அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 1 (Post No.9927)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9927

Date uploaded in London –  3 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஆடிக் க்ருத்திகை சிறப்பு விழா நாளான 2-8-2021 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் ச.நாகராஜன் ஆற்றிய உரை.

அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 1

குருமகாசந்நிதானம் அவர்களின் பொற்பாத கமலங்களுக்கு நமஸ்காரம். ஞானாசிரியர்களின் பாத கமலங்களுக்கு நமஸ்காரம்.

அன்பார்ந்த பெரியோர்களே, தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

இன்று ஆடிக் ருத்திகை நன்னாள். இந்த நன்னாளிலே உலகளாவிய விதத்தில் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களின் அரும் முயற்சியால் நாம் இணைய தள வாயிலாக் ஒன்று கூடி குன்று தோறாடும் குமர வடிவேலனைத் துதிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இன்று தான் சூரனை அழிக்க முருகப்பிரான் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக அவதரித்தார். அக் குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர்.

இந்த கார்த்திகைப் பெண்களும் அவர்கள் வளர்த்த முருகனும் நம் கண் முன்னே தினமும் தோன்றுகின்றனர். அவர்கள் எப்போதும் ஊழி கடந்து இருக்கின்றனர். வானவியலில் வல்லவர்களான முனிவர்கள், அருளாளர்கள், யோகிகள், மகான்கள் இதை நன்கு உணர்ந்தவர்கள்.

இந்த ரகசியத்தை அறிவது சுலபம். சற்று வானத்தை அண்ணாந்து பார்க்க வேண்டியது தான், அது போதும். மாத்ரி மண்டலம் என்னும் நக்ஷத்திர மண்டலத்தை நாம் நோக்கினால் அதில் நானூறு நக்ஷத்திரங்கள் தெரியும். அதில் தீ ஜுவாலை போன்ற தோற்றத்தை உருவாக்கும் அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி ஆகியவை மிக முக்கியமானவை. இவையே கார்த்திகை மாந்தர், கந்தனை வளர்த்தவர்கள் ஆவர்.

மாத்ரி மண்டலம் என்ற பெயரே மாதர்கள் கொண்ட கூட்டத் தொகுதி என்று குறிப்பிடப்படுவது வியப்பிற்குரியது. சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்த முருகனை கார்த்திகை மாந்தர் அறுவரும் தனித் தனியே ஆறு உருவங்களில் சீராட்டி மகிழ்வித்ததால் அவன் கார்த்திகேயன் என்ற பெயரைப் பெற்றான். ரிஷப ராசியில் கார்த்திகை நம் தலைக்கு மேலே தோன்றும் போது சந்திரன் தோன்றும். ஆகவே தான் கார்த்திகைக்கு  கார்த்திகை மாதம் என்று நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

Pleiades என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கார்த்திகை நக்ஷத்திரத்தைப் பற்றிய ஏராளமான அதியசங்கள் உண்டு. 250 ஒளி ஆண்டு அதாவது கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரத்தில் உள்ளது இது. ஒரு ஒளி ஆண்டு என்றால் 6 ட்ரில்லியன் மைல்கள் என்று பொருள். ஒன்றுக்கு பக்கத்தில் 12 பூஜ்யங்களைப் போட்டால் வரும் எண் ஒரு ட்ரில்லியன். இது போல 250 ஐ 6ஆல் பெருக்கினால் வருவது 1500. 1500 ட்ரில்லியன் மைல் தூரத்தில் உள்ளது கார்த்திகை. (One light-year is about 6 trillion miles (9 trillion km). That is a 6 with 12 zeros behind it!)

ஒரு வருடத்தின்  365 நாட்களில் கார்த்திகை நக்ஷத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனமாகும் நாட்களே மிகவும் உஷ்ணமான நாட்கள் என அறிவியல் கூறுகிறது. சதபதபிராஹ்மணம் பல நக்ஷத்திரங்களைக் கார்த்திகைக் கூட்டம் கொண்டிருப்பதால் அதற்கு பகுலா – பல நக்ஷத்திரம் கொண்டது – என்ற பெயரையும் சூட்டுகிறது. கார்த்திகை நக்ஷத்திரத்தின் அதி தேவதை அக்னி. க்ருத்திகா நக்ஷத்திரம் அக்னிர் தேவதா: என்று தைத்திரீய சம்ஹிதை நான்காம் காண்டம் கூறும். அக்னியே ஸ்வாஹா: க்ருத்தியாம்யஹ ஸ்வாஹா என தைத்தீரிய ப்ராஹ்மணம் (||| 1.4.2) கார்த்திகை நக்ஷத்திரத்தைப் புகழும். 18 புராணங்களிலேயே மிகப் பெரியதான சுமார் 81000 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்காந்த புராணம் கார்த்திகை நக்ஷத்திரத்தின் பெருமையைக் கூறுகிறது. முருகனின் ரகசியங்களை விளக்குகிறது.

வால்மீகி ராமாயணமோ, “அந்த ஸ்கந்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டோர் அவனுடன் சேர்ந்து இருப்பதை அனுபவிக்க முடியும் “ என்று கூறுகிறது. மஹாபாரதத்தில் வியாஸ பகவான் வன பர்வத்தில் சுப்ரமண்யருடைய உற்பத்தி, வீர அணிவகுப்பு ஆகியவற்றை விஸ்தாரமாக விளக்குகிறார். காரண காரியத்தில் -CAUSE AND EFFECT இல் -ஒரு செயல் நடந்த பிறகே அதற்கான விளைவு ஏற்படுகிறது. ஒரு மணியை அடித்தால் அடித்த பின்னரே ஓசை ஏற்படுகிறது. ஆனால் முருகனின் விஷயத்திலோ இதற்கு மாறாக இருக்கிறது என்பதை வியாஸர் குறிப்பிடுகிறார். சூரனை சம்ஹாரம் செய்ய முருகன் கிளம்பும் போது ஜெய தேவதைகள் முருகனுக்கு முன்னே அணிவகுத்துப் போகின்றன. அதாவது போருக்கு முன்பேயே அதன் பயனான வெற்றி அவருக்கு உறுதிப்படுத்தப்படுகிறது. செயலுக்கு முன்னாலேயே அதன் நல்ல விளைவு! உஷ்ணமாக கார்த்திகை நக்ஷத்திரத்தில் தோன்றிய முருகனின் முன்னால் அசுர சக்திகள் அழியும்; தீமைகள் ஒழியும். வறுமை ஓடிப் போகும்; கவலைகள் கரையும்; நோய்கள் மாயும். அவனை வணங்குவதால், நினைப்பதால், அவன் திருப்புகழைப் பாடுவதால்,செல்வமும் ஆரோக்கியமும் நிம்மதியும் இறுதியாக அவனுடன் சேரும் முக்திப் பேறும் கிடைக்கும்.

இதைத் தான் அருணகிரிநாதர் அவன் அருளாலே உணர்ந்தார். பல்லாயிரம் பாடல்களை மடை திறந்த வெள்ளமென, பொங்கிப் பாயும் அருவி எனப் பொழிந்தார். வாக்கிற்கு அருணகிரி என்ற பெயரையும் பெற்றார்.அவர் பாடிய பாடல்கள் பதினாறாயிரம் என்பதை “எம் அருணகிரி நாதர் ஓது பதினாறாயிரம் திருப்புகழ் அமுதுமே” என்ற விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ் வாக்கியத்தாலும், ‘அருணகிரி நாதன் அறைந்த பதினாறாயிர கவிதை என்று உலகில் யாரும் – உரை புகலும் தெய்வத் திருப்புகழ்” என்ற தணிகையுலா வரிகளாலும் நாம் அறிய முடிகிறது. ஆனால் இன்று நமக்குக் கிடைத்தவை 1338 பாடல்கள் மட்டுமே. அருணகிரிநாதர் சுமார் 200 தலங்களுக்குச் சென்று திருப்புகழ் பாடல்களை இசைத்துள்ளார். அவர் வாழ்ந்த காலம் பிரபுடதேவ மகாராஜர் வாழ்ந்த கி.பி. 1450 ஆண்டை ஒட்டிய காலமாகும். திருப்புகழ் ஆய்வில் ஈடுபட்டுள்ளோர் நமக்குக் கிடைத்தவற்றில் உள்ள பாடல்களில் 1088 சந்தங்களும் அவற்றிலிருந்து 178க்கும் மேற்பட்ட தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன என்று கூறுகின்றனர். தமிழில் ஒரு புது வகைப் பாடலாக தொங்கலுடன் திருப்புகழ் அமைந்திருப்பது முருகப் பிரான் தமிழுக்குத் தந்த வரமே.

