இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை – 2 (Post No.9749)

இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை – 2 (Post No.9749)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9749

Date uploaded in London – –18 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கட்டுரையின் முதல் பகுதி நேற்று 17-6-2021 வெளியானது. இது இரண்டாம் பகுதி.

சுவையான கதையைச்  சொல்கிறேன் ……….

1800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் காலன் (Galen) என்பவர் இரும்புத் துகளை பேதி மாத்திரையாக பயன்படுத்தலாம் என்றார். ஆனால் உண்மையில் அது மலத்தைக் கட்டுப்படுத்தும் என்பதை இன்று நாம் அறிவோம்.

காய்கறிச் சாம்பலில் இரும்பு இருப்பதை அறிந்த இத்தாலிய மருத்துவர் வின்செஞ்சோ மெங்கினி (Menghini) 1740-களில் ஒரு விந்தையான சோதனையைச் செய்தார் . ஒரு நாயைப் பிடித்து அதற்கு இரும்புச் சத்து அதிகமுள்ள உணவைக் கொடுத்து அதன் ரத்தத்தை எடுத்தார். அதைக் கருக்கி சாம்பல் ஆக்கி அதை காந்தம் அருகில் கொண்டு சென்றார். அப்போது ரத்தத்தில் இரும்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆயினும் இதன் முழு விவரத்தையும் 1832-ம் ஆண்டில் டாக்டர் பிளான்ட் (Dr Bland) வெளிப்படுத்தினார் . ரத்த சோகை உள்ள ஒரு நோயாளிக்கு இரும்பு சல்பேட் மாத்திரைகளைக் கொடுத்து குணப்படுத்தினார்.

ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்து நிறைந்த ஹீமோகுளோபின் உயிர் வாயுவான ஆக்சிஜனை எல்லா செல்களுக்கும் அளிக்கிறது என்பதை இன்று நாம் எல்லோரும் பள்ளியிலே கற்றுக்கொண்டு விடுகிறோம்.

xxx

இரும்பைக் கண்டுபிடித்தது யார் ?

உலகின் பழைய நூலான ரிக்வேதத்தில் ‘க்ருஷ்ண அயஸ்’ என்ற பெயரில் இரும்பு பற்றி பாடல்கள் உள்ளன. தில்லியில் குப்தர் காலம் முதல் துருப்பிடிக்காமல் இன்றும் நின்று கொண்டிருக்கும் இரும்புத் தூண் உலக அதிசயங்களில் ஒன்றாகும். 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலும் இரும்பினால் ஆன கத்தி, வாள் பற்றிய குறிப்புகள் உள . இந்தியாவுக்கு வெளியே துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இரும்புத் தொழில்  ஆலைகள் , பட்டறைகள் இருந்தன. எகிப்தில் கி.மு.3500 ஆண்டுப் பழமையான இரும்புப் பொருட்கள் கிடைத்தன. ஆயினும் அவை வானத்தில் இருந்து விழுந்த விண்கற்களைப் (Meteorites) பயன்படுத்தி செய்யப்பட்டவை. அதில் 7 சதவிகித நிக்கல் உலோகமும் இருப்பதை வைத்து இதை அறிந்தனர். விண்வெளியில் இருந்து பூமியில் விழும் விண்கற்களில் (Meteorites)  இப்படி இரும்பும் நிக்கலும் இருப்பதை விஞ்ஞானிகள் அறிவர்.

கிரேக்க நாட்டிலுள்ள மக்னிஷியா (MAGNESIA IN IONIA )என்னும் ஊரிலிருந்து வந்த இரும்புத்தாது மற்ற இரும்புடன் ஒட்டிக் கொள்வதை கிரேக்கர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அதற்கு மாக்னெட் (MAGNETS)  என்று பெயர் வைத்தனர் . இன்று அதை நாம் காந்தம் என்கிறோம். காந்தம் பற்றிய குறிப்புகள் காளிதாசன் பாடல்களிலும் திருமூலரின் திருமந்திரத்திலும்  இருப்பது குறிப்பிடத்  தக்கது

xxx

போரில் இரும்பு ஆயுதங்கள்

இரண்டாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் போரில் இரும்பினாலான வாட்களைப் (Swords) பயன்படுத்தி வருகின்றனர். இன்றும் போர்த்தி தளவாடங்களான டாங்கிகள், பீரங்கிகள், துப்பாக்கிகளில் இரும்புதான் முக்கிய உலோகம். ரோமானிய போர்த் தெய்வமான மார்ஸ்(Mars)  எனப்படும் செவ்வாய் தேவதையுடன் இரும்பைத் தொடர்புபடுத்தி எழுதினர் . பிளினி (PLINY)  என்ற வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார்:-

“இரும்பைக் கொண்டு கட்டிடம் கட்டுகிறோம்; பாறைகளைப் பிளக்கிறோம் இன்னும் பல பயனுள்ள செய ல்களைச் செய்கிறோம். ஆனால் அதே நேரத்தில் இரும்பைப் பயன்படுத்தி போர் செய்கிறோம், கொலை, கொள்ளையும் செய்கிறோம். நேருக்கு நேர் மட்டுமா? எந்திரங்கள் மூலம் தொலைவிலுள்ள இலக்குகளையும் பறக்கும் ஆயுதங்கள் மூலம் தாக்குகிறோம்”. இது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய புலம் பல் !!

xxx

இரும்பு எங்கே கிடைக்கிறது ?

இரும்பு கலந்த தாதுக்கள் ஹேமடைட், மாக்னடைட் , சிடரைட்  முதலியன ஆகும். இவை அதிகம் கிடைக்கும் நாடுகள்- இந்தியா , சீனா , பிரேஸில் , ஆஸ்திரேலியா , ரஷ்யா , அமெரிக்கா , கனடா .

இரும்பில் தேனிரும்பு, வார்ப்பிரும்பு , எஃ கு (Pig Iron, Cast Iron, Steel) என்று பல வகைகள் உள்ளன.

இரும்பினால் கட்டப்பட்ட பாரிஸ் நகர ஜபல் (Eiffel Tower in Paris, France) கோபுரத்தை, 100 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லோரும் குறைகூறி எள்ளி நகை ஆடினர் . இன்றோ அது உலகப் புகழ் பெற்ற சுற்றுலா கவர்ச்சியாகத் திகழ்கிறது

xxx

பொருளாதார உபயோகங்கள்

இரும்பு இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடலாம் . நாம் உபயோகிக்கும் ஆணி முதல் கம்ப்யுட்டர் , கார், விமானம் வரை எல்லாவற்றிலும் இரும்பும் அதனுடன் கலந்த கலப்பு உலோகமும் தான் இருக்கின்றன. இதைப் படிக்கும்போது உங்களைச் சுற்றிலும் உள்ள பொருள்களை நோட்டமிடுங்கள் . பெரும்பாலானவற்றில் இரும்பு இருப்பதைக் கண்டு வியப்பீர்கள் . பேனா முதல் நாணயம் வரை பலவற்றில் இரும்பின் கலப்பு இருக்கிறது; இயந்திரங்கள், பட்டறைகள் இல்லாத இடமும் உண்டோ!

இரும்பின் இரண்டு முக்கிய குணங்கள்

1.ஒன்று காந்தத்துடன் ஒட்டிக்கொள்ளும்.

