Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதம் முழுதும், பாரதியார் பாட்டு போல, எல்லாம் ஆக்க பூர்வமான சொற்களே இருக்கும். அது மட்டுமல்ல; நல்ல கற்பனை வளம் மிக்க சொற்களையும் உவமைகளையும் காணலாம். அக்கினி தேவனை அழைப்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் காலை, நண்பகல், மாலை என்று மூன்று வேளைகளிலும் ஹோமத் தீ மூட்டுவர். அப்போது சொல்லும் மந்திரங்களை ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலத்திலுள்ள இரண்டு துதிகளில் உள்ள ஆக்கபூர்வ அடை மொழிகளை, சொற்களை, மட்டும் தருகிறேன் . இன்னொரு துதியில் அக்கினியை ‘ஒளி ஆடை அணிந்தவனே’ என்று புலவர் விளிக்கிறார் இங்கே நெய் முடியுடைவனே என்று பகர்கிறார்.
இதோ ரிக் வேதம் RV.8-60
அக்கினி தேவனை ரிஷி பர்க்க பிரகாதன் பாடுகிறார்.
ஆற்றலின் மகனே
நெய் கேசம் உடையவனே
பழையவனே
புலவனே (கவி)
சுத்தம் செய்பவனே
இன்பம் தருவோனே
வாரி வழங்குவோனே
பிரகாசிப்போனே
அதி இளைஞனே
நித்தியனே
சத்தியனே
மனைகளை அளிப்பவனே
பாலகனே
எங்கும் பரவியவனே
மஹானே
நண்பர்களை மேம்படுத்துவோனே
ஆற்றலின் தலைவனே
நலத்தை அளிப்பவனே
பலத்தின் தலைவனே
பலத்தின் மகனே
கொம்புகளைத் தீட்டும் காளையே
இரண்டு தாய் உடையவனே
(வேத காலத்தில் இரண்டு மரக்கட்டைகளை வைத்து தீ உண்டாக்கினர்)
சூடான சுவாலையால் மேகத்தைக் கிழிப்பவனே
(மேகத்தின் இடையே ஒளிரும் கீற்று மின்னல்)
தடைப்படாத அக்கினியே
தேவனான அக்கினியே
ஜனங்களைக் காப்போனே
ஒளிச் செல்வனே
XXX
துதி RV.8-61 (ரிக் வேதம்)
இது இந்திரனை நோக்கி ரிஷி பர்க பிரகாதன் பாடுவது-
இந்திரனே
புருவசுவே
மகவானே
விப்ரனே
அழகிய மோவாய் உள்ளவனே
பலத்தின் தலைவனே
சூரனே
வள்ளலே
பொன்னார் மேனியனே
தாங்க ஊற்றே
சதக்ரதுவே (சதாவதானி)
தடை படாதவனே
நண்பனே
செல்வபதியே
பகைவர்களைப் புடைப்பவனே
புரந்தரனே
இவ்வாறு பாசிட்டிவ் சொல்லாக்கத்தையே பாடினால் நமது மனதும் எதையும் செய்யும் சக்தி பெறு ம். எதையும் தாங்கும் சக்தியையும் பெறும்.
வேத மந்திரங்களை இசைக்க முடியாதோர் அதை கேட்கவாவது செய்யலாம்.
—SUBHAM—
TAGS– ரிக் வேதம், ஆக்கபூர்வ, சொல்லாக்கம் , ஆற்றல், அடைமொழி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great
ஜெர்மனியைச் சேர்ந்த க்ரிம் சகோதரர்களை GRIMM BROTHERS உலகம் என்றும் மறவாது. ஏனெனில் அவர்கள் ஐரோப்பா கண்டத்தில் வாய் மொழியாகப் புழங்கிய புகழ்பெற்ற நாட்டுப்புற கதைகளை எழுத்து வடிவில் தொகுத்து அளித்தனர். அவர்கள் இவ்வாறு செய்திராவிடில் பல கதைகள் அழிந்தே போயிருக்கும். அல்லது காலப்போக்கில் உருமாறிப் போகும் .
