் செய்த அயோக்கியத்தனத்திலும் நன்மை உண்டு. எப்படி வெளிநாட்டுக்காரர்கள் கொள்ளை அடித்த செல்வங்களை நாம் இன்று லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் பாரிஸ் லூவர் , கெய்மே மியூசியங்களிலும், நியூயார்க் மெட்ரோபாலிட்டன் மியூஸியத்திலும் காண முடிகிறதோ அப்படி 2600 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் காலத்தில் இந்தியா எப்படி இருந்தது என்பதை 560 புத்த ஜாதகக் கதைகளும் காட்டிவிடுகின்றன . மிகவும் அரிய பெரிய விஷயங்கள் அவற்றில் உள்ளன. சில்வன் டேவி போன்றோர் ஆராய்ந்த அளவுக்கு இந்தியர்கள் கூட இன்னும் முழு அளவுக்கு ஆராயவில்லை . கிணற்றுத் தவளையாக வாழும் தமிழர்களுக்கு இப்படி புஸ்தகம் இருப்பதே தெரியாது.

அகத்ஸ்த்ய முனிவர் பற்றி

முதல் முதலில் அகஸ்திய முனிவரையும் பாண்டிய நாட்டையும் தொடர்பு படுத்தி எழுதியது உலக மஹா கவிஞனான காளிதாசன் ஆவான். அவன் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ரகு வம்ச காவியத்தில் சம்ஸ்க்ருதத்தில் இதை எழுதினான். அதற்கும் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னரே அகஸ்தியர் பற்றி ஜாதகக் கதை.இருக்கிறது. இது கி.மு. நாலாம் நூ ற்றாண்டுக் கதை.

ஜாதகக் கதைகளில் வலாஹஸ்ஸ ஜாதகம், –எண் 196, ஹத்திபால ஜாதக -எண் 509, மூகபக்க ஜாதக எண் .538 ஆகியன இலங்கை பற்றி இயம்புகிறது. அப்போது அந்தத் தீவின் பெயர் நாக த்வீபம்..

புத்தர் வில்லாளியாகப் பிறந்து,வேதங்களைக் கற்று,  தட்சசீலத்தில் பயின்று , பிராக்டிகல் எக்ஸ்பீரியன்ஸுக்காக  PRACTICAL EXPERIENCE —  வாழ்க்கைப் பயிற்சிக்காக — ஆந்திரத்துக்குச் சென்றதாக பீமஸேன ஜாதகம் பகரும் . அதாவது அவர் பூரவ ஜென்மத்தில் போதிசத்வராக ஜெனித்தபோது நடந்தது இது.

இன்னொரு பிறப்பில் அவர் குயவனாக சேரி  ராஜ்யத்தில் பிறந்தார் என்று சேரி  வாண்ய ஜாதகம் இயம்பும். இத்து சேர நாடாக இருக்கலாம் என்கிறார் பி.டி .எஸ். அய்யங்கார்.  அவர் தான் செய்த பொருட்களை விற்பதற்காக தெளவாக நதியைக் கடந்து  அந்தபுரம்  என்னும் ஊரில் நுழைந்தார் .

இன்னொரு ஜாதகக் கதையில் (எண் .480) அவர் –போதி சத்வர்  — ஒரு பிராமண அறிஞரின் மகனாகப் பிறந்தார் . அப்போது புத்தரின் பெயர் அகித்தி . அவர் சந்நியாசியாக மாறி தனது சகோதரி யசவதியுடன் காசியிலிருந்து மூன்று லீக் /யோஜனை தூரத்தில் தாங்கினார். சீடர்களின் அன்புத் தொல்லை பொறுக்கமாட்டாமல்,    தான்  மட்டும் DAMILA டமில/ தமிழ் தேசத்துக்குப் போனார் ; அங்கு காவேரப்பட்டணத்தில் ஒரு உத்யாவனத்தில் / தோட்டத்தில் தாங்கினார் இங்கேயும் பக்தர்கள் நச்சரிக்கவே அவர் தம்பபண்ணி அருகிலுள்ள  அஹி தீப  என்ற கார தீபத்துக்குப் போனார்.

காரைத் தீவு

இந்தக் கதை காசி நகர பிராமண அகத்தியரை இலங்கையிலுள்ள காரைத் தீவு வரை கொண்டு செல்கிறது!

அஹி என்றால் பாம்பு/ நாகம்.

அவ்வகையில் இலங்கை காரைத்தீவின் பெயரும் வருகிறது

காரைத் தீவு , நாகத் தீவு முதலியன யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன

இதில் நிறைய ஆராய்சசிக்குரிய விஷயங்கள் இருக்கின்றன.

கவர ரிஷியின் மகளான காவிரியின் பெயரில் அந்த நதி, காவேரி என்று அழைக்கப்பட்டது.

சங்க இலக்கியத்தில் காவிரி பூம்பட்டினம் அடிபடுகிறது.

அகத்தியர் என்பது கோத்திரப் பெயர் என்பதால் பல அகத்தியர் இருப்பதை நினைவிற்கொள்ள வேண்டும்

ஆயினும் ஒரு மகரிஷி என்பதால்தான் அவரை போதிசத்வர் அவதாரத்துக்கு ஜாதக     கதை ஏற்றியிருக்கிறது. மேலும் அவர் சோழ நாட்டின் காவிரி பூம்பட்டினம் வரை வந்து இருக்கிறார். அத்தோடு அகத்தியனுக்கு காவிரிக்கும் உள்ள தொடர்ப்பு உலகப் பிரசித்தம். இன்றும் கல்லணையில் சிலையைக் காணலாம்.

ஆக எல்லா விஷயங்ககளையும் கூட்டிக்கழித்துப் பார்க்கையில் இவர் தமிழ் அகத்திய முனிவர் என்பது வெளிப்படை. இவர் பாண்டிய நாடு போகாமல் இலங்கை காரைத்தவுக்குப் போனது புதுக்கதை.

மொத்தத்தில் 2400 ஆண்டுக்கு முன்னிருந்த காவிரி பூம்பட்டினம் காரைத் தீவு, காசி மாநகரம் , தமிழ் –டமில தேசம் — பற்றி நமக்குத் தகவல் கிடைக்கிறது.

tags – காசி, காரைத் தீவு ,அகஸ்தியர், பயணம், ஜாதகக் கதை

—SUBHAM—

ஹிந்தி படப் பாடல்கள் – 27 – மறைந்த சினிமா – வாழும் பாடல்கள்! (Post No.7925)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7925

Date uploaded in London – – – 5 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 27 – மறைந்த சினிமா – வாழும் பாடல்கள்!

R.Nanjappa

Movies are the vehicles for popular music. 

இன்று திரைப்படங்கள் வாயிலாகத்தான்  இசை மக்களைச் சென்றடைகிறது. குறிப்பாக இதுதான் இந்தியாவில் நடப்பது.

90% திரையிசை கதாநாயக-நாயகிகளைச் சுற்றி வருவதே. பெரும்பாலான ஹிட் பாட்டுக்கள் அவர்களுக்காகவே அமைக்கப்படுகின்றன. இந்த நிலையில் படத்திற்கு ஏதாவது நேர்ந்தால், இசைக்கு என்ன ஆகிறது?

சில சமயம் படம் படுத்துவிட்டால்., நல்ல இசையும் மறைந்துவிடுகிறது. சில சமயம் படம் இல்லாவிட்டாலும் பாட்டு ஓடுகிறது! இது விசித்திர உலகம்! இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

மறைந்த சினிமா- வாழும் பாடல்கள்!