திருப்புகழில் இல்லாத அறிவியல் விஷயமோ ஆன்மீக விஷயமோ இல்லை.

‘இருவர் மயலோ’ எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலில், ‘அணுவில் அசைவாய்’ என்கிறார் அருணகிரிநாதர். அணுவில் எலக்ட்ரான், புரோடான் ஆகியவற்றின் அசைவுகளை விஞ்ஞானிகள் வெகு காலத்திற்குப் பின்னரேயே கண்டு பிடித்து உலகிற்கு அறிவித்துள்ளனர். வேல் விருத்தத்தில், ‘அண்டங்கள் ஒரு கோடி’ என்று பல அண்டங்களைப் பற்றி அன்றே அவர் குறிப்பிடுகிறார். அவர் அன்று கூறியதை, மல்டிவர்ஸ் MULTIVERSE என  ஹ்யூ எவரெட், மாக்ஸ் டெக்மார்க் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்து வியக்கின்றனர். இங்கு அண்டங்கள் பற்றிய ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.

சூரபன்மன் பல்வேறு அண்டங்களில் தனது ரிசர்வ் படைகளை ஒளித்து வைத்திருந்தான். முருகப்பிரான் முதலில் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ செய்து அந்தப் படைகளை அழித்தார். சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது குறிப்பிட்ட இடத்தை மட்டும் தாக்கி இதர் சுற்றுப்புறங்களுக்குக் கேடு விளைவிக்காமல் செய்யப்படும் அதிரடி நடவடிக்கை. இதனால் சூரபன்மன் நடுநடுங்கிப் போனான். ஆக முதலில் சர்ஜிகல் ஸ்டிரைக் செய்து அரக்கர்களை நடுங்க வைத்தவர் முருகனே என்பது பெறப்படுகிறது!

“சருவிய சாத்திரத் திரளான சடுதிகழ் ஆஸ்பதத்து அமையாத

அருமறையாற் பெறற்கு அரிதாய அனிதய வார்த்தையைப் பெறுவேனோ

என்று அவர் கூறுகிறார்.  இதன் பொருள் என்ன?”

வார்த்தை என்பது என்ன? அது நன்கு பழக்கமான எல்லாச் சாத்திரங்களின் திரண்ட சாராம்சப் பொருளானது, ஆறு என்று விளங்கும் ஆதாரங்களில் பொருந்தி அடங்காதது அது. அரிய வேதங்களால் பெறுவதற்கு அரிதானது அது. இதயத்துக்கு எட்டாத அந்த உபதேச மொழியைப் பெறுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டுமோ என்று அவர் கூறுகிறார்.

வாழ்வை வெறுத்து அருணைத் திருக் கோவில் கோபுரத்தின் மீது ஏறி தமது உயிரை மாய்க்கக் கருதிய அந்த நேரத்தில்  அவருக்கு எந்தத் தீங்கும் வரா வண்ணம் அவரைத் தம் திருக்கரத்தால் தாங்கிப் பிடித்த கதிர்வேலன், அடியவர் கூட்டம் தம்மைச் சூழ்ந்திருக்க, வேத ஒலி முழங்க, மயில் மீது தமது திருநடனக் கோலத்தைக் காட்டி அருளினார். அருணகிரிநாத என்று நாமகரணம் செய்வித்து அவரை அழைத்தார்.சக்ஷு தீக்ஷை என்னும் கண்ணோக்கம் செய்து திருவடி தீக்ஷையும் செய்வித்து அவரது நாவில் சரவணபவ என்ற ஆறெழுத்தைப் பொறித்து அவருக்கு முத்தமிழ் ஊட்டி, ஜெபமாலை ஒன்றையும் தந்து அருளினார் முத்துக் குமரன். ‘சும்மா இரு சொல் அற’ என மௌன உபதேசமும் அருளினார். பின்னர் முருகன் அருணகிரிநாதரை நோக்கி, “நமது பாத மலரைப் பாடுக” என்றார்.

“நமது பாதமலரைப் பாடு நீ என்ன, அடியேனும் எப்படி பாட என்ற அளவில் பத்தித் தரு முத்தி நகை யத்தி இறைவா எனப் பாடென்று சொல்லி” என்று இப்படி முருகன் தாமே அருணகிரி நாதருக்கு அடி எடுத்துக் கொடுத்ததை விரிஞ்சை பிள்ளைத் தமிழ் கூறுகிறது. அவரே ‘பக்கரை விசித்ரமணி’ எனத் தொடங்கும் திருப்புகழில், “திக்கது மதிக்க வரு குக்குடமும் ரக்ஷை தரு சிற்றடியு முற்றிய பனிருதோளும் செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கருள்கை மறவேனே” என்று கூறி அதை உறுதிப்படுத்துகிறார்.

 TAGS – ஆடிக் கிருத்திகை, அருணகிரிநாதர், முருகன்

-தொடரும்

LONDON CALLING (GNANA MAYAM) 2-8-2021 (Post No.9926)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9926

Date uploaded in London – 2 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2-8– 2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER  MRS ANNAPURANI PANCHANATHAN, LONDON

XXX

DR CHAMUNDEESWARY AND MR. SUBRAMANIAN SITARAMAN’S  DISCUSSION ON THEIR NEW PROJECT ‘KURUVIK KOODU’ – 25 MTS

Dr Chamundeeswari is a lawyer and researcher in cultural heritage and development law. She is a Bharatanatyam dancer, trained in the Kalakshetra style of nritta and Smt. Kalanidhi Narayanan bhani of abinaya, having completed her arangetram under the guidance of the abinaya exponent Padma Bhushan Srimathi Kalanidhi Narayanan and her dance school Abinayasudha in Madras. She has completed her Government of Tamilnadu lower and higher exams in bharatanatyam, and lower exam in carnatic music. Having moved to the UK in 2000, she has developed her classical repertoire in an international context and has found the exposure to new ideas and literature deepen her love for classical work, and led her to experiment in bringing together different classical arts, such as literature and dance. She has choreographed and performed innovative solo and group Bharatanatyam productions, in the UK, India, Mexico, USA, Australia, Croatia, Costa Rica, Netherlands, Portugal and Italy.

Her recent choreographic work, all funded through Arts Council England, include Shades of Love: Chandrika, and Dancing Vernacular Indian poetry – Kshetrayya (2021) Chinnadevi (2020) Women of Mahabarata (2019) Rasamanjari (2019), Gopala Vimshati, East Meets West and Madras Sepoy (2018).

She is currently doing research and development work on Kuruvi Koodu, a poem by the poet Tiruloka Sitaram, and today she will be discussing this. 

Subramanian Sitaram is the 5th of the seven children of Tamil poet Tiruloka Sitaram (1917-1973), who strode the literary scene in Tamilnadu as Mahakavi Subramanya Bharati’s principal message bearer in the period from 1945 to 1973. Subramanian was a career banker and worked at several places in India during a career spanning 31 years and later for 9 years at Dubai, UAE. He is a Treasury and Risk Management specialist. He consults for banks in Risk Management and also offers training on Financial Risk to Corporates and training institutions.

Subramanian was 17 years old when his poet father passed away. However, he spent a good amount of time with his father during his last few years, travelling with his father on his lecture tours and meeting authors. Subramanian also ran his father’s printing press for 4 years after his passing away before joining banks.

Subramanian produced a documentary on Tiruloka Sitaram, a dance video on Tirulokam’s long verse drama ‘Udaiyavar’, an Odissi dance performed by his daughter Suprita Trilok and also organised the Centenary celebrations of Tirulokam at Chennai. A committed follower of Tirulokam’s literary works, he was also instrumental in bringing out the complete poetical works of Tirulokam with English translation and notes by Sekkizhar Adippodi T.N.Ramachandran in 2014.

