வேத கணிதம் – ஒரு பார்வை! (Post No.11,241)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,241

Date uploaded in London – –    6 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேத கணிதம் – ஒரு பார்வை!

ச.நாகராஜன்

வேத கணிதம் என்றால் என்ன?

ஏன் உலகம் முழுவதும் அதை இன்று கொண்டாட ஆரம்பித்திருக்கிறது?

ஏன் உலகில் உள்ள பல சிறந்த பல்கலைக் கழகங்களும் அதை போதிக்க ஆரம்பித்துள்ளன?

ஏனெனில் அது கணிதத்தை வியக்கத்தக்க விதத்தில் சுலபமாகக் கற்பிக்கிறது.

மாதிரிக்காக அதன் மீது ஒரு பார்வையைச் செலுத்திப் பார்ப்போம்.

இணைய தளத்தில் பரவலாகப் பகிரப்படும் இதை இங்கு பார்க்கலாம்.

இதை அனைவருக்கும் பரப்பும்படி இந்த இணையதள வேண்டுகோளை ஏற்று அனைவருக்கும் பரப்பலாம்.

கணித வாய்பாடுகள் எத்தனை உங்களுக்குத் தெரியும்?

குறைந்த பட்சம் பத்தாம் வாய்பாடு வரை அனைவரும் அறிவர்.

மலையையே தாண்டி விட்ட முயற்சி தான் அது – அதை மனப்பாடம் செய்யப்பட்ட பாடு அந்த இளமைக் காலத்தில் ஒரு அரிய சாகஸ காரியம் தான்!

சரி, அதற்கு மேல் உள்ள வாய்பாடுகள் பற்றி இனி கவலைப்பட வேண்டாம்.

11 முதல் 99 முடிய – ஏன் அதற்கு மேலும் உள்ள வாய்பாடுகளைப் பற்றி இனி கவலை இல்லை.

இதோ இருக்கிறது வேத கணிதம் சுட்டிக் காட்டும் எளிய வழி முறை!

வேத கணிதத்தின் வழிப்படி இரண்டு இலக்க வாய்பாடு ஒன்றை அமைத்துப் பார்ப்போம்.

உதாரணத்திற்கு 87ஆம் வாய்பாடு!

08 0 7 (08+0) 87

—————————————

16 1 4 (16+1) 174

24 2 1 (24+2) 261

32 2 8 (32+2) 348

40 3 5 (40+3) 435

48 4 2 (48+4) 522

56 4 9 (56+4) 609

64 5 6 (64+5) 696

72 6 3 (72+6) 783

80 7 0 (80+7) 870

இதன் விளக்கம். முதலில் 8 x  1 = 8

அடுத்து 8 x  2 = 16 போடப்பட்டுள்ளது.

அடுத்து 8 x  3 =  24 போடப்படுள்ளது. இதே போல 8 x  10 = 80 முடிய வரிசையாக போடப்பட்டுள்ளதைக் காணலாம்.

அதே போல 7 x  1 = 7 அடுத்த படி போடப்பட்டுள்ளது.

அதன் கீழே வரிசையாக 7 x  2 = 14, 7 x  3 = 21 என இப்படி 14,21,28 என்று ஆரம்பித்து 70 வரை போடப்பட்டுள்ளது.

அடுத்து முதல் காலத்தில் உள்ள 16ஐயும் அடுத்த காலத்தில் முதலில் உள்ள எண் 1ஐயும் 17 போடப்பட்டிருக்கிறது. இப்போது ஏழாம் வாய்பாடில் உள்ள 14 என்ற எண்ணில் இரண்டாம் எண்ணாக உள்ள 4 ஐ 17இன் பக்கத்தில் போட்டால் வருவது 174.

அவ்வளவு தான், 2 x  87  = 174, 3 x  87  = 261, .. இப்படி போட்டு முடித்து விடலாம், ஒரு சில விநாடிகளில்!

இது தான் வேத கணிதம்.

மாதிரிக்காக இன்னும் இரண்டு வாய்பாடுகள். 38 மற்றும் 92க்கான வாய்பாடுகள்

38ஆம் வாய்பாடு இதோ!

38 ஆம் வாய்பாடு

03 0 8 (3+0) 38

06 1 6 (6+1) 76

09 2 4 (9+2) 114

12 3 2 (12+3) 152

15 4 0 (15+4) 190

18 4 8 (18+4) 228

21 5 6 (21+5) 266

24 6 4 (24+6) 304

27 7 2 (27+7) 342

30 8 0 (30+8) 380

33 8 8 (33+8) 418

36 9 6 (36+9) 456

அடுத்து 92ஆம் வாய்பாடு இதோ!

92 ஆம் வாய்பாடு

09 02 (09+0) 92

18 04 (18+0) 184

27 06 (27+0) 276

36 08 (36+0) 368

45 10 (45+1) 460

54 12 (54+1) 552

63 14 (63+1) 644

72 16 (72+1) 736

81 18 (81+1) 828

90 20 (90+2) 920

99 22 (99+2) 1012

108 24 (108+2) 1104

இப்படியாக 10 முதல் 99 முடிய வாய்பாடை நாமே உடனடியாக எழுதி விடலாம்!

இந்த வேத கணித வழியை அனைவருக்கும் பரப்புங்கள்.

நமது பாரத தேசத்தின் பிரமாதமான அறிவு அற்புதமான வியக்க வைக்கும் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது.

பண்டைய காலத்தில் குருகுலத்தில் குருமார்கள் சிஷ்யர்களுக்கு இதை இப்படித்தான் கற்பித்தார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி வந்தவுடன் அனைத்தும் காற்றிலே பறந்து விட்டது!

வேத கணிதம் என்றால் என்ன என்று கேட்டால் இதைச் சொல்லி விளக்குங்கள். இது ஒரு ஆரம்பம் தான். இன்னும் உச்ச பட்ச கால்குலஸ் வரை வேத கணிதம் காட்டும் வழி எளிய வழியே!

நன்றி : கொல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில வார இதழ் ட்ரூத் 8-7-2022 தொகுதி 90 இதழ் 13

*

இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புவோருக்கு கட்டுரை ஆங்கிலத்தில் அப்படியே தரப்படுகிறது.

Vedic Mathematics- A glimpse

Upto which number do you know your tables?

At least upto 10, awesome!

You have crossed the mountain!

Don’t worry for the rest of the tables!

From 11th to 99th, any table, very easy!

[I didn’t know this. Because this Vedic mathematics was not taught to us in school of this secular country!]

How to write Table of any two digit number?

For example Table of 87:

First write down table of 8 then write

down table of 7 beside it.

08 0 7 (08+0) 87

—————————————

16 1 4 (16+1) 174

24 2 1 (24+2) 261

32 2 8 (32+2) 348

40 3 5 (40+3) 435

48 4 2 (48+4) 522

56 4 9 (56+4) 609

64 5 6 (64+5) 696

72 6 3 (72+6) 783

80 7 0 (80+7) 870

Now table of 38

03 0 8 (3+0) 38

06 1 6 (6+1) 76

09 2 4 (9+2) 114

12 3 2 (12+3) 152

15 4 0 (15+4) 190

18 4 8 (18+4) 228

21 5 6 (21+5) 266

24 6 4 (24+6) 304

27 7 2 (27+7) 342

30 8 0 (30+8) 380

33 8 8 (33+8) 418

36 9 6 (36+9) 456

Now table of 92

09 02 (09+0) 92

18 04 (18+0) 184

27 06 (27+0) 276

36 08 (36+0) 368

45 10 (45+1) 460

54 12 (54+1) 552

63 14 (63+1) 644

72 16 (72+1) 736

81 18 (81+1) 828

90 20 (90+2) 920

99 22 (99+2) 1012

108 24 (108+2) 1104

This way one can make Tables from 10. to 99.

Share this intelligence booster.

The brilliance of our country is full of unthinkable treasures! In olden times in all

schools, Gurus (teachers) used to teach children maths in Vedic way until Britishers and other

anti-forces washed it away.

This is our Vedic Mathematics!!.

(from Social Media)

Thanks : TRUTH Kolkata weekly dated 8-7-2022 Volume 90 No 13

***

 புத்தக அறிமுகம் – 48

அறிவியல் துளிகள் – பாகம் – 8

பொருளடக்கம்

என்னுரை

183. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் கட்டிய விமானம்!

184. பூமியைக் கொஞ்சம் நகர்த்துங்க! – 1

185. பூமியைக் கொஞ்சம் நகர்த்துங்க! – 2

186. 2069 – சபாஷ், சரியான கொண்டாட்டம்!

187. அந்தரத்தில் நிற்பதை அனைவருமே கற்கலாம்!

188. ஸ்வாமி விவேகானந்தரைச் சந்தித்த விஞ்ஞானிகள்!

189. அறிவியல் துலக்கிய ஒரு அதிசய ‘காலப் பயணக்’ கொலை! – 1

190. அறிவியல் துலக்கிய ஒரு அதிசய ‘காலப் பயணக்’ கொலை! – 2

191. சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள்! -1

192. சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள்! – 2

193. சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள்! – 3

194. யானையை மார்பில் நிற்க வைத்த சாண்டோ ராமமூர்த்தி!

195. தமிழகத்தின் விச்சுளி வித்தை!

196. இரண்டு நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்தியவர்!

197. முகபாவம் மூலம் முன்னேறலாம்! -1

198. முகபாவம் மூலம் முன்னேறலாம்! -2

199.சூப்பர் மனிதர்கள் உருவாகப் போகும் எதிர்காலம்!

200. நோபல் பரிசு – ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

201. அதிசய மனிதர் ஸ்டீவ் ஜாப்ஸ்! – 1

202. அதிசய மனிதர் ஸ்டீவ் ஜாப்ஸ் ! – 2

203. அதிசய மனிதர் ஸ்டீவ் ஜாப்ஸ்! – 3

204. அன்றாட வாழ்வில் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி கொள்கை! – 1

205. அன்றாட வாழ்வில் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி கொள்கை! – 2

206. நோபல் வியாதி! – 1

207. நோபல் வியாதி! – 2

208. நோபல் வியாதி! – 3

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியல்பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்.

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் எட்டாம் பாகம் – 183 முதல் 208 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும்      29-8-2014 முதல் 20-2-2015 முடிய வாரா வாரம் வெளியானவை.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி

பங்களூர்                                                   ச.நாகராஜன்

11-3-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

MEDICINE WOMEN & MEDICINE MEN IN PRAKRIT GSS (Post No.11,240)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,240

Date uploaded in London – 5 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

GATHA SAPTA SATI (GSS) is an anthology of 700 verses in Prakrit language. It means 700 Gathas. Gathas mean verses in a particular style or genre. It is equal to Arya (aaryaa) metre in Sanskrit. In Prakrit they call the book Sattasai (The 700) or Gathakoso (gaathaakosa- A Treasury of Gathas)

The GSS is written in Maharashtri Prakrit language. Hala, a Sathavahana king, compiled 700 important verses during his time. It includes 44 verses composed by him and 260 poets anterior to Hala including seven women poets. It is erotic in nature and reflects the sentiment of Love. We find many Tamil words like Amma, Akka and Attai (Mother, Elder sister and aunty) in the collection. But Tamil Sangam poems rarely talk about immoral women in families. Only courtesans are referred to in Sangam poems. In the GSS we find immoral characters in the families. But GSS verses touch many areas which the Tamil poems don’t deal with.

I have collected some GSS Prakrit verses which show the importance of village medicine men and women.

In the villages lived physicians of both sex -women and men. We hear about a few diseases as well. Friends and relatives enquired about the health of others. Though it is not a book on medicines like that of Charaka or Susruta, we can at least get a glimpse of village life and the health concerns of ordinary people.

xxx

“Whom shall I tell that the ploughman’s son does not know the least that the daughter of the house holder may meet with a calamity in this wretched village where no physician is available?” 6-100

Prakrit verse is given below in Sanskrit :-

Mandam api na jaanaathi halika -nandanah iha his dagdha graame

Grha pati suthaa ipadhyate avaidhyake  kasya saasmah (kathayaamah)

-anonymous

It shows that it is really very hard to live in villages without physicians; there were such villages in some parts.

Xxx

Here we see a physician who was the paramour of a housewife

“Under the pretext that the girl had been bitten by a scorpion, she was led in the presence of her husband to the house of her paramour-physician having been held by the hands of her skilful confidantes while she was swinging round the pair of her hands.3-37 (Poet Mallasena)

Prakrit verse is given below in Sanskrit:

Pati puratah eva neeyate vrschika dashtaa iti jaaravaidhya grham

Nipuna sake kara dhruthaa buja yuga laandolinee bhaalaa

3-37 (Poet Mallasena)

xxx

Simile of disease untreated by a physician

“Separation from you is very much unbearable (to me) like a disease untreated by a physician, like one’s residence in the midst of kinsmen without  possession of wealth, and like one observing the opulence of  one’s enemy – 4-63

Prakrit verse is given below in Sanskrit:

Vyaadhihi iva vaidhya-rahitah dhana-rahitah sva jana Madhya vaasah iva

Ripu kruddhi darsanam iva dussahaneeyah tava viyogah

4-63 (Poet Vaamadeva)

Xxx

Enquirer of welfare

Sukha prcchaka and sukha prcchikaa show that men and women enquiring about the health of friends and relatives.