2.இரண்டு துருப்பிடிக்கும்; அதாவது காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கலந்து இரும்பு ஆக்சைடுகளை உண்டாக்கும்; குறிப்பாக ஈரப்பதம் இருந்தால் அதிகம் ‘ஆக்சிடேஷன்’ நடக்கும்.

xxx

இரும்பின் ரசாயன தகவல் :–

குறியீடு – Fe (எப்ஈ); பெர்ரம் என்ற லத்தின் சொல்லின் சுருக்கம்.

அணு எடை – 26

உருகு நிலை – 1535 டிகிரி C ஸி

கொதி நிலை – 2750 டிகிரி C ஸி

சுத்தமான நிலையில் இரும்பு என்னும் உலோகம் வெள்ளி போல பள பளக்கும் . ஈரப்பதம் இல்லாத இடங்களில் துருப்பிடிக்காது. துருப்பிடிப்பதைத் தடுக்க வேறு உலோகங்களைக் கொண்டு பூச்சு கொடுத்தால் போதும்.

இதற்கு நான்கு ஐசடோப்புகள் இருக்கின்றன. எதற்கும் கதிரியக்கம் இல்லை.

எளிதில் அமிலத்தில் கரையக்கூடியது இது .

xxx

கீரை சாப்பிட்டு ஏமாறாதீர்கள்!!

இந்த பூமியில் இரும்புக்கு பஞ்சமே இல்லை. ஏனெனில் பூமியின் பெரும்பகுதி இரும்புதான். நமது பூமியின் விட்டம் 12,742 கிலோமீட்டர் . இதன் உட்கருவின் (Core) விட்டம் 7000 கி.மீ .. அதிலும் 2000 கிலோமீட்டர் குறுக்களவுக்கு  முழுக்க முழுக்க (Solid Iron) இரும்புதான்!

சிலவகை பாக்டீரியாக்கள் அவற்றிலுள்ள இரும்புத் துகளை ‘காம்பஸ்’ என்னும் திசை காட்டும் கருவியாகப் பயன்படுத்துகின்றன. தாவரங்களுக்கும் பிராணிகளுக்கும் மிகவும் தேவை இரும்புதான் .

கீரை பற்றிய ஒரு சுவையான விஷயத்துடன் கட்டுரையை முடிப்போம். பச்சை நிறம் உடைய தாவரங்களில் இரும்பு இருப்பது உண்மையே. ஆனால் கீரையிலுள்ள இரும்பு ச்சத்தை உடல் (not assimilated) ஏற்றுக்கொள்வதில்லை . ஆதிகாலத்தில் வெளியான பிரசுரங்களில் வெளியிடப்பட்ட தகவல் தவறு. அது இன்னும் சரி செய்யப்படவில்லை. கீரை நிறைய சாப்பிடுங்கள். ஆனால் இரும்புச் சத்துக்காக சாப்பிட்டு ஏமாறாதீர்கள்!!

–subham–

 tags- இரும்பு -2,  இரும்புச் சத்து-2

April 2019 London Swaminathan Articles; Index 77 (Post No.9748)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9748

Date uploaded in London – –18 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9700 PLUS POSTS.

April 2019 Index 77

More Tamil Temple Wonders,6223;3 April 2019

14 important Vishnu Temples in Kanchipuram,6226;4/4

Drama was a Success,but Audience was a Failure- Oscar Wilde,

6229;5/4

Lizard Worship in Tamil Nadu and Rome, 6232;6/4

Swami s crossword 642019; 6233;6/4

Aurangzeb , Robert Clive and Varsdaraja Perumal Temple,

6236; 7/4

Swami s crossword 842019; 6241;8/4

Uttara merur Wonders, 6242;8/4

If dramatist Corneill were alive I would make him King- Napoleon,

6240: 8/4

What to see, Where to go in Kanchipuram? 6245;9/4

Producers Anecdotes, 6250;10/4

Dangerous ,Evil Eye from Egypt to Australia 6252;11 4

Please hit me, Husband begged to his wife ,6256;12/4

Swami s crossword 1242019; 6258;12/4

Manu on Witness ,perjury , debt collection, 6261;13/4

My visit to Horoscope Temple, 6262;14/4

My visit to Ghost buster Samadhi,6268;15/4

How did Gopala krishna Bharathiyar compose

Nandanar Charitham?6278; 18/4

Chennai Airport Treasures, 6271;17/4

Never Draw a Caricature, Hogarth’s

Advice to a Lady, 6272;17/4

Earrings and Bracelets are not real Ornaments, 6275;16/4

Tamil-Nandanaar chariththiram uruvana kathai, 6279; 19/4

Number one in literature, 6283;19/4

Swami s crossword, 19419;6282

All about number Two, 6287;20/4

Swami s crossword 21419; 6289

Become a Doctor, Bury your Pictures, 6291;21/4

Glory of Number Three, 6293;22/4

Gingee Fort and Temples, 6301;23/4

Ugly Eiffel Tower,6304;24/4

Swami s crossword 25419;6308;