XXXX

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT KUZANTHAIYANANTHA SWAMIKAL OF MADURAI- 12 MTS

Talk by B.KANNAN, DELHI on தமிழ்ப் புலவர்களின் ரசிக்க வைக்கும் சொல்லாடல் PART 2 FOR  10 mts

MANGALAM – 2 MTS

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- 2 PM LONDON TIME/ BRITISH SUMMER TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME; 6-30 PM INDIAN TIME.

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

XXXX SUBHAM XXXX

tags- broadcast 282021

LONDON CALLING (TAMIL MUZAKKAM) 1-8-2021 (Post No.9925)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9925

Date uploaded in London – 2 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1-8-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer-MR BALASUBRAHMANIAN, LONDON 

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON UPPILIAPPAN TEMPLE— 8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND DR SHANTHI SAIRAM AND DR SAIRAM, DUBAI DEVOTEES–  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY NITHYA SOWMY

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  BY RANI SRINIVASAN

–25 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 65 minutes 

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- 2 PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME; 6-30 PM INDIAN TIME.

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

 XXXX SUBHAM XXXX

tags- broadcast182021

பாங்குப் பணத்தைத் திருடி சிறை சென்ற புகழ்பெற்ற சிறுகதை ஆசிரியர் ஓ ஹென்றி (9924)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9924

Date uploaded in London – 2 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அமெரிக்க சிறுகதை எழுத்தாளர் ஓ ஹென்றி O HENRY , சிறுகதைகளை எழுதுவதில் ஒரு புதிய பாணியை உருவாக்கினார். பெரும்பாலான கதைகளில் திடீர் முடிவு இருக்கும். இதனால் மாப்பாசான் போன்ற புகழ்பெற்ற சிறுகதை ஆசிரியர் வரிசையில் இவரும் நிற்கிறார்.  ஓ ஹென்றியின் உண்மைப் பெயர்  WILLIAM SIDNEY PORTER வில்லியம் சிட்னி போர்ட்டர். அவருடைய கதைகளை விமர்சகர்கள் குறைகூறியபோதும் ரசிகர்கள் விரும்பினர். இதனால் அமெரிக்காவில் 1918 முதல் அவருடைய பெயரில் பத்திரிகைகளில் வெளியாகும் சிறந்த சிறுகதைக்கு பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாநிலத்தில் பிறந்தார். அதிகம் படிக்கவில்லை. இதனால் அவர் எந்த நிலையான வேலையிலும் நிற்க இயலவில்லை. தவளை போல தாவிக்கொண்டே இருந்தார்.1882ல் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் ஆஸ்டின் நகரில் குடிபுகுந்தார். திருமணமும் செய்துகொண்டார். ஒரு வங்கியில் வெளியே பார்த்துக் கொண்டே ‘த ரோலிங் ஸ்டோன்’ THE ROLLING STONES என்ற வாரப் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்தார். அப்போது அதிகமாகக் குடித்துக் குடித்து குடலைக் கெடுத்துக் கொண்டார். குடல் கேட்டு உடல்நலம் குன்றியது. 1894ம் ஆண்டில் அவர் வேலை பார்த்த பேங்க்கில் (Bank)  நிறைய பணம் மாயமாய் மறைந்தது. ஓ ஹென்றி மீது குற்றம்சாட்டப்படுவதற்கு முன்னரே அவர் ஹான்டுராசுக்கு  (Honduras) ஓடிப்போனார். அதே நேரத்தில் அவர் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கலானது .மனைவி மரணப்படுக்கையில் இருந்ததால் அடுத்த ஆண்டில் ஹாண்டுராஸ் நாட்டிலிருந்து அமெரிக்காவின் ஆஸ்டின் நகருக்குத் திரும்பினார்.

1898ல் அவர் பேங்க் Bank பணத்தைத் திருடியது நிரூபிக்கப்பட்டதால் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது. அது அவருக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று, சிறையில் சிந்தனையும் கற்பனையும் சிறகடித்துப் பறந்தது. சிறுகதைகள் மலர்ந்தன. சிறையின் முதல் ஆண்டு வாசத்திலேயே அவருடைய சிறுகதை ஒரு தேஸீய பத்திரிகையில் வெளியானது. சிறு கதை என்று சொல்வதைவிட சிறைக்கதை என்றே சொல்லவேண்டும்.  அப்போது அவருக்கு 36 வயது. அவர் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 1901ல் சிறையிலிருந்து வந்தபின்னர் நியூயார்க்கில் வாழவைத் தொடங்கினார் . அதற்கு முன்னரே அவருடைய புகழ் கதைகள் மூலம் பரவியது 1904, 1905ம் ஆண்டுகளில் வாரத்துக்கு ஒரு கதை எழுதினார். அத்தனையும் முத்துக்கள்; எதுவும் சொத்தை இல்லை.

ஓ ஹென்றி தன்னுடைய கதைகளை தொகுதி தொகுதியாக வெளியிட்டார். ‘நான்கு மில்லியன்’ Four Million  என்ற தொகுதியில் Magi மாகி கதை, மாமன் Mamon  கதை ஆகியவற்றில் இவருடைய திடீர் முடிவுகளைக் காணலாம்.

பிறந்த தேதி – செப்டம்பர் 11,1862

இறந்த தேதி- ஜூன் 5, 1910

வாழ்ந்த ஆண்டுகள் — 47

எழுதிய கதைகள்- PUBLICATIONS

1904- CABBAGES AND KINGS

1906 – THE FOUR MILLION

1907 – THE TRIMMED LAMP

1907 – THE HEART OF THE WEST

1908- THE VOICE OF THE CITY

1908 – THE GENTLE GRAFTER

1909- ROADS OF DESTINY

1909 – OPTIONS

1910- STRICTLY BUSINESS

1910- WHIRLIGIGS

-SUBHAM–

tags- பாங்கு,  சிறை , சிறுகதை ஆசிரியர்,  ஓ ஹென்றி, O Henry

January 2020 London Swaminathan Articles; Index-86 (Post No.9923)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9923

Date uploaded in London – 2 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9900 PLUS POSTS.