Even today when friends and relatives meet one another after a gap in time ask Are all of you well? Is every one in the family hale and healthy?

Here are two verses:

“O fever! Benefactor (as you are), having brought back from a distance (our dear) one, so difficult to meet with, who enquires after our welfare, you will not be held guilty evn if you take away my life”.1-50

Sukha prcchakam janam durlabam api duuraath asmaakam aanayan

Upakaaraka jwarm jeevam api nayan na  krtaaparaadhah asi

1-50 (Poet Swargavarmanah)

Xxx

“O you favoured one enquiring about our welfare, fragrant with perfumes! There is no need of anxiety on anybody’s part to know whether my dysenteric fever is high or low. Do not touch one affected by smell (of fever)”

Graama jwarah me mandah athawaa na mandah janasya kaa chintaa

Sukha prcchaka subaga Sugandha- gandha maa gandhiaam sprsa –

1-50 (Poet Kaala)

Only from the above two verses we hear about kind of diseases.

Xxx

Use of white bandage on sores or wounds is spoken about in 5-58

We have references to deaf and dumb patients in 7-95 and  7-96

People used bitter medicines (4-17 and life restoring drugs (4-36)

Here are those two verses from fourth century (sataka)

“The ploughman quaffs in such a manner the naturally pungent medicine cooled by the fragrant wind blown from the lotus mouth of the lady who enquired about well being, that remains no residue of it.4-17  (Poet Trilochana)

Sukha prcchikaayaah halikah mukha pankaja surabi pava nirvapitam

Tathaa pibhathi prakrti kadukam api aushadham yathaa na nitishtati

4-17 (Poet Trilochana)

Xxx

“The mother in law , having left aside any other work , protects the life of daughter in law, as if she were a life restoring medicine for her son, when she ( the daughter in law) is about to lose her life(literally when her life breath is approaching her throat for departure),  at the sight of new clouds”.4-36 (Poet Vihvala)

Sanjeevanaushadhim iva sutasya rakshati  ananya vyaapaaraa

Svasnuuh navabra darsana kandaagatha jeevitaam snushaam

4-36 (Poet Vihvala)

—subham–

tags- GSS, Gatha Saptasati, Sattasai, Hala, Medicine, men, women

ஹிந்து ராஷ்டிரத்தின் தலைநகரம் வாரணாசி! (Post No.11,239)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,239

Date uploaded in London – –    5 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்து ராஷ்டிரத்தின் தலைநகரம் வாரணாசி!

ச.நாகராஜன்

2022 ஆகஸ்ட் 13ஆம் தேதியிட்ட TNN செய்தி அறிக்கை இது:

உத்தர பிரதேசம் : ஹிந்து ராஷ்டிரம் டிராஃப்ட் காசியை தேசத்தின் தலைநகரமாக முன் வைக்கிறது.

பிரதானமான 30 அருளாளர்களும் அறிஞர்களும் ஹிந்து ராஷ்டிரத்தின் முதல் வரைவு அரசியல் சட்டத்தைத் தயாரித்துள்ளனர். ப்ரயாக் ராஜில்  பிப்ரவரியில் நடந்த தர்ம சம்ஸத்தில் இது முதன் முதலாக முன் வைக்கப்பட்டது.

32 பக்கமுள்ள இந்த வரைவுத் திட்டம் 2023இல் சங்கம் நகரில் நடக்கவுள்ள மகா மேளாவில் வைக்கப்படும். கல்வி, தற்காப்பு, சட்டம் ஒழுங்கு, ஓட்டுப் போடும் அமைப்பு முறை, அரசின் தலைமைக்கு உள்ள உரிமைகள் உள்ளிட்டவற்றை இந்த வரைவு வழங்குகிறது. இந்த அரசியல் சட்டத்தின் படி நியூ டெல்லிக்குப் பதிலாக தேசீய தலை நகரமாக வாரணாசி இருக்கும்.

இது தவிர காசியில் பார்லிமெண்ட் ஆஃப் ரெலிஜன்ஸ் அமைக்கப்படும். வரைவு, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒரு குடிமகனுக்குரிய,  ஓட்டுப் போடுவதைத் தவிர உள்ள இதர அனைத்து உரிமைகளையும் அனுபவிப்பர். இது தவிர ஒவ்வொரு குடிமகனுக்கும் ராணுவ பயிற்சி கட்டாயமாக வழங்கப்படும். விவசாயத்திற்கு வரி விதிக்கப்பட மாட்டாது.

வரைவைத் தயாரித்த கமிட்டியின் போஷகர்கள் ஸ்வாமி ஆனந்த ஸ்வரூப், சாம்பவி பீடாதீஸ்வர் மற்றும் சங்கராசார்ய பரிஷத்தின் தலைவர்.

இதில் காமேஸ்வர் உபாத்யாய, தலைவர், சுப்ரீம் கோர்ட்டின் சீனியர் அட்வகேட் பி.என்.ரெட்டி, தற்காப்பு நிபுணர் ஆனந்த் வர்தன், சனாதன தர்ம அறிஞர் சந்த்ரமணி மிஸ்ரா, டாக்டர் வித்யாசாகர் உள்ளிட்டோரும் அங்கம் வகிக்கின்றனர்.

அரசியல் சட்டத்தின் முகப்புப் பக்கம் அகண்ட பாரதத்தின் வரைபடத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட அனைத்து நாடுகளையும் காண்பிப்பதற்கான ஒரு முயற்சி இந்த படத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணையும். இந்தப் பக்கமானது சில கோவில்களின் உச்சியில் பறக்கும் காவிக் கொடியையும் காண்பிக்கிறது. உள்ளே சாம்பவி மாதாவின் படம் உள்ளது. இதர பக்கங்களில் அரசியல் சட்டம், மற்றும் மாதா துர்கா, இராமர், கிருஷ்ணர் உள்ளிட்டபல தெய்வங்களின் படங்கள், கௌதம புத்தர், குரு கோவிந்த சிங், ஆதி சங்கரர், சாணக்யர், வீர் சவர்கார், ராணி லக்ஷ்மிபாய், ப்ரித்வி ராஜ் சௌஹான், ஸ்வாமி விவேகானந்தார் போன்ற இந்தியாவின் பெரும் ஆளுமைகளைச் சித்தரிக்கிறது.

ஹிந்து ராஷ்டிரத்தின் அரசியல் சட்டம் 750 பக்கங்கள் கொண்டிருக்கும். அதன் அமைப்பு இப்போது விரிவாக விவாதிக்கப்படும். இந்த விவாதமானது மதம் பற்றிய அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்கள் ஆகியோருடன் நடக்கும்.

“அரசியல் சட்டத்தின் ஒரு பாதி – 300 பக்கங்கள் – 2023இல் ப்ரயாக்ராஜில் நடக்கும் மகா மேளாவில் வெளியிடப்படும். இதற்கென தர்ம சம்ஸத் ஒன்று நடக்கும்” – இவ்வாறு டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்காக வெள்ளியன்று வாரணாசியிலிருந்து போன் மூலமாக ஸ்வாமி ஆனந்த் ஸ்வரூப் கூறினார்.

அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி ஸ்வரூப் கூறியதாவது : ஒரு தனி அமைப்பின் மூலம் ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் சமண மதத்தினர் தங்கள் ஓட்டுரிமையைப் பெறுவர். தேசத்தில் ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் வசதியும் பாதுகாப்பும் வாழவும் உரிமை உண்டு. 16  வயது முடிந்தவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு. தேர்தலில் போட்டியிட 25 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்லிமெண்ட் ஆஃப் ரெலிஜின்ஸ்குக்கு 543 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். பிரிட்டிஷ் காலத்தில் இருந்த விதிகளும் கட்டுப்பாடுகளையும் இது நீக்கும். வர்ண அமைப்பின் படி அனைத்தும் நடக்கும்.

நன்றி : கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ்

ட்ரூத் – தொகுதி 90, இதழ் 20 , 26-8-2022 தேதியிட்ட இதழ்

 **

ஆங்கிலத்தில் உள்ள இதன் மூலம் கீழே தரப்பட்டுள்ளது.

TNN reports on Aug. 13, 2022 from Prayagraj, under the caption, “Uttar Pradesh: ‘Hindu Rashtra’ draft proposes Kashi as national capital”, as follows: 

A group of 30 eminent seers and scholars has prepared the first draft of the constitution of the Hindu Rashtra, which was first proposed in February at the Dharma Sansad held in Prayagraj. The 32- page draft would be presented at the next Dharma Sansad to be held at Magh Mela–2023 in the Sangam city. The draft mentions in detail provisions in the field of education, defence, law and order, system of voting, rights of the head of state, etc. As per the constitution,Varanasi will replace New Delhi as the country’s capital

Besides, there is a proposal to build a ‘Parliament of Religions’ in Kashi (Varanasi). It also proposes that Muslims and Christians will enjoy all the rights of a common citizen, barring the right to vote. Besides, every citizen would be given compulsory military training and agriculture would be made completely tax free. 

The patron of the drafting committee is Swami Anand Swaroop, Shambhavi Peethadheeshwar and president of the Shankaracharya ParishadIt also consists of Kameshwar Upadhyay, chairman, senior advocate of Supreme Court BN Reddy, defence expert Anand Vardhan, Sanatan Dharma scholar Chandramani Mishra and Dr. Vidya Sagar, etc. 

The cover page of the constitution carries the map of the proposed ‘Akhand Bharat’. Through the map, an attempt has been made to show that the countries, which have been separated from India will be merged with it in the future. The page also shows a saffron flag waving atop some temples. Inside is the picture of Shambhavi Mata while the pages carry, besides text, pictures of deities and great personalities of India, including Maa Durga, Lord Ram, Lord Krishna, Gautam Buddha, Guru Gobind Singh, Adi Shankaracharya, Chanakya, Veer Savarkar, Rani Laxmibai, Prithviraj Chauhan, Swami Vivekananda, etc. “The constitution of the Hindu Rashtra will be of 750 pages and its format will be discussed extensively now. Discussions will be held with religious scholars and experts from different fields. Half of the constitution (around 300 pages) will be released at the Magh Mela 2023 to be held in Prayagraj for which Dharam Sansad will be held,” Swami Anand Swarup told TOI over phone from Varanasi on Friday. 

Talking of salient features of the constitution, Swaroop said: “There will be an executive system wherein Hindus, Sikhs, Buddhists and Jains will get the right to exercise their franchise. People of every caste will have the facility and security to live in the nation. In this, the right to vote will be given after completing the age of 16 years, while the age of contesting elections has been fixed at 25 years. Altogether 543 members will be elected for the Parliament of Religions. It will abolish the rules and regulations of the British period and everything will be conductedon the basis of the Varna System.” 

 Source Kolkata Weekly Truth -Issue dated 26-8-2022 (Vol 90 No 20)

Tags- Hindu Rashtra, Varanasi, ஹிந்து ராஷ்டிரம், காசி, வாரணாசி

புத்தக அறிமுகம் – 47

அறிவியல் துளிகள் – பாகம் – 7

பொருளடக்கம்

என்னுரை

157. மறக்கத் தெரிந்த மனமே வாழ்க! – 1

158. மறக்கத் தெரிந்த மனமே வாழ்க! -2

159. செத்துப் பிழைத்த சீனாவின் ‘யூடு’!

160. இரட்டையர் பற்றிய ஆராய்ச்சி!

161. மயக்கும் தங்கமும் வியக்கும் மனிதரும்! – 1

162. மயக்கும் தங்கமும் வியக்கும் மனிதரும்! – 2

163. இயற்கையில் கணித இரகசியம்! – 1

164. இயற்கையில் கணித இரகசியம்! – 2

165. இயற்கையில் கணித இரகசியம்! – 3

166. இடது கை செயலாற்றல் தவறல்ல!

167. மின்னல் வேகக் கணித முறையைக் கண்டறிந்த மேதை! – 1

168. மின்னல் வேகக் கணித முறையைக் கண்டறிந்த மேதை! – 2

169. நவீன தொழில்நுட்பத்தின் அபார கட்டிடக் கலை சாதனைகள்! – 1

170 நவீன தொழில்நுட்பத்தின் அபார கட்டிடக் கலை சாதனைகள்! – 2

171. நவீன தொழில்நுட்பத்தின் அபார கட்டிடக் கலை சாதனைகள்! – 3

172. மனிதர்களைக் கண்டு வெட்கப்பட்ட ஒரே விஞ்ஞானி!

173. வெற்றிக்கான கருத்துக்களை உருவாக்குவது எப்படி? – 1

174. வெற்றிக்கான கருத்துக்களை உருவாக்குவது எப்படி? – 2

175. வெற்றிக்கான கருத்துக்களை உருவாக்குவது எப்படி? – 3

176. விண்ணில் தொலைந்த விண்வெளி வீர்ர்கள்!

177. சந்தோஷம் அடைய எளிய வழிகள்! – 1

178. சந்தோஷம் அடைய எளிய வழிகள்! – 2

179. விண்வெளி வீராங்கனையின் இரகசியங்கள்!

