She was found by rescuers more than 10 hours after the quake hit, her umbilical cord still connected to her dead mother. Her uncle, Khalil al Sawadi, helped to rescue her and took her to hospital, where officials named her Aya – meaning “a sign from God” in Arabic.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! என்ற தலைப்பில் இரண்டாவது கட்டுரை 11807 என்ற கட்டுரை எண்ணாக 15-3-23 அன்று வெளியிடப்பட்டது.
காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 3
ச.நாகராஜன்
பிப்ரவரி ஆறாம் தேதி. வருடம் 2023.
துருக்கியின் மோசமான தினம் அது. கோரமான பூகம்பம் துருக்கியைத் தாக்கியது. ஏராளமானோர் பலி ஆகினர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்; வெளியே வர முடியாமல் தவித்தனர். உயிரையும் இழந்தனர். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பால் வித்தியாசமோ அல்லது வயது வித்தியாசமோ, அந்ஸ்து பேதமோ இல்லாமல் காலன் அனைவரையும் தன் பாசக் கயிற்றினால் பிடித்துக் கொண்டான்.
ஆனால் காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான் என்பதற்கான ஒரு அதிசய சம்பவமும் இந்த கோரமான பூகம்ப நிகழ்வில் ஏற்பட்டது.
ஒரு குழந்தை இடிபாடுகளுக்கு அடியில் பத்து மணி நேரம் கிடந்தது. அதன் தாயார் இறந்து போனார். ஆனால் குழந்தையோ அத்தனை கோரத்திலும் உயிருடன் இருந்தது.
குழந்தையின் போட்டோ வெளி உலகிற்கு வந்த போது அதன் தொப்புள் கொடி அப்படியே இருந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். அதுவே அந்தக் குழந்தையின் உயிரைக் காத்தது.
டாக்டர்கள் விரைந்து வந்து குழந்தையைச் சோதித்து குழந்தை நல்ல நிலையில் உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர். உடனடியாக அந்தக் குழந்தை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அது ஒரு பெண் குழந்தை.
அந்தப் பெண் குழந்தையை யார் வளர்ப்பது என்ற கேள்வி உடனடியாக எழுந்தது.
ஆயிரக் கணக்கானோர் குழந்தையை வளர்க்க முன் வந்தனர். ஆனால் குழந்தை இரத்த சொந்தம் தான் என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் அதனுடைய அத்தை, மாமாவிடம் தரப்பட்டது. குழந்தையின் மாமாவான கலில் அல் சவாடி, “ எனது குழந்தை, அந்தக் குழந்தை என்று வேறுபாடே கொள்ள மாட்டேன்” என்று உறுதி கூறினார்.
அந்தக் குழந்தை அதன் அம்மாவான அஃப்ராவின் பெயராலே அழைக்கப்படுகிறது.
அதிகாரிகள் அந்தக் குழந்தைக்கு அதை மீட்டவுடனேயே தந்த பெயர்
“ஆயா”.
“ஆயா”என்றால் அராபிய மொழியில் அற்புதம் என்று பொருள்.
சவாடி மற்றும் அவரது மனைவி ஹாலாவின் வீடும் கூட பூகம்பத்தில் தவிடு பொடியானது. தனது உறவினர்களுடன் தான் அவர்கள் வசிக்க நேர்ந்திருக்கிறது.
துருக்கி மட்டுமல்ல, உலகமெங்கும் இந்தக் குழந்தை ஒரு ஆனந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்னவோ உண்மை தான்.
பிரம்மாண்டமான கோரமான பூகம்பத்தில் ஆயிரக் கணக்கானோர் பலியாக, ஆயிரக்கணக்கில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்து தவிடுபொடியாக பல மணி நேரம் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உயிருடன் வந்த குழந்தை “ஆயா” – ஒரு அற்புதம் – தானே!
விதியின் வழிகள் விசித்திரமானவை. கடவுளின் போக்கும் காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டது.
காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான் – வரவே மாட்டான்!
காஞ்சிபுரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஓரிக்கை மணி மண்டபத்ததைத் தரிசிக்கும் பாக்கியம் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டில்தான் கிடைத்தது. எத்தனையோ முறை காஞ்சிபுரம் சென்றாலும் மணிமண் டபத்தைக் கடக்கும் நேரம் அது மூடப்பட்ட நேரமாக இருந்தது. இந்த முறை காஞ்சி காமாட்சி கோவில் , காமகோடி மட த்தில் சங்கராச்சாரியார் சமாதிஆகிய இரண்டையும் மட்டும் தரிசித்துவிட்டு 12 மணிக்குள் ஓரிக்கை மணி மண்டபத்தை அடைந்தோம். இன்னும் அரை மணி நேரம் திறந்திருக்கும் என்பதால் சட்டைகளைக் கழற்றிவிட்டு மேல் துண்டுடன் மகாபெரியவர் சிலை இருக்கும் மண்டபத்தை அடைந்தோம். ஏராளமானோர் பூக்கள் பழங்களுடன் வந்திருந்தனர்.
வெளியே எண்கோண வடிவ குளம் இருப்பதற்கான போர்டு இருந்தது. அதைக்கூ டப் பார்க்க முயலவில்லை. ஏனெனில் அதை விட அற்புதமான காட்சி மணி மண்டபத்திலேயே காணக் கிடைத்தது. அதாவது பிராமணச் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சம்பிரதாய குருகுல முறைப்படி வேதம் படித்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் எங்களை சட்டை செய்யாமல் வேதம் படிப்பதில் முனைப்பாக இருந்தனர். அ வர்களுடைய அனுமதியைக் கேட்டுவிட்டு , புகைப்படம் எடுத்தேன். ஒரு மாமி மட்டும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்றார் . நான் வேதம் பரவுவதை ஆதரிப்பவன்; இப்படியோர் நல்ல பணி நடப்பது நாலு பேருக்குத் தெரிய வேண்டாமா என்றேன். அவரும் பதில் பேசவில்லை . படிப்போர் பெண்களாக இருந்திருந்தால் கட்டாயம் அவர் சொன்னதைக் கேட்டிருப்பேன். ஆனால் ஆண்கள் என்பதால் எடுத்தேன்.. பின்னர் அவர்கள் அனைவரும் சந்நிதிக்கும் வரிசையாக வந்தனர் .