xxxx

January 2020 London Swaminathan Articles Index-86

Greek Sphinx Riddle in the Rigveda,7408;1 January 2020

Vakataka Queen Prabhavati Gupta,7411;2/1

Mark Twain, Damnedest Liar in US, 7414; 3/1

Two Rare Vedic Hymns to cure Sickness,7418;4/1

Hydrotherapy and Pressure, Moon 8000 in the Rigveda,7422/

What is Vaikunda Ekassi? Why do Hindus fast on that day?7425 6/1

A Courtesan became the Queen of Madurai 7430;7/1

What is Ardra Festival? Why do Hindus bathe Shiva for ever?7434;8/1

Emerald for Chastity, Ruby for Love,7437;9/1

Andhra Poetesses Gangadevi and Molla,7445;11/1

Research into Sixteen Janapadas of Ancient India,7442,10/1

Card Playing Anecdotes,7448;12/1

Bridegroom ran away on wedding day! Bride became a Saint,7452;13/1

Nemi from Rigveda to Sangam Tamil Literature via Indus Valley ,7454;14/1

What is Pongal aka Makara Sankranti,7457;15/1

Sacred Trees in Jainism – Jains Love Affairs with Trees, 7460;16/1

Great Women Lilavati and Ubhaya Bharati,7464;17/1

Greeks are Tamil Hindus,7474; 20/1

A genius is known when he is born-Picasso Exhibition in London,7476;20/1

Hindu Wonder-57 Generations at one go!7480;21/1

Sixteen Steps of Worship,7482;22/1

Can Brahmins eat Meat? 4 Interesting Anecdotes from Manu Smrti,7485;23/1

Sanskrit Poetess became Queen- Tirumalamba,7491; 24/1

Great poetess Honnamma, Chelluvaambaa and Giriyamma ,7495;25/1

Surprise, Surprise ! Srirangam Temple Diamond in Russian Sceptre,7499;26/1

Great Hindu Heroines Rani Padmini, Rani Samyukta,7503;27/1

Science and Religion will meet and shake hands- Swami

Vivekananda, 7507;28/1

Dolphins in harbour look for dead friend, 7512;29/1

Seventy Popes Murdered or died in Mysterious Circumstances, 7514;30/1

Udayana and Vasavadatta, Oldest Love Story of India,

31 January 2020

xxx

ஜனவரி 2020 லண்டன் சுவாமிநாதன்  கட்டுரைகள் –

ரிக் வேதத்தில் கிரேக்க விடுகதை , 7406, ஜனவரி 1, 2020

பிரிட்டனில் எழுத்தாளருக்கு கிடைக்கும் பரிசுகள், 7407, 1/1

நீண்ட காலம் உலகை ஆண்ட ராணி யார்? 7409, 2/1

கொடு, பகிர் ,கொடு, பகிர் – அதர்வ வேதம், 7413, 3/1

வட-தென் கொரியாக்கள் இணையுமா?7415, 3/1

நோய் தீர்க்கும் இரண்டு அற்புத வேத மந்திரங்கள் -1, 7417, 4/1

ரஷ்யத் தலைவர் யெல்ட்சின், 7419, 4/1

part -2, 7421, 5/1

பரபரப்பு உண்டாக்கிய கென்னடி கொலை வழக்கு, 7423, 5/1

வைகுண்ட ஏகாதசிக்கு ஏன் பெருமை அதிகம்? 7426, 6/1

ஷான் கானரி ,பிரிட்டிஷ் மஹாராணி, நடிகரை ஜேன் பாண்டா 7427, 6/1

ஏகாதசி கதை- ருக்மாங்கதன் கதை 7429, 7/1

பறக்கும் தட்டு மர்மம் நீடிக்கிறது , 7431, 7/1

அரையர் சேவை- ஒரு சுவையான சம்பவம், 7433, 8/1

உலகில் பெரிய பணக்காரர்கள், 7435, 8/1

எண் 16-ன் மஹிமை, பதினாறும்  பெற்றுப் பெரு  வாழ்வு வாழ்க 7438, 9/1

2000 ஆண்டுகளுக்கு மன்னரே இல்லாத அதிசய நாடு இந்தியா , 7444, 11/1

16 வகை உபசாரங்கள், 16 வகை தீபங்கள், முருகனின்

16 நாமங்கள், 7441, 10/1

புறநாநூற்றில்  முனிவர்கள்,7447, 12/1

நேமி- ரிக் வேதம் முதல் சங்க இலக்கியம் வரை, 7450, 13/1

கல்யாண தினத்தன்று ஓடிப்போன மாப்பிள்ளை நேமிநாதர் ,7451,13/1

தமிழர்களின் ஜோதிட நம்பிக்கைகள், 7458, 15/1

வள்ளுவர் பற்றி முதலியார் சொல்லும் அதிசய விஷயங்கள், 7463, 17/1

கிரேக்கர்கள் இந்துக்களே! நப்பின்னை கதை!! 7468, 19/1

குழந்தை பிறக்காதது ஏன் ?  7472, 19/1

சமண மதத்தில் புனித மரங்கள், 7461, 16/1

ஜெம்மாலஜி பத்திரிகையில் வைரக் கட்டுரைகள், 7455, 14/1

(கோஹினூர் வைரம் )

வைரங்கள் தோன்றியது எப்படி?7465, 17/1

வரலாற்றில் வைரக் கற்கள்,7467, 18/1

வைரத்தின் குணங்கள்; 7471, 19/1

வைரத்தைப் பிரிப்பது எப்படி?7475, 20/1

வைரங்களை மதிப்பிடுவது எப்படி?7479, 21/1

வைரத்தைப் பட்டைதீட்டும் முறை, 7483, 22/1

வைர ஊசி முதல் ராக்கெட்டின் வைர ஜன்னல் வரை ,7487, 23/1

ஆகாயத்திலிருந்து வைரக்கற்கள் விழுவது உண்மையே, 7490, 24/1

வரைங்களின் அளவு, தரம், விலை , 7493, 25/1

நதிக்கரையில் வைரங்கள், 7498, 26/1

ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்த புகப்பெற்ற வைரம் திருடு போன கதை, 27/1

பிகாஸோ – விளையும் பயிர் முளையிலே தெரியும், 7478,21/1

அதிசயமடா  அதிசயம்! 57 தலைமுறை அதிசயம்! 7486, 23/1

மாமிசம் சாப்பிட்ட பிராமணர்கள்! மநு தரும் லிஸ்ட், மநு -47, 7489, 24/1

நிக்கல் என்னும் அற்புத உலோகம் – பகுதி 1, 7494,25/1

ஆகாயத்திலிருந்து விழும் நிக்கல் (பகுதி 2), 7497, 26/1

பட்டுப்பூச்சிக்கு பலத்த காவல், 27/1

யுவாங் சுவாங் பொய் சொல்வாரா? பாஹியான்

பொய் சொல்வாரா?, 7506, 28/1

எல்விஸ் பிரெஸ்லி தபால் தலை, 7508, 28/1

உள்ளூர்ப் பெண்ணும் அயலூர் மண்ணும் ஆகாது ,7510, 29/1

ரஷ்ய ராக்கெட்டுகள் ஏலம் , 7511, 29/1

தேக்கடி ராஜா கதையும், டார்ட்போர்ட்  டால்பின்களும், 7515, 30/1

எக்ஸ்டசி உயிர்கொல்லி மருந்து, 7516, 30/1

70 போப்பாண்டவர் படுகொலை, 7519, 31/1

டைடானிக் கப்பல் விபத்து விசாரணை, 7519,ஜனவரி 31, 2020

XXX subham xxxx

tags- January2020, Index, London swaminathan

ஆலயம் அறிவோம்! ஒப்பிலியப்பன் கோவில் (Post No.9922)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9922

Date uploaded in London – –   2 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 1-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்

கோதா! கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த

தூதா! தூமொழியாய்ச் சுடர் போல் என் மனத்திருந்த

வேதா! நின்னடைந்தேன், திருவிண்ணகர் மேயவனே!

திருமங்கையாழ்வார் திரு நாமம் வாழி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைவதும் தென் திருப்பதி என்று அனைவராலும் அழைக்கப்படும் திருவிண்ணகர்த் தலமாகும்.

ஒப்பிலியப்பன் கோவில் என்று அனைவராலும் அறியப்படும் இந்தத் தலமானது தமிழகத்தில், கும்பகோணம் நகருக்குத் தெற்கில் 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஆகாச நகரம், வைகுண்ட நகரம், ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன் ஆகிய பெயர்களையும் கொண்டுள்ள இந்தத் தலம் ஏராளமான பக்தர்களைத் தினமும் ஈர்க்கும் திருத்தலமாகும்.

மூலவர் நாமம் : திருவிண்ணகரப்பன் – ஒப்பிலியப்பன் – உப்பிலியப்பன். பிராட்டியின் திரு நாமம் – பூமி தேவி அல்லது பூமி நாச்சியார்

பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும் பிராட்டியார் வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்திலும் இருந்து அருள் பாலிக்கின்றனர்.

இங்குள்ள விமானத்தின் பெயர் சுத்தானந்தம். இங்குள்ள புஷ்கரணி அஹோராத்ர புஷ்கரணி என அழைக்கப்படுகிறது. காலை, மாலை என எந்த நேரமும் நீராடலாம் என்பதால் இது இந்தப் பெயரைப் பெற்றது. கோவிலுக்கு வெளியே சார்ங்க தீர்த்தம், சூர்ய தீர்த்தம், இந்த்ர தீர்த்தம், ப்ரஹ்ம தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன.