180. மிருக உலக அதிசயங்கள்! – 1

181. மிருக உலக அதிசயங்கள்! – 2

182. அமெரிக்காவில் அயல்கிரகவாசி வாழ்ந்தாரா?

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியல் வகிக்கும் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.

பணி, தகவல் தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான துறைகளில் அறிவியல் இல்லாமல் ஒன்றும் சிறப்பாக நடக்காது.

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்.

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசிரியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பேராதரவு என்னை பிரமிக்க வைத்தது. 4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக

வெற்றி நடைபோடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் ஏழாம் பாகம் – 157 முதல் 182 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இதன் முதல் பாகத்திற்கு திரு கே.ஜி. நாராயணன் அவர்கள் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தார். எல்லா பாகங்களுக்கும் பொருத்தமாக அமைந்துள்ள அணிந்துரை அது.

முதல் பாகத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதை இங்கு வழங்குகிறேன்.

“இந்த அறிவியல் துளிகளுக்கு இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும் எனது சிறந்த நண்பருமான திரு கே.ஜி. நாராயணன் அணிந்துரை அளித்துள்ளது எனது நற்பேறே! எனது இனிய நண்பரும் விஞ்ஞானியுமான திரு தேசிகன் மூலம் அறிமுகமான அவர் டிஆர் டி ஓ என அழைக்கப்படும் Defene R&D Organisation (DRDO) இல் பல்லாண்டுகள் பணியாற்றியவர். இயக்குநராக இருந்து வழி காட்டியவர். நமது பாரத தேசத்தின் பாதுகாப்பிற்கான முக்கிய சாதனங்கள் உருவாக வழி காட்டியவர்.

விமான இயலில் குறிப்பிடத் தகுந்த துறையான வான் பயண மின்னணுவியலில் (Avionics) போர் விமானத்தின் கட்டுப்பாடு சாதனத் துறையில் தேஜஸ் (Tejas) என்ற இந்திய இலகு ரக போர் விமானத்தின் (Indian Light Combat aircraft) பறத்தல் கட்டுப்பாடுகள் (flight control) மற்றும் பறத்தல் ஒப்புச்செயலாக்கத்தில் (flight simulation) அவரது சாதனை குறிப்பிடத் தகுந்தது.

இந்திய விமானப் படையின் முன்னணிப் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழிக் கலங்களுக்கான (front line fighters of India Air Force and Unmanned Air Vehicles) பறத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் ஒப்புச் செயலாக்கத்திலும் அவரது பணி மகத்தானது.

பெரிய விஞ்ஞானி என்றாலும் கூட இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அதற்கும் நேரம் ஒதுக்குபவர். பழகுவதற்கு எளிமையானவர். அறிவியல் துறையில் இளைஞர்கள் முன்னேறுவ்தை வெகுவாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருப்பவர். கிராமப்புறங்களில் அறிவியல் கல்வியை ஊக்குவித்து அதனைப் பரப்பும் அகஸ்தியா இண்டர்நேஷனல் பவுண்டேஷனில் ஆலோசகராக இருந்து அறிவியல் வளர்ச்சி முன்னேற்றத்தில் இன்றும் அவர் ஈடுபட்டிருப்பது ஒன்றே அவரது அறிவியலைப் பரப்புவதி அவருக்குள்ள ஆர்வத்தை எடுத்துக் காட்டச் சிறந்த சான்றாகும்.

அவரை அணுகி அணிந்துரை நல்க வேண்டியபோது மிகவும் மனமுவந்து அற்புதமான உரையை நல்கியுள்ளார். அவருக்கு எனது உளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.”

இப்படிப்பட்ட உயரிய, ஆகப் பெரும் விஞ்ஞானி தந்த அணிந்துரையில் ஒரு பகுதியை இங்கு வழங்குகிறேன்.

“அறிவியல் முன்னேற்றங்களால் மனித வாழ்க்கை மிகவும் – அளவிட முடியாத முறையில் – மாற்றப் பட்டிருக்கிறது. பொறியியல் துறையிலும் மருத்துவத் துறையிலும் வியக்கம் தரும் பெரும் சாதனைகள் மனிதனின் அன்றாட வாழ்வை மிக ஆழமான முறையில் மாற்றியிருக்கின்றன. அதே சமயத்தில் பிரபஞ்சம் எப்படி உருவாகியது போன்ற அன்றாட வாழ்விலிருந்து வெகு தூரத்தில் உள்ள கேள்விகளுக்கும் சில சின்ன சின்ன விடைகள் கிடைத்திருக்கின்றன. ஐந்தாயிரம் ஆண்டுகளாக அறிந்து கொண்ட பொருள்களைவிட பல மடங்குகள் அதிகமாக கடந்த முன்னூறு ஆண்டுகளில் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த மகத்தான முன்னேற்றங்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்து கொள்வது நாம் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத தேவை ஆகி விட்டது

திரு நாகராஜன் அவர்களின் அறிவியல் துளிகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தலையாயதாகத் திகழ்கிறது

நூற்றுக்கணக்கான அறிவியல் துளிகளை அனைவரும் அறியக்கூடுமாறு அன்றாட பழக்கத் தமிழில் பகர்ந்து கொண்டிருக்கிறார். தமிழருக்கும் தமிழுக்கும் நாகராஜன் செய்திருக்கும் பாராட்டுக்குரிய பெரும் சேவை இது.

மஹா விஞ்ஞானி நியூட்டன் சொல்கிறார்:

“நான் மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறேன் என்று தெரியாது. ஆனால் எனக்கு நான் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறு பையன் போல் தான் தோன்றுகிறேன். பல கோடிக்கணக்கான விந்தைகள் மூழ்கியிருக்கும் பரந்த கடலுக்கு எதிரில் மணலில் கிடக்கும் சில சிப்பிகளையும் வண்ணக் கற்களையும் கண்டு வியப்பு அடைந்து கொண்டிருக்கிறேன்” அதே கருத்தை “கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு” என்று ஔவையார் சொன்னார்கள். அறிவியல் துளிகளும் அது போன்ற மற்ற முயற்சிகளும் எல்லோர்க்கும் கை மண் அளவாவது அறிவியல் அளிக்கின்றன. நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர் திரு நாகராஜன்.

திரு. கே.ஜி.நாராயணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

இந்த புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Media வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் காட்டும் வழியில் முன்னேறி பாரதத்தை உலகின் வல்லரசுகளில் முதன்மை அரசாக ஆக்கிக் காட்டுவோம். அதற்காக அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்.

நன்றி.

பங்களூர்                                             ச.நாகராஜன்

9-3-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

500 ஆண்டு வரலாறு கூறும் அற்புத ருத்ரதாமன் கல்வெட்டு! (Post No.11,238)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,238

Date uploaded in London – 4 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

குஜராத்திலுள்ள கிர்னார் மலை மிகவும் சிறப்புடைய இடம். மெளரியர் , குப்தர்,சக வம்ச அரசர்கள் என பல வம்ச அரசர்களின் கல்வெட்டுகள் பாறைகள் தோறும் செதுக்கப்பட்ட பெருமை உடையது. அங்கேயுள்ள ருத்ரதாமன் (RUDRADAMAN INSCRIPTION) என்னும் சக வம்ச அரசனின் கல்வெட்டு சம்ஸ்க்ருத மொழியில் உள்ள சிறப்புடைத்து. ஏனெனில் பொது ஆண்டு (கி.பி) 150 தேதியுடைய இந்தக் கல்வெட்டு ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள நீண்ட கல்வெட்டு ஆகும். இதில் 500ஆண்டு வரலாறு கிடைக்கிறது. அத்தோடு மேலும் சில ரகசியங்களை வெளிப்படுத்துகிறது.அதாவது அதுவரை சம்ஸ்க்ருத மொழியில் உள்ள விஷயங்கள் ஓலைச் சுவடிகளிலும் , மரப்பட்டைகளிலும் மட்டும் எழுதப்பட்டன. ருத்ரதாமன் முதல் தடவையாக அதைக் கல்வெட்டில் வடித்தான். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்குக் கோடியிலுள்ள குஜராத்தில் சம்ஸ்க்ருத மொழி எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தது என்பதையும் இது காட்டும். இது பழந் தமிழ்க் கல்வெட்டுகளைப் போல பிராமி லிபியில் /எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஜூனாகட் என்னும் குஜராத் மாநில நகருக்கு அருகிலுள்ள கிர்னார்(GIRNAR INSCRIPTION)  மலை இந்துக்கள், பெளத்தர்கள் , சமணர்கள் ஆகிய மூன்று மதத்தினருக்கும் புனிதமான கோவில்களை உடையது .  மன்னர் அசோகன், சக வம்ச அரசன் ருத்ரதாமன், குப்த வம்ச அரசன் ஸ்கந்த குப்தன் ஆகியோரின் கல்வெட்டுகள் இங்கே செதுக்கப்பட்டுள்ளன. இது ஒரு அற்புதம். சுமார் 800 ஆண்டுக்காலம் ஆண்ட மூன்று வம்ஸங்களும் ஏன் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தன என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. உலகில் வேறு எங்கும் இப்படி ஒரு இடம் இருக்குமா என்பது சந்தேகமே.

ருத்ரதாமன் கல்வெட்டு அழகிய சம்ஸ்க்ருத உரைநடையில் அமைந்துள்ளது.

பாசனத்துக்கும் குடிநீருக்கும் பயன்பட்ட ஸுதர்சன (SUDARSANA LAKE) என்ற ஏரியின் பராமரிப்பு பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. அந்தக் காலத்தில் மக்களுடைய தண்ணீர் தேவை பற்றி மன்னர்கள் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தனர் என்பதும், ஏரி உடைப்பை அடைத்த திறமையான என்ஜினீயர்கள் பற்றியும் இக்கல்வெட்டு பேசுகிறது. மெளரிய  சந்திரகுப்தன் காலத்தில் (கி.மு .321-297) அவருடைய மாகாண கவர்னர் வைஷ்யர் புஷ்ய குப்தாவினால் இந்த ஏரி உருவாக்கப்பட்டது.. பின்னர் மன்னரின் பேரனான அசோக சக்ரவர்த்தி காலத்தில் யவனர் துஷாபிவினால்  மேலும் செப்பனிடப்பட்டது . ஆயினும் ருத்ரதாமன் காலத்தில் வீசிய கடும் புயல்

மழையில் ஏரி உடைந்து சேதமானது. அதைச் செப்பனிடும் விஷயத்தை விளக்கமாக விளம்பும் கல்வெட்டு இது.

இந்தக் கல்வெட்டை ஆராய்வோர் மேலும் பல அற்புத உண்மைகளைக் கண்டுள்ளனர். இது 500 ஆண்டு கால வரலாற்றைக் கூறுவதால் இந்துக்கள் எந்த அளவுக்குத் துல்லியமாக வரலாற்றுக் குறிப்புகளை நினைவு வைத்திருந்தனர் என்பது தெரிகிறது. அதுமட்டுமல்ல ருத்ராதமனின் புகழ்பாடும் பகுதி (பிரசஸ்தி) அவன் காவியம் செய்வதில் வல்லவன், போர்க்களம் தவிர வேறு எங்கும் உயிர்வதை செய்யாதவன், மக்கள் அனைவரும் அவனை நேசித்தனர், அவன் மகாராஷ்டிரம் வரை ஆண்டவன் என்றும் கூறுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள இந்தியாயவைக் காட்டும் இடம் இது,  ஜூனாகட் (JUNAGADH)  நகரின் பழைய பெயரை கிரிநாகர என்றும் கிர்னார் மலையின் பழைய பெயர் ஊர்ஜயத் என்றும் சொல்கிறது கல்வெட்டு.

கல்வெட்டு சொல்லும் செய்தி: புயல் மழை  வெள்ளத்தில் சுதர்சன ஏரி இருந்த இடம் தெரியாமல் போகவே மக்கள் சாகுபடி பற்றியும் விளைச்சல் பற்றியும் கவலைகொண்டனர். ருத்ரதாமன் பலரை அனுப்பியும் ஏரி உடைப்பை அடைக்க முடியவில்லை.  . குலைப என்பவனின் மகனான பஹ்லவன் சுவிசகனை செளராஷ்டிர பிரதேசத்தின் கவர்னராக ருத்ரதாமன் நியமித்தான்; இறுதியில் அந்தப் பஹ்லவன் முயற்சியால் சுதர்சன ஏரி அடைக்கப்பட்டது

இருபது நீண்ட வரிகளில் செதுக்கப்பட்டுள்ள இந்த அதிசயக் கல்வெட்டு நமக்குக் காட்டும் உண்மைகள் என்ன?

1.இந்துக்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்று சொல்லும் மேலை நாட்டினரின் தலையில் குட்டுவைக்கும் சாசனம் இது. ஏனெனில் 500 ஆண்டுக் காலத்தில் ஒரு ஏரிக்கு மட்டும் நிகழ்ந்த வரலாற்றை இயம்பும் ரிக்கார்ட் (RECORD) இது.