1957ல் “பேகுனா”” என்று ஒரு படம் வந்தது. கோர்ட் ஆணையால் ஒரு வாரத்திற்குள்  தடை செய்யப்பட்டது. நடந்தது இதுதான்: இது 1954ல்  Danny Kaye   நடித்து வெளிவந்த “Knock On Wood” என்ற ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான தழுவல். ‘பேகுனா’ ரிலீஸான போது டானி கே பம்பாயில் இருந்தார்! ஹாலிவுட்காரர்கள் இந்தியப்பட தயாரிப்பாளர்கள் மீது வழக்குத் தொடுத்தனர். உடனே விசாரித்த கோர்ட், அந்தப் படத்தின் அனைத்துப் பிரின்ட்களும் அழிக்கப்படவேண்டுமென்று அதிரடி உத்திரவு பிறப்பித்தது!.தயாரிப்பாளர்களும் மிக  நேர்மையாக அதைச் செய்தனர்- ஒரு வாரத்திற்குள் படம் இல்லாமல் போயிற்று!

இந்த மாதிரியான கோர்ட் உத்தரவு வருவது மிக அபூர்வம். அதை உடனே அமல்படுத்தியதும் அசாதாரணமே. தயாரிப்பாளர்கள் பாவம் காசில்லாமல் நடுத்தெருவுக்கு வந்தனர். மேல் முறையீட்டுக்குக் கூட அவர்களிடம் பணமில்லை!

இந்தப் படத்திற்கு ஷங்கர்-ஜெய்கிஷன் இசையமைத்திருந்தனர். நல்லவேளயாக கோர்ட் இசைத் தட்டுக்களைப் பற்றி எதுவும் சொல்வில்லை! அவை தப்பின! இந்த இசையும் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் இரண்டு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருந்தன.

1.அச்சமயத்தில் பாடகர் முகேஷ் மார்க்கெட் இல்லாமல் இருந்தார். அவருக்கு வாய்ப்பு தரும் விதத்தில் ஒரு அருமையான பாட்டு அவருக்காக  உருவாக்கப்பட்டது. இது மிகப்பெரிய ஹிட் ஆனது. முகேஷின் திரைவரலாற்றில் இதையே அவர் பாடிய மிகச்சிறந்த பாடலென பலர் மதிப்பிடு கின்றனர்.

2. இப்பாடல் இசைஞர் ஜெய்கிஷன் மீது படமாக்கப்பட்டது! வேறு ஒரு நடிகரைப்போட பாவம் தயாரிப்பாளர்களிடம் பணமில்லை. அதனால் ஜெய்கிஷனையே பாடச்செய்தனர்; அவருக்கும் நடிக்கவேண்டும் என்ற நமைப்பு இருந்தது-ஒப்புக்கொண்டார்.. ஜெய்கிஷன் பியானோவில் அமர்ந்து  பாடுவதாக படமாக்கப்பட்டது! Just imagine the impact of this scene on the crores of ShankarJaikishan loyalists all over the world! ஜெய்கிஷன் கறுப்பு சூட் அணிந்து அமர்ந்து பியானோ வாசித்துப் பாடுவதாக இந்தக் காட்சி இருந்தது என்று முதல் வாரத்தில் இப்படம் பார்த்த ‘பாக்யசாலிகள்’ சொல்கின்றனர்!

இன்றுவரை  நமக்கு எந்த வீடியோவும் கிடைக்கவில்லை. ஆனால் பாட்டின் ஆடியோ பதிவு இருக்கிறது. 

வாருங்கள், பாட்டைப் பார்ப்போம்..

யே ப்யாஸே தில்

प्यासे दिल बेज़ुबां तुझको ले ज़ाउं कहाँ (2)

आग को आग में ढाल के कब तक जी बहलायेगा
प्यासे दिल बेज़ुबां  

யே ப்யாஸே தில் பேஃஜுபான், துஜ்கோ லே ஜாவூ(ன்) கஹா(ன்)

ஆக் கோ ஆக் மே டால்கே கப் தக் ஜீ பேஹலாயேகா

யே ப்யாஸே தில்…..

மனமேநீ ஏதோ வேட்கையில் இருக்கிறாய்!

உன்னை இந்தப் பேசாத நிலையில் எங்கெல்லாம் கொண்டு செல்வது?…

நெருப்பை நெருப்பில் இட்டுஇப்படி எத்தனை நாள் வாழ்வது?..

(घटा झुकी और हवा चली तो हमने किसी को याद किया
चाहत के वीराने को उनके गम से आबाद किया ) – 2
प्यासे दिल बेज़ुबां मौसम की ये मस्तियां
आग को आग में ढाल के कब तक जी बहलयेगा
प्यासे दिल बेज़ुबां  

கடா ஜுகீ  ஔர் ஹவா சலீ தோ ஹம்னே கிஸீகோ யாத் கியா

சாஹத் கே வீரானோ(ன்) கோ உன்கே கம் ஸே ஆபாத் கியா

யே ப்ய்ஸே தில் பேஃஜுபான் மௌஸம் கீ யே மஸ்தியா(ன்)

ஆக் கோ ஆக் மே டால் கே கப்தக் ஜீ பேஹலாயேகா

யே ப்யாஸே தில்….

அழகிய மேகங்கள் தழைத்து வருகின்றன

இனிய தென்றல் வீசுகிறது

நான் யாரையோ நினைத்துக் கொள்கிறேன்

ஆசைகள் வீணாகிப்போன அந்த வெற்று நிலத்தில்

அவளால் விளைந்த சோகத்தைக் குடியேற்றி விட்டேன்!

பேசாத மனமே! – இந்த அழகிய பொழுதின் காட்சிகள்

ஆனால் நெருப்பை நெருப்பிலிட்டு எத்தனை நாள் வாழ்வது?

(तारे नहीं अंगारे हैं वो अब चाँद भी जैसे जलता है
नींद कहाँ सीने पे कोई भारी कदमों से चलता है ) – 2
प्यासे दिल बेज़ुबां दर्द है तेरी दास्तां
आग को आग में ढाल के कब तक जी बहलयेगा
प्यासे दिल बेज़ुबां  

தாரே நஹீ அங்காரே ஹை வோ அப் சாந்த் பீ ஜைஸே ஜல்தா ஹை

நீந்த் கஹா(ன்) ஸீனே பே கோயீ பாரீ கத்மோ(ன்) ஸே சல்தா ஹை

யே ப்யாஸே தில் பேஃஜுபான், தர்த் ஹை தேரீ தாஸ்தா(ன்ஆஆ

ஆக் கோ ஆக் மே டால் கே கப் தக் ஜீ பேஹலாயேகா

யே ப்யா ஸே தில் பேஃஜுபான்….

(வானத்தில்) தாரகைகளா அவைஇல்லைநெருப்பு,

இப்போது  நிலவும் அப்படியே எரிகிறது!

உறக்கம் எப்படி வரும்யாரோ நெஞ்சின் மீது அழுந்த  நடப்பதுபோல் இருக்கிறது!

மவுனம் சாதிக்கும் மனமே! துக்கம் தான் உன் கதை

நெருப்பை   நெருப்பிலிட்டு இப்படி எத்தனை நாள் வாழ்வது?

कहाँ वो दिन अब कहाँ वो रातें तुम रुठे क़िस्मत रुठी
गैर से भेद छुपाने को हम हंसते फिरे हंसी झुठी
प्यासे दिल बेज़ुबां लुट के रहा तेरा जहां
आग को आग में ढाल के कब तक जी बहलायेगा
प्यासे दिल बेज़ुबां  

கஹா(ன்வோ தின் ஔர் கஹா(ன்) ராதே(ன்)

தும் ரூடே கிஸ்மத் ரூடீ

கைர் ஸே பேத் சுபானே கோ ஹம்  (ன்)ஸ்தே ஃபிரே ஹன்ஸீ ஜூடீ

யே ப்யாஸே தில் பேஃஜுபான் லுட் கே ரஹா தேரா ஜஹா(ன்ஆஆ

ஆக் கோ ஆக் மே டால் கே கப் தக் ஜீ பேஹலாயேகா

யே ப்யாஸே தில் பேஃஜுபான்….