இங்கு எம்பெருமான் நம்மாழ்வாருக்கு பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் ஆகிய  ஐந்து வடிவங்களுடன் காட்சி அளித்துள்ளார் என்பதை வரலாறு தெரிவிக்கிறது. நம்மாழ்வார் எம்பெருமானைப் பிரிந்து மிகவும் வருந்தினார். அப்போது எம்பெருமான் தானே அவர் மேல் விழுந்து ஆழ்வாரை அணைத்து அருளினார். ஆகவே எம்பெருமான் எந்நாளும் பிரியாத தலமாக இதை முன்னோர்கள் கண்டனர். மேலும் இத்தலத்தில் ஒன்பது பாசுரங்களில் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பொருள்களைச் சொல்லி அவற்றிற்கெல்லாம் அந்தர்யாமியாக இருப்பவன் எம்பெருமானே என அவர் நிறுவி “சேராத பொருள்களைச் சேர்க்கும் பெருமையன்” என்று பாடினார்.

கருடன், காவேரி, தர்ம தேவதை, மார்க்கண்டேயர் ஆகிய நால்வருக்கும் இத்தலத்தில் எம்பெருமான் தரிசனம் தந்துள்ளதாகப் புராணம் கூறுகிறது.

இந்த தலத்தின் சிறப்பைப் பற்றி பிரம்மாண்ட புராணம் விரிவாக விவரிக்கிறது.

மிருகண்டு மஹரிஷியின் புத்திரரான மார்க்கண்டேய மஹரிஷி பூமா தேவி தனக்கு மகளாகவும், திருமால் மாப்பிள்ளையாகவும் ஆக வேண்டும் என நெடுங்காலம் தவம் செய்தார். ஒரு நாள் துளசி வனத்தில் ஒரு அழகிய பெண்குழந்தையை அவர் கண்டார். அதை எடுத்து பூமாதேவி என்ற பெயரைச் சூட்டி அதை வளர்த்தார். குழந்தை வளர்ந்து திருமண வயதை அடைந்தது. ஒரு நாள் திருமால் ஒரு வயதான அந்தணர் வேடத்தில் மார்க்கண்டேய மஹரிஷியை அணுகி அவரது பெண்ணைத் தனக்கு  மணம் முடித்துத் தருமாறு வேண்டினார். மார்க்கண்டேயர் அதற்கு மறுத்து பல காரணங்களைக் கூறினார். ஆனால் வந்தவர் விடவில்லை. கடைசியில் தன் பெண்ணுக்கு உப்புப் போட்டுச் சமைக்கத் தெரியாது என்று கூறினார் மார்க்கண்டேயர். அதற்கும் திருமால் விடவில்லை. செய்வதறியாது மார்க்கண்டேயர் திகைத்து நின்றார். திருமாலை வேண்டினார். உடன் திருமால் அவர் முன் தோன்றி உனக்கு மகளாக வந்தது பூமா தேவியே என்று கூறி அருளினார். அவர் வேண்டியபடியே பூமாதேவியை மணந்தார். பூமாதேவியை மணந்து அவள் சமைத்த உப்பில்லாத உணவை உண்டதால் அவர் பெயர் உப்பிலியப்பன் என்று ஆனது. இன்றும் உப்பிலியப்பனுக்கு உப்பு இல்லாத நைவேத்யமே செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் திருமண வைபவம் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சிரவண நக்ஷத்திர தினத்தன்று இங்கு நடைபெறுகிறது.

கருட சந்நிதிக்கு அப்பால் எந்த விதமான உப்பு சேர்த்த பண்டமும் உள்ளே கொண்டு செல்லப்படுவதில்லை என்பது இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு மரபாகும்.

பங்குனி மாதம் சிரவண நாளன்று இங்கு எம்பெருமான் அவதரித்தார். ஆகவே இந்த அவதார தினத்தில் திருத்தேருடன் ஒன்பது நாள் ப்ரஹ்மோத்சவம் நடைபெறுகிறது. அத்துடன் சிரவண தினம் மிக முக்கியமான தினம் என்பதால் இங்கு சிரவண தீபம் ஒவ்வொரு சிரவண நாளன்றும் ஏற்றப்படுகிறது.

இங்குள்ள பெருமாள் திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாகக் கருதப்படுகிறார்.

ஆலயத்திற்குள் கர்பக்ருஹத்திற்கு வெளியே ஸ்ரீ தேசிகன் சந்நிதியும், வெளி மண்டப தென்புறத்தில் அனுமன் சந்நிதியும், வடபுறத்தில் ஆழ்வார்கள் சந்நிதியையும், அதன் கிழக்கே ஸ்ரீ ராமன் சந்நிதியையும் காணலாம்.

குருவாயூர் கோவிலில் உள்ளது போலவே பக்தர்கள் தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு துலாபாரமும் இந்தக் கோவிலில் உள்ளது. இந்த திவ்ய தேச தலத்தில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் இந்தக் கோவிலைப் பற்றிச் சிறப்புறக் குறிப்பிடுகின்றன.

 காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் உப்பிலியப்பனும் பூமி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.     பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருள் வாக்கு இது.  

கையும் உரையும் கருத்தும் உனக்கே அடிமை

செய்யும்படி நீ திருத்தினாய் – ஐயா!

திரு விண்ணகராளா! சிந்தையிலும் எண்ணேன்,

பெரு விண்ணகர் ஆளும் பேறு!   

நன்றி வணக்கம்!       

****

tags–ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன், கோவில் , ஆலயம், அறிவோம்

மஹாத்மா காந்திஜி : கவலை இல்லாத மனிதன் (Post 9921)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9921

Date uploaded in London –  2 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாத்மா காந்திஜி : தன்னைப் பற்றிய தவறான விமரிசனத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்!

ச.நாகராஜன்

1

மஹாத்மா பற்றிய தவறான விமரிசனங்கள் அவர் வாழ்ந்த காலத்திலேயே ஏராளம் உண்டு. அதைப் பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்பட்டதில்லை. அத்தோடு தனது பக்கம் பேசும் யாரையும் அவர் ஊக்குவிக்கவும் இல்லை. ஒருவரின் நடத்தையின் மூலமே அவரைப் பற்றிச் சமூகம் அறிய வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.

சாதாரணமான ஒரு அடிமை சமூகத்தில் வெள்ளையர் ஆட்சியில் இந்த எதிர்பார்ப்பு சற்று அதிகம் தான் என்றாலும் அவர் அதைத் தான் எதிர்பார்த்தார்.

இரு சம்பவங்களை இங்கு காணலாம்.

வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் கப்பலில் இங்கிலாந்துக்குச் சென்று கொண்டிருந்தார்.

கப்பலின் பெயர் எஸ்.எஸ். ராஜபுதனா.

கப்பலில் இருந்த பயணிகள் பெரும்பாலானோர் ஐரோப்பியரே. அவர்கள் கப்பலிலேயே ஒரு கிளப்பைக் கொண்டிருந்தனர். கிளப்பின் பெயர் வில்லிகோட்ஸ். அவர்களுக்கென ஒரு டைப் அடிக்கப்பட்ட பத்திரிகையும் கப்பலிலேயே வெளியாகிக் கொண்டிருந்தது. அதன் பெயர் ஸ்காண்டல் டைம்ஸ் (Scandal Times). பெயருக்குத் தகுந்தாற் போல அதில் வரும் செய்திகளும் ஸ்காண்டலாகத் தான் இருக்கும். மக்களைப் பற்றிய பல தவறான அபத்தமான செய்திகள் அதில் வெளியிடப்பட்டிருக்கும்.

காந்தியடிகள் கப்பலில் பயணம் செய்வதை ஒட்டி அவரைப் பற்றிய தவறான செய்திகளும் அதில் இடம் பெற்றன. இதில் சிறப்பான விஷயம் என்னவெனில் அவருக்கெனவே ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது தான்!

அந்த சிறப்புமலர் பிரதி ஒன்றை எடுத்துக் கொண்டு ஒரு ஆங்கிலேயர் காந்திஜியிடம் வந்தார்.

“மிஸ்டர் காந்தி! இந்த இதழில் அஞ்சலி உங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து உறுப்பினர்களின் நல்லெண்ணத்துடன் இதை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் இதைப் படியுங்கள். படித்தபின் தங்களின் மேலான அபிப்ராயத்தைத் தெரியப்படுத்துங்கள்” என்றார் அவர்.

