புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட மதிப்பு மிக்கது! (Post.10,748)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,748

Date uploaded in London – –    15 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதுவரை 38 மூலகங்கள்/ தனிமங்கள் (CHEMICAL ELEMENTS) பற்றிய சுவையான செய்திகளைக் கண்டோம். இதோ தங்கத்தையும் விட  மதிப்பு உடைய  பிளாட்டினம் (PLATINUM) பற்றிய சுவையான செய்திகள்:–

உடலுக்கு பிளாட்டினம் தேவை என்று எந்த ஆராய்ச்சியும் காட்டவில்லை ; ஆனால் உடலுக்கு வரும் நோயையத் தடுக்கும் கருவிகளில் பிளாட்டினத்தின் பஃங்கு இன்றியமையையாதது ; இது வெள்ளி தங்கம் போன்ற ஒரு உலோகம் (metal) . ஆனால் அவற்றை விட மதிப்பும் விலையும் அதிகம்

புற்றுநோய்ச் (CANCER) சிகிச்சையில் பிளாட்டினம்:-

பிளாட்டினம், வெள்ளி போல பளபளக்கும்,  ஜொலி ஜொலிக்கும் ஒரு உலோகம். உலகில் அபூர்வமலாகக் கிடைக்கும் உலோகம் ; அது மட்டும் இதன் மதிப்பு உயரக் காரணம் அன்று. இதை காற்றோ, அமிலமோ, வேறு ரசாயனங்களோ எளிதில் (INERT) அரிக்க  முடியாது. ஆகையால் இந்த அபூர்வ குணத்தை புற்று நோய் சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள். இந்த உலோகம் உள்ள மருந்து, புற்று நோய்  (Cancer) ‘செல்’லுக்குள் எளிதில் நுழையும்; ஆனால் அது பெருகுவதைத் தடுக்கும்  புற்று நோய்ச சிகிச்சையில் இதை பயன்படுத்துகிறார்கள்

புற்றுநோய் என்பது என்ன? செல்களின் தாறுமாறான வளர்ச்சி; அபரிமிதப் பெருக்கம். இவ்வாறு உடலில் ஒரு உறுப்பில் நிகழ்ந்தால் அது அந்த உறுப்பையே செயலற்றதாகச் செய்யும். அத்தோடு நில்லாமல், இதே செய்தியை உடலின் மற்ற செல்களுக்கும் அனுப்பிவிடும்; அப்போது அங்கும் புற்றுநோய் பரவும். இந்த நிலை ஏற்பட்டாமல் தடுக்க கீமோதெராபி (CHEMO THERAPY) எனப்படும் ரசாயன மருந்து சிகிச்சை கொடுக்கப்படும். அதில்தான் பிளாட்டினம் மிகவும் பயன்படுகிறது.

இதோ மேல் விவரம் ,

பிளாட்டினம் அடங்கிய ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவோருக்கு அலர்ஜி (Allergy) என்னும் ஒவ்வாமை ஏற்படலாம். இதன் பெயர் பிளாடினோசிஸ் (Platinosis). இது ஆஸ்த்மா, தடுமன் (cold) போன்ற அறிகுறிகளைக் காட்டும்.