அந்த நல்ல நாட்களும் இரவுகளும் எங்கே போயின?

நீ கோபம் கொண்டதும் விதியும் கோபித்துக்கொண்டுவிட்டது

பிறரிடமிருந்து பிரிவை  மறைக்க, போலிச் சிரிப்புடன் திரிகிறேன்!

மவுனம் சாதிக்கும்  மனமே, உன்னுடைய இடம் கொள்ளைபோகிறது!

நெருப்பை நெருப்பிலிட்டுஇப்படி எத்தனை நாள் வாழ்வது!

Song: Aye pyase dil Film: Begunah 1957 Lyricist: Shailendra

Music: Shankar Jaikishan Singer: Mukesh  Filmed on; Jaikishan on the piano

It is said that what makes for poetry is not necessarily what is said, but  how it is said! Yet best poetry combines both sublime thoughts and sensitive expression. A line like “to scorn delights and live laborious days” can be said only by a MIlton!

ஒரு கவிதையை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்ப தென்பது இயலாது என்றே சொல்லலாம். இன்னொரு கவி அதை வேறுவிதமாகச் சொல்லலாம்- அதையே அப்படியே வேற்று மொழியில் சொல்ல முடியாது. Transcreation  என்று சொல்கிறோம். கம்பதாசன் அப்படிச் செய்தார். இந்த ஷைலேந்த்ராவின் கவிதை அப்படிப்பட்டது. இங்கே காதலில் ஏமாற்றத்தைச் சொல்கிறார்- சொன்னவிதம் அதை உயர்ந்த கவிதையாக்கிவிட்டது!

சாஹத் கே வீரானோ கோ உன்கே கம் ஸே ஆபாத் கியா

நீந்த் கஹா(ன்) ஸீனே பே கோயீ பாரீ கத்மோ  ஸே சல்தா ஹை.

தும் ரூடே கிஸ்மத் ரூடீ

இம்மூன்று வரிகளும் காதல் இலக்கியத்தில் நீங்கா இடம் பெறும்!

இதற்கு அமைந்த மெட்டு அபாரம். கேட்பதற்கு எளிதாக இருக்கிறது- பாடிப் பார்த்தால் இதன் ஆழம் புரியும்!

முகேஷிற்காகவே அமைத்த மெட்டு! அவர்குரலுக்கு சிக்கென்றிருக்கிறது. அவர் குரலில் இழையோடும் சோகம் இதற்கு இயற்கையாகவே ஒரு அழுத்தத்தைக் கொடுக்கிறது. ஷங்கர் ஜெய்கிஷன்-ஷைலேந்த்ரா-முகேஷ் கூட்டின் உயர்ந்த படைப்புக்களில் ஒன்றாக இது மதிக்கப்படுகிறது.

இதே போல் இன்னொரு படம்-சிறிது வித்தியாசமான சரித்திரம்.

நியாய ஷர்மா என்று ஒரு பாடலாசிரியர். படமெடுக்கத் துணிந்தார். தேவ் ஆனந்த்-மீனா குமாரி ஜோடி-சேதன் ஆனந்த் இயக்கத்தில் படப்பிடிப்பு துவங்கியது-56-57ல். மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்று கணக்கு. படப்பிடிப்பின் போது காமராமேன் மர்மமான முறையில் இறந்தார். போலிஸ் வழக்கானது 7 ஆண்டுகள் நீடித்தது. எல்லாம் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி படம் 1963ல் தான் வெளிவந்தது. இதற்குள்  வேறு பல படங்கள் வந்ததால் ஹீரோ-ஹீரோயின் சம்பந்தப்பட்ட public image முற்றும் மாறிவிட்டது!  இந்தப் படம் ஓடவில்லை.

இதில் ஜெய்தேவின் அருமையான இசையில் 11 பாடல்கள் இருக்கின்றன. பாடகர்கள் 8 பேருக்கு ஆளுக்கொரு பாடல்! [இதில் மன்னா டே பாடலை முன்பே பார்த்தோம்] இப்படத்தின் சிகரமாகக் கருதப்படும் தலத் முஹம்மது பாடலை இப்போது பார்க்கலாம். 

தேக் லீ தேரீ குதாயீ

देख ली तेरी खुदाई
बस मेरा दिल भर गया
तेरी रहमत चूप रही
मैं रोते रोते मर गया

தேக் லீ தேரீ குதாயீ

பஸ் மேரா தில் பர் கயா

தேரீ ரஹமத் சுப் ரஹீ

மை ரோதே ரோதே மர் கயா

ஆண்டவனே! உன் மஹிமையைப் பார்த்துவிட்டேன்!

என் மனது நிறைந்துவிட்டது! இன்னும் என்ன?

உன்னுடைய கருணை வாளாயிருந்து விட்டது

அழுகையிலேயே என் உயிர் பிரிந்துவிடும்

मेरे मालिक क्या कहूँ
तेरी दुवाओं का फरेब
मुझ पे यूँ छाया के
मुझको
घर से बेघर कर गया

மேரே மாலிக் க்யா கஹூ(ன்)

தேரீ துவாவோ(ன்) கா ஃபரேப்

முஜ் பே யூ(ன்) சாயா கே முஜ்கோ

கர் ஸே பேகர் கர் கயா

என் இறைவா! என்ன சொல்வேன்!

உன் கருணையின் கபடத்தன்மை பற்றி என்ன சொல்வேன்!

என்மீது ஏன் அந்த நிழல் இப்படி விழுந்தது

என்னை வீட்டிலிருந்து வீதிக்குக் கொண்டுவந்துவிட்டதே!


वो बहारें नाचती थी
झूमती थी बदलियाँ
अपनी किस्मत याद आते ही
मेरा जी डर गया  

வோ பஹாரே(ன்நாச்தீ தீ

ஜூம்தீ தீ பதலியா(ன்)

அப்னீ கிஸ்மத் யாத் ஆதே

ஹீ மேரா ஜீ டர்கயா

அந்த வஸந்தங்கள் மகிழ்ச்சியில் துள்ளின

அந்த மேகங்கள் பொங்கிப் படர்ந்தன

(அந்த நிலை மாறிவிட்டது)

என்னுடைய விதியின் போக்கு நினைவு வந்ததும்

மனதில் பயம் சூழ்ந்துகொண்டதே!

Song: Dekh li teri khudayi Film: Kinare Kinare 1963 Lyrics: Nyaya Sharma

Music : Jaidev  Singer: Talat Mahmood

சொல்லும் விஷயத்தில் மட்டுமல்ல, சொல்லும் விதத்திலும் கவிதை மலர்கிறது என்பதற்கு இப்பாடல் சிறந்த எடுத்துக்காட்டு! சிறிய பாடல்தான்-மூன்றே பத்திகள் தான். மூன்று-நான்கு சொற்களில் சொல்லவந்ததைச் சொல்லிவிட்டார்! தேரீ ரஹமத் சுப் ரஹீ,  தேரீ துவாவோ(ன்) கா ஃபரேப் = what stinging words!

Fareb = duplicity, deception, guile, fraud, etc.

This word applied to God’s grace indeed shows the depth of one’s despair, not necessarily the nature of Grace. Sunlight is equal to all, but some skins cannot take it! There is no deception in grace, but some fault in the receiver! This is a poetic way of saying that one’s fate is such that grace has not worked in his favour. or he is unable to receive it properly. So, the poet next says: this shadow on me- mujh pe yun chaaya.

வெற்றுச் சொற்களை அடுக்காமல் சொல்லவந்ததை மூன்று–நான்கு சொற்களில் முத்தாக அடக்கிவிட்டார்  நியாய ஷர்மா!