அவர் சாராயமும் அருந்தி இருந்தார். அவர், “மிஸ்டர் காந்தி! நான் எனது காபினில் இரண்டாவது கிளாஸ் அருந்து முன் உங்களது பதில் எனக்கு வேண்டும்” என்றார்.

மஹாத்மா அந்த பத்திரிகையை ஒரு நோட்டம் விட்டார். அது எப்படிப்பட்ட பத்திரிகை என்பதை ஒரு கணத்தில் அவர் புரிந்து  கொண்டார். அந்த “சிறப்பிதழில்” பேப்பர்களைக் கோர்த்து அதன் மேல் வைக்கப்பட்டிருந்த கிளிப்பை அவர் எடுத்துக் கொண்டார்.

பிறகு அந்தப் பத்திரிகையை அந்த ஆங்கிலேயரிடம் திருப்பிக் கொடுத்தார். திருப்பிக் கொடுக்கும் போதே, “ இதில் வேலைக்கு ஏற்ற தேவையான பொருளை நான் எடுத்துக் கொண்டேன். மீதியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

அந்த ஆங்கிலேயர் வெட்கத்தினால் தலை குனிந்து வந்த வழியே திரும்பினார்.

2

இன்னொரு சம்பவம் இது:

வருடம் 1928. ஷ்ரத்தானந்த் என்று ஒரு வாரப் பத்திரிகை வெளியாகிக் கொண்டிருந்தது. அதில் விநாயக் ராம் சவர்கார் எழுதிய கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அவர் காந்திஜியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

கான்பூரிலிருந்து வெளியாகும் ப்ரதாப் என்ற பத்திரிகை அந்தக் கட்டுரைக்குப் பதில் சொல்லும் விதத்தில் இரு தலையங்களை எழுதி வெளியிட்டது. அதில் அதன் ஆசிரியரான  கணேஷ் சங்கர் வித்யார்த்தி, மிகக் கடுமையாக சவர்க்காரை விமர்சித்திருந்தார். இதைப் படித்த காந்தியவாதிகளே சற்று திகைத்தனர். அப்படி ஒரு விமரிசனம் அது!  உடனே காந்திஜியின் தொண்டரான ராம்நாராயண் சௌத்ரி தனது அபிப்ராயத்தை எழுதி அந்த ஆசிரியருக்கு எழுதினார். அதை காந்திஜிக்கும் அனுப்பினார். உடனே ராம்நாராயணுக்கு காந்திஜியிடமிருந்து பதில் வந்தது.

அன்புள்ள ராம்நாராயண்,

உங்களது கடிதம் கிடைத்தது. ஷ்ரத்தானந்த் இதழில் என்னைப் பற்றி என்ன வெளியாகி இருக்கிறது என்பதை நான் கவனிக்கவில்லை. ஓரிரு இதழ்களை சில நிமிடங்கள் மட்டுமே நான் பார்வையிடுகிறேன். யாரும் எனக்காக பதில் சொல்லவேண்டும் என்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இந்தக் கடிதத்தை நீங்கள் விரும்பும் வண்ணம் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் ‘ப்ரதாப்’புக்கும் எழுதுகிறேன்.

 உங்கள்

மோஹன் தாஸ்

மஹாத்மா தன்னைத் தாக்கி எழுதுபவர்களைப் பற்றிச் சற்றும் கவலைப்படுவதில்லை. அதற்கு அவரும் பதில் எழுதுவதில்லை, மற்றவர்கள் எழுதுவதையும் விரும்புவதில்லை. ஒருவரின் நல் நடத்தையே அவருக்கான சிறந்த தற்காப்பு என்பது அவரது கொள்கை. அவரது நேரம் இவர்களுக்குப் பதில் சொல்லி வீணடிக்கப்படாமல் இன்னும் நல்ல விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர் விருப்பம். அப்படி எழுதுபவர்களை அவர் எப்போதுமே மன்னித்து விடுவார். அது அவரது பன்முகம் கொண்ட பரிமாணங்களில் ஒரு அம்சமே.

3

இந்த 2021இல் யூடியூபர்களைச் சற்றுப் பார்ப்போம். விஷமி ஊடகங்களைச் சற்று நோக்குவோம். அற்புதமான அறிவியல் முன்னேற்றத்தை எப்படி எல்லாம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்தால் மனம் மிகவும் நோகிறது இல்லையா. பொய், பொய், பொய்! விஷமத் தனமான பிரசாரம்! தூற்றுதலுக்கு ஒரு எல்லையே இல்லை! ஆபாசமான வார்த்தைகள்!

நாம் எங்கே செல்கிறோம் – கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இப்படிச் செய்யலாமா? இதற்கு ஒரு முடிவை எடுக்க மக்கள் அரசைத் தூண்ட வேண்டுமல்லவா! இப்படிப்பட்ட ஊடகங்களை காந்திஜியின் பாணியில் ஒதுக்குவது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்! செயல்படுவோம்!!

***

Inded

Mahatma Gandhiji

Round Table conference, Travel by Ship, typed magazine, scandal times, Gandhiji removed Clip.

Savarkar, Shraddhanda magazine, Pratap magazine, Ram Narayan, Gandhiji – don’t defend me, time to be used for better purposes

Many Youtubers’ wrong presentation, Medias’ lies, Freedom of Expression should be safe guarded safely and not to be used wrongly

***

tags- மஹாத்மா காந்திஜி , கவலை,  தவறான , விமரிசனங்கள்

PLEASE JOIN US TODAY MONDAY 2-8-2021

2-8– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER  MRS ANNAPURANI PANCHANATHAN, LONDON

XXX

DR CHAMUNDEESWARY AND SUBRAMANIAN SITARAMAN’S  DISCUSSION ON THEIR NEW PROJECT ‘KURUVIK KOODU’ – 20 MTS

Dr Chamundeeswari is a lawyer and researcher in cultural heritage and development law. She is a Bharatanatyam dancer, trained in the Kalakshetra style of nritta and Smt. Kalanidhi Narayanan bhani of abinaya, having completed her arangetram under the guidance of the abinaya exponent Padma Bhushan Srimathi Kalanidhi Narayanan and her dance school Abinayasudha in Madras. She has completed her Government of Tamilnadu lower and higher exams in bharatanatyam, and lower exam in carnatic music. Having moved to the UK in 2000, she has developed her classical repertoire in an international context and has found the exposure to new ideas and literature deepen her love for classical work, and led her to experiment in bringing together different classical arts, such as literature and dance. She has choreographed and performed innovative solo and group Bharatanatyam productions, in the UK, India, Mexico, USA, Australia, Croatia, Costa Rica, Netherlands, Portugal and Italy.

Her recent choreographic work, all funded through Arts Council England, include Shades of Love: Chandrika, and Dancing Vernacular Indian poetry – Kshetrayya (2021) Chinnadevi (2020) Women of Mahabarata (2019) Rasamanjari (2019), Gopala Vimshati, East Meets West and Madras Sepoy (2018).

She is currently doing research and development work on Kuruvi Koodu, a poem by the poet Tiruloka Sitaram, and today she will be discussing this. 

Picture credit : Prithvi Krishna, Bangalore.   

Subramanian Sitaram is the 5th of the seven children of Tamil poet Tiruloka Sitaram (1917-1973), who strode the literary scene in Tamilnadu as Mahakavi Subramanya Bharati’s principal message bearer in the period from 1945 to 1973. Subramanian was a career banker and worked at several places in India during a career spanning 31 years and later for 9 years at Dubai, UAE. He is a Treasury and Risk Management specialist. He consults for banks in Risk Management and also offers training on Financial Risk to Corporates and training institutions.

Subramanian was 17 years old when his poet father passed away. However, he spent a good amount of time with his father during his last few years, travelling with his father on his lecture tours and meeting authors. Subramanian also ran his father’s printing press for 4 years after his passing away before joining banks.

Subramanian produced a documentary on Tiruloka Sitaram, a dance video on Tirulokam’s long verse drama ‘Udaiyavar’, an Odissi dance performed by his daughter Suprita Trilok and also organised the Centenary celebrations of Tirulokam at Chennai. A committed follower of Tirulokam’s literary works, he was also instrumental in bringing out the complete poetical works of Tirulokam with English translation and notes by Sekkizhar Adippodi T.N.Ramachandran in 2014.