SLEEPING BEAUTY உறங்கும் பேரழகி/ஸ்லீப்பிங் பியூட்டி , SNOW WHITE ஸ்னோ ஒயிட், RUMPLESTILTSKIN ரம்புல்ஸ்டில்ட்ஸ்கின் ஆகியன மேலை நாட்டுச் சிறுவர்கள் விரும்பிப் படிக்கும் கதைகளாகும் .
ஜேகப் க்ரிம் , வில்லம் (வில்லியம்) க்ரிம் JACOB GRIMM AND WILHELM GRIMM ஆகிய இரண்டு சகோதர்கள்தான் இந்த அரிய, பெரிய வேலை யைச் செய்தனர். இருவரும் ஹனோ HANAU என்ற ஜெர்மன் நகரில் பிறந்தனர். இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் , மார்பர்க் பல்கலைக்கழகத்திலே MARBURG UNIVERSITY படிப்பைத் தொடர குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டனர். படிப்பை முடித்துக் கொண்டு இரண்டு பெரும் நூலகங்கள், அரசாங்க அலுவலகங்கள், பல்கலைக் கழகங்கள் என்று பல இடங்களில் வேலை செய்தார்கள் .
1812 முதல் 1822க்குள் மூன்று நாட்டுப்புற கதைத் தொகுப்புகளை வெளியிட்டனர். இன்றும் அவை க்ரிம் சகோதரர்களின் தேவதைக் GRIMMS’ FAIRY TALES கதைகள் என்ற பெயரில் படிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அவர்கள் நிதி திரட்டினர் . இப்போது நாம் காணும் பெரிய ஜெர்மனி நாடு அந்தக் காலத்தில் பல குட்டி நாடுகளாகவும். சிற்றரரசர் ஆளும் பகுதிகளாகவும் இருந்தன. ஜெர்மனி ஒன்றுபட வேண்டும் என்று இந்த சகோதரர்களும் ஏனைய தலைவர்களைப் போல விரும்பினார்கள் . அவர்கள் ஜெர்மன் மொழியும், கலாச்சாரமும் ஒன்றே என்று காட்டவும் தேவதைக் கதைத் தொகுப்புகளைப் பயன்படுத்தினர். அவர்களுடைய ஆராய்ச்சி இதற்கு உதவியது.
அவர்கள் கதைகளைத் தொகுத்ததோடு நில்லாமல் அவைகளைச் சுவைபடச் சொன்னார்கள்; எழுதினார்கள். பழங்கால உலகில் நிலவிய மாயாஜாலம், அவர்களுடைய மேதாவிலாசம் ஆகியவற்றையும் நம் மனக் கண்ணுக்கு முன்னே நிறுத்தினர். ஆகையால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் எழுதிய வடிவிலேயே இன்றும் புகழ்பெற்று விளங்குகின்றன.
ஜேகப் க்ரிம் JACOB GRIMM
பிறந்த தேதி – ஜனவரி 4, 1785
இறந்த தேதி – செப்டம்பர் 20, 1863
வாழ்ந்த ஆண்டுகள் -78
****
வில்லம் க்ரிம் WILHELM GRIMM
பிறந்த தேதி — பிப்ரவரி 24, 1786
இறந்த தேதி – டிசம்பர் 16, 1859
வாழ்ந்த ஆண்டுகள் – 73
மொழியியல் துறையில் இவர்கள் செய்த ஆராய்ச்சியால் கிரிம் விதி என்ற ஒரு விதியும் உருவாக்கப்பட்டது
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்! – 2
((வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 23-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)(
ஒரு நாள் குகை நமச்சிவாயர் தனது சீடனை சோதிக்க எண்ணி தான் சாப்பிட்டதை தனது திருவோட்டில் உமிழ்ந்து அதை குரு நமச்சிவாயரிடம் கொடுத்தார். “இதை யார் காலடியும் படாத இடத்தில் கொட்டு” என்றார். ஆழ்ந்து சிந்தித்த குரு நமச்சிவாயர் யார் காலடியும் படாத இடம் தானே, என்று அதை தானே உண்டு விட்டார். பின்னர் குகை நமச்சிவாயர், “அதை எங்கே கொட்டினாய்?” என்று கேட்க குரு நமச்சிவாயர் அதைத் தானே உண்டு விட்டதாகவும் அது யார் காலடியும் படாத இடம் என்றும் கூறினார்.