2.மேலும் 2000 ஆண்டுக்கு முன்னர் ருத்ராதமன் ஆண்ட பகுதிகளைச் செல்லுகையில் அவன் தென்னாட்டை ஆண்ட சதகர்ணியைத் தோற்கடித்த விஷயத்தையும் சொல்கிறது.

3.அதுமட்டுமல்லாமல் இந்துக்களின் பொறியியல் திறமைக்கும் சான்று பகர்கிறது. புராணத்தில் இந்துக்களின் என்ஜினீயரிங் (ENGINEERING FEATS) சாதனைகள் பற்றி நாம் படித்தாலும் கல்வெட்டு முதலியனதான் வரலாற்றுச் சான்றுகளாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

பகீரதன் என்ற மாமன்னன் கங்கை நதியைப் புதிய வழியில் திருப்பிவிட்டு பாசனத்துக்கு உதவியதை நாம் அறிவோம். அதை பார்த்து அகஸ்தியர், காவிரி நதியை, கேரளத்தில் பாய்ந்து கடலில் வீணாவத்தைத் தடுக்க, தமிழ்நாட்டுக்குள் திருப்பிவிட்டதையும், விந்திய மலை வழியாக சாலை அமைத்ததையும், தமிழ் மன்னர்களை வியட்நாம் வரை அழைத்துச் சென்றதையும் நாம் அறிவோம் (இதை புராண பாஷையில் அகஸ்தியர் விந்தியமலைய கர்வ பங்கம் செய்தார் என்றும் அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் எனும் சொல்லுவர்). இதை எல்லாம் அரைவேக்காடுகள் புராணக்கதைகள் என்று ஒதுக்கித் தள்ளும். அத்தகையோரின்  வாயை அடைக்கும் ஆற்புதக் கல்வெட்டு கிர்னார் மலை ருத்ரதாமனின் கல்வெட்டு. இந்தியாவின் மேற்குப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழி இவ்வளவு வளர்ச்சி கண்டதையும் எண்ணி வியக்கலாம்..

—SUBHAM—

TAGS- ருத்ரதாமன், கல்வெட்டு., சம்ஸ்க்ருத, ஸுதர்சன ஏரி, சுதர்சன, கிர்னார் மலை, ஜூனாகட்,

எஸ்.நாகராஜன் ஆகஸ்ட் 2022 கட்டுரை இண்டெக்ஸ் (Post No.11,237)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,237

Date uploaded in London – –    4 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

SNR Article Index : AUGUST 2022

AUGUST  2022

  1-8-2022   11156  விண்வெளி நிலையத்தில் வீரர்களின் வாழ்வில்..!

              புத்தக அறிமுகம் 15 நோயில்லா வாழ்வு பெற சில

              ரகசியங்கள்!

  2-8-2022   11159   இரு நாடுகளில் கொட்டும் ஒரு நீர்வீழ்ச்சி – கண்ணக்

              கவரும் நயாகரா (மாலைமலர் 19-7-22)

              புத்தக அறிமுகம் 16 மகான்களின் சரிதம் பாகம் 1

  3-8-2022 11161   SNR Article Index JULY 2022 

                                   புத்தக அறிமுகம் 17 மகான்களின் சரிதம் பாகம் 2

  4-8-2022   11163  களப்பாளன் பாடிய அந்தாதி! – தொண்டை மண்டல   

              சதகம் பாடல் 30!

              புத்தக அறிமுகம் 18 புராணத் துளிகள் பாகம் 2

 5-8-2022 11166   செப்பு மொழி இருபத்தி ஐந்து

                                     புத்தக அறிமுகம் 19 புராணத் துளிகள் பாகம் 3        

 6-8-2022 11170.    திதி, வார நாட்கள் ஒரு விளக்கம்!

               புத்தக அறிமுகம் 20 சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் 

               பாகம் 5

 7-8-2022 11173       திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் – கொங்கு மண்டல

               சதகம் பாடல் 13   – புத்தக அறிமுகம் 21 சுற்றுப்புறச்

               சூழல் சிந்தனைகள்  – பாகம் 6

 8-8-2022 11175.     உங்களின் பாராசூட்டை பாக் செய்வது யார்?

               புத்தக அறிமுகம் 22 – வெற்றிக்குத் திருக்குறள்!

   9-8-2022 11178   செப்பு மொழி இருபத்தியேழு

               புத்தக அறிமுகம் 23 – ரிஷிகள் பூமி!

10-8-2022 11181.     துணிவே எனது தோழன்

                                புத்தக அறிமுகம் 24 – Psychic Wonders and Pathway to Success  

11-8-2022 11184.     அறிவியல் அறிஞர் வாழ்வில் – 1

               புத்தக அறிமுகம் 25 – கீதை வழி!

12-8-2022    11187       அறிவியல் அறிஞர் வாழ்வில் – 2 -பால் 

                எரொடோஸின்  தனி அகராதி –   புத்தக அறிமுகம் 26 

                 ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில்  

                  சுவையான சம்பவங்கள்!

13-8-2022   11189        இனிக்கும் இத்தாலி மாலைமலர் 4-8-22 கட்டுரை

                புத்தக அறிமுகம் 27 – வைணவ அமுதத் துளிகள்

14-8-2022 11192      விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய

                திரைப்படங்கள் – 1 – – புத்தக அறிமுகம் 28 – 

                மாக்ஸ்முல்லர் மர்மம்

15-8-2022 11195     தினமணி திரு வெ.சந்தானம் 75 (1911-1998)

15-8-2022 11196     விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய

                திரைப்படங்கள் – 2 – – புத்தக அறிமுகம் 29 – 

                முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்

16-8-2022 11198          விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய

                திரைப்படங்கள் – 3 – புத்தக  30 ஜென் காட்டும்

                வாழ்க்கை நெறி

17-8-2022  11201.        விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய

                திரைப்படங்கள் – 4 – புத்தக அறிமுகம் 31 Saints,   

                Wonderful Temples, Scriptures and God’s Ways!

18-8-2022  11203.         விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய

                திரைப்படங்கள் – 5 – புத்தக அறிமுகம் 32 – புத்தரின்

                போதனைகளும் ஜென் குட்டிக் கதைகளும்

19-8-2022 11205   விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய

                திரைப்படங்கள் – 6  புத்தக அறிமுகம் 34 மாறி வரும் 

                பெண்கள் உலகம்

20-8-2022 11208   விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய

                திரைப்படங்கள் – 7  புத்தக அறிமுகம் 35 வெற்றிக்

                கலை உத்திகள்!

21-8-2022   11210     விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய

                திரைப்படங்கள் – 8  – புத்தக அறிமுகம் 33 –

                திரைப்படங்களில் ராமர் பாடல்கள்

22-8-2022   11212       மூளை ஆற்றலைக் கூட்ட 10 திரைப்படங்களைப்

                 பாருங்கள்!  புத்தக அறிமுகம் 36 கொங்கு மண்டல

                 சித்தர்கள், புலவர்கள், தலங்கள் – பாகம் 1

23-8-2022 11215      அதிசய ஒற்றுமைகள் – 1 புத்தக அறிமுகம் 37 கொங்கு

               மண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள் – பாகம் 2

24-8-2022 11217       அதிசய ஒற்றுமைகள் – 2 புத்தக அறிமுகம் 38

               மஹாபாரத மர்மம் பாகம் 1

25-8-2022 11220        அதிசய ஒற்றுமைகள் – 3 புத்தக அறிமுகம் 39

               மஹாபாரத மர்மம் பாகம் 2

29-8-2022 11223        (மூட) நம்பிக்கைகள்?! – புத்தக அறிமுகம் 40 -மஹாகவி

                பாரதியார் பற்றி அறிய உதவும் நூல்களும்  

                கட்டுரைகளும்

30-8-2022 11225          செப்பு மொழி பத்தொன்பது! –   புத்தக அறிமுகம் 41 :  

                ஜோதிடம் பார்க்கும் முன் தெரிந்து கொள்ளுங்கள்!

31-8-2022 11228      சதகங்கள் கூறும் நோயில்லா நெறி – புத்தக அறிமுகம்

               42 : மஹாகவி பாரதியார் பற்றி அறிய உதவும்

               நூல்களும் கட்டுரைகளும்

***

புத்தக அறிமுகம் – 46

உலகின் ஒப்பற்ற நூல் யோக வாசிஷ்டம்!

பொருளடக்கம்

சமர்ப்பணம்

என்னுரை

1. உயர்வுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற ஒரு நூல்!

2. ஆன்ம ஞானம் பெற அதி சுலபமான அதிசய வழி!

3. உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம்! – 1

4. உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம்! – 2

5. உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம்! – 3

6. உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம்! – 4

7. உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! – 5

8. யோக வாசிஷ்டம் – 6 பிரகரணங்களும் 55 கதைகளும்!

9. வசிஷ்டர் தரும் காலத்தை வென்ற இரகசியம்!

10. யோக வாசிஷ்டத்தில் வரும் பகீரதன் கதை!

11. மனம் பற்றிய யோக வாசிஷ்ட கதை!

12. மாறுகின்ற மனம் பற்றிய இரகசியம்!

13. யோக வாசிஷ்டம் கூறும் வேதாளத்தின் கதை!

14. மனம் என்னும் மகோன்னத சக்தி பற்றிச் சொல்லும் லவணன் கதை!

15. மரணம் என்னும் மாயை! உலகத்திற்குள் உலகங்கள்!! அற்புதமான லீலா கதை!

16. சித்த ஜெயம் ஒன்றே மாயையிலிருந்து விடுபட வழி: காதியின் கதை!

17. மனமும் உலக அனுபவங்களும் – மலரும் அதன் மணமும் போல!

18. விதியா மதியா! மதியையே விதியாக்கு, வெல்வாய்!

19. அத்யாத்ம விசாரம் என்னும் அதி அற்புத ரகசியம்!

20. ஆத்மாவே உண்மையான பந்து!

21. மோக்ஷம் அடைவது எப்படி? வஸிஷ்டர் கூறிய விதஹவ்யன் கதை!

22. சித் பூஜையும் மூர்த்தி பூஜையும்: சிவபிரானின் அருளுரை!

23. கல்லுக்குள் இருக்கும் வடிவங்களை சிற்பியே அறிவார்!

24. யோக வாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய ரகசியங்கள்!

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

சமர்ப்பணம்

திரு வெ.சந்தானம்

(தோற்றம் 4-9-1911 மறைவு 15-8-1998)

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

ஆன்மீகத்தை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.

பத்திரிகை துறையில் ஒரு புது நெறியைக் காட்டியவர்.

1998 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, “கொடி ஏற்றியாச்சா?” என்று கேட்டு ‘ஆம்” என்ற பதிலைக் கேட்ட பின்னர் உயிர் துறந்த தேசபக்தர்.

எனது தந்தையார் தினமணி திரு வெ. சந்தானம் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.

ச. நாகராஜன்

என்னுரை

ஹிந்து மதத்தின் ஆணி வேராக அமைபவை வேதங்கள், இதிஹாஸங்கள், உபநிடதங்கள் மற்றும் சாஸ்திரங்கள்.

இவை விளக்கும் மர்மங்கள் கணக்கிலடங்கா.

இவற்றை முற்றிலுமாகப் படித்து உணர ஒரு ஆயுள் போதாது.

இவற்றின் சாரத்தை எங்கே படிக்கலாம்? இந்த சிக்கலான கேள்விக்கு சிறந்த விடையாக அமைவது யோக வாசிஷ்டம் என்ற நூல்!

வாழ்க்கையில் நாம் அறிய வேண்டிய அனைத்தின் சாரமும் இதில் உள்ளது; அத்துடன் இன்றைய நவீன அறிவியல் கூறும் உளம் சார்ந்த உண்மைகளும், அதீத உளவியல் பற்றிய வியத்தகு செய்திகளும் அன்றே இந்த நூலில் கூறப்பட்டிருப்பது நம்மை பிரமிக்க வைக்கும்.

விதியா, மதியா என்ற கேள்விக்கு இந்த நூல் தரும் விடை நம்மை வாழ்வியலில் முன்னேற வைக்கும்.

பல காலமாக ஆர்வத்துடன் இந்த நூலைப் பயின்று வருபவன் நான்.

ஆகவே இது பற்றிய கட்டுரைகளை ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் இதழிலும், www.tamilandvedas.com ப்ளாக்கிலும் எழுதி வந்தேன். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் லண்டன் திரு சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி.

இந்த நூலை அழகுற அமைத்து வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

கட்டுரைகளாக வெளி வந்த போது இவற்றைப் படித்து என்னை மேலும் எழுத ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி!

சான்பிரான்ஸிஸ்கோ.                              ச. நாகராஜன்

15-8-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

MADRID CITY TOUR – HELPFUL TIPS (Post No.11,236)

Picture of Snowy white Julia at Colombus Square

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,236

Date uploaded in London – 3 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Picture of Prado Art Museum

We were in Madrid in the last week of August 2022. Thank God there was no rain in Spain. The day we left Madrid, capital of Spain, it started raining. We stayed in Novotel Hotel in Central Madrid which was good and decent. They cleaned the room every day and changed the towels. The breakfast had a variety of food, but not much for strict vegetarians like me. Pancakes, croissant, and everything has egg. I took some oily rice and started eating it commenting ‘tasty, yummy’, but one of family members said it may be chicken broth and not oil. I left the plate and took another one. Vegetarians have less choice in western countries. They charge a huge amount for our breakfast; at least 15 pounds per head.