XXXX

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT KUZANTHAIYANANTHA SWAMIKAL OF MADURAI- 12 MTS

Talk by B.KANNAN, DELHI on தமிழ்ப் புலவர்களின் ரசிக்க வைக்கும் சொல்லாடல் PART 2 FOR  10 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -7

MANGALAM – 3 MTS

TOTAL TIME- APPR. 65 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- 2 PM LONDON TIME/ BRITISH SUMMER TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME; 6-30 PM INDIAN TIME.

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLICITY 282021

உலக இந்து சமய செய்தி மடல் 1-8-2021 (Post No.9920)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9920

Date uploaded in London – 1 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை AUGUST 1 – —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

வழிபாட்டு தலங்களுக்கு பொது சட்டம் கோரி வழக்கு

‘ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோரின் வழிபாட்டு தலங்களை மாநில அரசுகளின் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். அனைத்து மதங்களுக்கும் பொதுவான சட்டம் உருவாக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஜீயர் ஸ்வாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் பார்சி இன மக்களுக்கு தங்கள் வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான சொத்துக்களை பராமரிக்கும், நிர்வகிக்கும், புதிய சொத்து வாங்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் ஹிந்து, சீக்கியர், ஜெயின், புத்த மதத்தினருக்கு இதுபோன்ற உரிமை வழங்கப்படவில்லை. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இந்த மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் உள்ளன.

மத விவகார நிர்வாகத்தில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என அரசியல் சாசனம் கூறிஉள்ளது.குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களே அந்த மதத்துக்கு சொந்தமான வழிபாட்டு தலங்கள், சொத்துக்களை சிறப்பாக பராமரிக்க முடியும். மாநில அரசுகளால் செய்ய முடியவில்லை.முஸ்லிம், பார்சி, கிறிஸ்துவ மதங்களுக்கு வழங்கியுள்ளதுபோல் ஹிந்து, ஜெயின், புத்த, சீக்கிய மதத்தினருக்கும் தங்கள் மத வழிபாட்டு தலங்களை பராமரிக்கும், நிர்வகிக்கும் அதிகாரம், உரிமை வழங்கப்பட வேண்டும்.இல்லையெனில் நாடு முழுதும் அனைத்து மதங்களுக்கும் பொதுவான விதிகளை உருவாக்கும்படி, மத்திய அரசு மற்றும் சட்ட கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயும் இதுபோன்ற மனுவை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார்.

xxxxx

அயோத்தி – ராமேஸ்வரம் விமானம் இயக்க திட்டம்

ராமேஸ்வரம் : ”மத்திய அரசிடம் ஆலோசித்து, அயோத்தி – ராமேஸ்வரம் இடையே விமான போக்குவரத்து துவக்கப்படும்,” என, உ.பி., போக்குவரத்து துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வந்த அவர், சுவாமி தரிசனத்துக்கு பின் கூறியதாவது:உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வரானதும், ரவுடியிசம் மற்றும் கட்ட பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இம்மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்வதால், மக்களும் பொருளாதார ரீதியாக மேம்பட்டு உள்ளனர்.



அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் முடிந்ததும், மத்திய அரசுடன் ஆலோசித்து, ராமாயண வரலாற்றில் தொடர்புடைய அயோத்தி – ராமேஸ்வரம் இடையே, விமான போக்குவரத்து துவக்கப்படும்.

XXXXX

திருப்பதி பாலாஜி வேங்கடாசலபதியை தரிசிக்க கூடுதலாக வெளியிட்ட 3,000 டிக்கெட்டுகள்   

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திராவில் கொரோனா தொற்று 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், திருப்பதி BALAJI கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

பாலாஜி வேங்கடாசலபதியை தரிசனம் செய்ய ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30ம் தேதி  வரையில் தினமும் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் என வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் 3 ஆயிரம் டிக்கெட்டுகள் கூடுதலாக விற்பனை செய்ய தேவஸ்தானம் நேற்று முடிவு செய்துள்ளது. சில மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. மேலும், ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை வருடாந்திர பவித்ர உற்சவம் நடைபெறுகிறது. இதனால், இந்த 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

XXXXX

தெலுங்கானாவின் ராமப்பா கோயிலுக்கு  யுனெஸ்கோ அங்கீகாரம்

தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள ருத்ரேஸ்வரா கோவில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு  யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருக்கிறது இந்த கோவில் ராமப்பா கோவில் என்றும்  அழைக்கப்படும் .

இந்த கோவில். 12 மற்றும் 13வது நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டு காலம் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. 

இது, வாரங்கல்லிலிருந்து 77 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. கி.பி 1213 ம் ஆண்டு காகதீய அரசர் கணபதி தேவர் காலத்தில், அவரது படைத்தலைவர்      ரேச்சர்ல ருத்திரன் என்பவரால் எழுப்பப்பட்ட கோயில் இதுவாகும்.

செம்மணற் கல்லால் எழுப்பப்பட்ட அழகிய கலைப் பெட்டகம் இந்தக் கோயில். அழகிய தூண்கள், குறுஞ்சிற்பங்கள், நளினமான சிற்பங்கள் நிறைந்த இந்தக் கோயிலை இந்தியத் தொல்லியல் துறையினர் தற்போது பராமரித்து வருகிறார்கள்.

ஹரப்பா நாகரீக ‘தோலவிரா’வுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

ஹரப்பா நாகரீகத்தை சேர்ந்த நகரமான தோலவிராவுக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது தெலங்கானாவின் ககாதியா ருத்ரேஷ்வரா (ராமப்பா) கோயில் மற்றும் குஜராத்தை சேர்ந்த தோலவிரா ஆகியவை சேர்க்கப்பட்டதால், இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

தோலவிரா குறித்து கருத்து தெரிவித்த யுனெஸ்கோ, ‘பழங்கால நகரமான தோலவிரா தெற்காசியாவில் மிகவும் குறிப்பிடத்தக்க நகர நாகரீகங்களில் ஒன்றாகும். சிந்து சமவெளி நாகரிகத்தின் ஐந்து பெரிய நாகரீக தளங்களில் தோலவிரா ஒன்றாகும். இந்தியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகவும் உள்ளது. கடந்த 1968ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தளத்தில் நீர் மேலாண்மை அமைப்பு, பல அடுக்கு தற்காப்பு வழிமுறை கட்டுமானங்கள், கட்டுமானத்தில் கல்லின் விரிவான பயன்பாடு, சிறப்பு கட்டமைப்புகள் போன்றவற்றால் கவனம் ஈர்க்கிறது.

செம்பு, கிளிஞ்சல்கள், கல், விலைமதிப்பற்ற கற்களின் நகைகள்,  தங்கம், தந்தங்கள் போன்ற பல்வேறு வகையான கலைப்பொருட்களும் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது.

 XXXX

40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

கோயில் நிலங்களை மீட்பது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில், 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். இதற்காக 2 குழுக்களை நியமிக்க வேண்டும். நிலங்களை மீட்பது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிமன்றம் கூறியுள்ளது.

XXX

ஆன்மிகத்தை மக்களிடம் சேர்ப்பதே ஆசை: சத்குரு பேச்சு

கோவை : ”தமிழகத்தில், ஒவ்வொருவரிடமும் ஒரு சொட்டு ஆன்மிகத்தையாவது சேர்க்க வேண்டும்,” என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்

பேசினார்.

ஈஷா சார்பில், ‘உயிர் நோக்கம்’ என்ற ‘ஆன்-லைன்’ வழி இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது; மாநிலம் முழுவதும், 27 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நிறைவாக, ‘ஆனந்த சங்கமம்’ நிகழ்ச்சி நடந்தது; மக்களின் கேள்விகளுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் (JAGGI VASUDEV) பதிலளித்தார்.