ஒரு நாள் குகை நமச்சிவாயர் ஒரு வெண்பாவின் பாதியைப் பாடினார் இப்படி:
“ஆல் பழுத்துப் பட்சியினுக் காகார மானதென
வேல் பழுத்து நின்ற நிலை வீ ணிலென –
இத்தோடு நிறுத்தியவர் தனது சீடனை நோக்கி, “இதை நீ முடி பார்க்கலாம்” என்றார்.
உடனே குரு நமச்சிவாயர் ‘”சாலவனச்
செய்யா ஒருத்தருடன் சேர்ந்தும் இருப்பீரோ
ஐயா நமச்சிவா யா” என்று முடித்தார்.
சீடனின் பக்குவ நிலையைக் கண்ட குகை நமச்சிவாயர், “அப்பனே! நீ ஞானத்தில் சிறந்தவன், இது போக க்ஷேத்ரம். நீ இங்கு இருக்க வேண்டா, தெய்வீக க்ஷேத்ரமான சிதம்பரம் செல்லலாம். நான் அண்ணாமலைக்கு அடிமையாக இருந்து இங்கேயே வாழ்கிறேன்” என்றார். குரு நமச்சிவாயர் இதனால் வருந்தினார். ஆனால் குகை நமச்சிவாயரோ, “இரு யானைகள் ஒரு கம்பத்தில் கட்டப்பட முடியாது, கூடாது “ என்றார்.
தனது குருவின் வாக்கைப் போற்றிய குரு நமச்சிவாயர் உடனே பத்துப் பாடல்களால் குருவின் பெருமையைப் போற்றிப் பாடினார்.
“வாக்காலே தியானத்தாலே மனமகிழ் கிருபையாலே
நோக்காலே (ஸ்)பரிசத்தாலே நுண்ணிய பிறவி தீர்க்கும்
தாக்கான நமசிவாயம் சலக்கமெய் யாடுகின்ற
நாற்காலி காலதானால் நான் முத்தி பெறலுமாமே”
இப்படி குருநாதரைப் போற்றி விட்டு பிரியா விடை பெற்று குரு நமச்சிவாயர் சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டார். சிதம்பரம் நோக்கிப் புறப்பட்ட அவர் பசியால் வாடினார். அண்ணாமலை ஈசனைத் தொழுது உண்ணாமுலை தேவியை பசி தீர்க்குமாறு ஒரு பாடலைப் பாடினார்..
அண்ணா மலையார் அகத்துக் கினியாளே
உண்ணா முலையே உமையாளே – நண்ணா
நினைதோறும் போற்றி செய நின்னடியார் உண்ண
மனைதோறுஞ் சோறு கொண்டு வா
அவரது வேண்டுதலைக் கேட்ட அம்மை மனமிரங்கினாள்.
உடனே அம்பிகை அங்கு தனக்கு அர்த்தஜாம பிரசாதமாக தரப்பட்ட சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை தங்கத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வந்து அவருக்குத் தந்தார். பிரசாதத்தை உண்டு பசியாறிய அவர் தங்கத் தட்டை ஒரு மரத்தின் அடியில் வீசினார்.
காலையில் கோவிலில் தங்கத் தட்டைக் காணாத அர்ச்சகர் திகைத்தார். பலரும் அங்கு குழுமி தங்கத் தட்டைத் தேட ஆரம்பித்தனர். “தங்கத் தட்டு மரத்தின் அடியில் கிடக்கிறது. அங்கே செல்லுங்கள்” என்று கோவிலிலிருந்து அசரீரி ஒலி எழவே அனைவரும் அங்கே சென்று தட்டை எடுத்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரிக்கு குரு நமச்சிவாயர் வரவே அவருக்கு தில்லை நகரின் வானளாவிய கோபுரங்கள் நான்கும் தெரிந்தன.
உடனே மனமுருகிய குரு நமச்சிவாயர்,
கோபுரங்கள் நான்கினையும் கண்ட மட்டிற் குற்றமெலாம்
தீ பரந்த பஞ்சது போல் சென்றதே – நூபுரங்கள்
ஆர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின்பாதம்
பார்க்கின்றார்க் கென்னோ பலன்” என்று பாடி சிதம்பரநாதனை வழிபட்டார்.
