Post No. 10,786
Date uploaded in London – – 27 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழர்களின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது பெண்கள் அணியும் BRAZZIERE பிரேசியர், ப்ரா எனப்படும் மார்பக கச்சு ஆகும் . இது பற்றி நான் 1993 முதல் 2006 வரையில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பில் காணலாம் இதை 2009-ம் ஆண்டில் “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்” என்ற புஸ்தகமாக நாகப்பா பப்ளிகேஷன்ஸ் மூலமாக (Nagappa Publications, Royapetttah, Chennai-14) வெளியிட்டேன் . தமிழர்களின் தழை உடை (REED DRESS of TAMILS) பற்றிய இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை 2012-ல் எனது பிளாக்குகளில் வெளியிட்டேன்.
2012ம் ஆண்டு கட்டுரையில் சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் தந்த 30 சொற்களையும் வெளியிட்டேன். தமிழ் அகராதியிலோ, தமிழ் நிகண்டுகளிலோ அதிகமாக ஸம்ஸ்க்ருதச் சொற்களைத்தான் காண்கிறோம். ஏனெனில் கால்டுவெல் போன்ற கயவர்கள் வரும்வரை தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்றே என்ற கருத்தே நிலவியது. காளிதாசன் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய ரகுவம்சம் நூல் முதல் நமது காலத்தில் பாரதியார் பாடிய பாடல் வரை அகஸ்தியர்- பாண்டியர்- தமிழ் மொழி தொடர்பு பேசப்படுகிறது. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சிவ பெருமான் உடுக்கை ஒலியில் பிறந்தது என்ற கருத்தை காஞ்சி புராணத்திலும் திருவிளையாடல் புராணத்திலும் காண்கிறோம். இதன் காரணமாக தமிழ் ஸம்ஸ்க்ருதச் சொற்களை எந்த வித வேறுபாடும் இன்றி நம் முன்னோர்கள் வெளியிட்டனர். இப்பொழுது சில சொற்களை ஆராய்வோம்.
(Following is from my 2012 article)
36 வகை ஆடைகள் (36 Types of Clothes)
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தமிழர்களின் 36 வகை உடைகளின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். அவையாவன: கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம்,
நுண் துகில், சுண்ணம், வடகம், பஞ்சு,
இரட்டு, பாடகம், கோங்கலர், கோபடம்,
சித்திரக் கம்மி, குருதி, கரியல், பேடகம்,
புரியட்டம், காசு, வேதங்கம், புங்கர் ,
காழகம், சில்லிகை, துரியம், பங்கம்,
நல்லியம், வண்டை, கவற்றுமடி, நூல்,
யாப்பு, தேவாங்கு, திருக்கு, பொன்னெழுத்து,
குச்சரி, தேவகிரி, காத்தூலம், கிறைஞ்சி,
செம்பொத்தி, பனிப்பொத்தி.
இவைகளில் சில கடாரம், காழகம் (மலேசியா, பர்மா), கூர்ஜரம் (குஜராத்) ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதியானது பெயரில் இருந்தே தெரிகிறது. அதே போல நமது துணிகள் எகிப்திய நாட்டின் இறந்தோர் உடலைச் (மம்மி) சுற்றவும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
எகிப்திய நெய்தல் தெய்வத்தின் பெயர் நெய்த்(Neith). இதுவே தமிழ்ச் சொல்!
தமிழர்கள் அணிந்த தழை உடை, Bra ப்ரா , சிந்து சமவெளி யோகி அணிந்துள்ள நீல நிற பூ ஆடை ஆகியனபற்றி 10 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டதால் மீண்டும் எழுதப் போவதில்லை . சில சொற்களை ஆராய்வோம்.
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்றே என்பதற்கு அவர்களின் சிந்தனைப் போக்கே நல்ல உதாரணம். அறம், பொருள், இன்பம், வீடு (சம்ஸ்க்ருத தர்ம, அர்த்த, காம, மோக்ஷ) என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் அதே வரிசையில் உள்ளன. அர்த்த என்ற சொல்லுக்கு பொருள் , செல்வம் Meaning and Wealth என்ற அர்த்தம் இருப்பதையும் சூத்திரம் என்ற சொல்லுக்கு புஸ்தகம், நூல் இழை (Book and Thread( என்ற அர்த்தம் இருப்பதையும் இரண்டு மொழி நூல்களிலும் காண்கிறோம். திருவள்ளுவர் தன் நூலையே அறம் பொருள் இன்பம் என்று பாடி அமைத்தார்.
ஆக நூல்= சூத்திரம்/புஸ்தகம் ; இழை என்ற ஒற்றுமையே நெசவு என்பதும் இருவர்க்கும் பொதுவானது என்பதைக் காட்டுகிறது.
