100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 3 (Post No.10,739)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,739

Date uploaded in London – –     13 MARCH   2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்ச் 2022 ஹெல்த்கேர் மாத இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 3 

ச.நாகராஜன்

(56 முதல் 85 முடிய)

56. எவரையும் புண்படுத்தாமல் இன்னொருவரைப் போல நடித்துக் காண்பித்தல், அவர் செய்யும் செய்கைகளைச் செய்து காண்பித்தல் மூளையின் பல பகுதிகளை இயக்குகிறது.  மூளை புதிதாக ஒரு நிலையை எதிர்கொள்ள ஒருவரைத் தயாராக்கவும் இது உதவுகிறது,

,57. மூளையில் உள்ள முக்கியமான ஹார்மோன்களை வெளி விடுவதற்கு உதவுவது செக்ஸ் உறவு தான். உணர்ச்சி பூர்வமான அறிவு, சமூக இணைப்பு இவற்றைத் தருவதுடன் மன அழுத்தத்தை நீக்க வல்லது செக்ஸ் உறவு. சிலருக்கு இது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. பாஸிடிவாக சிந்திக்கும் திறனையும் நல்குகிறது.

58. மூளைக்குத் தேவையான மெலடானின் (Melatonin) ஆழ்ந்த உறக்கத்தைத் தர வல்லது. துரதிர்ஷ்டவசமாக நீல ஒளியில் இருந்தால் தூக்கம் வரும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையல்ல. மாலை நேரத்தின் ஆரம்பத்தில் டி.வி. போன் ஆகியவற்றையும் இரவில் கம்ப்யூட்டரையும் உபயோகிக்காமல் இருந்தால் அது மூளைக்கு நல்லது. கணினியில் திரையை மூடி வைக்கும் பழக்கத்தை ஆரம்பித்தால், அது நலம்.

59. ஒமேகா 3 கொழுப்புச் சத்து மீன் உள்ளிட்ட மாமிசத்தில் உள்ளது. Docosahexaenoic acid, or DHA என்பது மூளைக்கும் கண்களின் ரெடினாவிற்கும் தேவையான ஒன்று. மூளையில் 60 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. இந்தக்  கொழுப்பில் 25 சதவிகிதம் DHA தான். 

60. தேங்காய் எண்ணெய் நியூரான்களைப் புதுப்பிக்க வல்லது. கெடோன் பாடீஸ் (Ketone Bodies or ketoacids) தேங்காய் எண்ணெயில் உள்ளது. கொழுப்பை ஆற்றலாக சக்தியாக மாற்ற வல்லது இதுவே. இது அபரிமிதமாக தேங்காய் எண்ணெயில் உள்ளது. வயிற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேங்காய் எண்ணெயை நமது உணவுப் பொருள்களுடன் கலந்து பயன்படுத்துவது நல்லது.

61. விடமின் D : விடமின் D உடலுக்கு – குறிப்பாக மூளை நரம்புகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. சூரிய வெளிச்சத்தில் முறையாக இருந்து சூரிய ஆற்றலைப் பெறலாம். சூரிய ஒளி தேவையான அளவுக்கு இந்த விடமினை நல்குகிறது.

62. உங்கள் குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் உடலுடன் ஒன்றி இயங்குபவை. வெளியில் வாங்கும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்தீர்களானால்  அருமையான ஆரோக்கியம் தரும் இந்த பாக்டீரியாக்கள் அழிந்து படும். ஆகவே இனிப்பையும் ப்ராசஸ்ட் ஃபுட் எனப்படும் வெளியில் வாங்கும் பதப்படுத்தப்படும் உணவு வகைகளையும் தவிருங்கள்.

63. விடமின் B12 குறைந்திருந்தால் நினைவாற்றல் குறையும். மனத்தின் ஆற்றல் குறையும். அதாவது மூளை ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். பால், முட்டை, மாமிசம் ஆகியவற்றில்  B 12 நிறையவே கிடைக்கும்.