நம் நாடு, பொருளாதார வளர்ச்சி அடையும் நோக்கத்தில், பெரிதும் சுற்றுச்சூழல் அழிவுக்கு உள்ளாகி உள்ளது.. மண் வளம் இருந்தால் மட்டுமே சத்தான உணவு கிடைக்கும். ஊட்டச்சத்து மிக்க உணவின்றி தவிக்கும் மக்களிடம், ஆன்மிகம் பேசுவது அசிங்கம். அதை ஒருபோதும் செய்யமாட்டேன். அதனால், சுற்றுச்சூழல் குறித்து அதிகம் பேசுகிறேன்.

தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு சொட்டு ஆன்மிகத்தையாவது சேர்க்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக, உயிர் நோக்கம், சூரிய சக்தி போன்ற யோகா பயிற்சிகளை, இலவசமாக சேர்ப்பிக்கும் பணியை தீவிரப் படுத்தியுள்ளோம்.இவ்வாறு, சத்குரு ஜக்கி வாசுதேவ் பதிலளித்தார்.

XXXX

கடவுளை அவமதித்ததாக விஜய் ஆண்டனி மீது புகார்

சென்னை : நடிகரும், இயக்குனருமான் விஜய் ஆண்டனி, ஹிந்து மதக்கடவுளை புண்படுத்தி விட்டதாக, இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்து மக்கள் கட்சியை சேர்ந்த, மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் வெளியிட்ட அறிக்கை: ஹிந்து கடவுளை அவமதிக்கும் வகையில், காளி படத்தோடு, ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். விஜய் ஆண்டனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ஹிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டு, போஸ்டரை அகற்ற வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும்.


திரைப்படம் என்ற போர்வையில், ஹிந்து கடவுள்களை அசிங்கப்படுத்தும் விதமாக, மதநல்லிணக்கத்திற்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில், போஸ்டர்கள் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. ஹிந்து கடவுள்களை பயன்படுத்துவது போல, மற்ற மத கடவுள்களின் படத்தை போட்டு, ‘பிச்சைக்காரன் 2’ என்ற வார்த்தையை பயன்படுத்தும் துணிவு இருக்கிறதா. இவ்வாறு சோலை கண்ணன் கூறியுள்ளார்.

Xxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

tags- இந்து சமய, செய்தி மடல், 182021

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 1-8 -2021 (Post No.9919)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9919

Date uploaded in London – 1 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by NITHYA SOWMY

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by NITHYA SOWMY

XXX

Anjanadri is birth place of Anjaneya, reiterate experts

The Anjanadri Hills located in the Seshachala ranges is the birthplace of Sri Anjaneya Swamy, say experts citing evidence from puranas, sastras and epigraphy. They were speaking at the two-day international webinar on ‘Anjanadri Tirumala-Anjaneya Birthplace’ organised jointly by Sri Venkateswara Institute of Higher Vedic Studies and National Sanskrit University, which concluded at Ramaranjan Mukherjee Hall in the varsity on Saturday. 

Acharya Chakravarti Ranganathan of National Sanskrit University emphasised that the Vaishnava literature of Alwar pasurams clearly indicated that the Anjanadri hillocks in Tirumala is the birthplace of Anjaneya Swami. He said even a stone inscription at Sri Ranganatha Swamy temple at Srirangam hailed Anjanadri as the birthplace of Hanuman.

Acharya Sri Rani Sadasiva Murthy of National Sanskrit University said Anjanadri was quoted extensively in Padma, Skanda and Brahmananda puranas. He also made a power-point presentation on the route taken by Sri Rama from Ayodhya to Sri Lanka.

Sri Archakam Ramakrishna Dikshitulu of Srivari temple spoke on the significance of Anjanadri in Sapthagiri and said that the Tiruppavada Seva performed at Srivari temple  every Thursday by rendering Srinivasa Gadyam and Alavatta ritual spoke about the significance of Anjanadri.

xxxxx

National Gallery of Australia to return 14 works of art to India ..

The National Gallery of Australia has announced it would return 14 works of art from its Asian collection to India. Hailing the development, Minister of State for Culture Meenakshi Lekhi thanked PM Narendra Modi for efforts to recover India’s lost heritage.

National Gallery of Australia on Wednesday announced it would return 14 works of art from its Asian art collection to the Indian government. These works of art include 13 objects connected to art dealer Subhash Kapoor through his ‘Art of the Past’ gallery and one, a bronze (child-saint Sambandar) from a Tamil Nadu temple, acquired from art dealer William Wolff, said an official release.


The works include six bronze or stone sculptures, a brass processional standard, a painted scroll and six photographs. Tamil Nadu would get back two 12th century Chola-era bronzes — the child-saint Sambandar, stolen from a temple in Sirkali in Tamil Nadu. The other works of art belong to Telangana, Andhra Pradesh, Madhya Pradesh, Gujarat, Rajasthan and UP.

Xxx

Yoga sessions for prison staff, inmates to de-stress

To improve the mental health of prison staff and prisoners and help them de-stress, the Department of Prison and Correctional Services has imparted yoga training to 600 staffers in the Bengaluru Central Prison. The two-week yoga sessions were held earlier this month.

“We will hold similar yoga sessions for the rest of our staff across Karnataka,” said Director General of Prisons and Correctional Services Alok Mohan. He added that after being trained, the staffers will conduct yoga sessions for the prison inmates.

“There are 15,000 prisoners lodged in prisons across Karnataka. We would like to hold yoga classes for them to help them de-stress and build a positive attitude towards life. Yoga is good for mental and physical health,” said Mohan.

The yoga sessions for the prison staff are being held by the Art of Living  and other voluntary organisations, he added.

xxxx

Telangana temple and Gujarat’s Dholavira in UNESCO World Heritage list

Dholavira, a Harappan-

pictures of Ramappa Temple and Dholavira

Dholavira ,city in Gujarat’s Rann of Kutch, has been added to the list of World Heritage Sites by United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO).

This comes days after the ongoing 44th session of the World Heritage Committee of UNESCO inscribed the 13th-century Rudreswara/Ramappa Temple in Telangana as a heritage site.

The Harappan city of Dholavira is one of the very few well preserved urban settlements in South Asia dating from the 3rd to mid-2nd millennium BCE. It is the sixth-largest of more than 1,000 Harappan sites discovered so far.

Rudreswara Temple

Rudreswara Temple, known as Ramappa temple, located at Palampet, Mulugu district, near Warangal in the state of Telangana has made it to the list. The iconic Ramappa Temple showcases the outstanding craftsmanship of great Kakatiya dynasty.

The 13th century temple was named after its architect, Ramappa. The temple complex was built by Racherla Rudra Reddy during the period of the Kakatiya ruler Ganapati Deva.

Xxxx

Covid-19 hits demand for Sabarimala priest post


Sabarimala Ayyappa temple ‘melsanthi’ (head priest) post, which has been much sought after, does not have much demand this time around as well, most likely due to the Covid-19 scenario.

Only 49 applications were received this year and the screening process is currently going on. Last year, the number of applicants was 55. Usually, 75 to 100 priests used to apply for the Sabarimala melsanthi post which is appointed for one year .

Sabarimala post is considered to be quite prestigious. Many devotees who turn up at the temple meet the melshanthi seeking blessings and offer ‘dakshina’.

Another news item says

Sabarimala priest discrimination case has been posted to August 12.

The final selection of the Head Priest through a draw of lots at the temple premises after screening is scheduled to be held on August 16


Kerala High Court has refused to issue an interim order in the petitions against the alleged discrimination in the selection of Sabarimala Ayyappa temple ‘Melsanthi’ .

Xxxx

Three new inscriptions 0f Vijayanayanagar period discovered

Three inscriptions, two in Telugu and one in Kannada, were unearthed at the 1,000-year-old Nidimamadi Samsthanam in Nidimamidi village

Three inscriptions, two in Telugu and one in Kannada, were unearthed at the 1,000-year-old Nidimamadi Samsthanam in Nidimamidi village in Puttaparthi mandal in Anantapur district on Friday.

Historian Mynaswamy identified the inscriptions as belonging to the Vijayanagara empire in the 15th century.

xxxxx

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY NITHYA SOWMY

PLEASE WAIT FOR TAMIL NEWS

XXXXXXXXXXXXX

tags-  Hindu News, 182021,