தில்லையில் நடனமாடும் கூத்தப் பிரானை தரிசித்த அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அது அவரது குருவான குகை நமச்சிவாயர் போல அவருக்குக் காட்சி தரவே ஆனந்தம் பொங்கப் பாடினார் இப்படி:-
“திருவணாமலையிறி குகை நமசிவாய தேசிக வடிவமாயிருந்து
கரவனாமடியேன் சென்னி மேல் உனது கழலினை வைத்தவாறுணரேன்
விரகநாரியரைப் புதல்வரைப் பொருளை வேண்டிய வேண்டியதனைத்தும்
பரமராசியனை அதி வேகத்தில் நூறு பாடல்களில் அவர் போற்றிப் பாடிய பாமாலை பரமராசிய மாலை என்று போற்றப்படுகிறது. இன்றும் அப்பாடல்கள் நம்மிடையே உள்ளன.
தில்லையில் அவர் நடத்திய அற்புதங்கள் ஏராளம். பொன் தாம்பாளத்தை ஏந்தி நடராஜப் பெருமானை அவர் துதிக்கவே அதில் ஒரு பொற்காசு விண்ணிலிருந்து விழுந்தது. நடராஜருக்கு அப்போது இல்லாமல் இருந்த பாதச் சிலம்பு, கிண்கிணி, வீர கண்டாமணி உள்ளிட்ட ஆபரணங்களை நிறைய பொருள் செலவில் அவர் தயாரித்து நடராஜருக்கு அணிவித்ததோடு ஒரு முறை அனைவரும் பார்க்க நடராஜரை கூத்தியற்றிக் காட்டுமாறு வேண்டினார். நடராஜரும் கூத்தியற்றிக் காட்டினார். இப்படிப் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய அவரது அற்புதங்கள் ஒரு நீண்ட பட்டியலாகும்.
For the truly faithful no miracle is necessary, for those who doubt no miracle is sufficient – Nancy Gibbs
நம்பிக்கை உடையவர்களுக்கு அற்புதங்கள் அவசியமே இல்லை, சந்தேகப் பேர்வழிகளுக்கு எத்தனை அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டாலும் அவை போதுமானதில்லை என்பது உண்மையான வாக்கியம்!
நீண்ட காலம் வாழ்ந்து பின்னர் திருப்பெருந்துறையிலே குரு நமச்சிவாயர் முக்தி அடைந்தார்.
குகை நமச்சிவாயரும் நீண்ட காலம் வாழ்ந்து திருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்தார். அண்ணாமலையார் ஆலயத்தின் பின்புறம் உள்ள கோபுரத்திலிருந்து மலையில் ஏறினால் சிறிது தூரத்தில் இந்த ஜீவ சமாதி ஆலயத்தை அடையலாம். குகை நமச்சிவாயர் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் பல நமக்குக் கிடைக்கவில்லை. அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, உள்ளிட்ட சில நூல்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன.
சித்தர் பூமி பாரதம் என்பதை நிரூபிக்கும் வகையில் சித்தர் பரம்பரையில் தோன்றி அனைவருக்கும் அருள் பாலித்த குகை நமச்சிவாயர் மற்றும் குரு நமச்சிவாயர் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
WHEN YOU READ POSITIVE WORDS, YOU GET POSITIVE THOUGHTS. WHEN YOU GET POSTIVE THOUGHTS, YOU STRIVE HARD AND WIN IN ALL YOUR WORKS. IT LOOKS LIKE THAT IS HOW THE VEDIC SEERS APPROACHED LIFE. LOOK AT THE POSITIVE EPITHETS, ADJECTIVES IN JUST TWO HYMNS IN EIGHTH MANDALA OF THE RIG VEDA, THE OLDEST ANTHOLOGY IN THE WORLD.
