ஒருவன் தூக்கத்தில் இருக்கும் போது எழுப்பாதே. அப்போதுதான் அவன் பாவம்………(Post No.9323)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9323

Date uploaded in London – –     1 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 26

kattukutty

அவன் சொன்ன புளித்துப்போன ஜோக்கினால் என்கையில்

இருந்த பால் கூட புளிச்சுப் போச்சு !!!

யுத்தத்தை மனிதன் அழிக்காவிடில் யுத்தம் மனிதனை அழித்து விடும்!

ஒரு பொய் சொல்வது கடினமல்ல, ஓரே ஒரு பொய் மட்டும்

சொல்வதுந்தான் கடினம்……….

என்  மனைவியால் எந்த ரகசியத்தையும் காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியும்……..ஆனால் அவள் யாரிடம் சொல்கிறாளோ அவர்களால் தான் முடிவதில்லை???

சீ…….. நீ ஒரு மனிதனா??? நான் என் அம்மா வீட்டிற்கு போறேன்……

என்று சொன்னாள் அந்த இளம் பெண்.

அதற்கு அவன்சொன்னான்

போயேன்! நானும் என் மனைவி வீட்டிற்கே திரும்பி போறேன்……..

xxx

உழவனுக்கு நிலம் வேண்டும். பெரிய மனிதனுக்கு கௌரவம் வேண்டும்.

போர் வீரனுக்கு சண்டை வேண்டும்.

வியாபாரிக்கு பணம் வேண்டும்.

பெண்களுக்கு முழு உலகமும் வேண்டும்!!!

XXXX

ரஷ்ய பழமொழி

பாட்டன் வாங்குகிறான்,

அப்பன் கட்டுகிறான்,

மகன் விற்கிறான்

பேரன் பிச்சை எடுக்கிறான்.

ஸ்காட்லாந்து பழமொழி.

மற்றவர்களை குறை கூறுவது போல் நீ உன்னை குறை கூறிக் கொள்

உன்னை நீ மன்னிப்பது போல மற்றவர்களையும் மன்னித்து விடு.

எகிப்து பழமொழி

ஏழ்மையின் காரணமாக உன்னை நீ தாழ்த்திக் கொள்ளாதே.

செல்வத்தின் காரணமாக உன்னை நீ உயர்த்திக் கொள்ளாதே.

ஸ்பெயின் பழமொழி

ஒருவன் தூக்கத்தில் இருக்கும் போது எழுப்பாதே……..

அப்போதுதான் அவன் பாவம் செய்யாமலிருக்கிறான்!!!

இது என் மொழி!!!

அபூர்வம் எது??? பணிவுடன் கூடிய புலமை

துக்கமற்றவன் யார்??? பைத்தியக்காரன்

ரசிக்கத்தக்க சுவை எது??? “நக” ச்சுவை

விரைந்து பறப்பவை எது??? விடுமுறை நாட்கள்

XXXX

ஓர்  பாடல்

இந்தப் பாடலின் சிறப்பு என்ன கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்!!!

பூவாளை நாறுநீ. பூமேகலோகமே

பூநீறு. நாளை வா. பூ………

(விடை கடைசியில் காண்க).

உலகம் திருந்த வழி என்ன???

உலகம் திருந்த வேண்டுமா? முதலில் உன்னை யோக்கியனாக்கிக்

கொள்.அடுத்த வினாடியே உலகத்தில் ஒரு அயோக்கியன் குறைந்திருப்பதை உணர்வாய்

அவமானம் எது???

தொழில் எத்தனை கீழ்த்தரமானாலும் அதைச் செய்வதில் அவமானம்

இல்லை . சோம்பல் ஒன்றே அவமானம்………

சட்டம் எதைப் போற்றுகிறது ???

சட்டம் ஒரு சிலந்தி வலை போன்றது. அதில் சிறு ஈக்கள் சிக்கிக் கொள்ளும். ஆனால் குளவிகளும், வண்டுகளும், அதை அறுத்துக்

கொண்டு ஓடிவிடும்.

இயற்கையின் அற்புதம் என்ன???

பல வருடங்கள் கழித்து நீங்கள் மூக்குக் கண்ணாடி போடப்போவதை உணர்ந்து காதுகளை கடவுள் வைத்திருக்கிறாரே

அதுதான் அற்புதம்!!!

xxxx subhamxxxx

tags- தூக்கத்தில் , எழுப்பாதே, ஞான மொழிகள் – 26

Leave a comment

Leave a comment