Noise of Music, Least Disagreeable 6307;25/4

Say Hello, Rest will Follow, 6311; 26/4

Number Three in Sanskrit and Tami literature, 6315;27/4

Swami s crossword 27429,6317; verse verse two

31 Knowledge Wisdom Sayings, 6318;28/4u

Kallanai Dam, Marvel of Tamil Engineers ,6323; 29/4

Samadhi of a Great Saint in Nerur, 6328; April 30;2019

xxxx

ஏப்ரல் 2019 தமிழ் கட்டுரைகள்

6 நாட்களில் 30 கோவில்கள் சூறாவளிச் சுற்றுப்

பயணம்! பு திய உண்மைகள் ;6224, ஏப்ரல் 1, 2021

108ல் பதினான்கு காஞ்சியில்!கோவிலில் தங்க மழை , 6228, 5/4

பள்ளி கொண்டானும் பல்லி கொண்டானும் , 6231,6/4

வரதராஜப் பெருமாள் கோவில் கிசயங்கள், 6235, 7/4

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (த.கு.போ) 7419,6237

அதிசயம் நிறைந்த தேர்தல் புகழ் உத்திரமேரூர்,6239, 8/4

காஞ்சிபுரத்தில் சகுந்தலா ஜகந்நாதன் மியூஸியம் , 6244,9/4

த. கு. போ.9419, 6247

கண் திருஷ்டி ஆபத்து: உலகம் முழுதும் நம்பும் உண்மை, 6249,10/4

ஒரே கல்லில் 4 மாங்காய் ! காஞ்சியில் கிடைக்கும், 6253, 11/4

ரகசியமான 12 ராசி மோதிரம், 6257,12/4

மலை மீது குட்டி திருப்பதி – மலை வையாவூர், 6260, 13/4

மநு சொல்லும் 2 அதிசயக் கதைகள் ,6263, 14/4

லண்டனில்  பஞ்சாங்க படனம் , பஞ்சாங்கம் ஒரு

என்சைக்ளோபீடியா , 6266, 15/4

பெண்ணே கேலிச் சித்த்ரம் வேண்டவே வேண்டாம் ,6277,16/4

த. கு. போ.15419, 6267, 15/4

பேயை விரட்டும் சித்தர் கோவில், 6270, 17/4

நடிகைக்குக்  கிடைத்த அற்புதப் பரிசு , 6274, 18/4

கைக்குக் கங்கணம் அழகா? காத்துக்குக்

குண்டலம் அழகா ?6280, 19/4

இறந்த யானை எழுந்த கதை,6281,19/4

வத்தக் குழம்பு வைப்பது எப்படி?6286, 20/4

த.கு.போ.20419, 6285

தாஜ்மஹால் ரகசியம்- பகுதி 1; 6292, 21/4

த.கு.போ.22419, 6295

பகுத்தறிவுத் தம்பிகளின் மூட நம்பிக்கைகள் 6296, 22/4

ஊட்டத்தூ ர் கோவில் அதிசயங்கள், 6297, 22/4

தாஜ் மஹால் ரகசியம் 2, 6294, 22/4

தாஜ் மஹால் ரகசியம் 3, 6298

என் மூன்றின் மகத்துவம், 6300, 23/4

,மருத்துவதில் எண்  மூன்று , 6303, 24/4

பெரியவா செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி,6306, 25/4

அட என் அவலட்சணமே ?  ஐ பல் கோபுரமே, 6305,25/4

த.கு.போ.26419, 6313

பெண்களைக் கவர மூன்று வலிகள்- தமிழர்

கண்டுபிடிப்பு ,6314, 27/4

அது கழுதைக்குக் கூட தெரியும்- சங்கீத மேதை பாய்ச்சல், 6310, 26/4

31 அறிவு ஞானம் பற்றிய பொன்மொழிகள்,6320, 28/4

முனிவர்களாலும் முடியாது- கம்பன்  வியப்பு, 6322, 29/4

மூன்று சகோதரிகள்- காஞ்சிப் பெரியவர் தகவல், 6326, 30 ஏப்ரல் 2019

குரோமியம் தரும் நோய்களும் செய்யும் நன்மையும், 6327, 30/4

tags- april 2019, index 77, ஏப்ரல் 2019, தமிழ் கட்டுரைகள்,

அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் (Post N.9737)

அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன்  (Post N.9737)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9737

Date uploaded in London – –18 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் (Walt Whitman) ஆவார் . அவர் எழுதிய லீவ்ஸ் ஆப் கிராஸ் (Leaves of Grass) என்னும் கவிதைத் தொகுப்பு உலக இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது.

பிறந்த தேதி – 31-5-1819

இறந்த தேதி – 26-3-1892

வாழ்ந்த ஆண்டுகள் 72

Publications:–
1855 Leaves of Grass
1865 Drum Taps
1865-86 Sequel to Drum Taps
1871 Democratic Vistas
1875 Memoranda during the War
1882 Specimen Days and Collect

அமெரிக்காவில் லாங் ஐலண்டில் பிறந்தார். ப்ரூக்ளினில் வாழ்ந்தார்.அவருடைய தந்தை ஒரு மரத் தச்சர். விட்மன், கிராமப்புற பள்ளிகளில் பயின்றார். ஒரு அச்சக  ஊழியர் ஆக வாழ்க்கையைத் துவங்கினார். பெரும்பாலும் லாங் ஐலண்டில் இளமைப் பருவத்தைக் கழித்ததால் அந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டு மயங்கினார் இதனால் இவரது படைப்புகளில் இயற்கை கொஞ்சி விளையாடுவதைக் காணலாம்.

ஒரு கட்டத்தில் பத்திரிக்கையாளராக மாறி நியூயார்க்கில் பனி புரிந்தார். ஒரு முறை நியூ ஆர்லியன்ஸ் செல்ல நேரிட்டது. அப்போது தான் வெளி உலகத்தை அறிந்தார். அடக் கடவுளே! இந்த உலகம் இவ்வளவு பெரியதா, இவ்வளவு வித விதமான மனிதர்கள் இருக்கிறார்களா என்று ஒரே வியப்பு! வயதும் இளம் வயது . பின்னர் நியூயார்க் நகருக்குத் திரும்பி வந்தார். அந்த நகரத்திலும் புதியோர் வருகையால் பெரிய மாறுதல்கள்  ஏற்பட்டுக்கொண்டிருந்தன, புதியோரின் வருகையும், பல தேச மக்களின் வருகையும் அமெரிக்க மக்களின் சுதந்திர தாகமும் இவரைப் புதுக்கவிதைகள் எழுத ஊக்குவித்தன.

அவருடைய புதுக்கவிதைகளை வெளியிட எல்லோரும் மறுத்துவிட்டனர். பாலியல் விஷயங்களை அவர் பட்டவர்த்தனமாக எழுதியதும் எதுகை மோனை இல்லாமல் வசன கவிதை (Blank Verse) எழுதியதும் பதிப்பாளர்களைக் கவரவில்லை.

அவரே சொந்த செலவில் 36 வயதானபோது ‘லீவ்ஸ் ஆப் கிராஸ்’ கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். அதில் இயற்கை, மனித சுதந்திரம், மனிதர்களின் சகோதரத்துவம் ஆகியவற்றைப் பிரதிபலித்தார்.

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அவர் நர்சாக (Nurse)  பணியாற்றினார்.போர்க் கால அனுபவங்களை கவிதைகளாக எழுதி ட்ரம் டேப்ஸ் (Drum Taps) என்ற பெயரில் வெளியிட்டார்.

ஆப்ரஹாம் லிங்கன் இறந்தவுடன்  வால்ட் விட்மன் எழுதிய கவிதை ‘O Captain ! My Captain!’ ஓ கேப்டன் மை கேப்டன் என்பது மிகவும் பிரபலம்  அடைந்தது. இதன் மூலமும் இவர் புகழ் அதிகரித்தது.

O Captain! My Captain!

BY WALT WHITMAN

O Captain! my Captain! our fearful trip is done,

The ship has weather’d every rack, the prize we sought is won,

The port is near, the bells I hear, the people all exulting,

While follow eyes the steady keel, the vessel grim and daring;

                         But O heart! heart! heart!

                            O the bleeding drops of red,

                               Where on the deck my Captain lies,

                                  Fallen cold and dead.

O Captain! my Captain! rise up and hear the bells;

Rise up—for you the flag is flung—for you the bugle trills,

For you bouquets and ribbon’d wreaths—for you the shores a-crowding,

For you they call, the swaying mass, their eager faces turning;

                         Here Captain! dear father!

                            This arm beneath your head!

                               It is some dream that on the deck,

                                 You’ve fallen cold and dead.

My Captain does not answer, his lips are pale and still,

My father does not feel my arm, he has no pulse nor will,

The ship is anchor’d safe and sound, its voyage closed and done,

From fearful trip the victor ship comes in with object won;

                         Exult O shores, and ring O bells!

                            But I with mournful tread,

                               Walk the deck my Captain lies,

                                  Fallen cold and dead.

xxxx

விட்மன் பற்றிய முந்தைய கட்டுரைகள் :–

அமெரிக்காவைக் கலக்கிய …

https://tamilandvedas.com › அமெ…

19 Nov 2017 — வால்ட் விட்மன் (Walt Whitman) என்ற புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர், … வால்ட் விட்மன் இறந்தபோது இங்கர்சால் ஆற்றிய இரங்கல் உரை​ …

அமெரிக்கா | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

2 Jul 2019 — ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … உலகப் புகழ் பெற்ற அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மன் “அமெரிக்கா பாடுவதை நான் …

Walt Whitman | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › walt-whitman

18 Nov 2017 — Compiled by London Swaminathan. Date: 18 NOVEMBER 2017. Time uploaded in London- 20-35. Post No. 4409. Pictures shown here are …

AMERICA’S GREAT POET WALT WHITMAN (Post No.5512 …

https://tamilandvedas.com › 2018/10/06 › americas-gre…

1.     