TO AGNI/Fire
8-60
O Son of Strength
Child of Force/ Power
Best offeror
Cheerful
Sage
Herald
Bright God
Pure Lord
Most youthful
Eternal
Famed art thou
Preserver
Righteous
O refulgent kindled god
Most resplendent blaze
Conquering guards
Auspicious
Unassailable
Nearest Friend
O Helper
Bestow on us more glorious but righteous
O Excellent in Strength
Quicken our thoughts that find out wealth
Child of Strength
Agni ! Praise singer
Lord of Men
Burner of Raksasas
O thou Rich in Light
Drive hunger to distant pastures
(Griffith Translation; also available in Wikipedia)
Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR – 10 mts
***
WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN
WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY RANI SRINIVASAN
–25 MINUTES
Talk by Mr Chokkalingam, Teacher MDT college Higher Secondary School on Bharatiyar Class room and Webinar in connection with Bharati Memorial centenary
DURATION- Appr. 60 minutes
XXXX
INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING
WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.
WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.
TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;
6-30 PM INDIAN TIME.
DAYS- MONDAYS AND SUNDAYS
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.
XXXX
MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR
ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
FORMER BBC BROADCASTER,
SENIOR SUB EDITOR, DINAMANI,
FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014;
NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL
PLUS
FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;
MANAGER, LONDON TAMIL SANGAM,
HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;
HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &
CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)
BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com ) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.
***
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கவசங்களைப் பற்றி இதுவரை மூன்று கட்டுரைகளை எழுதினேன். இதற் கெல்லாம் மூல காரணமான புஸ்தகம் ராமசாமிப் புலவர் வெளியிட்ட பல கவசங்கள் அடங்கிய நூலாகும். இதற்குப் பின்னர் வந்த நூல்களில் பொழிப்புரை இல்லை, அர்த்தமும் இல்லை. ஆகையால் ராமசாமிப் புலவர் நூலை யாரேனும் முழுதுமாக வெளியிட வேண்டும். என்னிடமுள்ள நூல் தூள் தூளாகும் நிலையில் உள்ளது. காரணம் நாங்கள் எல்லோரும் ‘படித்துக்கிழித்தவர்கள்’ !!! அதாவது 1962 முதல் இந்த நூலை உபயோகித்து வருகிறோம்.
இதோ அவர் சொல்லும் அதிசயங்கள் ( என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயங்களை முன்னரே எழுதிவிட்டேன்) இதுவரை படிக்காதவர்கள் விநாயக கவசம் மற்றும் சகல கலா வல்லி மாலையையாவது படியுங்கள். குமர குருபரர் இயற்றிய சகல கலா வல்லி மாலையை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்.
ஒரு அன்பர் கேட்டதால் விநாயக கவசத்தையும் இன்று வெளியான இன்னொரு கட்டுரையில் கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக. ராமசாமிப் புலவருக்கு நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம். அவர் வாழ்க ; அவர் குலம் வாழ்க!!
கீழேயுள்ள இணைப்புகளைப் படிக்கவும்:-
tags – இராமசாமிப் புலவர் , கவச அற்புதங்கள், கவசங்கள் புஸ்தகம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகிலேயே திசைகளை தினமும் வணங்குபவர்கள் இந்துக்கள்தான். முஸ்லீம்கள் மெக்காவில் காபா இருக்கும் திசையை மட்டும் நோக்கி வணங்குவர். முஸ்லீம் நாடுகளின் விமான சர்வீஸில் பறந்தால் ஆசனத்துக்கு முன்னாலுள்ள COMPUTER கம்ப்யூட்டர் திரைகளில் மெக்கா இருக்கும் திசையை காட்டிக்கொண்டே வரும்.; அதை நோக்கித்தான் முஸ்லீம்கள் தொழ வேண்டும். ஆனால் இந்துக்களுக்கு அந்த கஷ்டமே இல்லை . எல்லா திசைகளிலும் கடவுள் இருக்கிறான் என்று வணங்குவார்கள் . குறிப்பாக பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தனத்தில் கிழக்கு தெற்கு, மேற்கு, வடக்கு என்று (வலம் வரும் திசை ) சம்ஸ்க்ருதத்தில் மந்திரம் சொல்லி வணங்குவர். இதை இந்துக்கள் சொல்லும் கவசங்களிலும் காணலாம். எல்லா திசைக்கும் உரிய கடவுளின் பெயரைச் சொல்லி அந்த திசையிலும் இறைவனின் பாதுகாப்பு இருக்கட்டும் என்று இறைவனை இறைஞ்சுவர்.