தலத் குரலுக்கு என்ன சொல்ல! இந்த மன நிலை தலத் குரலுக்கு மிகவும் ஒத்துப்போகிறது. குரலில் சோகத்தை வரவழைக்க வேண்டியதில்லை. சோகம் வார்தையில், பொருளில் இருக்கிறது, மெட்டில் இருக்கிறது.. துவாவோ(ன்) கா ஃபரேப்- எப்படி இச்சொற்களை உச்சரிக்கிறார் பாருங்கள்!. ஹிந்தித் திரையிசை உலகில் வார்த்தைகளை இவ்வளவு உணர்ச்சியுடன், ஜீவனுடன் உச்சரித்தவர்கள் வேறு யாரும் இல்லை!

ஜெய்தேவ்- உணர்ச்சி பூர்வமான இசைக்கு உன்னத இடம்! இப்பாட்டில் எத்தனை இதமான பின்னிசை! வாத்யங்களின் ஒலி பாடகரின் வார்த்தையை, குரலை அடக்கவில்லை! தாளத்தின் தனிவிதமான போக்கு – different kind of rhythm! This song is a masterpiece, the like of which has not appeared again!

இந்த இரண்டு பாடல்களையும் இரவில் ஆரவாரமில்லாத அமைதியான சமயத்தில் கேட்கவேண்டும். 

இத்தகைய  இனிய பாட்டுக்கள் ஏன் இப்படி சோகமயமாக இருக்கவேண்டும்? நமக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆங்கிலக்  கவி  ஷெல்லி சொல்கிறார்

We look before and after,
And pine for what is not:
Our sincerest laughter
With some pain is fraught;
Our sweetest songs are those that tell of saddest thought.  

Percy Bysshe Shelley: To A Skylark

tag — ஹிந்தி படப் பாடல்கள் – 27 –

*****

ஸம்ஸ்கிருதத்தின் உயர்வு; அதில் சுபாஷிதத்தின் பெருமை! (Post No.7924)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7924

Date uploaded in London – – – 5 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஸம்ஸ்கிருதத்தின் உயர்வு; அதில் சுபாஷிதத்தின் பெருமை!

ச.நாகராஜன்

ஸம்ஸ்கிருதத்தின் உயர்வு பற்றியும் சுபாஷிதங்களின் பெருமை பற்றியும் ஏராளமான சுபாஷிதங்கள் உள்ளன. அவற்றில் சில:-

பாஷாஷு மதுரா முக்யா திவ்யா கீர்வாணபாரதி |

தஸ்மாத் ஹி மதுரம் காவியம் தஸ்மாத் அபி சுபாஷிதம் ||

(மனித குலத்தில் உள்ள) மொழிகளில் எல்லாம் பாரதத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத மொழி இனிமையானது, மிக முக்கியமானது, தெய்வீகமானது மதுரமானது. அதிலும் அதில் உள்ள காவியங்கள் இனிமையானவை; அதிலும் இனிமையானவை அதில் உள்ள சுபாஷிதம்!

Among all the language (of mankind) Sanskruta the language of  Bharat i.e India is the sweetest, the most distinct and truly divine. Sanskrutas poetic verses are so very melodious, and amonst them again the most delightful are her Subhasitas.          (Translation by Manhar Jai)

*

கீர்வாண வாணீஷு விசிஷ்ட புத்திம்

   தஸ்மாபி பாஷாந்தரலோலுபோஹம் |

யதா சுராணமம்ருதே ஸ்திதேபி

   ஸ்வர்காங்கநாநாமமதராஸாவே ருசி: ||

அனைத்து மொழிகளின் மீதும் எனக்கு ஆசை உண்டு என்றாலும், எனக்கு கடவுளரின் மொழியில் – ஸம்ஸ்கிருதத்தின் மீது –  ஒரு விசேஷமான ஆர்வம் உண்டு. ஏனெனில் எப்போதுமே அம்ருதம் கடவுளர் முன்னே இருந்தாலும் கூட ஸ்வர்க்க தேவதைகளின் அதர பானத்தில் அவர்களுக்கு ருசி உண்டு, அது போல!

I have a special intrest in the speech of the gods (Sanskrit language), nevertheless I have a liking for the other languages; for, though nectar is ever present before them, the gods have a taste for the liquor of the lips of the divine damsels. (Translation by S.B. Nair)

*

ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலமன்னம் சுபாஷிதம் |

மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசம்ஞா விதீயதே ||

உலகில் மூன்றே மூன்று ரத்னங்கள் தாம் உள்ளன; ஜலம், அன்னம், சுபாஷிதம் ஆகியவையே அந்த மூன்று.  மூடர்கள் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சிறிய கற்களையே ரத்னம் என்று மதிக்கின்றனர்.

There are but three precious jewels on this earth: Water, food and gems of Speech. But ignoramuses (dull an stupid people) highly regard as precious, shining bits of stone (dug out from the bowels of the earth) (Translation by Manhar Jai)

*

ஏகவித்யாப்ரதானோபி பஹுஞானி பவேத் நர: |

சுபாஷிதானி சிக்ஷேத் யானி சாஸ்த்ரோத்வதானி வை ||

 ஒரு குறிப்பிட்ட அறிவை மனிதன் கொண்டிருக்கும் போது அது அவனை அதிக அறிவு கொண்டதாக ஆக்குகிறது;  அது தான் சுபாஷிதங்களிலிருந்து அவன் பெரும் அறிவாகும்.

Particularly one knowledge when possessed by a man renders him rich; it is the  knowledge learnt from wise sayings (Subhasita-s) drawn from the

sastra-s.

*

உத்கோசபாரிதோஷக பாடசுபாஷிததரார்தசௌர்யாஷா: |

தத்க்ஷணமேவ க்ராஹ்யா: ஷடயந்தகாலே ந லப்யதே ||

ஒரு மனிதனுக்கு ஆறு விஷயங்கள் முதல் தடவை தரப்படும், அந்தக் கணத்தின் போதே, ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்; ஏனெனில் அவற்றைப் பெறும் இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது அரிது. அவையாவன, லஞ்சம், நல்ல விஷயத்திற்காகத் தரப்படும் பரிசு, வாடகை, சுபாஷிதம், திருட்டுப் பொருள்கள்,  பாரம்பர்ய சொத்திலிருந்து கிடைக்கும் ஒருவனுக்குரிய பங்கு.

There be six things a man should take the moment they are offered, lest he get no second chance of taking them; a bribe, a reward for good tidings, rent, a good saying (Subhasita), stolen goods, and one’s share of heritage. ((Translation by P.Peterson)

*

உச்சை: ஸ்திதீனாம் விதுஷாம் பதமாரோத்மிச்சவ: |

சத்சுபாஷிதசோபான- சேவின: சந்து  சாதவ: ||

பண்டிதர்களிடையே உயர்நிலைக்குச் செல்ல விரும்புவோர் ஏணிப்படிகளாக அமையும் நல்ல சுபாஷிதங்களைக் கற்க வேண்டும்.

Those good men who wish to climb to the position of learned scholars occupying high positions, (should) resort to the (study of) staircase of good poetry. (subhasita-s) (Translation by A.A.R.)

tags – ஸம்ஸ்கிருதம், சுபாஷிதம், பெருமை

*

PROOF FOR PANINI’S KNOWLEDGE OF TAMIL NADU 2700 YEARS AGO (Post No.7923)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7923

Date uploaded in London – 4 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Great Sanskrit scholars like Bhandrakars and Goldstucker dated Panini around 8th century BCE. His coinage which Arthasastra doesn’t know also place him well before Kautilya of fourth century BCE . So whatever he said becomes very important to decide the chronology of many things. One such thing debated by the scholars is his knowledge about Tamil Nadu. He covered several thousand square miles of north India from Afghanistan to Assam in the north and up to Asmaka country in the South on River Godavari.