நூல் இழையை வைத்து, நெய்து, துணியை உண்டாக்குவது போல புஸ்தகங்களை உண்டாக்கினர்.
மற்றோரு முக்கியச் சொல் “சித்திரம்” ; சங்க கால புலவர்களில் ஒருவர் பெயர் மஹா சித்திரன்= பெருஞ்சித்திரனார். இந்த சித்திரம் என்ற சொல் ரிக் வேதகாலம் முதல் புறநானூறு வரை வருகிறது. அர்ஜுனனை மணந்த சித்திரங்கதாவையும் அறிவோம்.
இன்றும் எம்ப்ராயடரி துணிகளில் உள்ளதை சித்திர வேலைப்பாடு என்றே சொல்கிறோம் . “உண்பது நாழி, உடுப்பது இரண்டே” என்ற கருத்தை 2300 ஆண்டு பழமையான ஓவியங்களிலும் சிற்பங்களிலும் பார்க்கிறோம்.
ஊசி , கஞ்சுகம் என்ற இரண்டு சொற்களை எடுத்துக் கொள்ளலாம். இவை இரண்டும் சங்க இலக்கியத்துக்கு முன்னரே வேத, இதிஹாசங்களில் இருக்கிறது; மஹாபாரத யுதிஷ்டிரரின் பட்டாபிஷேகத்திற்கு ரிஷி முனிவர்கள் கஞ்சுகம் அணிந்து வந்த செய்திகள் உள்ளன. பிற்காலத்தில் பாதுகாவலர், போலீசாரும் இப்படி அணிந்தனர். இதை (ஊசி) சங்க இலக்கியத்தில் படிக்கிறோம்
இதோ கஞ்சுகம், ஊசி பற்றிய சங்க காலக் குறிப்புகள் :–
ஒரு குறிப்பிட்ட வகை சட்டை, UNIFORM யூனிபார்ம்/சீருடை அணிந்தவர்களை கஞ்சுக மாக்கள் என்று அழைத்தனர். பெரிய அதிகாரி, தூதர், மெய்க்காப்பாளர், காவலர் ஆகியோருக்கு இந்த சீருடை இருந்தது தெரிகிறது .
கஞ்சுக மாக்கள் – சிலப்பதிகாரம் 26-166; 28-80
கஞ்சுக முதல்வர் – 26-138, 27-188
சங்க இலக்கியத்துக்குப் பின்னர் மட்டுமே இச்சொற்களைக் காண்கிறோம்.
ஊசி- பதிற்றுப்பத்து .42-3, ; 70-7;
அகம்- 48-9; 199-8;
புறம் – 82-4, 100-4, 229-9. (சூசி/ சம்ஸ்க்ருதம்)
நெய்தல் என்ற சொல் பல இடங்களில் வந்தாலும் வேறு வேறு பொருள்களில் வருவதால் பொருளை உணர்ந்து சொல்ல வேண்டும் ஆனால் ‘நெய்’ என்ற வினைச் சொல் பரிபாடல் 19- 80 ல் வருகிறது. நெய்கிறவன், நெசவு என்பனவும் அகராதியில் காணப்படுகிறது
MY OLD ARTICLES:–
Ancient Tamil Dress
https://tamilandvedas.com › 2012/09/08 › ancient-tamil…
8 Sept 2012 — I was looking for such dress in the sculptures and… … It shows the ancient Tamils wore one upper garment and one under garment like Dhoti.
costumes | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › costumes
10 Aug 2021 — Posts about costumes written by Tamil and Vedas. … Hindu dramas of ancient India followed their own rules in ornaments and dresses.
தமிழர்களின் தழை உடை-1 | Tamil and Vedas
https://tamilandvedas.com › தமிழ…
8 Sept 2012 — தமிழர்களின் தழை உடை (Reed Skirt) பற்றி சங்க இலக்கிய நூல்களில் நிறைய குறிப்புகள் …
தமிழர்களின் தழை உடை-2 | Tamil and Vedas
https://tamilandvedas.com › தமிழ…
8 Sept 2012 — தமிழர்களின் தழை உடை-2. Wearing saris: two different styles. ( Please read part 1first to maintain continuity: London swami ).
கச்சை | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › க…
8 Sept 2012 — Tagged with கச்சை … 36 வகை ஆடைகள் (36 Types of Clothes) … நீலக் கச்சை பூவார் ஆடை” (புறம்.
You’ve visited this page 2 times. Last visit: 27/03/22
தமிழர்களின் தழை உடை, செப்டம்பர் , 2012
ப்ரா கண்டுபிடித்தது தமிழனா 1993-2006,நாகப்பா பப்ளிகேஷன்ஸ், 2009
To be continued……………………………………
tags– தமிழர், தழை உடை, நீலக் கச்சை, பூவார் ஆடை,தமிழ்ப் பெண், ‘Bra’ ‘ப்ரா