Another warning about so called vegetarian restaurants in Western countries. We went to a “Vegetarian” restaurant; as usual the waiter placed the Menu cards/booklets on our table. One of our family members quickly went through the book and got surprised to see the last page, where pictures/emblems of crab, fish, sea shells etc were shown. The person warned all of us before ordering. For them even chicken is vegetarian, leave alone the egg.

Vegan restaurants are worse than the so called Veggys. They serve leaves and bread and charge you too much. More over Vegan concept is Anti Hindu. Vedic Rishis/saints used only Madhuparka to honour the visitors. From Vedic days we have been using Milk and Honey. There was no Vegan concept in ancient India. It is for sick people who have intolerance to milk.

Let me come back to Madrid; Prado Museum in Madrid has valuable paintings of famous painters; but for a Londoner like me , it was not anything important. We have more famous paintings in London galleries. For children it was “boring”. So we skipped Prado museum. Someone told me the Archaeological museum has something to link India and Spain. Unfortunately, I was the only one in our team interested in it. It was “boring” for others; so we skipped it.

Like every European city, Madrid has City Coach Tours with running commentaries in various languages. It was a hop on and hop off bus. You can get down at any point and take another coach at an interval.  Spain is a place where you will see  NO ‘NO’ NO English boards or signs. So better learn a few Spanish words before going to Spain. Spanish fanatics!

There are two different tours, but the ticket is valid for both the tours. We could not board many coaches because we were in six in number with children and a Pram (buggy). So the drivers said ‘Next coach, next coach’. We got some places in the third coach. Third time lucky.

We covered bla, bla, bla, bla. Sorry I will say it in Spanish- Museo del Prado, Puerta de Alcala, Barrio de Salamanca, Plaza de Colon, Plaza de Cibeles, Gran Via 14, Gran Via 30, Gran Via 54, Plaza de Espana, Princesa Esqu. Alberto Aguilera, Plaza de Moncola, Teleferico, Templo de Debod, Puerta de San Vicente, Puente de Segovia, Paseo Pontonese- Madrid Rio, Puente de Toledo, Puerta de Toledo, Granvia des Franscisco,C/Atocha 116, Jardin Botanico, Museo del Prado (circle complete)

Did you understand anything? No, No, No

Neither did I.

We must start a charity to teach English to Spanish people. Even the leaflet they gave us on the coach only has these names. But if you google each name, you will get something in English.

We went to Chinese, Italian and Spanish restaurants. Each time we googled the things we wanted and showed the mobile phone or I pad screen to them. They understood it! Most importantly we googled No Fish, No egg, No meat; V R Vegetarians.

When I was in Lisbon, Capital of Portugal,  a few years ago, I went to Hare Krishna Restaurant, where you get pure veggy food. Madrid also has one Hare Krishna restaurant. But our tight schedule didn’t allow us to visit it; moreover, it was closed for two days every week. So please check before you go.

El Retiro Park

On the first day of visit to Madrid we visited El Retiro park with lot of statues, fountains and a big lake with rowing boats. One can walk leisurely for miles and miles and enjoy fresh air.

If one stays in Madrid for a few days the best way to go about is to buy Metro train tickets and visit each place by train. If one has a Metro map and important locations or land marks it will be easy.

We travelled by Metro trains for two days to visit Royal Palace and shopping centres. (I wrote about Royal Palace visit yesterday)

We did mini shopping near by our hotel. Novotel Hotel in central Madrid is near Retiro station.

xxx

Now to the point. What did we see during our coach tour?

One place was very visible with a huge snowy white statue.

Julia, Snowy White Statue in Columbus Square

Plaza de Colón (which is Spanish for Columbus – you can see him there, on top of his pillar) is an important junction in the centre of Madrid. This monument dates from 1892.

Julia, the serene, towering snowy-white head by Spanish sculptor Juame Plensa, at 12m tall dwarfing Columbus, is equally beautiful no matter where you view her from.

In front of Colón are the Gardens of Discovery where you will see, a statue of Admiral Blas de Lezo, scourge of the British Navy. He defeated the British Navy 300 years ago. He was known as the “half-man” as his wounds resulted in him losing an eye, an arm and a leg. He perceived his wounds and physical limitations as medals, refusing to wear an eye patch to hide his blind eye Spanish and not English is spoken in South America except Brazil, where Portuguese is spoken. Both these countries plundered the world like the English.

(I saw these statues only from the Coach and took pictures with my I Pad)_

Prado Museum

The Prado Museum is one of the most visited sites in the world, and is considered one of the greatest art museums in the world. The numerous works by Francisco Goya, the single most extensively represented artist, as well as by Hieronymus BoschEl GrecoPeter Paul RubensTitian, and Diego Velázquez, are some of the highlights of the collection. Velázquez and his keen eye and sensibility were also responsible for bringing much of the museum’s fine collection of Italian masters to Spain, now one of the largest outside Italy.

The collection currently comprises around 8,200 drawings, 7,600 paintings, 4,800 prints, and 1,000 sculptures, in addition to many other works of art and historic documents. As of 2012, the museum displayed about 1,300 works in the main buildings, while around 3,100 works were on temporary loan to various museums and official institutions. The remainder were in storage

(I saluted the museum through the window of my coach)

The Royal Botanic Garden in Madrid houses over 5,000 different types of flowers and plants, and is one of the capital’s most enjoyable green lungs next to the Prado Museum.

Xxx

Templo de Debod

This is an ancient temple of Egypt, dismantled and rebuilt in the centre of Madrid. When Aswan dam was built across the River Nile, many monuments were facing danger of going under the water. UNESCO saved them by appealing to several countries. And Egypt donated this temple to Spain in 1968.

Xxx

Puerta de Toledo

This triumphal archway, located between the districts of La Latina and Embajadores, was erected to commemorate the arrival of King Ferdinand VII ‘El Deseado’ in Madrid

Xxx

Puerta de Alcala

This is one of the most well-known monuments in Madrid. Built between 1769 and 1778 under the orders of King Carlos III, it was designed by Francisco Sabatini and erected as a triumphal arch to celebrate the arrival of the monarch at the capital.

Xxx

Plaza de Espana

Right in the centre of the square is the monument to Miguel de Cervantes, created at the same time as the square itself.

In front of the statue of Don Quixote and Sancho Panza, a pond of rectangular form is located that forms one of the best known views of the 

If there is no rain in Spain, your trip will shine without any pain.

Picture of Retiro Park

–subham—

Tags- Madrid Tour, Spanish, Vegan, Veggy, Novotel hotel, Prado Museum

டயபடீஸ் ஊட்டச் சத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது-2(Post.11235)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,235

Date uploaded in London – –    3 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டயபடீஸ் சம்பந்தமான 5 ஊட்டச் சத்து பற்றிய  சர்ச்சை கருத்துக்கள் முடிவுக்கு வந்து விட்டன!

பகுதி – 2

மூலம் : கிம்பர்லி பி. ஜுக்ஸ்டாட் Ph D (Kimberly B. Bjugstad PhD

தமிழில் : ச. நாகராஜன்

3. உணவு லேபிள்களில் உள்ள ‘நிகர கார்போ ஹைட்ரேட்’ (NET CARB) எனத் தரப்படும் எண்ணிக்கை அர்த்தமுள்ளதா?

1929ஆம் ஆண்டு ஆர்.டொ. லாரன்ஸ் மற்றும் ஆர் ஏ மக்கன்ஸி (RD Lawrence and RA McCance) ஆகிய இருவர் பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில் நிகர கார்போஹைட்ரேட் (NET CARB) என்ற வார்த்தையை புதிதாக உருவாக்கினர்.

1972இல் ராபர்ட் அட்கின்ஸன் எழுதிய ‘டாக்டர் அட்கின்ஸ் உணவுத் திட்ட புரட்சி (Robert Atkins book “Dr. Atkins’ Diet Revolution”) என்ற நூல் வெளியாகும் வரை இந்த வார்த்தை அகராதியில் வரும்படி அவ்வளவு பிரபலமாகவில்லை.

உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டில் பைபரும் இனிப்பு ஜீனி ஆல்கஹாலும் (fiber and sugar alcohols) உள்ள அளவு கழிக்கப்பட்டு நிகர கார்போ ஹைட்ரேட் என பெரும்பாலான லேபிள்களில் தரப்படுகிறது. ஆகவே கழிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட் அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இன்னும் அதிகம் சாப்பிடலாம் என்று ஒருவரை எண்ண வைக்கிறது.

நிபுணர் கூற்று : உணவு லேபிள்களில் ‘கார்போ ஹைட்ரேட்’ மற்றும் ‘நிகர கார்போஹைட்ரேட்’ என்று குறிப்பிடப்பட்டதைப் படிக்கும் போது இரண்டு பிரச்சினைகள் எழுகின்றன என்று நிபுணர் எவர்ட் உறுதியாகச் சொல்கிறார்.

முதலாவதாக எல்லா பைபர் உணவுகளும்  சமமானதில்லை. கரையும் தன்மை உடைய பைபரானது தருவது போல கரையும் தன்மை இல்லாத (insoluble) பைபரானது கார்போஹைட்ரேட்டைத் தருவதில்லை. ஊட்டச்சத்தைக் காட்டும் லேபிள்கள் பைபரில் எவ்வளவு கரையும் எவ்வளவு கரையாதது என்பதைச் சொல்வதில்லை.

அடுத்து, இனிப்பு ஆல்கஹால் சத்து (Sugar alcohols) இனிப்பிலிருந்து (Sugar) முற்றிலுமாக வேறுபட்டதில்லை. இது இரவு உணவுக்கு முன்னும் பின்னும் உள்ள குளுகோஸ் அளவுகளைப் பாதிக்கக் கூடும். (glucose before and after eating, respectively).

மேலும் வெவ்வேறு வகையான் இனிப்பு ஆல்கஹால் வெவ்வேறு கலோரிகளைக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக இனிப்பு இல்லாத பசையில் (Sugaless Gum) நிறைய இருக்கும் xylitol -இன் கலோரி அளவு  ஒரு கிராமுக்கு 2.6 ( 2.6 cal/gram ). அதே சமயம் இனிப்பு அற்ற சாக்லேட்டில் உள்ள malitol என்பது ஒரு கிராமுக்கு 2.1 கலோரி என்ற அளவை மட்டுமே கொண்டிருக்கும். (2.1 cal/gram)

இன்சுலின் டோஸ் தரப்படும் போது இனிப்பு ஆல்கஹாலையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர் எவர்ட் யோசனை கூறினார். இந்த லேபிள்களைப் படிக்கும் போது அவர் தரும் இன்னொரு உதவிக் குறிப்பு – இன்னும் அதிக பைபரை உண்ணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்பது தான். அதாவது உணவில் அதிகம் பைபர்; மற்றவை குறைவாக!

4.  கெடோஜெனிக் உணவுத் திட்டம் (ketogenic (KETO)) அதாவது குறைந்த கார்போஹைட்ரேட் உணவுத் திட்டம் பற்றி என்ன அறிய வேண்டும்?

குறைவான கார்போஹைட்ரேட் உணவுகளுக்கான பொதுவான விதி என்னவெனில் மொத்த கொழுப்பு சக்தியிலிருந்து 50% முதல் 80% வரை பெறுவது தான். மீதி கலோரிகள் புரோடினிலிருந்து பெறப்படும். கார்போஹைட்ரேட் குறைவாக பெறப்படும்.

கெடோஜெனிக் உணவுகள் தரும் விவரம் இது :- ஒரு நாளைக்கு 20 முதல் 50 கிராம் வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு கோப்பையில் உள்ள அரிசியை விடக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கெடோ உணவுகள் டயபடீஸ் உள்ளவர்களிடமும் இதர பொது மக்களிடமும் பிரபலமாக உள்ளது.

நிபுணர் கூற்று : நிபுணர் எவர்ட் மிகக் குறைவான கார்போஹைட்ரேட்/ கெடோ (VLCKD – Very low Carb/Keto diet) உணவுத்திட்டத்தால் என்ன நடக்கிறது என்பதை குழுமி இருந்தவர்களிடம்  விளக்கினார்.

முதல் 3 முதல் 6 மாதங்களுக்கும் டயபடீஸ் உள்ளவர்கள் எடை குறைந்து போவதை  க்ளைசெமியா குறைவதையும் அனுபவிப்பர். A1C அளவு கூடுவதைத் தெரிந்து கொள்வர். இன்சுலின் அளவு மற்றும் மருந்து அளவையும் அவர்கள் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் இவை நீடித்து இருக்காது.

5 முதல் 12 மாதங்களுக்குள் எல்லா நன்மைகளும் குறையும் 12 மாதங்களுக்குள் இப்படிப்பட்ட உணவுத்திட்டத்தால் நன்மை ஒன்றும் விளையாது.