But for one who reads deeply it becomes clear that he knew the South of India up to land’s end. In one sutra he mentioned black peppercorns and honey coming through the land route. The long list of articles he mentioned in several sutras shows his vast knowledge in economics, commerce, trade routes and wealth of the community.

And supporting evidence comes from Buddhist Jataka tales. Earlier people like Bodhayana and Yaska also talk about south India. Epics Mahabharata and Ramayana mentioned the customs of Southerners.

We have very clear references to the Tamil kingdoms in the inscriptions of Emperor Asoka and Orissa King Kharavela.

First let us look at the trade routes.

Panini  wrote only a grammar book, but yet his references and the commentaries on his book give us very interesting information.

He mentioned roads leading from one city to another city- sutra 4-3-85

Katyayana in his comments mentioned kantara pathika, that is the forest route. In addition to it, he listed Jangala patha, Vari patha and Sthala patha, and they are routes via jungle thickets, water and land. We also hear about Aja patha- goat track, Sanku patha- narrow mountain paths.

In the Devapathathi Gana 5-3-100 we hear about more interesting routes Hamsa patha and Deva patha which relate to air.

He might have meant air -plane route used by Rama, Ravana and Kubera. Or it may be routes used by the migratory birds. Or it may be the routes used by the Siddhas with supernatural powers. We have literary evidence to support every one of the above.

Kalidasa goes one step ahead and listed three different air routes depending upon the height. While returning to Ayodhya from Sri Lanka by thought powered air -plane the three routes are explained in

Raghuvamsa 13-19. He refers to Sura \ Deva patha, Ghana patha and Kagapatha.

My comments

Even a Tamil book that came about 250 years ago mentioned air routes used by siddhas with super natural powers (Tiru Kutrala Kuravanji by Tri Kuta Rasappa Kavirayar).

Raja patha is still the road name in several Indian cities.

English word path also came from Sanskrit ‘patha’.

Now to this particular sutra regarding the black peppercorns and honey—

Kerala known as Chera Nadu 2000 years was the main exporter of peppers. When Panini mentioned it in sutra 5-1-77,

He must have remembered Kerala.

Black Pepper corns from Tamil speaking Chera nadu (now Malayalm speaking Kerala) went up to Rome and Greece. Till today Kerala exports to other places.

Xxxx

VAIDURYA GEM STONE

Sutra 4-3-84 is about the gem-stone Vaidurya, known as cats eye.

It said that it was available in Valavaya mountains and polished at Vidura town and so it was called Vaidurya .

We have some references to Vaidurya, Beryls and others  exported from Coimbatore inT amil Nadu. So we may conclude that pepper and gemstones were exported via Coimbatore about 3000 years ago.

V S Agrawala adds more supporting information—

“As pointed out by Keith, Yaska already mentions a southern use of the Vedic word ‘Vijaamatri’ for a son in law who pays to his father in law the price of the bride.

Vijaa maateti sasvad Dakshinaajaahaa kriitapatim aachaksate

—Nirukta 6-9

My comments

Sangam Tamil literature and later Tamil literature confirm this bride price.

“Secondly, the Deccan was the home of Sanskrit as early as Katyayana’ s time whom Patanjali regards as a southerner on account of his partiality for the Tadhita.

Priya taddhitaahaa Daakshinatyaahaa

(Katyayana lived around 4th century BCE.)

“Thirdly, Panini besides referring to the sea and the islands lying near the coast and in mid ocean , actually mentioned that portion of the country which lies between the tropics as

Antarayana desa 8-4-25

It can refer only to Deccan lying south of the Tropic of Cancer, which passes through Kutch and Avanti.”

My comments

Sri Lankaan history book ‘Mahavamsa’ gives more information about the marriages that took place between the royal families of Madurai Pandyas and the first king Vijaya of Sri Lanka. It happened in the sixth century BCE, not far from Panini’s time

So it is very clear that North Indians had a very good knowledge of Southern India and its peoples.

Tags– Panini , Black pepper, Land routes, Yaskar, ,bride price, Katyayana, ,Taddhita

—SUBHAM—

பாணினிக்கு 2700 ஆண்டுக்கு முன்னரே தமிழ் நாடு தெரியும்! (Post No.7922)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7922

Date uploaded in London – 4 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

உலகப் புகழ் பெற்ற முதல் இலக்கண வித்தகர், முதல் மொழியியல் நிபுணர்  (World’s First Grammarian and Linguist) பாணினி. அவர் தற்போது  பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழிக்கு இலக்கணம் எழுதினார். அந்த நூலின் பெயர் அஷ்டாத்யாயியீ (அஷ்ட அத்யாயம் , அதாவது எட்டு அத்தியாயம்.). அதில் அவர் கோதாவரி நதிக்கரையில் இருந்த  அஸ்மாக தேசத்தைப் பெயர் சொல்லி எழுதினார்.

ஆப்கானிஸ்தான் முதல் அஸ்ஸாம் வரை தெரிந்த அவருக்கு தமிழ்நாடு தெரியாமலா போகும் ? அவருக்கு 450 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த அசோகன் தெளிவாகவே கேரளம் பற்றிப் பேசுகிறான். அதற்குப் பின்னர் ஒரிஸ்ஸாவை ஆண்ட காரவேலன் ‘தமிழ் மன்னர் கூட்டணி’ பற்றியும் பேசுகிறான். பாண்டிய மன்னரைத் தோற்கடித்து முத்து முதலியவற்றை கப்பமாகப் பெற்றது குறித்தும் கல்வெட்டில் பொறித்துளான் .

பாணினி வரலாறு எழுதவில்லை. ஆகவே அசோகன், காரவேலன் போல நேரடியாகப் பேசாமல் மறைமுகமாக கேரளா பற்றிப் பேசுகிறான். அக்காலத்தில் கேரளத்தின் பெயர் சேர நாடு. அக்காலத்தில் தமிழ் மட்டுமே அங்கு பேசப்பட்டது.

அங்கிருந்து வந்த மிளகு பற்றி பாணினி சூத்திரம் சொல்கிறது -5-1-77

உத்தர பதே நாஹ்ருதம் ச

வா

ஆஹத ப்ரகரேண  வாரி ஜங்கல ஸ்தல காந்தார பூர்வ பதானுப

ஸம்க்யானம் 

வா

அஜபத சங்கு பதாப்யாம் சோப ஸம்க்யானம் 

வா

மதுக மரிச யோரண் ஸ்தல பத.

இதில் கடைசி வரிதான் மிளகு, தேன் — மரீச, மது — பற்றிப் பேசுகிறது.

அதைப் பார்ப்பதற்கு முன்னால் இதே சூத்திரம் சொல்லும் அதிசய விஷயங்களை முதலில் இயம்புவேன் .

அவர் புராதன இந்தியாவின் போக்குவரத்து பற்றிச் சொல்லும் விஷயங்கள் பாரதம் முழுதும் நடந்த பொருளாதார , வியாபார விஷயங்களை எடுத்துரைக்கிறது. சூத்திரத்தை விளக்க வந்த காத்யாயனர் , பதஞ்சலி , ‘வாமனர் – ஜயாதித்யர் ஜோடி’ கொடுக்கும் விஷயங்கள் நம் மூக்கின் மீது விரலை வைத்து வியக்கச் செய்யும் .

நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து – சூத்திரம் 4-3-85

இந்த சூத்திரத்துக்கு விளக்கம் தந்த காத்யாயனர் தென்னாட்டைச் சேர்ந்தவர் என்று அவருக்குப்பின்னர் வந்த  பதஞ்சலி சொல்வார் . கி.மு 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த காயத்யயனர் சொல்கிறார்-

காண்டார பத (Forest) – பயங்கரக் காட்டு வழிப் போக்குவரத்து ;

ஜங்கல பத (jungle) –  காட்டு வழிப் போக்குவரத்து ;

ஸ்தல பத (Land Route) – நில  வழிப் போக்குவரத்து ;

இதில் பயங்கர காட்டுவழிப் போக்குவரத்து என்பது விந்திய மலை வழியாகச்  செல்லும் அடர்ந்த காட்டுப் பாதை . இதை சிவில் எஞ்சினியரும் மாபெரும் முனிவருமான அகஸ்தியர் , மலையை மட்டமாக்கி, சாலை போட்டதையும் அதை புராணங்கள், விந்திய கர்வ பங்கம் என்று சொல்வதையும் முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.