முன்னர் ஒரு கட்டுரையில் கந்த சஷ்டிக் கவசத்துக்கும் ரிக் வேதத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டோம். இன்று விநாயக கவசத்தையும் ரிக் வேதத்தையும் ஒப்பிடுவோம்.
ரிக் வேதம் RV.8-61 துதியை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு அளித்த ரிஷியின் பெயர் -பர்க்கப் பிரகாதன்
XXX
8-61-15
அனைத்தையும் அறியும் இந்திரனே! விருத்திராசுரனைக் கொன்றவனே !
எங்கள் முதல், கடைசி, நடு புதல்வர்களைக் காப்பாயாக. அவன் முன் புறத்திலும் பின்புறத்திலும் காப்பானாகுக .
XXX
8-61-16
மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் , கிழக்கிலிருந்தும் , ஒவ்வொரு திசையிலிருந்தும் காப்பானாகுக .வானிலிருந்து வரும் ஆபத்திலிருந்து காக்கவும்; எங்களை ஆயுதங்களில் இருந்து காப்பாற்றவும் (இங்கு ஆயுதம் என்பது அதேவி= மூதேவி)
XXX
8-61-17
இந்திரனே! நல்லோரின் தலைவனே ! தினமும் காக்க; இனி வரும் நாளை , அதற்குப் பின் வரும் நாளிலும் காக்க ;இரவும் பகலும் எல்லாத் திசைகளிலும் காக்கவும்
XXX
இதற்கு முந்தைய மந்திரங்களில் பகைவரை வெல்வோமாக; உணவைத் தருக (மந்திர எண் 4); எங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்க(5); நான் விரும்பும் எதையும் தருக (6); வள்ளலே ! பசுக்களையும் குதிரைகளையும் தருக (7); பாவம் அகல, கருமித் தனம் அகல, ஒளியின்மை /இருள் அகல நீ உதவியதாக எண்ணுகிறோம் (11); பயமின்மையை அருளுக(13) என்றும் வேண்டுகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 23-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
பாரதம் சித்தர் பூமி. இந்த புண்ணிய பூமியில் ஆங்காங்கே சித்தர்கள் இருந்து அருள் பாலித்து வந்திருக்கின்றனர்; வருகின்றனர். தமிழகத்திலும் ஏராளமான சித்தர்கள் அவதரித்துள்ளனர். சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். Perfect Being – கர்மவினை ஏதுமில்லாததோடு மாயையிலிருந்து விடுபட்டவர் என்று கூறலாம். ஏராளமான சித்தர்கள் அன்றும் இன்றும் என்றும் இருந்து அருள் பாலிப்பர் இந்த புண்ய பூமியில்!
16ஆம் நூற்றாண்டில் அவதரித்து அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் அருளாட்சி புரிந்த இரு பெரும் சித்தர்கள் குகை நமச்சிவாயர் மற்றும் குரு நமச்சிவாயர் ஆவர்.
இவர்கள் செய்த அற்புதங்கள் பல; அவை இறைவனின் கருணைத் திறத்தையும் எல்லையற்ற சித்திகள் பற்றியும் நமக்கு உணர்த்துபவை.
ஆந்திரபிரதேசத்தில் ஸ்ரீ சைலத்தில் தோன்றியவர் குகை நமச்சிவாயர்.
இவர் இறைவனது அருள்காட்டுதலின் பேரில் திருவண்ணாமலை நோக்கி விரைந்தார். அங்கேயே ஒரு குகையில் தங்கித் தவம் புரிந்தார். ஆகவே இவர் குகை நமச்சிவாயர் என்று அறியப்பட்டார். இவர் குகைக்கு வெளியே உள்ள ஆலமரத்தில் கயிறு கட்டி ஊஞ்சலாக்கி அதிலேயே தூங்குவார்.