ஒரு மருத்துவத் துறை நிபுணரின் மேற்பார்வையில், ஒரு குறுகிய காலத் திட்டமாக டயபடீஸ் உள்ள நிறைய பேர்கள் இந்த VLCKD  (Very low Carb/Keto diet) எனப்படும் குறைந்த கார்போஹைட்ரேட்/ கெடோ உணவுத் திட்டத்தைப் பின்பற்றலாம்.  அவரது இன்சுலின் தேவைகளையும் லிபிட் மாறுதல்களையும் (Changes in lipid panels), எலக்ட்ரோலைட் அளவு மாறுதல்களையும் நிபுணர் கவனித்துக் கொண்டே இருப்பார். அத்துடன் குடலில் உள்ள மைக்ரோஃபோரா கூட்டுச் சேர்க்கையையும் (micorflora composition in the gut) அவர் கவனிப்பார். (இதில் மாறுதல் இருப்பின் அது மலச்சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும்).

முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய ஒருவருக்கு அவசியம் நேர்ந்தது எனில் அவருக்கு எடை குறைப்பு செய்வது அவசியமாகலாம். அப்போது  இந்த VLCKD நல்ல ஒரு திட்டமாக அவருக்கு இருக்கும்.

மற்றவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. ஏனெனில் இதற்கான தகுந்த ஆதாரங்கள் இதுவரை இல்லை.

 5. செயற்கை இனிப்பூட்டிகள் (Artificial Sweeteners) உங்கள் ஆரோக்கியத்திற்குக் கேடு பயக்குமா?

இந்தக் கேள்விக்கு எளிதான விடை இல்லை. செயற்கை இனிப்பூட்டிகளை (Artificial Sweeteners) உணவில் இனம் காண்பது கடினம். இதில் இன்னும் சிக்கல் என்னவெனில் இவை தனியாகச் சாப்பிடப்படுவதில்லை. மற்ற உணவு வகைகளுடனும் பானங்களுடனும் கலக்கப்பட்ட நிலையில் சாப்பிடப்படுவதால் சிக்கல் ஏற்படுகிறது.

2017இல் கனடிய மெடிகல் அசோஸியேஷன் ஜர்னலில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வறிக்கை, இந்த செயற்கை இனிப்பூட்டிகள் தரும் நன்மைகள் பற்றி ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறது. மாறாக இவை அதிக கார்டியோ மெடபாலிக் அபாயத்தை ஏற்படுத்துவதோடு நாளடைவில் பாடி மாஸ் இண்டெக்ஸையும்  (Body Mass Index BMI) கூட்டுகிறது.

நிபுணர் கூற்று:  செயற்கை இனிப்பூட்டிகளைப் பற்றிய தெளிவான வழிகாட்டுதல் இல்லாத நிலையில் இவற்றிற்கு பதிலாக தண்ணீர், காபி அல்லது இனிப்புச் சேர்க்காத தேநீர் ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளலாம் என்று நிபுணர் எவர்ட் தனது அபிப்ராயத்தைக் கூறுகிறார்.

கடைசி கடைசியாக பெறப்படுவது இது தான் : டயபடீஸ் உள்ளவர்கள் தன்கள் அடைய வேண்டிய இலட்சிய இலக்கு என்ன என்பதை முதலில் வகுத்துக் கொள்ள வேண்டும். என்ன உணவுத் திட்டத்தை தான்  மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஒத்து வரும் ஒரு திட்டத்தை மேற்கொள்ளுங்கள். டயபடீஸ் நிலை மாறும் போது உங்கள் திட்டத்தையும் மாற்றுங்கள். திறந்த மனதுடன் டயபடீஸை அணுகி அதைத் தீர்க்கும் வழியைக் காணுங்கள்!

மூலம் : கிம்பர்லி பி. ஜுஸ்டாட் Ph D (Kimberly B. Bjugstad PhD)

நன்றி : Kimberly B. Bjugstad PhD

**

புத்தக அறிமுகம் – 45

ஸம்ஸ்கிருத சுபாஷிதம்  200! 

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. ஸம்ஸ்கிருதத்தின் உயர்வு; அதில் சுபாஷிதத்தின் பெருமை!

2. தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம்!

3. நிகழ்காலத்தில் வாழ்க!

4. சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர், மதிப்பு போடவே முடியாதவர் மூவர்…!

5. அன்னமும் வெள்ளை நிறம், கொக்கும் வெள்ளை நிறமே, இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

6. பதினெட்டு புராணங்களின் சாரம் இரண்டே வரிகளில்!

7. சந்தோஷம் அடைவது எப்படி?

8. என்னே விதியின் கொடுமை!

9. நுண்ணறிவு நான்கு வழிகளில் கிடைக்கிறது!

10. ஆன்ம முன்னேற்றத்திற்காக உலகையே தியாகம் செய்க!

11.நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்க! நாளை என்ன நடக்குமோ, யார் அறிவார்!

12. நாக்கே செல்வத்தைத் தரும் அல்லது சிறைக்கும் இட்டுச் செல்லும்!

13. எப்போதும் சந்தோஷமாக இல்லாத இருவர்; எப்போதும் ஸ்வர்க்க புகழை விட அதிகம் கொள்ளும் இருவர்!

14. நரகத்திற்குச் செல்பவன் யார்? ஸ்வர்க்கமும் போற்றுபவன் யார்?

15. காட்டிலே அனாதையாக கை விடப்பட்டாலும் விதி இருப்பின் அது குழந்தையைக் காக்கும்!

16. கோடி விஷயங்களை விட்டு விட்டு ஹரி பஜனைக்குச் செல்!

17. கிடைத்தற்கரிய ‘பஞ்ச ஜகாரம்’, நல்ல வாழ்க்கைக்கு வழி!

18. உயர்ந்தவர்களின் உள்ளம்!

19. எவனால் உலகம் ஜெயிக்கபடுகிறது?

20. தேவர்களே கவிஞர்களாகப் புவியில் இறங்குகின்றனர்!

21. உருவத்தைக் கண்டு எடை போடாதே!

22. நிலத்திற்கு அழகு விவசாயம்! பெண்ணுக்கு அழகு நல்ல கணவன்!!

23. வாழும் வழி காட்டும் சுபாஷிதம்!

24. பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு மகிழ்பவன் அரிதே தான்!

25.தோட்டத்தில் நுழைந்தாலும் கள்ளிச் செடியையே தான் தேடும் ஒட்டகம்!

26. எவன் உண்மையான சாது?

27. முயற்சியே வெற்றி தரும்!

28. ஒழுக்கமே எல்லா இடத்திலும் செல்வமாகும்!

29. நல்ல ஒரு நண்பனின் குணங்கள் யாவை?

30. சுபாஷிதங்களின் பெருமை!

31. பிரம்மாவினால் கூட ரகசியம் கேட்கப்பட மாட்டாது! எப்போது?!

32. ஒருவனுக்குப் பிடித்திருந்தால் அதுவே அவனுக்கு அழகு!

33. காக்கைகள் கூவும் போது குயில் ஓசை எடுபடுமா?

34. ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருக்கும் இருவர் யார்?

35. மலையின் உயரம், கடலின் ஆழம் ஆகிய இரண்டும் ஒரு புத்திசாலியிடம் உள்ளது!

36. பிறப்பினால் அடைவதல்ல உயர்நிலை! குணங்களினால் அடையப்படுவது அது!

37. யானையே சிங்கத்தின் பலத்தை அறிய முடியும்: ஒரு பலசாலியே இன்னொரு பலசாலியை அறிய முடியும்!

38. கல்வியறிவு பெறுவதைத் தடுக்கும் ஆறு தடைகள் யாவை?

39. ஈனர்களை ஒரு போதும் அண்டாதே!

40.குவித்த கரங்களில் இருக்கும் மலர்களின் வாசனை!

41. ஹரியோ, ஹரனோ யாரானாலும் நெற்றியில் எழுதியதை அழிக்க முடியாது!

42. கள் குடித்த குரங்கைத் தேள் கொட்ட, பேயும் பிடித்தால் அது போடும் ஆட்டம், அடடா!

43. சுபாஷித நூல்களின் பட்டியல்! – 1

44. சுபாஷித நூல்களின் பட்டியல்! – 2

45. முடிவுரை

சுபாஷித ஸ்லோகங்களின் முதல் குறிப்பு அகராதி

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

குமரி முதல் இமயம் வரை உள்ள பாரத தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஏராளமான கவிஞர்கள் இயற்றியுள்ள சுபாஷிதங்கள் லக்ஷக்கணக்கில் உள்ளன.

இவற்றைத் தொகுப்பதில் ஆர்வம் ஏற்பட்டு சுமார் 30000 சுபாஷிதங்களைத் தொகுத்தேன்.

சிறந்த சம்ஸ்கிருத சுபாஷிதங்களுக்கான தமிழ் அர்த்தம் கொண்ட நூல்கள் பெரிய அளவில் இல்லை.

இந்தக் குறையை நீக்க அவ்வப்பொழுது சுபாஷிதங்களின் அர்த்தத்தை தமிழில் சிறு கட்டுரைகளாக www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கில் எழுதி வந்தேன்.

இதை வெளியிட்டு ஊக்கம் தந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

சுபாஷிதங்களை சேகரித்து அச்சிட தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த லுட்விக் ஸ்டெர்ன்பாக் (Ludwik Sternbach – Hon Professor of Dharmasastra, College of France, Paris) அவர்களின் வாழ்க்கை ஆச்சரியகரமானது. அவரை இங்கு பணிவுடன் வணங்கி நினைவு கூர்கிறேன்.

அவருக்கு உறுதுணையாக இருந்து மஹாசுபாஷித சங்க்ரஹா என்ற எட்டு தொகுதிகள் அடங்கிய நூலை திரு எஸ். பாஸ்கரன் நாயர் அவர்கள் ஹோஷியார்பூர் விஸ்வேஸ்வரானந்த் வேதிக் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் சார்பாக வெளியிட்டுள்ளார். சுபாஷிதங்களை ஆங்கிலத்தில் திரு A.A.R உள்ளிட்ட அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர்.

இது உலகளாவிய விதத்தில் சுபாஷிதங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. இவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.

இது தவிர சிறு சிறு புத்தகங்களாக அவ்வப்பொழுது பல ஆண்டுகளாக ஆங்காங்கே சுபாஷிதங்கள் ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியாகி வந்துள்ளன.

குறிப்பிடத்தகுந்தவையாக அமைந்துள்ளவை கீழ்க்கண்ட நூல்கள்:

Gems of Speech – Manohar Jai (1998)

Subhasita Collection Anthology – N.V.Nayudu (1992)

Subhasita Shatakam – Saroja Bhate (1991)

Subhasitas – RSS வெளியீடு

யாயா யாயா யா யா யாயா (32 தடவை ) – கவிதை (Post.11,234)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,234

Date uploaded in London – 2 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் நிறைய விநோதக் கவிதைகள், விசித்திரக் கவிதைகள் இருக்கின்றன. இதோ மேலும் ஒரு கவிதை :

யா யா யா யா யா யா யா யாயா யா யா யா யா யா யா யா

யா யா யா யா யா யா யா யாயா யா யா யா யா யா யா யா

–வேதாந்த தேசிகர் எழுதிய பாதுகா சஹஸ்ரம், கவிதை எண் 936

இதில் ‘ய’ என்ற (உயிர்) மெய் எழுத்தும்  ‘ஆ’ என்ற உயிர் எழுத்தும் மட்டுமே உள்ளன.

ஸம்ஸ்க்ருத மொழியை நன்கு கற்றோர் இதை பின் வருமாறு பிரித்துப் பொருள் காண்பர்:

யா யா யா, ஆய, ஆயாய , அயாய, அயாய, அயாய, அயாய, ( 4 முறை), அயாயா, யாயாய, ஆயாயாய ,

ஆயாயா ,யா யா யா யா யா யா யா யா (8 முறை)

விஷ்ணுவின் பாதுகைகளை (காலணிகளை)ப்  போற்றும் துதி பாதுகா சஹஸ்ரம். இதில் ஆயிரம் ஸ்லோககங்கள் இருக்கின்றன.

பொருள் –

ஸ்ரீ ரெங்க நாதனின் பாதுகைகள் அவரது கால்களை அலங்கரிக்கின்றன. (அவை எப்படிப்பட்டவை என்றால் ) நல்ல, மங்களகரமான எல்லாவற்றை யும் அடைய எவை உதவுமோ, எவை ஞானத்தைத் தருமோ, எவை இறைவனை தன்னுடைமை ஆக்கிக்கொள்ளும் ஆசையை உண்டாக்குமோ ,எதிர்ப்புகள் அனைத்தையும் அகற்றுமோ, எவை இறைவனை அடைந்தனவோ, எவை உலகெங்கிலும் போக, வர உதவுமோ, இத்தகைய  பாதுகைகளே .