‘அஜ பத’ என்றால் ஆட்டுப் பாதை என்று போல். மலைப்பாதையில் ஒரு ஆடு சென்றால் எதிரே இன்னும் ஒரு ஆடு வரமுடியாது. ஒத்தையடிப் பாதை.

இதை காத்யாயனர் 5-1-77, பதஞ்சலி 2-358-ல் விளக்குகின்றனர்.

ஸ்தல பத என்னும் நிலப்பாதை வழியாக — சாலை மார்க்கமாக மிளகு, தேன் வந்தன என்றும் காத்யாயனர் உரைக்கிறார்.

ஆக சூத்திரத்தில் பாணினி பயன்படுத்திய மிளகுக்கு விளக்கம் கிடைத்துவிட்டது .

மிளகுக்குப் புகழ் பெற்ற இடம் மலையாள- கேரள – சேர நாடு என்பதை சங்க இலக்கியமும் பிற்கால ரோமானியர் வணிகமும் காட்டும்.

இத்துடன் அதிமதுரம் தென்னாட்டில் இருந்து போனது .

இது தவிர தேவ பதாதி கண – 5-3-100-ல் மேலும் பல பாதைகளை பட்டியலிடுகிறார்.

வாரி பத, ஸ்தல பத, ரத பத, கரி பத,அஜ பத,சங்கு பத, ராஜ பத ,சிம்ஹ பத, ஹம்ஸ பத, தேவ பத.

இதில் சில சுவையான விஷயங்கள் இருக்கின்றன.

1.இன்றும் கூட டில்லி முதலிய நகரங்களில் ராஜ்பாத் — இராஜ பாட்டை — ரோடுகள் உள்ளன. தமிழ் நாட்டின் பல நகரங்களில் ராஜ வீதிகள் உள .

2. இரண்டாவது  வான வெளிப் பாதைகள். இது ராமன், ராவணன், குபேரன் கைகளில் மாறி மாறி இருந்த விமானங்கள் போன பாதைகள் அல்லது பறவைப் பாதைகள் அல்லது ககன சித்தர் எனப்படும் ஆகாய மார்க்க சித்தர் பாதையாக இருக்கலாம். 250 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திரிகூட  ராசப்ப  கவிராயர் கூட  வான வழி — ககன சித்தர் பற்றிப் பாடுகிறார் திருக் குற்றாலக் குறவஞ்சியில்  .

3. மூன்றாவது சுவையான விஷயம் இன்றும் கூட ஆங்கிலத்தில் Path பாத் = பாதை என்ற பொருளில் புழங்குகிறது

மஹாநித்தேச என்னும் நூலில் மூங்கில் பாதை, எலிப் பாதை, பாலைவன மணல் பாதை, குகைப்பதை  முதலிய நீண்ட பட்டியல் இருக்கிறது ; சம்ஸ்க்ருத மொழியில் இல்லாத விஷயமே உலகில் கிடையாது.

சங்கு பத என்று பாணினி சொல்லும் பாதை , இப்பொழுது மலை ஏறுவோர் ஆணி அடித்து கயிறு கட்டி மலை மீது ஏறும் பாதையாகும் இதை அவருக்குப் பின்னர் வந்த புத்த ஜாதகக் கதைகள் விளக்குகின்றன.

காளிதாசர் ரகு வம்சத்தில் 13- 19-ல் உயரத்துக்கு ஏற்ப, 1.தேவ பத/சுர பத, 2.கண பத, 3.கக பத என்று வகைப் படுத்துகிறார்.

ஒரு உயரமான கோட்டையின் மதில் சுவர் மீதுள்ள பாதையை ‘தேவ பத’ என்று கௌடில்ய அர்த்த சாஸ்த்திரம் விளக்கும்.

உத்தர பத

இந்திய நகரங்களை காந்தாரம் / ஆப்கானிஸ்தானுடன் இது இணைத்தது .தசரதன் இறந்தவுடன் விரைவாக பரதன் அழைத்துவரப்பட்ட  பாதையை வால்மீகி விரிவாக வருணிக்கிறார். 

கங்கா நதி மீதுள்ள பாடலிபுரத்தத்தில் புறப்பட்ட கப்பல்கள் பருவக் காற்றைப் பயன்படுத்தி இலங்கைக்கு எப்படி விரைவாக வந்து போயின என்பதை மகா வம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூல் காட்டுகிறது.

தென்னகப் பாதை/ தக்ஷிண பத

இனி தென்னகப் பாதையைக் காண்போம் .

பணினிக்கும் முன்னால் வாழ்ந்த சொற்பிறப்பியலின் (Father of Etymology)  தந்தை – உலகின் முதல் சொற்பிறப்பியல்  நூலான நிருக்தத்தை எழுதிய யாஸ்கர் தென்னாட்டு வரதக்ஷிணை முறை பற்றி எழுதி இருக்கிறார். தென்னாட்டில் மட்டும் மன்னர்கள் பெண்களை விலை கொடுத்து வாங்குவார்கள். சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் சங்க இலக்கிய நூல்களிலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு பெரும் செல்வத்தைக் கொடுத்து கெஞ்சசுவர். . அவரை ‘விஜாமாத்ரி’ என்று வேத இலக்கியம் பகரும் என்கிறார் யாஸ்கர் .

விஜா மாதேதி சஸ்வத் தக்ஷிண ஜாகாஹா க்ரீதா பதிம் ஆசக்ஷதே – நிருக்த 6-9.

மேலும் முதல் முதலில் பாணினீயத்தின் மீது / அஷ் டாத்யாயி மீது – குறிப்புகள் (Vartika)  வரைந்த காத்யாயனரை “இவன் தென்னாட்டுக்காரன்; ஆகையால் அந்த வழக்கத்தை ஆதரிப்பவன்” என்று பதஞ்சலி குற்றம் சாட்டுகிறார். தத்ஹிதத்தைப் போற்றுபவர் இவர் என்பார் .

ப்ரிய தத்ஹிதாஹா தாக்ஷிணாத்யாஹா

காத்யாயனர் கி .மு . நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

***

கடல் நடுவிலுள்ள தீவுகள், கடற்கரையை ஒட்டிய தீவுகள் பற்றிக் கதைக்கையில் கடக ரேகை, மகர ரேகைக்கு இடையேயுள்ள பெரு நிலப்பரப்பை அந்தரயண  தேச 8-4-25 என்று பாணினி

சொல்கிறார்.ஆகையால் குஜராத்தின் கட்ச்  பகுதியாகச் செல்லும் கடக்க ரேகைக்கு அப்பாலுள்ள தென்னாடு பற்றி அவர் அறிந்திருக்கிறார்.

கலிங்க தேசம், கோதாவரி மீதுள்ள அஸ்மாக தேசம் ஆகியவற்றை பெயர் சொல்லியே குறிப்பிடுகிறார்.

***

வைடூர்யம்

Cymophane அல்லது Cat’s eye வைடூர்யம் பற்றி 4-3-84ல் பாணினி சூத்திர வியாக்கியானம் கூறும் .