6 Oct 2018 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. AMERICA’S GREAT POET WALT WHITMAN (Post No …

tags-  அமெரிக்கக் கவிஞர், வால்ட் விட்மன், Walt Whitman

திசை தப்பி வந்த அழகிக்குப் புகலிடம் (Post No.9747)

திசை தப்பி வந்த அழகிக்குப் புகலிடம் (Post No.9747)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9747

Date uploaded in London – –  –18 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கொங்குமண்டல சதகம் பாடல் 66

திசை தப்பி வந்த அழகிக்குப் புகலிடம் கொடுத்துக் காத்த பண்பாளன்!

ச.நாகராஜன்

பாண்டிய நாட்டில் வாழ்ந்து வந்த செட்டி குலத்துப் பெண்மணி ஒருத்தி தன் கணவனுடன் காஞ்சிபுரத்திற்கு ஒரு முறை தல யாத்திரையாக வந்தாள். சற்று சித்தப்பிரமை உடைய அவள் வழி தப்பி, கணவனைப் பிரிந்து தன் போக்கில் சென்று குன்றவர்த்தனம் என்னும் ஊரை அடைந்தாள்.

அங்கு ஒரு வேளாளப் பெருமகன் வீட்டில் அவள் அடைக்கலம் புகுந்தாள். அவள் வரலாற்றைக் கேட்ட வேளாளன், “பயப்படாதே, தங்காய், இங்கேயே நீ இருக்கலாம். உன் கணவன் வருமளவும் இது தான் உன் தாய் வீடு” என்று சொல்லி அவளை உபசரித்துப் பாராட்டினான். அவளது கணவனோ தன் மனைவியை எங்கு தேடியும் காணாமல் கடைசியில் வேளாளன் அனுப்பிய செய்தியைக் கேட்டு குன்றவர்த்தனம் ஊருக்கு வந்தான். அவனைத் தங்கையின் கணவன் என்பதால் மைத்துனன் முறை கொண்டாடி அளவளாவி அந்த இருவருக்கும் முறைப்படி ஆடைகள் மற்றும் ஆபரணங்களை வழங்கி அவர்களுடன் கூடவே அவர்கள் வீடு வரை சென்று அவர்களை விட்டு விட்டு வந்தான் அந்த வேளாளன்.

இப்படிப்பட்ட உயர் பண்புகளை உடைய வேளாளர் கொண்ட தொண்டைமண்டலத்தின் சிறப்பைச் சொல்லவும் முடியுமா?

செண்டுகொண்டு குன்றை மோதி யன்று வென்ற பாண்டியன்

றேசவாச மாதுளந்தி கைத்துசுற்றி சுற்றரை

விண்டுதொண்டை மண்டலத்தை கண்டுகுன்ற வர்த்தனம்

மேவி வாடி தேம்பி நின்ற மின்னையன்னை வீடெனக்

கொண்டுகொண்ட பதிபின்வந்து கூடகூட னாடதிற்

கொண்டுபோய்நற் சீதனங் கொடுத்துசீர் நடத்தியே

பண்டு போலிருத்தி தங்கை முறைமைபெற்ற சீலன்பூ

பாலர் தங்கு லத்தில் வந்த பாலகிருஷ்ண சாமியே

என்ற தனிப்பாடல் அழகுற இந்த சம்பவத்தை எடுத்துரைக்கிறது.

இப்படிப்பட்ட அருமையான வேளாளர் பெருமக்களைக் கொண்டது தொண்டைமண்டலம் என்று தொண்டைமண்டல சதகம் தனது 66ஆவது பாடலில் பெருமையுறக் கூறுகிறது. பாடல் இதோ:-

கொத்தலர் கோதை வியன்பாண்டி மண்டலக் கொம்பைத் தன்பால்

வைத்திருந்தாங்கவ டன்கேள்வன்றேடி வரவவற்கே

யுய்த்திருவோர்க்கும் வரிசையுமாற்றி யுடனுஞ்சென்று

மைத்துனக்கேண்மை படைத்ததன்றோ தொண்டை மண்டலமே

பாடலின் பொருள் :- தெற்கின் கண் உள்ள பாண்டிய மண்டலத்தில்ருந்த கொத்தாகிய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பூங்கொம்பு போலும் அழகுடைய பெண் ஒருத்தி திசை தப்பி வந்து ஒரு வேளாளன் வீட்டில் அடைக்கலம் புக, அந்த வேளாளன் அவளைத் தன் சகோதரியாகப் பாவித்து உபசரித்து ஆதரித்து வைத்திருந்து, அந்தப் பெண்ணைத் தேடி வந்த அவள் கணவனையும் தன் மைத்துனன் முறை கொண்டு உபசரித்து அவ்விருவருக்கு ஆடை ஆபரணம் உடைய வரிசை கொடுத்து, அவர்களுடன் தானும் உடன் சென்று அவர்களை அவர் ஊரில் அவர்களைச் சேர்ப்பித்து விட்டு வந்தான். இவ்வாறு அறநெறி வழுவாது நின்று பிறர் கற்பையும் மானத்தையும் சிதையாமல் காத்து ஆதரிக்கும் நல்லொழுக்கம் உடைய வேளாளர்க்கு இருப்பிடமாக அமைவது இந்தத் தொண்டைமண்டலமே!

***

tags- திசை, அழகி, புகலிடம்,

PLEASE JOIN US TODAY MONDAY 21-6-2021

21-6- 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -6 MTS

PRAYER – MRS DAYA NARAYANAN

MANIFESTATION OF WATER IN SRI PURANDARA DAASARA SAHITYA-

TALK IN ENGLISH BY DR HARIHARA SREENIVASA RAO – 12 MTS

KATRINILE VARUM GEETHAM-  SONG BY RANJANI , 4 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT MEERA BHAI- 12 MTS

ASHTAPATHI -19 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -6 mts

INTERVIEW WITH SRI NAGANATHA SIVAM, CHIEF PRIEST OF LONDON MURUGAN TEMPLE ON HIS ‘LIFE TIME ACHIEVEMENT

AWARD’ ; SRI VASANTHAN KURUKKAL INTERVIEWS HIM- 20 MTS

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

TOTAL TIME- APPR. 70 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS– PUBLICITY 21-6-21

PLEASE JOIN US TODAY SUNDAY 20-6-2021

20-6-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER - 5 MTS

Prayer –
MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON   THIRU NAGESWARAM  TEMPLE,8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR - 10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY RANI SRINIVASAN
--25 MINUTES

SEMINAR FOR WRITERS in English

Conducted by Dr V S Mani of Amersham and Mrs Uma Prasad of Dubai

20 minutes

appr. 70 minutes

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

 

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

 

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

 

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

 

 

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

 

 

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

 

DAYS- MONDAYS AND SUNDAYS

 

 

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

 

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

 

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

 

 

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

 

XXX

 

 WHO IS THE PRODUCER?


 

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

 



 

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

 

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

 

 

WHERE IS IT?

 

ON ZOOM AND

 

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

 

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

 

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

 



XXXX SUBHAM XXXX
TAGS- PUBLICITY 20-6-21

இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை -1 (Post 9746)

இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை -1 (Post 9746)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9746

Date uploaded in London – –17 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

அலுமினியம் முதல் குளோரின் வரை இதுவரை  33 மூலகங்கள்/தனிமங்கள் (elements) பற்றி சுவையான கதைகளைக் கண்டோம். இன்று இரும்பின் (Iron) கதையைக் காண்போம்.