XXX

ஆகஸ்ட் 25ம் தேதி இரண்டு ஸ்லோகங்களை வெளியிட்டேன். அவைகளின் பொருளை இப்போது காண்போம் :-

ஒரே உயிர் மெய்யெழுத்தைப் (Consonant) பயன்படுத்தும் கவிதைக்கு எடுத்துக் காட்டாக தண்டின் (Poet Dandin)  தரும் செய்யுள் ,

நூனம் நுன்னானி நானேன நானநெனா நானானி நஹ

நானேன நனு நானூ நெனை நெனா நானினோ நினீஹி

“கடையன் ஒருவனால் தாக்கப்பட்ட மனிதன் மனிதனே அல்ல .கடையனாக இருப்பவனைத் தாக்குவோனும் மனிதன் அல்ல. ஒருவருடைய தலைவன் தாக்கப்படாதவரை, தாக்கப்பட்ட கீழோனும் தாக்குண்டவன் இல்லை.ஏற்கனவே காயம் அடைந்தவனைத் தாக்குவோனும் மனிதன் அல்ல” .

பாரவி எழுதிய கிராதார்ஜுனியம் 15-15

என் கருத்து

செத்த பாம்பை அடிப்பவன் வீரன் அல்ல. பலமற்றவனைத் தாக்கும் பலசாலியும் வீரன் இல்லை. வீரன்,  காயம் அடைந்தாலும் அரசன் (உயிருடன் ) இருக்கும் வரை அவன் காயம் அடைந்தவன் அல்ல. தனக்கும் கீழேயுள்ளவன் தாக்கிவிட்டால் அது அவமானம். அதைப்  பொறுத்துக்கொண்டு வாழ்பவனும் மனிதன் அல்ல. (சிறைப்பட்ட சேர மன்னன் கணைக்கால் இரும்பொறைக்கு சிறைக் காவலன் தண்ணீர் கொண்டுவர தாமதித்ததால் அவமானம் தாங்காமல் உயிர் நீத்தான் சேரன்).

xxx

ஒரே இடத்தில் பிறக்கும்  எழுத்துக்களை வைத்து (உச்சாரண ஸ்தானாணி) அமைத்த கவிதைக்கான எடுத்துக் காட்டையும் தண்டின் எழுதியுள்ளார் ,

அகா காங்கான் ககா காக காஹகாககஹ

அஹாஹாங்க கான் காக கன்கா கக காகக

–போஜன் எழுதிய ஸரஸ்வதீ கண்டாபரணம்

பொருள்-

பல நாடுகளுக்குச் சென்றுவரும் பயணியை நோக்கிச் சொல்லும் வாசகம் :

“சுழன்று ஓடும் வேகம் மிக்க கங்கையில் குளித்துவிட்டு வரும் ஓ பயணியே! கஷ்டத்தினால் ஓலமிடும் அவலக்குரல் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.மேரு மலையையே உழும் திறமை உனக்கு உண்டு. விழுத்தாட்டும் புலன்களின் கட்டுப்பாட்டில் நீ இல்லை. பாவங்களை அகற்றுவோனான நீ இந்த தேசத்துக்கு வந்துள்ளாய்.”

இவை அனைத்தும் சம்ஸ்க்ருத இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்டவை. பொருளும் உடையவை. வெறும் ஒலிகள்/ சப்தங்கள் அல்ல .

xxx subham xxx

tags- சம்ஸ்க்ருத கவிதை, மெய் எழுத்து, பாதுகா சஹஸ்ரம் , வேதாந்த தேசிகன் , யா யா யா ,

நான் கண்ட ஸ்பானிய அரண்மனை (Post No.11,233)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,233

Date uploaded in London – 2 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் (Madrid, Capital of Spain). அங்கே அனைவரும் பார்க்கவேண்டிய  முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று பிரம்மாண்டமான அரண்மனை  (Royal Palace) ஆகும். நாங்கள் ஆகஸ்ட் 27ம் தேதி (2022) அரண்மனைக்குச் சென்றோம். லண்டனிலுள்ள  பக்கிங்ஹாம்  அரண்மனை போல இரு மடங்கு பெரியது. அரண்மனைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. ஆயினும் முன்பகுதியில் புகைப்படம் எடுக்கலாம். வெளிநாடுகளில் எல்லா சுற்றுலாத் தலங்களிலும் புஸ்தகங்கள், நினைவுப் பொருட்களை விற்பார்கள். இது போல இந்தியாவிலும் செய்யவேண்டும். பிரிட்ஜி Fridgeல் பொருத்தக் கூடிய காந்தத்தில்(Fridge Magnets)  படம் இருக்கும். அங்கே விற்கும் பென்சில், பேனாக்களில் கூட அந்த இடத்திலுள்ள முக்கிய பொருட்களின் படம்தான் இருக்கும்.

ஸ்பானிய அரண்மனையில் 1,50,000 க்கும் மேலான பொருட்கள் இருக்கின்றன. எல்லா முக்கியப் பொருட்களின் படங்களும் இருக்கும் புஸ்தகத்தைத் தேடினேன். அப்படி  ஒரு புஸ்தகமும் இல்லை. கிடைத்த புஸ்தகம் ஒன்றை மட்டும் வாங்கினேன் . அதிலுள்ள விஷயங்களையும் நான் கண்ட விஷயங்களையும் சுருக்கி வரை கிறேன்.

ஸ்பானிய அரண்மனையில் 3400க்-கும் மேலான அறைகள் இருக்கின்றன.இப்போதும் அங்கே ஸ்பானிய அரச குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆகையால் எல்லா இடங்களுக்கும் நாம் செல்ல முடியாது. உலகத் தலைவர்கள் வரும்போதும், அரசாங்க நிகழ்ச்சிகளின் போதும் அரண்மனைக்குள் செல்லமுடியாது.

எல்லா அரண்மனைகள் போலவே இங்கும் அனுமதிக்க கட்டணம் (Entrance fee) உண்டு. ஆயினும் ஏராளமான பொக்கிஷங்களை காணமுடிகிறது. பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் இப்படிச் செல்ல முடியாது. ஆண்டுக்கு ஒரு முறை கோடைகாலத்தில் ஒரே ஒரு அறையை மட்டும் திறந்துவைத்து காசு வாங்கிவிடுவார்கள் !

மாட்ரிட்டில் உள்ள இந்த அரண்மனையில் அந்த நாட்டின் பிரபல ஓவியர்கள் வரைந்த படங்கள் இருக்கின்றன ; அது மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த படங்களும் பல அறைகளை அலங்கரித்தன. இப்போது அவை ப்ராடோ மியூஸியத்தில் (Prado Museum, Madrid) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மன்னருக்குச் சொந்தமான அரண்மனைக் கட்டிடங்கள், வழிபாட்டு இடங்கள், தோட்டங்கள் 20, 500 ஹெக்டேரில் பரந்து விரிந்து கிடக்கின்றன.

அரண்மனைக்குள் நுழைந்தவுடன் உயரமான படிக்கட்டுகளைக் காணலாம்.அதில் ஏறும்போதே மேலேயும் சுவர்களிலும் தீட்டப்பட்ட வண்ண ஓவியங்களைக் காணலாம். உயரமான பளிங்குச் சிலைகளையும் காணலாம். எங்கு நோக்கினும் ராஜா  ராணி சிலைகள்தான். ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை உண்டு. ஏலத்தில் விட்டால் ஒவ்வொரு சிலையும் பொருளும் மில்லியன் கணக்கில் விலை க்குப் போகும்.அடுத்த அறை ஆடல், பாடலுக்காகக் கட்டப்பட்டது ஆனால் மூன்றாம் சார்லஸ் இதை காவலர்களுக்கான அறையாக மாற்றிவிட்டார். ஓவியங்கள் அனைத்தும் தத்ரூபமாக இருக்கும். அடுத்தாற்போல் ஹால் ஆப் காலம்ஸ்- HALL OF COLUMNS  அதாவது தூண்கள் அறை ; இதன் வழியாக மஹாராணி வசிப்பிடத்துக்குப் போகலாம்.

அடுத்தது மகாராஜாவின் ANTEROOM ஆன்டி ரூம் ; முக்கிய மண்டபத்துக்கு  முன்னாலுள்ள அறை ஆன் டிரூம் ; இங்குதான் மூன்றாவது சார்லஸ் சாதாரணக் குடிமகன்களை சந்திப்பாராம். மத்திய உணவு அருந்தும் இடமும் இதுதான் இது பற்றி 1782ம் ஆண்டு வந்த ஒரு யாத்ரீகர் எழுதிவைத்துள்ளார் ; அவர் எழுதியதாவது:-

இங்கேதான் மன்னர் மதிய உணவை சாப்பிடுவார் ; அப்போது மந்திரிகள் வந்து வாழ்த்துவார்கள். அவர் சாப்பிடத் துவங்கியவுடன் இளவரசர் அறைக்குச் சென்று, அங்கே சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் இளவரசரை வாழ்த்துவர்; மன்னர் சாப்பிட்டு முடிக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். மன்னர் சாப்பிட்டு முடித்த பின்னர் சிலருடன் மட்டும் பேசுவார். முதலில் சாப்பாட்டுத் தட்டுகள் வரும். அதை, ஒருவர் மன்னர் முன்னே வைப்பார். ஒயினும் WINE தண்ணீரும் குடுவையில் வைக்கப்படும். அதை மன்னர் குடிக்கும்போது அதைக் கொண்டுவந்த சேவகர் மண்டியிட்டு வணக்கம் சொல்லுவார். மன்னர் சாப்பிடுகையில், அரசாங்கத்துக்கான போப்பாண்டவர் தூதர் (NUNCIO)  அவருக்கு சற்று பின்னே நிற்பார். சாப்பிடும்போது மன்னன் பேசக்கூடிய ஒரே நபர் அவர்தான்.எல்லோரும் நீல உடை அணிந்திருப்பார்கள். மன்னர் கிறிஸ்தவர்கள் சொல்லும் மந்திரத்தைச் (GRACE)  சொன்னபின்னர் உடம்பின் முன் சிலுவை அடையாளம் போடுவார்”.–இது யாத்ரீகர் எழுதிய குறிப்பு ஆகும்.

இதற்குப்பின் இருப்பது சம்பாஷணை/ உரையாடல் அறை (Conversation hall ; இதுதான் மன்னரின் இரவுச் சாப்பாடு அறை . இங்கே மன்னருக்கு முன்னர் வட்டமாக அமர்ந்து வெளிநாட்டு தூதுவர்கள் பேசுவர்.

 கட்டிடம் முழுவதும் விதவிதமான கடிகாரங்கள், பிரம்மாண்டமான அலங்கார விளக்குகளைக் காணலாம். பல இடங்களில் தங்கம் உ ள்ளது தங்க முலாம் பூசப்பட்ட அ லங்காரப் பொருட்கள் இருக்கும். மஹாராணி அறையில் பெரிய ஓவியங்களும் மன்னரின் சிம்மாசன அறையில் சிங்கச் சிலைகளும்   இருக்கும்   சிம்மானமும் இருக்கும். ஸ் பிங்ஸ் தா ங்கும் பெரிய மேஜைகள் பார்க்க மிக அழகானவை

மன்னர் கேளிக்கையுடன் விருந்து வைக்கும் மேஜையில் ஒரே நேரத்தில் 100 பேருக்கு மேலாக அமர்ந்து சாப்பிடலாம். கிரேக்க புராணங்களில் மற்றும் பைபிளில் வரும் பெரியோர்களும் கதாபாத்திரங்களும் ஓவியங்களிலும் சிலைகளிலும் இருக்கும். அவைகளின் கதை தெரிந்தால் நன்கு பார்த்து ரசிக்கலாம்.

இந்த அரண்மனையின் புதிய கட்டிடங்கள் 300 ஆண்டுப் பழமையானவை . அதற்கு முன்னர் இதற்கு அல் கஸார் (Alazar) என்று பெயர்.மூர்(Moor) மக்களின் கோட்டை ன்று பொருள். வட ஆப் பிரிக்காவில்  வாழ்ந்த முஸ்லீம்கள் மூர் இன மக்கள் ஆவர். அந்த முஸ்லீம்கள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு ஐபீரிய தீபகற்பத்தை ஆண்டார்கள். ஐபீரிய தீபகற்பம் என்பது போர்ச்சுக்கல்லும் ஸ்பெயினும் சேர்ந்த பிரதேசம். ஸ்பானியர்கள் தென் அமெரிக்காவைக் கொள்ளையடித்தனர். அங்குள்ள அஸ்டெக், மாயன் நாகரீகங்களை அழித்து தங்கத்தைக் கொள்ளை அடித்தனர். போர்ச்சுகல் இந்தோனேஷியா, இலங்கை, இந்தியவரை கொள்ளை அடித்தனர். தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில் மட்டும் போர்ச்சுகீசிய மொழி பேசும் நாடு. ஏனைய அனைத்தும் ஸ்பானிய மொழி பேசும் நாடுகள்..இதே போல ஆப்பிரிக்காவிலும் இந்த இரு மொழிகள் பேசும் நாடுகள் உண்டு. தென் ஆப்பிரிக்கைவை மட்டும் டச்சுக்காரர்கள் கொள்ளை அடித்தனர். எங்கெங்கு தங்கமும் வைரமும் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று கொள்ளை அடிப்பது ஐரோப்பியர்களின் குல வழக்கம்..