விதுர என்ற இடத்தில் காணப்படும் மணி வைடூர்யம்;

வாலவாய  என்ற மலையில் காணப்படும் கல்லை விதூர என்ற நகரத்தில் இழைத்து வைடூர்யம்  ஆக்கப்படுகிறது . வைடூர்யம் கல், கோயம்பு த்தூர் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டு உலகின் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை வெளிநாட்டார் எழுதிய குறிப்புகளில் காண முடிகிறது

பாணினி எழுதியது இலக்கண புஸ்தகம்.– அவர் சேர சோழ பாண்டிய நாடுகள் பற்றியோ அதிலிருந்து வரக்கூடிய சொற்பிரயோகம் பற்றியோ சம்ஸ்க்ருத இலக்கிய நூலில் பேச அவசியமில்லை .

மேலும் பர்ஜிட்டர் (Pargeter) வேறு ஒரு இடத்தில் எழுதியதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “இந்தியாவின் மிகப்பெரிய மரமான ஆலமரம் பற்றி ரிக் வேதம் சொல்லவில்லை. அது போலவே உப்பு, விந்திய மலை, பாரியாத்ர/ ஆரவல்லி மலைகள் பற்றி ரிக் வேதத்தில் குறிப்புகள் இல்லை. இதனால்  அவர்களுக்கு இவை பற்றி அறவே தெரியாது என்று கருதுவது மடைமை ஆகும்”

.

****

வால்மீகியும் புத்த மத ஜாதகக் கதைகளும் தென்னகம் பற்றி நிறையவே பேசுகின்றனர் அவற்றைத் தனியே காண்போம்.

tags – மிளகு, தேன் , மரீச, மது, பாணினி, அஜ பத,

–subham–

ஹிந்தி படப் பாட்டுகள் – 26 – மன்னா டே! (Post No.7921)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7921

Date uploaded in London – – – 4  May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாட்டுகள் – 26 – மன்னா டே!

R.Nanjappa

மன்னா டே

“Good wine needs no bush!” 

இது ஒரு ஆங்கிலப் பழமொழி. தரமுள்ள பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை; அதன் தரத்தினால் அதைத் தானாகத் தேடி வருவார்கள் என்பது பொருள். வேறு எங்கு எப்படி இருந்தாலும் திரை இசைத்துறையில் இப்படி நடக்கவில்லை.

கிஷோர் குமார் முறையான சங்கீதப் பயிற்சி இல்லாமல் வந்தவர். அவருடைய சங்கீத அறிவும் குரலும் இயற்கையாக அமைந்தவை. அவருடைய அண்ணன் நடிகர் அஷோக்குமார் ஒரு விஷயம் சொல்வார். கிஷோர் குழந்தையாக இருந்தபோது (இருவருக்கும் 18 வயது வித்தியாசம்) ஒரு நாள் மணிக்கணக்கில் அழுதுகொண்டே இருந்தானாம், அதனால் அவன் நுரையீரல் பலப்பட்டு நல்ல பலமான குரல் வந்து விட்டதாம்! நன்றாகப் பாடியும்  நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. 20 வருஷங்கள் எப்படியோ ஓட்டினார். பின் இருபது வருஷங்கள் இவரை யாரும் நெருங்கமுடியவில்லை!

மன்னா டே முறையாகப் பயின்று நல்ல தேர்ச்சி பெற்று வந்தார். இவருக்குச் சரியான சந்தர்ப்பங்கள் இறுதிவரை கிடைக்கவில்லை. நமது திரைப் படங்களில் நல்ல பாடல்கள் கதாநாயகன்-நாயகி மேல்தான் வருகின்றன. மன்னா டேவை எந்த முன்னணி ஹீரோவும் முதல் சாய்ஸாக ஏற்றுக் கொள்ளவில்லை.அதனால் இவருக்கு அத்தகைய பாட்டுக்கள் அதிகம் இல்லை. ‘பஸந்த் பஹார்’ என்ற படத்தில் இவர் பாடிய நல்ல பாடல்கள் அமைந்தன. முன்னணி ஹீரோ தேவ் ஆனந்திற்கும் ராஜ் கபூருக்கும் இவர் பாடிய இரு பாடல்களைப் பார்ப்போம்.

ஹம் தம் ஸே கயே !

हम दम से गए  हमदम के लिए
हमदम की कसम  हमदम ना मिला
दम से गए   हमदम के लिए
हमदम की कसम   हमदम ना मिला  

hum dum se gaye, hamdam ke liye
hamdam ki kasam, hamdam na mila
 

நான் என் கடைசி மூச்சைக்கூட அன்பிற்காகப் பணயம் வைத்தேன்.

அன்பின் மேல் ஆணையிட்டேன், ஆனால் அத்தகைய அன்புள்ளம் கிடைக்கவில்லை!

फिर भी कहे जा   तू अपना अफसाना
साथी मिल जाएगा    ना रुक जाना
फिर भी कहे जा   तू अपना अफसाना
साथी मिल जाएगा   ना रुक जाना
दिल तेरी काली  अभी तो नहीं खिली
अभी वो मौसम ना मिला
दम से गए………

phir bhi kahe jaa tu apna afsaana

saathi mil jaayegaa na ruk jaana
o dil teri kali, abhi to nahin khili

abhi wo mausam na milaa

இருந்தாலும் நீ உன் கதையைச் சொல்லிச் செல்

சோர்ந்து எங்கும் நின்றுவிடாதேநிச்சயம் ஒரு துணை கிடைக்கும்!

உன் மனதாகிய மொட்டு இன்னும் மலரவில்லை எனில்

அதற்குரிய பருவம் இன்னும் வரவில்லை போலும்!

சோர்ந்து நின்றுவிடாதே!

दिल चमका  तू अपने दाग़ों को
रोशन किए जा  बुझे चरागों को
दिल चमका  तू अपने दाग़ों को
रोशन किए जा   बुझे चरागों को
तू गाये जा मेरी जान  ये दुनिया है यहाँ
किसी को मरहम ना मिला
दम से गए

ae dil chamka tu apne daaghon ko
roshan kiye jaa bujhe chiraaghon ko
tu gaaye jaa meri jaan, ye duniya hai yahaan

kisi ko marham naa milaa

மனதில் பட்ட கறைகள்அவை இருந்துவிட்டுப் போகட்டுமே!

அணைந்த விள்க்குகளை மீண்டும் ஒளிரச் செய்!

இந்த உலகம் யாருக்காவது அவர்களுடைய ஆசையை நிறைவேற்றி

சுகம் அளித்திருக்கிறதா?

அதனால், மனமே, (இதை உணர்ந்து) நீ உன் போக்கில் பாடிச் செல்!

मोती ना मिले   तो अश्क भरना है
दामन भरना  तेरी तमन्ना है
मोती ना मिले   तो अश्क भरना है
दामन भरना   तेरी तमन्ना है
तो प्यारे तुझे खुशी  अगर नहीं मिली
तो ग़म कुछ कम ना मिला
दम से गए

moti na miley to ashq bharnaa hai
daaman bharnaa teri tamannaa hai
to pyaare tujhe khushi, agar nahin mili

to gham kuchh kam naa milaa 

முத்து கிடைக்கவில்லையா? அதனால் என்ன?

கண்ணீரால் உன் பெட்டியை நிரப்பிக்கொள்!

எதையாவது வைத்து நிரப்பவேண்டுமென்பதுதானே உன் ஆசை?

அன்பனே! உனக்கு மகிழ்ச்சி கிட்டவில்லையெனில்,

துக்கத்திற்குக் குறைவா என்ன?

Song: Hum dum se gaye Film: Manzil 1960 Lyricist: Majrooh Sultanpuri

Music: S.D.Burman  Singer: Manna Dey

What a beautiful song with terrific orchestration. We were floored when we first watched this movie in 1965- the music felt so heavenly in the whole film. Burman broke the rule-one hero one singer consistently. In this film, Hemant Kumar, Rafi and Manna Dey sing for the hero-each one is a special situation. Please listen to the music of this movie- it is sublime. Manna Dey, like KIshore Kumar, could pronounce Hindi like a Hindian! This song is a gem.