நம் அனைவருக்கும் உடம்பில் இரும்புச் சத்து அவசியம்; குறிப்பாக மேலை நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரை இலவசமாகக் கொடுக்கின்றனர். முதலில் இரும்பு  (Iron) பற்றி ஒரு சுவையான விஷயத்தைக் காண்போம்.

இந்த பூமியில் 70 சதவிகிதம் பகுதி கடல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கடல் ஒரு ‘காலி டப்பா’ (empty) என்பது பலருக்கும் தெரிந்திராது. கடல் முழுதும் மீன்களும் திமிங்கிலங்களும் கடல் பாசியும் நிறைந்திருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் 80 சதவிகித கடல் பகுதி உயிரினம் வாழாத இருண்ட  பகுதியாகும். சூரிய ஒளி, சில மீட்டர் ஆழத்துக்கே பாயும். அதற்கப்பாலுள்ள இருண்ட பகுதி கிட்டத்தட்ட மீன்களோ கடல் தாவரங்களோ இல்லாத பகுதியே!

விஞ்ஞானிகளுக்கு திடீரென்று ஒரு யோஜனை பிறந்தது. இந்த 80 சதவீதப் பகுதியில் மீன்களை  வளர்த்தால் உலகில் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கலாமே என்று.

முதலில், கடலின் மேல்பகுதி நீர் மட்டத்தை ஆராய்ந்தார்கள். அங்கு இரும்புச் சத்து குறைவான இடங்களில் மீன்கள் இல்லாததைக் கண்டு வியந்தார்கள். அந்த இடங்களில் பிளாக்ட்டான் (Planktons) என்னும் நுண்ணுயிர்கள் வசிக்கவில்லை. இதற்கு இரும்புச் சத்து இல்லாததே  காரணம் என்று தெரிந்தது. நம் கண்ணுக்குத் தெரியாத பிளான்க்ட்டான்(Plaktons) களை சாப்பிட்டுத்தான் சின்ன மீன் முதல் பெரிய திமிங்கிலம் வரை வளருகின்றன. உடனே கலிபோர்னியாவில் (அமெரிக்கா ) உள்ள  மாஸ் லாண்டிங் மரைன் சோதனைச்சாலையைச்(Moss Landing Marine Laboratories)  சேர்ந்த ஜான் மார்ட்டின் ஒரு யோசனையை முன் வைத்தார். கடலிலும் உரம் தூவுவோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றார் .

பசிபிக் பெருங்கடலில் காலபாகஸ் (Galapagos Islands)  என்ற புகழ் பெற்ற தீவு உள்ளது. அங்குதான் ராட்சஸ ஆமைகள் வசிக்கின்றன. அந்தத் தீவுக்கு மேற்கே 60 சதுர கிலோமீட்டர் பரப்பில் உரம் போட்டார்கள். அதாவது இரும்பு சல்பேட் கரைசலை (Ferrous sulfate) பரப்பினார்கள். இது 1980-ம் ஆண்டுகளில் நடந்தது. ஒரே வாரத்தில் அற்புதம் நிகழ்ந்தது. கடல் முழுதும் பிளாங்க்ட்டான் உயிர் இனங்களுடன் பச்சைப் பசேல் என்று காட்சி தந்தது. . அதன் மூலம் மீன்கள் பெருகிற்று. உயிர் வாழும் பிராணிகளுக்கு இரும்பு எவ்வளவு அவசியம் என்பதை இது காட்டியது.  இரும்பு சல்பேட்- Fபெர்ரஸ் சல்பேட் –  தயாரிப்பது மலிவான, சுலபமான பணி . துருப்பிடித்த இரும்பில் கந்தக அமிலத்தை ஊற்றினால் ‘பெர்ரஸ் சல்பேட்’ கிடைத்துவிடும்.

கட்டிடம் கட்ட அடிப்படை செங்கல்; கடல் உயிரினங்களின் அடிப்படை உணவு பிளாங்க்ட்டான்.

***

ஒவ்வொரு மனிதனுக்கும் நாள் ஒன்றுக்கு 7 மில்லிகிராம் இரும்புச் சத்து தேவை. பெண்களுக்கு 11 மில்லிகிராம் தேவை. நாம் சாப்பிடும் சாதாரண உணவில் இரும்புச் சத்து இருப்பதால் அதிகம் கவலைப்படத் தேவை இல்லை. கீழ்கண்ட உணவுகளில் இரும்புச் சத்து அதிகம் உளது:–

முட்டை, மாட்டு மாமிசம், பிராணிகளின் ஈரல் (லிவர்).

காய்கறி உணவு மட்டும் சாப்பிடுவோருக்கு ரொட்டி, கருவேப்பிலை, சுல்தானா பழம் , காலையில் சாப்பிடும் (Breakfast Cereals)  தானிய உணவு, பேக்ட் பீன்ஸ்(Baked Beans) , பீநட் பட்டர் (Peanut Butter)  , சோயா பீன்ஸ், பட்டாணி, பீட்ருட், பருப்பு வகைகள்

மேலை நாட்டுக்காரர்களின் உணவில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது அவர்கள் மாமிசம் சாப்பிடாத நாள் எதுவுவும் இல்லை. உலகில் 50 கோடி மக்களுக்கு இரும்புச் சத்து உணவு கிடைப்பதில்லை .

ரத்த பரிசோதனையில் இரும்புச் சத்து குறைவாக இருப்பது தெரிந்தால் டாக்டர்களே   இரும்பு மாத்திரை (Iron Tablets)  எழுதிக் கொடுப்பார்கள். இதைச் சாப்பிடுகையில் மலத்தின் நிறம் கருப்பாக இருக்கும்; பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் இரும்பு மாத்திரைகள் மலச்சிக்கலை உண்டாக்குவதால் அதை ஈடு கட்ட நிறைய தண்ணீர்  அருந்தல், பழங்கள் சாப்பிடுதல் தேவைப்படும்.

இரும்பின் கதையைத் தொடர்ந்து காண்போம்.

இரும்புச் சத்து குறைந்தால் ரத்த சோகை (anaemic condition) என்பர். அதிகம் உடலில் போனாலும் ஆபத்து. குறிப்பாக இரும்புத் தூசி பறக்கும் ஆலைகளில் பணிபுரிவோருக்கு வெல்டர்ஸ் லங் (Welders Lung) என்னும் நுரையீரல் நோய் வரும்.

நம் உடலில் உள்ள ரத்தத்துக்கு சிவப்பு நிறம் அளிக்கும் பொருள் ஹீமோக்ளோபின் (Haemoglobin) . அதற்கு இரும்புச் சத்து மிகவும் தேவை.

ஆங்கிலத்தில் இரும்பை ‘அயன்’ (IRON) என்போம். லத்தீன் மொழியில் பெர்ரம் (FERRUM) என்பர். இதைத்தான் ரசாயன பொருட்களின் பெயர்களில் பயன்படுத்துவர்.

கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் கருவுக்கு 700 மில்லிகிராம் இரும்புச் சத்து தேவைப்படுவதால் அவர்களுக்கு இரும்பு மாத்திரைகள் (Iron Tablets) கொடுப்பது வழக்கம்.அதிகமான இரும்புச் சத்து கல்லீரலில் சேமிக்கப்படுகிறது.