1962-ம் ஆண்டு, பார்னெட் ரோசன்பர்க் (Barnett Rosenberg ) என்பவர் உயிரினங்களில் உள்ள ‘செல்’ கள் (CELLS)  மீது மின்காந்த மண்டலம் என்ன தாக்கத்தை ஏற்படும் என்று ஆராய்ந்து கொண்டு இருந்தார். மனிதர்கள் உள்பட எல்லா உயிரிங்களிலும் செல்கள் பிரிந்து, பிரிந்து பெருகிக்கொண்டே இருக்கும். அவர் ஆராய்ச்சியில் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார் ஈ கோலி (E. COLI = ESCHERICHIA  COLI) எனப்படும் பாக்டீரியாவில் மின்காந்த மண்டலம் (ELECTRO MAGNETIC FIELD)  பெரிய நூல் (filament) இழை போன்ற வளர்ச்சியைக் காட்டியது . செல்கள் வளர்ந்தாலும் அவை பிரியவில்லை . அதே விஷயத்தில் ரோசன்பர்க் 3 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சியை நீடித்தார்.அப்போது சில ரசாயனப் பொருட்களும் செல்கள் பிரிவதை, பெருகுவதைத் தடுக்கிறது என்று கண்டார். அதுதான் செல் பிரிவதைத் (CELL DIVISION)  தடுக்க உதவும் கீமோதெரபி உண்டாக உதவிய நிகழ்ச்சியாகும். 1978 முதல் இதை மனித நோயாளிகள் விஷயத்தில் பயன்படுத்த அனுமதி கிடைத்தது பின்னர் இதன் மூலம் பல்லாயிரக் கணக்காணோர் உயிர்பிழைத்தனர். குறிப்ப்பாக சிறுவர்கள் சிகிச்சையில் அதிக பலன் கிடைத்தது

பிளாட்டினம் மற்ற பொருட்களுடன் வேகமாக கிரியையில் ( INERT ) இறங்காது. இதனால் ரோசன்பர்க், பிளாட்டினத்தை ரசாயன சிகிச்சை முறையில் பயன்படுத்தினார். ஆனால் அதுவும் கூட குளோரைட் , அம்மோனியம் IONS அணுக்களுடன் சிறிது செயல்பாட்டில் இறங்கியது.இவற்றை எல்லாம் மனதிற்கொண்டு சிஸ்பிளாட்டின் CISPLATIN என்ற புற்றுநோய் சிகிச்சை மருந்து உருவாக்கப்பட்டது. அதன் விற்பனைப் பெயர் பிளாட்டினால் PLATINOL .

சிஸ் பிளாட்டின் போல வேறு சில பிளாட்டினம் சிகிச்சை மருந்துகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை புற்றுநோய் செல்களுக்குள் நுழைந்து அவற்றின் வளர்ச்சியை நிறுத்திவிடும்.. இது சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை செல்களிலும் பயன்படுகிறது . உடலுக்குள் செல்லும் எல்லா ரசாயனங்களும் வாந்தி எடுத்தல், சில உறுப்புகள் தற்காலிகமாக உணர்ச்சியை இழத்தல் முதலியவற்றை , அதாவது பக்க விளைவுகளை, உண்டாக்கத்தான் செய்கின்றன. அவற்றைத் தடுக்க வேறு சில மருந்துகளையும் சாப்பிடவேண்டிவரும். பெண்களின் ஜனன உறுப்புகளில் (Ovarian cancer) வரும் புற்றுநோயைத் தடுக்க கார்போ பிளாட்டின் (Carboplatin) உருவாக்கப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதனால் மேலும் மேலும் அதிக சக்தியுள்ள , குறைந்த பக்க விளைவுகள் உள்ள, மருந்துகள் கிடைக்கக் கூடும் . மொத்தத்தில் வாழ்நாளை நீடிக்கச் செய்து,  உயிர் இழப்புகளைத் தடுப்பதில் பிளாட்டினம் மருந்துகள் பேருதவி புரிந்து வருகின்றன.

கட்டுரையின் அடுத்த பகுதியில், பிளாட்டினத்தின் தொழில் முறை உபயோகங்களையும் பிளாட்டினம் நகை மீது பெண்களுக்குள்ள மோகத்தையும் காண்போம் .

–தொடரும் …………………

Tags-பிளாட்டினம், புற்றுநோய், மருந்து, சிஸ் பிளாட்டின்

Leave a comment

1 Comment

  1. rcraja2001's avatar

    மிக்க நன்றி சார். ஈ கோலி தகவல்கள் அறிந்திராத ஒன்று.இரண்டாவது பாகம் படிக்க ஆவலாக உள்ளது.

Leave a comment