ஒருநாள் ஆட்டிடையன் ஒருவன் இறந்து விட்ட தனது சினை ஆட்டை வருத்தத்துடன் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான். சில குறும்புக்காரர்கள் அவனை நோக்கி, ‘அங்கே ஒரு சாமியார் இருக்கிறார் பார், அவரிடம் இதைக் கொடுத்தால் அவர் பணம் கொடுப்பார் வாங்கிக் கொண்டு போ’ என்றனர். இடையனும் அதை நம்பி அங்கிருந்த குகை நமச்சிவாயரிடம் இறந்த சினை ஆட்டைக் கொடுத்து, “ஐயா, பணம் தருவீர்களாமே, தாருங்கள்” என்றான். அவனை நோக்கிச் சிரித்த குகை நமச்சிவாயர், “நாளை இங்கே வா” என்றார். மறு நாள் அந்த இடையன் அங்கே போன போது அவனது சினை ஆடு உயிர் பெற்றிருக்க, அதனருகே அது போட்ட குட்டியும் இருந்தது. அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை வணங்கி விட்டு தனது ஆடுகளை எடுத்துக் கொண்டு சென்றான். வழியில் முதல் நாள் அவனைப் பார்த்த குறும்புக்காரர்கள் அந்த ஆடுகளைப் பார்த்து திகைத்து நடந்தது என்ன என்று கேட்டனர். இடையனும் ஆடு உயிர் பெற்று குட்டி ஈந்ததை விளக்கினான். இதை அவர்கள் நம்ப மறுத்தனர்.
சாமியாரிடம் தங்கள் வேலையைக் காட்ட எண்ணிய அவர்கள் தலைமகனானப் பிறந்த தங்களில் ஒருவனை படுக்க வைத்து அவனை இறந்தவனைப் போல குகை நமச்சிவாயரிடம் கொண்டு சென்றனர். “சாமீ! இவன் இறந்து விட்டான் ஆட்டை உயிர்ப்பித்தது போல இவனது உயிரையும் மீட்டுத் தாருங்கள்” என்றனர். குகை நமச்சிவாயரோ, “இவன் இறந்தவன், இறந்தவன் தான்! இவனைத் தூக்கிக் கொண்டு போங்கள்” என்றார். உடனே அவர்கள் தங்கள் நண்பனை நோக்கி, “எழுந்திரு எழுந்திரு” என்றனர். அவன் எழுதிருக்கவில்லை, மாறாக இறந்திருந்தான். உடனே அந்த குறும்புக்காரகள் அனைவரும் சாமியார் தான் ஏதோ செய்து விட்டார் என்று கும்பலாகக் குழுமி அவரை அடிக்கச் சென்றனர்.
இதனால் வெகுண்ட குகை நமச்சிவாயர் ஊரே அழிந்து படும் என்பதைக் குறிக்க ‘அழியும்’ என்று தன் வார்த்தையைத் தொடங்கினார். உடனே அண்ணாமலை ஈசன் அசரீரியாக, “குகை நமச்சிவாய! நான் ஒருவன் இங்கு இருக்கிறேன்” என்றார். அவர் வாய் பொத்தப்பட்டது. உடனே குகை நமச்சிவாயர் அழியா அண்ணாமலை என்று தன் வார்த்தையை மாற்றிக் கூறவே ஊர் பிழைத்தது. இன்றும் கூட தெருவுக்கு ஒரு வீடு திருவண்ணாமலையில் முற்றுப் பெறாமல் இருக்கிறது!
ஒரு நாள் குகை ஒன்றிலிருந்து நமச்சிவாய நாமம் எழுந்ததைக் கேட்ட நமச்சிவாய மூர்த்தி என்பவர் அதனுள்ளே நுழைய குகை நமச்சிவாயர் நீ யார் என்று கேட்டார்.
நான் உங்கள் சிஷ்யனாக வந்துள்ளேன் என்றார் அவர். சரி, இரு என்றார் குகை நமச்சிவாயர்.