64. மாமிசம், வெண்ணெய், சீஸ், க்ரீம், ஐஸ் க்ரீம் போன்றவை சாச்சுரேடட் கொழுப்பு வகைகளை அதிகம் கொண்டவை. அவை நினைவாற்றலைக் குறைத்து மறதியை அதிகப்படுத்தும். ஆகவே இவை தவிர்க்கப்பட வேண்டியவை.

65. க்ரீன் டீ : இதில் பாலிபெனால் எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது உங்கள் மூளை செல்கள் சேதமாவதிலிருந்து தடுப்பவை. ஆகவே இதை வழக்கமாக அருந்தி வரலாம். இது நினைவாற்றலையும் கூடவே எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கும் மன ஆற்றலையும் கூட்டும்.

66. பழ ரஸம்: க்ரேப் ஜூஸ் அருந்துவது நல்லது. சரியான அளவு – பெண்ணுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ், ஆணுக்கு இரண்டு கிளாஸ்! இரத்தத்தை மூளைக்குக் கொண்டு செல்லும் ரெஸ்வெரட்ரால் (Resveratrol) இதில் அதிகம் உள்ளது. அல்ஜெமிர் எனப்படும் மறதி நோயைத் தடுப்பது இது. புதிய திராட்சைப் பழம், கடலையும் கூட இதே சக்தியைத் தர வல்லவை. 

67. எப்போதும் உடலில் நீர் அருந்தி, உடலை தாகம் ஏற்படுத்தி வற்ற விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் டீ ஹைட்ரேட் நிலையை அடைந்தால் மூளைச் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும்.

68. கறி மசால் பொருள்கள் (Spices) : Cumin மற்றும் cilantro  ஆகிய கறி மசால் பொருள்கள் நினைவாற்றலைக் கூட்டுபவை என ஆய்வுகள் கூறுகின்றன. இதை உரிய அளவில் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

69. பச்சைக் கீரை வகைகள், பக்கவாதம், அல்ஜெமிர், பார்க்கின்ஸன் ஆகிய மூளையைப் பாதிக்கும் நோய்களிலிருந்து காக்கும். ஆகவே நல்ல புதிதாக, இலைகளுடன் உள்ள கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

70. பருப்பு வகைகள் மூளைக்கு ஊட்டச் சத்தை அளிப்பவை. பூசணி விதைகளில் உள்ள Zinc  நினைவாற்றலைக் கூட்டும். பருப்பு வகைகளில் உள்ள விடமின் E மூளைச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.

71. கார்போஹைட்ரேட் உணவு வகைகள் உடலுக்குச் சக்தி தருபவை. ஆகவே முழு கோதுமை ப்ரெட், ஓட் போன்றவற்றை உணவில் சேர்த்துக்  கொள்வது நல்லது.

72. காபி அருந்துவது குறுகிய கால நினைவாற்றலைக் (Short term memory) கூட்டும். 8 அவுன்ஸ் காபி அருந்துவது காப்பியில் உள்ள போதுமான காபினை (Coffeine) உங்களுக்கு நல்கும்.

73. ஆப்பிள் : நியூரோபாதுகாப்பை நல்குவது ஆப்பிளில் உள்ள ஒரு வகை வேதிப் பொருளான க்வெர்சிடின் (Querceting). மறதியைத் தவிர்ப்பது இது. இந்த வேதிப் பொருள் ஆப்பிளின் தோலில் தான் அதிகம் உள்ளது. ஆகவே தோலுடன் ஆப்பிளைச் சாப்பிட வேண்டும்.

74. சாக்லட் : நல்ல சாக்லட்டில் உள்ள ஃப்லவொனால் (Flavonols),  குறுகிய கால நினவாற்றலை அதிகரிக்கும்.