அண்மைக்கால ஆராய்ச்சியில் மூளையின் சில பகுதிகளில் அதிகம் இரும்புச் சத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மன வளர்ச்சி குறைந்தோர், மந்த புத்தி உடையோருக்கு இரும்பு இல்லாததும் ஒரு காரணம் என்பது அப்போது தெரிந்தது .

****

உடலுக்குள் நடக்கும் ஒரு போர்/ யுத்தம்

நமது உடலுக்குள் ட்ரான்ஸ்பெரின் (Transferrin)  என்ற புரத்தச் சத்து ஒன்று இருக்கிறது. இது இரும்புச்சத்தைக் கட்டிப் பிணைப்பதோடு செல்களுக்கு இடையே பரிமாறவும் உதவிசெய்கிறது . இது இரும்பைப் பயன்படுத்துகிறது. உடலில் ஒரு பாக்டிரியா கிருமி நுழைந்து தாக்கத் தொடங்கினால் , உடனே இந்த ட்ரான்ஸ் பெரின் ரத்தத்தில் உள்ள இரும்பை எல்லாம் எடுத்து ‘ஒளித்துவைத்து’ விடுகிறது. அதாவது தனக்குள் வைத்துக் கொண்டுவிடும். அப்போது இரும்புச் சத்துக்கிடைக்காத பாக்டீரியா வளர முடியாது. சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ஒரு ஆன்டிபயாடிக் (Anti biotic) மாத்திரை போல செயல்பட்டு நோய்க்கிருமிகளை ஒழிக்கிறது

ஒரு சுவையான இரும்புக் கதையையைக் கேளுங்கள்…………….

தொடரும் ——–

tags- இரும்பு , இரும்புச் சத்து ,iron

நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (Post No.9745)

நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (Post No.9745)

GEORGE BERNARD SHAW 1856-1950

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9745

Date uploaded in London – –17 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

அயர்லாந்து நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட்ஷா . இவர் ஐம்பதுக்கும் மேலான நாடகங்களை இயற்றியுள்ளார். 1925ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர். கேலி, கிண்டல், நக்கல், பகடி , நகைச்சுவைகள் நிரம்பியது இவரது படைப்புகள்.

ஷா ஒரு வெஜிட்டேரியன் – மரக்கறி உணவு மட்டுமே சாப்பிடுவார் .

ஷா குடி , மதுபானத்தை எதிரி.

ஷா பாரதி போலவே பெண்ணுரிமைக்குப் போராடியவர்.

ஷா ஒரு சிந்தனைச் சிற்பி.

GEORGE BERNARD SHAW 1856-1950

பிறந்த தேதி – 26 ஜூலை 1856

இறந்த தேதி- நவம்பர் 2, 1950

வாழ்ந்த ஆண்டுகள் – 94

ஷா , அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில்(Dublin) பிறந்தார்.

இவருடைய தந்தை மஹா குடிகாரன் . இதனால் தாய் கோபித்துக்கொண்டு லண்டனுக்குப் போய்விட்டாள். அங்கே சங்கீதம் சொல்லிக்கொடுத்தார்  ஷா கற்றதெல்லாம் சமயம் தொடர்பான கல்வி. இது இவரது படைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இருபது வயதானபோது லண்டனில் அம்மாவுடன் வசிக்கத் தொடங்கினார். அப்போது முதல் சங்கீத, இலக்கிய விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார்.

நார்வே நாட்டு நாடக ஆசிரியர் இப்சனின் (Ibsen) நாடகங்கள் இவரை மிகவும் கவர்ந்தன. அதன் தாக்கத்தை இவரது நாடகங்களிலும் காணலாம்.

36 வயதான போது முதல் நாடகத்தை எழுதினார். அதைத் தொடர்ந்து எழுதிய நாடகங்களிலும் மற்றவர்களால்  ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் கதாபாத்திரமாகக் கொண்டார்.

இவர் ஒரு சோஷலிஸ வாதி. பேபியன் சொசைட்டி (Fabian Society) என்பதை நிறுவினார். இதன் மூலம் மனித குலத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்று நம்பினார்.

ஷாவின் நாடகங்களில் மிகவும் புகழ் பெற்றவை பிக்மாலியன் , செயின்ட் ஜோன் .

பிக்மாலியன் நாடகத்தின் மூலம் பிரிட்டிஷ் சமூகத்திலுள்ள வர்க்கக் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார். செயின்ட் ஜோன் மூலம் கிறிஸ்தவ மதக் குறைபாடுகளை எடுத்துக் காட்டினார். இவரது நாடகங்கள் திரைப்படங்களாக மிளிர்ந்தன . பிக்மாலியன் , My Fair Lady மை பேர் லேடி திரைப்படமாக வந்து இவருக்குப் புகழ் சேர்த்தது.

பெர்னார்ட் ஷாவின் முக்கியப்படைப்புகள்-

1891- THE QUINTESSENCE OF IBSENISM

1892- WIDOWER’S HOUSES

1894- ARMS AND THE MAN

1902- MRS WARREN’S PROFESSION

1903- MAN AND SUPERMAN

912 – PYGMALION

1913 – ANDROCLES AND THE LION

1919- HEARBREAK HOUSE

1921- BACK TO METHUSELAH

1923- ST. JOAN

ஷா எழுத்தாளர் மட்டுமல்ல. நல்ல பேச்சாளரும் கூட. சிந்தைனையைத் தூண்டும் வகையில் பேசுவார்.

10-8-1990-ல் நான் பி.பி.சி. தமிழோசையில் அளித்த பதிலில் (வினவுங்கள் விடைதருவோம் நிகழ்ச்சி) உள்ள சில விஷ்யங்களையும் கூறுகிறேன் :-

ஷா முதலில் வேலைக்குச் சேர்ந்த இடம் ஒரு நில விற்பனை அலுவலக ம் .

28 வயதில் சோஷலிஸ இயக்கத்தில் ஈடுபட்டு அவரைப் போலவே அந்த இயக்கத்தில் ஆர்வம் கொண்ட ஒரு (Charlotte Payne- Townsend) பெண்ணை மணந்தார் ஷா.

‘விடோவர்ஸ் ஹவுஸஸ்’ என்ற நாடகத்தில் நிலச் சுவான்தார்களைத் தாக்குகிறார். புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம் என்பது அவரது கொள்கை. போர் செய்வது எவ்வளவு மடைமை என்பதை ‘ஆர்ம்ஸ் அண்ட்  தி மேன்’ நாடகம் விளக்குகிறது.

முதல் உலகப் போருக்குப் பின்னர் ஷா எழுதிய நாடகங்கள்தான் இவரது படைப்புகளில் முன்னனியில் நிற்கின்றன. ஜோன் ஆப் ஆர்க்கின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் செயின்ட் ஜோன் , ஜூலியஸ் சீஸர் – அழகி கிளியோபாட்ராவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஸீஸர் அண்ட் க்ளியோபாட்ரா ஆகியன சிறப்பானவை .

நீண்ட காலம் வாழும் மனிதர்களை பற்றிய ‘பேக் டு மெதூசலா’ என்ற நாடகமும் குறிப்பிட்டது தக்கது.

பிரிட்டனில் பதவிக்கு வந்த தொழிற்கட்சி இவருக்கு பிரபு பட்டம் கொடுக்க முன்வந்தது. ஆனால் அவர் அதை  ஏற்க மறுத்துவிட்டார்

74 வயதில் இந்தியா , சீனா , ஆப்ரிக்க நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றுக்கு உலகப் பயணம் மேற்கொண்டார்.