ஒரு நாள் குகை நமச்சிவாயர் படுத்துக் கொண்டிருக்க அவரது காலை அமுக்கிப் பணிவிடை செய்து கொண்டிருந்தார் சிஷ்யரான நமச்சிவாயர். திடீரென்று அவர் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டார் குகை நமச்சிவாயர். “ஸ்வாமி, திருவாரூர் தியாகராஜர் தேரில் பவனி வந்து கொண்டிருக்கிறார்.அவருக்கு முன் நடநனம் ஆடும் போது, ஒரு தேவதாசி மங்கை கால் வழுக்கி விழ, அதையே அபிநயமாக்கி ஆடினாள். அதனால் தான் சிரித்தேன்” என்றார் சிஷ்யரான நமச்சிவாயர். அப்படியா என்று கேட்டார் குகை நமச்சிவாயர். கண்களை மூடி தியானிக்கலானார். அது உண்மை என்பதைக் கண்டார்.
இன்னொரு நாள் நமச்சிவாயம் தன் உடலில் இருந்த துணியை பரபரப்பாகத் தேய்த்து பூவென்று ஊதலானார். இதைப் பார்த்த குகை நமச்சிவாயர் ஏன் இப்படி தேய்த்து ஊதுகிறாய் என்று கேட்டார்.
“ஐயனே! சிதம்பரம் நடராஜருக்கு விளக்குப் போடுபவன் விளக்கைப் போட்டான். விளக்கின் அருகில் இருந்த திரைச்சீலை நெருப்பு பட்டு பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. அதைத் தான் ஊதி அணைக்கிறேன்” என்றார் நமச்சிவாயர்.
தனது சிஷ்யனின் பெருமையை உணர்ந்து கொண்ட குகை நமச்சிவாயர் அவருக்கு குரு நமச்சிவாயர் என்ற பெயரைத் தந்து, ‘இனி நீ குரு நமச்சிவாயர் என்றே அழைக்கப்படுவாய்’ என்று கூறி அருளினார்.
ஒரு சமயம் இருவரும் சஞ்சீவி பர்வதத்திற்குச் சென்றனர். அங்கே தன் சீடரை சோறு சமைக்கச் சொல்லி விட்டு குகை நமச்சிவாயர் மூலிகைகள் சிலவற்றைத் தேடி மலைக்குள் சென்றார். சீடரும் சமைக்கத் தொடங்கினார். அப்போது சாதம் பொங்கி வர அதைக் கிளறி விடுவதற்கு கரண்டி ஒன்றும் இல்லாத நிலையில் அருகிலிருந்த மரக்குச்சி ஒன்றை எடுத்து சாதத்தைக் கிளற ஆரம்பித்தார். ஆனால் சாதமோ கறுப்பாக ஆகி விட்டது. உடனே குரு நமச்சிவாயர் சற்று பயந்தார். குருதேவர் வந்தால் தன்னைக் கோபிப்பாரோ என்று நினைத்த அவர் தானே அந்த சாதத்தைச் சாப்பிட்டு விட்டார். புதிதாக மீண்டும் சாதத்தைச் சமைக்கலானார். அப்போது மலைக்குள் சென்ற குகை நமச்சிவாயர் மீண்டும் வந்தார், தன் சிஷ்யனைக் காணாமல் திகைத்தார்.
குரு நமச்சிவாயம் இருந்த இடத்தில் அடுப்பிற்கு அருகே ஒரு அழகிய இளைஞன் இருப்பதை அவர் கண்டார். “தம்பி, இங்கே இருந்தவர் எங்கே?” என்று கேட்க, “ஐயனே, நான் தான் உங்கள் சிஷ்யன், என்னைத் தெரியவில்லையா?” என்று கேட்டார் குரு நமச்சிவாயர். நடந்தது என்ன என்பதை விளக்கினார் குரு நமச்சிவாயர். உடனே குகை நமச்சிவாயருக்கு விஷயம் என்ன என்று புரிந்து விட்டது. தான் தேடி வந்த இளமையை மீட்டுத் தரும் கருநொச்சியை சீடன் எடுத்து சாதத்தில் கிளறியதால் அவன் இளமை மீட்கப்பட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார். உடனே இருவரும் அதே குச்சி எங்குள்ளது எனத் தேடினர். ஆனால் அது கிடைக்கவில்லை. சீடனைச் சிறிது சாதத்தை உமிழச் சொல்லி அதை குகை நமச்சிவாயர் உண்ண அவரும் இளமையை மீட்டார் என்கிறது சித்தர் வரலாறு.