75. சூயிங் கம் : இதை விளையாட்டாக அனைவரும் வாயில் போட்டு மென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இது ஒரே நிலையைக் கொண்டிருக்கவும் (Mood stablity and alertness) எச்சரிக்கையுடன் இருக்கவும் உதவுகிறது. 

76. முட்டையும் சிக்கனும் : எது முதலில் தோன்றியது முட்டையா கோழியா என்ற ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம். இவை நினைவாற்றலைக் கூட்டுபவை. மூளைத் திறனை அதிகரிப்பவை.

77. கொழுப்புப் பொருள்கள் : அதிக அளவில் இல்லாமல் அளவோடு கொழுப்புப் பொருள்களை உண்பது நீண்ட கால நினவாற்றலைத் தரும். ஜீரணிக்கும் சமயம், கொழுப்பு பொருள்களிலிருந்து வெளிப்படும் ஹார்மோனுக்கு இந்த சக்தி உண்டு.

78. க்ளுகோஸ் : அளவோடு சாப்பிட்டால் எதுவும் அமிர்தமே. 25 கிராம் என்ற அளவில் உட்கொள்ளும் போது, இது எச்சரிக்கை தன்மையையும் நினைவாற்றலையும் ஊக்குவிக்கிறது.

79. பால் :  தினமும் பால் அருந்துபவர்கள் நினைவாற்றலையும், மூளைத்திறனையும் கொண்டிருப்பர் என்கிறது ஆய்வு. தினமும் ஒரு கிளாஸ் பாலை அருந்த வேண்டும்.

80. ஜங்க் உணவு வகைகள் : இவை உடலைப் பாழ்படுத்தும். மூளையை இருட்டடிப்பு செய்யும். உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டியவை ஜங்க் ஃபுட்.

81. மீன் எண்ணெய் : இது மூளை உறைப் பொருளாக உதவுகிறது. இதில் உள்ள EPA மற்றும் DHA என்பவை உணர்ச்சி மையத்தை வலிமைப் படுத்துகிறது.கவன சக்தியை அதிகரிக்கிறது.

82. மல்டி விடமின் : பல்வேறு வகையான விடமின் மாத்திரைகளைச் சாப்பிட பிடிக்கவில்லை எனில் எல்லாம் கலந்த மல்டி விடமின் மாத்திரைகளை டாக்டர் பரிந்துரையில் குறிப்பிட்டபடி அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.

83. சாப்பிடும் அளவைக் குறையுங்கள் : அதிகமாக உணவை எடுத்துக் கொள்வது மூளைக்கு இரத்த ஓட்டத்தைத் தடை செய்து குறைவாக்கி ஜீரண மண்டலத்திற்கு அதிக ரத்த ஓட்டத்தைத் தருகிறது. ஆகவே உணவின் அளவைக் குறைப்பதன் மூலம் மூளை ஆற்றலைக் கூட்ட வழி வகுத்தவர்கள் ஆவீர்கள். சோதனைச் சாலைகளில் குறைவாக கலோரிகள் உள்ள உணவை எலிகளுக்குச் சோதனை அடிப்படையில் தந்த போது இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

84. காலை உணவு : காலை உணவை ஏற்க மறுத்த சிறுவர்கள் அதைச் சாப்பிட ஆரம்பித்த பின்னர் கணிதத்தில் திறமை உள்ளவர்களாவதை ஆய்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன. ஒரு நாளில் மிக முக்கியமான உணவு காலை உணவே. ஒவ்வொரு நாளில் செயலாற்றலுக்கும் எரிபொருளாக இருந்து உங்களை இயக்க வைப்பது காலை உணவே தான்.

85. மது வேண்டாம். மூளையைப் பாழ்படுத்தி உடல் இயக்கத்தைத் தடுப்பது அதிக மது அருந்துவதே. இதன் தீய விளைவுகளைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையே இல்லை.

*** 

tags- 100 வழிகள,  மூளை

Leave a comment

Leave a comment