93 வயதிலும் எழுதிக்கொண்டே இருந்தார். ஏராளமான  செல்வம் சேர்த்தபோதும் தன்னை அசல் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டார்.மக்களைச் சிரிக்கவைத்த அதே நேரத்த்தில் சிந்திக்கவும் வைத்தார்.

மேலை நாடுகள் மீது என்றோ ஒரு நாள் ரஷியா படை எடுக்கும் என்று மேலை நாடுகள் அஞ்சின. ஆனால் ரஷியாவுக்குள்ள சொந்தப பிரச்சினைகளால் இதை அது எண்ணிக்கூட பார்க்காது என்று ஷா கூறினார். அது இன்று வரை சரியாகவே உளது.

நானும் தமிழ் திரைப்பட நடிகை ராதிகாவும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று லண்டனில் நடித்த பிக்மாலியன் (Pygmalion)  பி பி. சி தமிழோசையில் ஒளிபரப்பாகியது

Written by London Swaminathan, 17 June 2021

ஷா பற்றிய முந்தைய கட்டுரைகளில் இந்த விஷயங்களைக் காண்க:—

பெர்னார்ட் ஷா | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

· Translate this page

26 Jul 2015 — Article No.2019. Written லண்டன் சுவாமிநாதன். Swami_48@​yahoo.com. Date : 26 July 2014. Time uploaded in London :7-07. 1.​இசாடொரா டங்கன் என்ற பெண்மணி, புகழ்பெற்ற …

பெர்னார்ட் ஷா துணுக்குகள் | Tamil …

https://tamilandvedas.com › tag › ப…

1.     

Translate this page

26 Jul 2015 — Article No.2020. Written லண்டன் சுவாமிநாதன். Swami_48@​yahoo.com. Date : 26 July 2014. Time uploaded in London :7-16. ஷா தொடர்பான முதல் ஐந்து சுவையான …

சம்பவங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

1.     

Translate this page

27 Apr 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. FIRST PART OF THIS TALK WAS … (எனக்கும் பெர்னார்ட் ஷா நாடகங்களுக்கும் தொடர்பு உண்டு. லண்டனில் பி.பி.

நடந்தவை தான் நம்புங்கள் – 4 (Post No …

https://tamilandvedas.com › நடந்…

1.     

Translate this page

25 Jan 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. நடந்தவை … பேரறிஞர் பெர்னார்ட் ஷா புத்திகூர்மை உள்ளவர் மட்டுமல்ல; உடனுக்குடன் பதில் …

tags–ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, பெர்னாட் ஷா 

March 2019 London Swaminathan Articles; Index 76 (Post No.9744)

WRITTEN BY LONDON SWAMINATHAN 

Post No. 9744 

Date uploaded in London – –17 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9700 PLUS POSTS.

March 2019 Index 76

Enmity without rhyme or reason, why? Wonders Bhartruhari,

6138;1 March 2019

Colombia – Land of butter, anaconda, coffee and orchids 6139;1/3

Epsom Salt and Incendiary Bombs- that is Magnesium,6140;1/3

When does a Brahmin become a Shudra? 6143;2/3

Swami s crossword 232019: 6144;2/3

Story of Tamil Devadasis part 8; 6147;3/3

Amber in Ancient Medicine s and Talismans, 6151;4;/3

Clash between the Famous Tamil Poet and Choza King , 6155;5/3

Alexander 50 %, Alcohol 50%::6160; 6/3

Why did Napoleon get scared? Singing Sands and

Strange Noises, 6164;7/3

Mahabharata Pandu in Britain too! 8/3

Can Doctors enjoy Painting? No, 6172,9/3

Swami s crossword 932019;6173;9/2

Philosophers and Paintings 6177;10/3

Devadasis part 9;6178;10/3

Swami s crossword 1132019;6183;11/3

Ambbikapathy and Amaravathy Love Affair, 6181;11/3

Why did Donatello break a statue into 100 pieces? 6186;12/3

Devadasis part 10;6189;13/3

Swami s crossword 1332019;13/2; 6191

Potassium used for murder and Good Health, 6193;14/3

Devadasis part 11;6197;15/3

Swami s crossword 1632019;6201;16/3

Sanskrit in China- 1000 students and 18 saints arrested, 6200;16/3

Sanskrit Words in Japanese and Buddhist Temples in China, 6205;17/3

Devadasis part 12; 6208;18/3

The Universe is a Cobweb- Swami Viveka anda April 2019 calendar,6212;19/3

Why do Hindus worship Ursa Major on Rishi Panchami Day? 6215;20/3

Cobalt Wonders- Invisible ink, Indrajal Flowers, , magnetic

Bombs, Cobalt Therapy, 6218; 21/3

HOLIDAY UNTIL 2 APRIL,2019

xxx

Tamil Articles in March 2019

மக்னீஷியம்- பேதி மருந்து! அக்னி வெடி குண்டு ,6137, மார்ச் 1, 2019

படம் வரைய புயல் காரில் புகுந்த ஓவியர், 6142, 2/3

பிராமணன் எப்போது சூத்திரன் ஆகிறான்? நீதிபதிகளுக்கு

மநு அறிவுரை ,- மனு 39, 6146, 3/3

26 வயதில் இறந்த மஹா மேதை ராஜம் அய்யர் – 1, 6149, 4/3

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (த.கு.போ),432019, , 6150; 4/3

ராஜம் ஐயர் -2, 6153; 5/3

படிகாரம் பற்றிய அதிசய  நம்பிக்கைகள்; 6154; 5/3

அம்பர்லிங்கம் அதிசயம் நிகழ்த்தும்;6158;6/3

ராஜம் ஐயர்- சுவாமி விவேகானந்தா  சந்திப்பு, 6159,6/3

ஐயர் இறந்த பின்பு போலீசார் தேடிவந்த அதிசயம், 6163, 7/3

த.கு.போ.732019, 6165, 7/3

நெப்போலியன் முகம் வெளுத்தது ஏன்? , பாலைவன மணல் பாடுவது ஏன்? 6167, 8/3

பிரிட்டனிலும் ஒரு மஹாபாரத பாண்டு!6169, 8/3

அரிஸ்டாடிலும் இந்திய யானையும், 6171, 9/3

த.கு.போ.932019, 6174, 9/3

டாக்டர்களுக்குக் கலை உணர்ச்சி உண்டா ?6176, 10/3

த.கு.போ.1032019, 6179, 10/3

புகழ்ச்சி வேண்டாம், இகழ்ச்சியே நன்மை தரும் –

கலைஞர் அறிவுரை, 6182, 11/3

கட்டாயம் தேவைப்படும் பொட்டாசி யம் 6185, 12/3

த.கு.போ.1232019, 6187, 12/3

பூலோகத்துக்குப் பெயர் எப்படி வந்தது? கம்பன் கண்டுபிடிப்பு 6190, 13/3

கலைஞர் சிலை உடைத்த சம்பவம், 6194, 14/3

த.கு.போ.1532019, 6196, 15/3

சீனாவின் ஸம்ஸ்க்ருத மொழியின் தாக்கம், 6198, 15/3

சீனாவில் 42,318 புத்த மத கோவில்கள், 6202, 16/3

வள்ளுவரிடம் 30+ கேள்விகள், ஏப்ரல் 2019 காலண்டர் ,6204, 17/3

அஷ்டமி என்றால் ஆகாதா?6209, 18/3

த .கு.போ.1832019, 6207, 18/3

பெங்களூர் கப்பன்- எங்கள் அப்பன், 6211, 19/3

சுவையான ரிஷி பஞ்சசாமி கதைகள், பஞ்சாபிப்

 பண்டிகைகள்,6214, 20/3

இந்திரஜால வித்தை செய்யும் உலோகம் கோபால்ட்- ரத்த

 சோகையை அகற்றும், 6217, 21/3

xxx

மார்ச் 22 முதல் ஏப்ரல் 2 வரை விடுமுறை

Xxx

Xxx subham xxx

tags- index 76, March 2019

செப்பு மொழி பதினான்கு! (Post No.9743

செப்பு மொழி பதினான்கு! (Post No.9743)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9743