The lyrics are superb, with a philosophical touch. The repetition of ‘Hum dum’ in the first line is so innovative. In Hindi, they call it (use of homonyms) yamaka alankar. (I do not know about Sanskrit.)

ஆஜா ஸனம்!

आजा सनम मधुर चांदनी में हमतुम मिले
तो वीराने में भी जाएगी बहार
झूमने लगेगा आसमान
कहता है दिल और मचलता है दिल
मोरे साजन ले चल मुझे तारों के पार
लगता नहीं है दिल यहाँ

ஆஜா ஸனம் மதுர் சாந்த்னீ மே ஹம் தும் மிலே

தோ வீரானே பீ ஜாயேகீ பஹார்

ஜூம்னே லகே ஆஸ்மான்

அன்பே! இந்த மதுர நிலவொளியில்  நாம் சந்தித்தால்

வீணான பூமியில் வசந்தம் வந்துவிடும்!

வானம் மின்மினுக்கும்!

கஹதா ஹை தில் ஔர் மசல்தா ஹை தில்

மோரே ஸாஜன் லே சல் முஜே தாரோ(ன்)கே பார்

லக்தா நஹீ ஹை தில் யஹா(ன்)

அன்பரே! மனம் நடனமிடுகிறது!

அந்தத் தாரகைகளுக்கும் அப்பால் இட்டுச் செல் என்கிறது!

இங்கே மனது பாவவில்லை!

भीगीभीगी रात में, दिल का दामन थाम ले
खोयी खोयी ज़िन्दगी, हर दम तेरा नाम ले
चाँद की बहकी नज़र, कह रही है प्यार कर
ज़िन्दगी है एक सफ़र, कौन जाने कल किधर
आजा सनम मधुर चांदनी

பீகீ பீகீ ராத் மே, தில் கா தாமன் தாம் லே

கோயீ கோயீ ஃஜிந்தகீ, ஹர்தம் தேரா நாம் லே

சாந்த் கீ பேஹதீ நஃஜர், கஹ ரஹீ ஹை ப்யார் கர்

ஃஜிந்தகீ ஹை ஏக் ஸஃபர், கௌன் ஜானே கல் கிதர்

ஆஜா ஸனம்..

நிலவொளியில் நனைந்த இந்த இரவில், மனதைப் பிடித்து நிறுத்திவை!

கழிந்து வரும் இந்த வாழ்க்கையில், ஒவ்வொரு மூச்சிலும் உன் பெயர் தான்!

சந்திரனின் போதை தரும் பார்வை அன்பு செய் என்று சொல்கிறது!

வாழ்க்கை ஒரு பயணம்,   

நாளை எங்கு இருப்போமோ, யாருக்குத் தெரியும்?

……

दिल ये चाहे आज तो, बादल बन उड़ जाऊँ मैं
दुल्हन जैसा आसमां, धरती पर ले आऊँ मैं
चाँद का डोला सजे, धूम तारों में मचे
झूम के दुनिया कहे, प्यार में दो दिल मिल
आजा सनम मधुर चांदनी

தில் யே சாஹே ஆஜ் தோபாதல் ப்ன் உட் ஜாவூ(ன்) மை

துல்ஹன் ஜைஸா ஆஸ்மான், தர்தீ பர் லே ஆவூ(ன்) மை

சாந்த் கா டோலா ஸஜே, தூம் தாரோ மே மசே

ஜூம் கே துனியா கஹே, ப்யர் மே தோ தில் மிலே

ஆஜா ஸனம்

மேகமாக மாறி உயரப் பறந்து சென்றுவிட வேண்டும் என இன்று மனம் சொல்கிறது!.. 

வானம் மணப்பெண் போல் ஜொலிக்கிறது! அதையும் கீழே கொண்டுவந்து விடுவேன்!

நிலவு பொங்கித் ததும்பும்! தாரகைகள் மின்னிப் பொலியும்!

இரண்டு உள்ளங்கள் அன்பில் இணைந்தன என்று உலகம்  மகிழ்ச்சியில் மிதக்கும்!

 Song: Aaja Sanam Film: Chori Chori 1956 Lyricist: Hasrat Jaipuri

Music: Shankar Jaikishan  Singers: Manna Dey & Lata Mangeshkar.

அருமையான டூயட். மிக, இனிய மெட்டு,. இப்படத்தில் இவர்கள் இருவரும் பாடிய மூன்று டூயட் இருக்கின்றன. மூன்றுமே சூப்பர்! இப்பாட்டிற்கு ஹஸ்ரத் ஜய்புரி எழுதிய இனிய கவிதை! See the images evoked! இப்பாட்டில் அக்கார்டியன் இசை அருமை.

இப்பாடலின் பின் ஒரு வரலாறு புதைந்திருக்கிறது!

இது ஏ.வி.எம், எடுத்த படம். It Happened One Night என்று 1934ல் வந்த ஹாலிவுட் படத்தின் தழுவல். இதன் பாட்டுப் பதிவிற்கு ஏ.வி.எம் செட்டியார் ஆஜரானார். ஹீரோ ராஜ் கபூருக்கு முகேஷ் பாடுவார் என எதிர்பார்த்தார். ஆனால் அங்கே  முகேஷ்  இல்லை! பாடப் போவது மன்னா டே என்றதும் செட்டியாருக்குக் கோபம் வந்துவிட்டது. பாட்டுப் பதிவு வேண்டாம் என்று சொல்லி எழுந்துவிட்டார், ஷங்கர் ஜெய்கிஷனும் ராஜ் கபூரும் அவரைச் சமாதானம் செய்ய மிகப் பாடுபட்டனர். [முகேஷ் அப்போது நடிப்பாசையால் பாடக்கூடாது என்ற சட்டச் சிக்கலில் மாட்டியிருந்தார்.] மன்னா டே முறையாக சங்கீதம் பயின்றவர், நல்ல குரல் வளம் கொண்டவர், பல நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார்; அவர் பாடுவதைக் கேளூங்கள், பிடிக்கவில்லையென்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பலவாறு சொல்லிச் சமாதானம் செய்தனர். மன்னாடே பாடிய மூன்று டூயட்களும் மிகச் சிறப்பாக அமைந்தன, செட்டியாருக்குப் பிடித்துவிட்டது! நமக்கும் இந்த அரிய பொக்கிஷங்கள் கிடைத்தன!.

 [முதலில் வேண்டாம் என்று சொன்னதற்காக செட்டியார் வருத்தம் தெரிவித்தார்- பெரிய மனது!]

யார் பாடுவதையும் மன்னா டே பாடமுடியும்; மன்னா டே பாடுவதை வேறு எவரும் பாடமுடியாது என்று திரை இசை உலகில் பரவலாகப் பேசுவார்கள். 1966. வந்த ‘வக்த்’ படத்தில் வரும் “யே மேரீ ஃஜொஹ்ரா ஜபீன் ” என்ற பாட்டு [பால்ராஜ் ஸாஹ்னி மேல் பாடியது] படு ஹிட் ஆனது! இதை இன்றும் வட இந்தியாவில் கல்யாணங்களில் குஷியாகப் பாடுகின்றனர். 1973ல் வந்த ஃஜஞ்ஜீர் படத்தில் ப்ராணுக்காகப் பாடிய “யாரீ ஹை இமான் மேரா ” என்ற பாட்டும் மிகப் பெரிய ஹிட். இந்தப் பாடல்களை வேறு எவரும் பாடவே முடியாது!. இருந்தும் .இவருடைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றார்ப்போல் வாய்ப்புகள் வரவில்லை.

Good wine also needs a big push at times in this commercial world. And it needs an attractive bottle and packaging too!

tags — ஹிந்தி படப் பாட்டுகள் – 26 , மன்னா டே

–subham–