–subham–

tags- மாட்ரிட், ஸ்பெயின், அரண்மனை, மூர் இனம் பொக்கிஷம் 

டயபடீஸ் ஊட்டச் சத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது (Post.11232)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,232

Date uploaded in London – –    2 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் ஜூலை 2022 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

டயபடீஸ் சம்பந்தமான 5 ஊட்டச் சத்து பற்றிய  சர்ச்சை கருத்துக்கள் முடிவுக்கு வந்து விட்டன!

பகுதி – 1

மூலம் : கிம்பர்லி பி. ஜுக்ஸ்டாட் Ph D (Kimberly B. Bjugstad PhD)

ஜூன் 15,2022 தேதியிட்ட கட்டுரை

தமிழில் : ச.நாகராஜன்

செயற்கை இனிப்புகளைச் சாப்பிடலாமா? கூடாதா?  அமெரிக்க டயபடீஸ் சங்கத்தைச் சேர்ந்த (American Diabates Association ADA) இரண்டு நிபுணர்கள இது பற்றிய அடிப்படையான கருத்துக்களை முன் வைத்து சர்ச்சையை ஒருவாறாகத் தீர்த்துள்ளனர்.

ஊடகங்களில் உடலின் எடைக் குறைப்பு பற்றியும் ஆரோக்கிய மேம்பாடு பற்றியும் வரும் செய்திகளால் நாம் தாக்கப்படுகிறோம், குற்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகிறோம், குழப்பமடைகிறோம் – நாம் செய்வது தவறா இல்லையா என்று. குழம்பிப் போகிறோம்; அதிலும் குறிப்பாக டயபடீஸுக்கு ஆளானவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

ஐந்து சர்ச்சைக்குரிய ஊட்டச்சத்து பற்றிய கருத்துக்களுக்கு டயபடீஸ் பற்றிய இரண்டு நிபுணர்கள் 2022இல் ஜூன் முதல் வாரத்தில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த அமெரிக்கன் டயபடீஸ் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில், அதற்கான விளக்கத்தைத் தந்துள்ளனர். இவர்கள் சியாட்டில் நகரைச் சேர்ந்த பெரும் நிபுணர்கள் என்பத் குறிப்பிடத்தகுந்தது.

இந்த இரு நிபுணர்களில் ஒருவர் மௌரீன் சொம்கோ என்பவர். இவர் சியாட்டிலைச் சேர்ந்த மருத்துவர். இன்னொரு பெண் மருத்துவரின் பெயர் ஆலிஸன் எவர்ட். இவரும் சியாட்டிலைச் சேர்ந்த மருத்துவரே,

(The presenters were Maureen Chomko, RDN, CDCES, from Neighborcare Health in Seattle, and Alison Evert, RDN, CDCES, FADCES, from University of Washington Medicine, also in Seattle.)

1. எப்போது சாப்பிட வேண்டும், எத்தனை முறை சாப்பிட வேண்டும்?

விஷயம் சாதாரணமானது தான். ஆனால் எப்போது உணவு எடுத்துக் கொள்வது என்பது பற்றிய ஏராளமான கேள்விகள் உள்ளன. டயபடிஸால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும் – 3 தடவை உணவும் 3 தடவை நொறுக்குத் தீனியும் (3 meals and 3 snacks) எடுத்துக் கொள்ளுமாறு சொல்லப்படுகிறது. ஆனால் இது ஒருவேளை உங்களது வாழ்க்கைமுறைக்கு சரிப்பட்டு வராததாக இருக்கலாம். அல்லது ஒருவேளை உங்களுக்கு இத்தனை முறை உண்ண, பசி எடுக்காமல் இருக்கலாம். ஆகவே ஒரு தடவை உணவையோ அல்லது நொறுக்குத் தீனியையோ விட்டு விடலாமா? காலை உணவைத் தவிர்க்கலாமா?

நிபுணர் சொம்கோ (Chomko) கூறுகிறார் :- இத்தனை தடவை இப்படித் தான் சாப்பிட வேண்டும் என்பது பற்றிய முடிந்த முடிபான ஆராய்ச்சி முடிவுகள் உடல் நலம் பற்றியோ அல்லது குளுகோஸ் மேலாண்மை பற்றியோ இது வரை ஒன்றும் இல்லை.

அடிக்கடி சாப்பிடுவது தேவையற்ற கலோரியிலோ அல்லது தொடரும் ஹைபர்க்ளைசெமியாவிலோ (Chronic hyperglycernia)) கொண்டு விடப்படலாம். மாறாக நிறைய ஆனால் அடிக்கடி சாப்பிடாமல் குறைந்த தடவைகள் சாப்பிடும் உணவு குளுகோஸ் அளவில் விபரீதமான ஏற்ற இறக்கத்தை உருவாக்கக் கூடும். காலை உணவைத் தவிர்ப்பதானது வழக்கமாக அப்படிச் செய்ப்வர்களுக்கு நாளின் பிற்பகுதியில் குளுகோஸைக் கட்டுப்படுத்துவதில் உதவக்கூடும் – ஆனால் காலை உணவை வழக்கமாக எடுத்துக் கொள்பவர்கள் இப்படி அதைத் தவிர்த்தால் கலோரி இழப்பைச் சரிக்கட்டுவதற்காக நாளின் பிற்பகுதியில் சாப்பிட வேண்டி நேரலாம்.

பகல் உணவின் போது இன்னும் கொஞ்சம் கூடச் சாப்பிட வேண்டி நேரலாம். இது கார்டியோவஸ்குலர் அபாயம் எனப்படும் இதயநோய் அபாயத்தை (Cardiovascular risk) அதிகரிக்கக்கூடும்.

டயபடீஸ் டைப் 2 உள்ளவர்களுக்கு உணவை மருந்துடன் இணைத்துச் சாப்பிடுவது முக்கியமாகும். மருந்தானது சில உணவு வகைகளுடன் எடுத்துக் கொண்டால் தான் செயல்படும். அந்த உணவுகள் வயிற்றுக் குமட்டல் மற்றும்

இரத்தத்தில் மாவுச்சத்துக் குறை தடையம் ஆகிய (nausea and hypoglycemia) பக்க விளைவுகளை குறைக்கும். மருந்தை உணவு உட்கொள்ளும் வேளைகளில் எடுத்துக் கொள்வது அது உடலில் சேர்வதை மேம்படுத்தும்.

டயபடீஸ் டைப் 1 உள்ளவர்களுக்கு வழக்கமான ஆனால் சிறிய அளவிலான உணவுத் திட்டம், இடையில் நொறுக்குத் தீனி இல்லாமல் இருப்பது குளுகோஸ் கட்டுப்பாட்டு மேலாண்மையை (Glucose management) மேம்படுத்தும்.

இது தவிர எப்போது சாப்பிடுவது எத்தனை முறை சாப்பிடுவது என்பது பற்றிய அனைவருக்கும் பின்பற்றும்படியான ஒரே மாதிரியான விதி என்று ஒன்று இல்லை.

இப்படித் தெளிவு படுத்தினார் சொம்கோ.

2. எதை உண்ண வேண்டும் – அதாவது எவ்வளவு கொழுப்புச் சத்து Vs புரோடீன் Vs கார்போ ஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொள்வது?

அமெரிக்க டயபடீஸ் சங்க 2019 அனைவராலும் ஏற்கப்பட்ட ஊட்டச்சத்து அறிக்கை கூறுவது இது: “

கார்போஹைட்ரேட், புரோடீன், கொழுப்புச் சத்து பற்றிய, டயபடீஸ் அபாயம் உள்ளவர்களுக்க்கும் அல்லது அந்த அபாயம் இல்லாதவர்களுக்குமான அனைவருக்கும் பொருந்தும் படியான, ஒரு தீர்க்கமான கலோரி விழுக்காடு இல்லை என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே மாக்ரோநியூட்ரியண்ட் விநியாகமானது ஒவ்வொருவரது தனிப்பட்ட அப்போதுள்ள உணவு எடுத்துக் கொள்ளும் முறை, தனிப்பட்ட விருப்பங்கள், மெடபாலிக் பற்றிய இலட்சிய அளவு ஆகியவற்றைப் பொருத்துத் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.”

நேஷனல் ஹெல்த் அண்ட் நியூட் ரிஷன் எக்ஸாமினேஷன் சர்வே (National Health and Nutrition Examination Survey)  தெரிவிப்பது இது:

“அமெரிக்கர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளில்  சக்தி உள் எடுத்தல் (Energy Intake) 33% கொழுப்பு, 16 % புரோடீன், 50% கார்போஹைட்ரேட்டைக் கொண்டதாக இருக்கிறது.”

இந்த விகிதாசாரமானது டயபடீஸால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் சுமாராக அப்படியே தான் உள்ளது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாதாரணமான ஒருவரின் 42% கார்போ ஹைட்ரேட் பொருள்கள் குறைந்த தரம் உள்ளவையாக உள்ளன. அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது சர்க்கரையிலிருந்து பெறப்படுவதாக உள்ளது. அவை உடனடி ஆற்றலைத் தருகிறது ஆனால் மிகக் குறைவாகத் தருகிறது.

முக்கிய குறிப்பு : உங்கள் டாக்டரைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம் : எத்தனை விகிதம் கொழுப்பு, புரோடீன், கார்பன் ஹைட்ரேட்ஸ் ஆகியவை உங்கள் உடலுக்கு எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதை உங்கள் டாக்டரோடு ஆலோசிக்க வேண்டும். அதுவும் அவை நல்ல தரத்துடன் இருப்பதை நீங்கள் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

                      **                    (அடுத்த பகுதியுடன் முடியும்)

 

புத்தக அறிமுகம் – 44

சம்ஸ்கிருதச் செல்வம்

பாகம் 2

(132 நியாயங்கள் பற்றிய விளக்கம்)

பொருளடக்கம்

என்னுரை

1. தராசு முதல் கரும்பு வரை சில நியாயங்கள்!

2. ஆடு முதல் காடு வரை சில நியாயங்கள்!

3. நெக்லஸ் முதல் கிணறு வரை சில நியாயங்கள்!

4.வீட்டு வாசற்படியில் வைக்கும் விளக்கு!

5.மரத்தை அசைத்தால் மற்றதும் தானே அசையும்!

6.குருடன் குருடனுக்கு வழி காட்டினாற் போல!

7.கடலும் பறவையும்!

8.பிறக்காத பிள்ளைக்குப் பெயர்!

9.இறுதியில் என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்!

10.தண்ணீ ர் கொண்டு வா!

11.குரங்குக் குட்டி நியாயமும் பூனைக்குட்டி நியாயமும்!

12.கௌந்தேய கர்ணன் ராதேயன் ஆனான்!

13.எவ்வழி உலகம் அவ்வழியே அனைவரின் வழியும்!

14. பிச்சை எடுத்தேனும் உயிரைக் காத்துக் கொள்வதே தர்மம்!

15. பட்ட காலிலே படும்!

16. இளமையும் முதுமையும் சேர்ந்து இருக்க முடியுமா!

17. குடத்தினுள் இருக்கும் குத்துவிளக்கு!

18. நீரில் அமிழ்ந்த சுரைக்காய்!

19. எண்ணெய் இல்லாமல் விளக்கை எரிப்பது எப்படி?

20. மாந்தோப்பில் உள்ள மரங்கள்!

21. முள்ளைத் தின்று மகிழும் ஒட்டகம்!

22. வரியை ஏய்க்க நினைத்தவன் வசூலிப்பவன் முன்னால் வந்த கதை!

23. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை!

24. செம்மறி ஆட்டுக் கூட்டம்!

25. வறுத்த விதை முளைக்குமா?

26. வசந்த கால வருகையும் புண்ணிய பலனும்!

27. தேங்காய்க்குள் இளநீர் எப்படி வந்தது?

28. கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கலாமா?

29. விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?

30. முடிவுரை

நூலாசிரியர் பற்றிய குறிப்பு

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

சம்ஸ்கிருத செல்வம் அள்ள அள்ளக் குறையாதது. ஒரு போதும் வற்றாத ஜீவ நதி அது.

நியாயங்கள் அந்தச் செல்வத்தின் ஒரு துளி. சான்பிரான்ஸிஸ்கோவில் 2015ஆம் ஆண்டு இருந்த போது ஒரு சில நியாயங்களைத் தொகுத்து எழுதி ஜனவரி முதல் அவ்வப்பொழுது Www.Tamilandvedas.Com இல் வெளியிட்டு வந்தேன்.

இதை வெளியிட்டு என்னை கௌரவப்படுத்திய லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன் வந்த Pustaka Digital Media வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

900க்கும் மேற்பட்ட நியாயங்கள் உள்ளன. இதுவரை தொகுக்க முடிந்தது 132 நியாயங்கள் மட்டுமே தான்! வாய்ப்புக் கிடைக்கும்போது மேலும் பல நியாயங்களைத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு அளிக்க வேண்டுமென்பது என் அவா.

இதைப் படித்து அவ்வப்பொழுது என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

பங்களூர்                                                                                                      ச,நாகராஜன்
11-1-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**