Date uploaded in London – –  –17 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்பு மொழி பதினைந்து கட்டுரை எண் 5795 வெளியான தேதி : 17-12-2018

செப்பு மொழி பதினெட்டு கட்டுரை எண்  5860  வெளியான தேதி : 30-12-2018

செப்பு மொழி பதினான்கு!

ச.நாகராஜன்

அறிவாளியின் வாய் அவன் இதயத்தில் இருக்கிறது; ஒரு முட்டாளின் இதயமோ அவன் வாயில் இருக்கிறது. 

The mouth of a wise man is in his heart, but

The heart of a fool is in his mouth

*

போர்வீரர்கள் சண்டை இடுகின்றனர். அரசர்கள் ஹீரோ ஆகின்றனர்.

                                     – யூதப் பழமொழி

Soldiers fight and Kings are heroes.

– Jewsish Proverb

*

நேர் கோடு தான் அறநெறிகளிலும் சிறந்தது; ஜியோமிதியிலும் குறுகியது!  

                                               – ஐஸக் பாரோ

A straight line is the shortest in morals as well as in geometry.

–          Isaac Barrow

*

வெற்றியாளன் ரோஜா மலரைப் பார்க்கிறான்; ஒரு தோல்வியாளனோ முள்ளைப் பார்க்கிறான்.   – க்ளாரின் போனஸ் அயர்ஸ்

An optimist sees the rose; a pessimist the thorn.

–          Clarin Buenos Aires

                                                    *

மற்றவரின் இன்பங்களில் பங்கு கொள்ளும் போது அது இரட்டிப்பாகிறது; மற்றவர்களின் துயரங்களில் பங்கு கொள்ளும் போது அது பாதியாகிறது.  

                                   ஸ்வீடன் நாட்டுப் பழமொழி

Shared joy is double joy and shared sorrow is half sorrow.

–          Swedish Proverb

                                                     *

காற்றும், அலையும் எப்போதுமே நன்கு படகைச் செலுத்தும் திறனுள்ள்அ மாலுமியின் பக்கமே சாதகமாக அமைகிறது.   – எட்வர்ட் கிப்பன்

The winds and waves are always

On the side of the ablest navigator!

-Edward Gibbon

*

உலகில் பெரிய நன்கொடை என்னவெனில் விஷயங்களின் மதிப்பைச் சரியாக எடை போடும் சக்தியே தான்!

The greatest gift is the power to estimate correctly the value of things!

*

நீ உடன் வந்தால், உன்னுடன்.

நீ கூட வராவிடில், நீ இல்லாமல்,

நீ எதிர்த்தால், உன்னையும் மீறி!

If you come with you,

If you don’t, without you,

If you oppose, in spite of you!

*

மனிதர்கள் நால்வகைப் படுவர்.

எவன் ஒருவனுக்கு ஒன்றுமே தெரியாதோ, தனக்குத் தெரியாது என்பதும் அவனுக்குத் தெரியாதோ, அவன் ஒரு முட்டாள்; அவனை ஒதுக்கி விடு.

எவன் ஒருவனுக்கு ஒன்றுமே தெரியாதோ, தனக்குத் தெரியாது என்பது தெரியுமோ, அவன் எளிமையானவன், அவனுக்குச் சொல்லிக் கொடு.

எவன் ஒருவனுக்கு எல்லாம் தெரியுமோ, தனக்குத் தெரியும் என்பது தெரியாதோ, அவன் தூங்குகிறான். அவனை எழுப்பி விடு.

எவன் ஒருவனுக்கு எல்லாம் தெரியுமோ, தனக்குத் தெரியும் என்பது தெரியுமோ, அவனே அறிஞன், அவனைப் பின்பற்று!

 அராபிய அறிஞர் கூற்று

Men are four.

He who knows not, and knows not he knows not, He is a fool – Shun him.

He who knows not and knows he knows not, He is simple – Teach him.

He who knows and knows not he knows, He is asleep – Wake him.

He who knows and knows he knows, He is wise – Follow him.

–          Arabic Apothegm

*

தொந்தரவுகள் உன்னைத் தொந்தரவு செய்ய வரும் போது தொந்தரவைத் தடுத்து நிறுத்தும் தொந்தரவுக்கு உள்ளாகாதே. ஆனால், தொந்தரவுகள் உன்னைத் தொந்தரவு செய்ய வழியின்றி, தொந்தரவுகளை தொந்தரவுக்குள்ளாக தொந்தரவுகளை அனுமதித்து விடு, தொந்தரவுகளைக் கண்டு தொந்தரவுக்குள்ளாகாதே. தொந்தரவுகள் தொந்தரவுகளைத் தொந்தரவு செய்யட்டுமே! 

                   ஸ்வாமி சின்மயாநந்தர் ஒரு கூட்டத்தில் கூறியது

When troubles come to trouble you, don’t trouble to stop the troubles, but allow the troubles to trouble the troubles, so that no trouble is free to trouble you. Trouble not at troubles; let the troubles trouble the troubles.

Quoted by Swami Chinamayananda

*

நான் வாழ்கிறேன், எவ்வளவு காலம் என்பது தெரியாமல்,

நான் இறக்கிறேன், எப்போது என்பது தெரியாமல்,

நான் போகிறேன், எங்கு என்பது தெரியாமல்,

(இருப்பினும் கூட) எவ்வளவு உற்சாகமாக இருக்கிறேன் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

பில்ப்ராச்சில் மார்டினஸின் கல்லறை வாசகம் (1498) ரீடர்ஸ் டைஜஸ்ட் ஏப்ரல் 1980 இதழில் வெளியாகியுள்ளது

I live, I don’t know how long,

I die, I don’t know when,

I go, I don’t know where,

I am amazed that I can be so cheerful!

 Epitaph of Martinus of Biblrach, 1498 Quoted in Readers Digest April 1980 issue

*

கொடுத்த சத்தியத்தை முறித்தான் இறைவன் என்பது இல்லவே இல்லை!

God has never broken a promise ever spoken!

*

மாய உருத்திரிபு என்றால் என்ன?

எது பருப் பொருள்? – மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாதே!

எது மனம் – அது பொருளே இல்லை!

A short cut to Metaphysics.

What is Matter? – Never mind.

What is Mind – No matter

*

எவர்கள் மனதைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு பொருளே இல்லை!

எவர்கள் பொருளைச் சிந்திக்கிறார்களோ அவர்களுக்கு மனம் ஒரு பொருட்டல்ல!

Those Who Mind Don’t Matter, and Those Who Matter Don’t Mind

***tag-

செப்பு மொழி