வேதத்தின் ஒரு கிளை (shaka) யையும் வேதத்தின் ஆறு அங்கங்களையும் (Ancillary subjects) ஒருவர் கற்றுத் தேற வாழ்நாள் முழுதையும் செலவிடவேண்டும். அதற்குத் துணிந்து அங்கே வந்திருந்த இளைஞர்களுக்கு காமாட்சி அன்னையின் அருளும் காஞ்சிப் பெரியவரின் பரிபூரண ஆசியும் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆயினும் வேதத்தில் நம்பிக்கையுடைய நம்மைப் போன்றோர் நன்கொடை தந்தும் வேறு பல வழிகளில் உதவியும் வேதாகம கல்வியைப் பரப்ப வேண்டும்.
நானும் ராமர் பாலம் கட்ட அணில் உதவியதுபோல கொஞ்சம் உதவினேன்.
xxx
மணி மண்டப மகிமை
இது 2011ல்தான் பாலாற்றங்கரையில் வெங்கடேச அய்யர் என்பவரின் முயற்சியால் உருவானது. பல சதுர ஏக்கர் பரப்பில் கோவிலும் (மணி மண்டபம்) குளமும் ‘கோ’ (cow) சாலையும் அமைந்துள்ளது ; பெரிய கோபுரமும் பெரியவர் வாழ்ந்த 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 100 தூண் மண்டபமும் பாண்டிய, சோழ , பல்லவ கட்டிட பாணியில் அமைக்கப்பட்ட்டுள்ளன. பெரிய நந்தி, பெரிய மணி , சிற்ப வேலைப்பாடமைந்த தூண்கள், எண்கோண குளம், நடுவில் மண்டபம் எல்லாவற்ரையும் அமைக்க அவர்கள் எத்தனை அரும் பாடு பாட்டார்களோ !.
புதுப்புது கோவில்கள், புதுப்புது சிலைகள் அமைப்பதைவிட 1000 ,2000 ஆண்டு பழமை உடைய கோவில்களை பராமரிக்க வேண்டும் என்பதே என் கருத்து. ஆயினும் 100 ஆண்டு வாழ்ந்து காஞ்சிக்கும் இந்து மதத்துக்கும் புகழ் சேர்த்த மஹா பெரியவருக்குக் காஞ்சியில் மணி மண்டபம் அமைத்தது சாலப்பொருத்தமே..
Xxx
இந்து மதத்தில் உண்மைச் சாமியார் உண்டா?
கொஞ்ச காலத்து முன்னர் எனக்கு ஆங்கிலத்தில் ஒரு ஈமெயில் email வந்தது.
ஐயா / Sir
நீங்கள் எழுதிய கட்டுரைகளைப் படித்து மெத்த மகிழ்ச்சி . எனக்கும் ஒரு நல்ல சாமியாரைப் பார்க்க ஆசை. யாராவது ஒருவர் பெயரைச் சொல்லி, அவர் இருக்கும் முகவரியையும் தந்து உதவுங்கள் என்று எழுதி இருந்தார்.
நான் அவருக்குப் பணிவுடன் பதில் எழுதினேன். ஒரு 20, 30 ஆண்டுகளுக்கு முன்னர் இதே கேள்வியைக் கேட்டிருந்தால் காஞ்சிப் பெரியவர் பெயரைச் சொல்லி முகவரி கொடுத்திருப்பேன். அதற்கு முன்னர் ரமண மகரிஷி, ராம கிருஷ்ண பரமஹம்சர் முதலியோர் இருந்தனர். இப்போது அப்படி திறந்த குடிசையில் வாழும் சாமியார்கள் இல்லாததால் நான் துணிவுடன் யார் பெயரையும் சொல்ல மாட்டேன்.
கட்டாயம் நல்லவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெயர்களை எழுதினால் நீங்கள் எனக்கு 100 துணைக் கேள்விகளை எழுப்பித் துளைத்து எடுத்து விடுவீர்கள்.
அவர் ஏன் காரில் போகிறார்?
அவர் ஏன் கூலிங் கிளாஸ் அணிகிறார்?
அவருக்கு எதற்கு எலக்ட்ரானிக் கேட் செக்யூரிட்டி?
அவர் ஏன் பல மாடிக்கட்டிடத்தில் வசிக்கிறார் ?
அவர் ஏன் ஆண்களையும்,பெண்களையும் தனித்தனியே தனது அறைக்கு அழைக்கிறார்?
இப்படி 100 கேள்விகள் கேட்பீர்கள்; நானும் அவர்களுடன் வாழாததால் உங்களுக்கு உண்மையான பதில்களைத் தர இயலாது. காஞ்சிப் பெரியவர், ரமணர் முதலிய பெரியோர் விஷயத்தில் இந்தக் கேள்விகளே எழாது.
ஆகையால் நீங்களே பிரபல மடங்களுக்குச் சென்று உண்மைப்பொருளைத் தேடுங்கள் ; கட்டாயம் சிருங்கேரி, காஞ்சி போன்ற மடங்களில் பெரியார்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய வாழ்வு திறந்த குடிசையில் இல்லாததால் நீங்களே சென்று ஐயம் தெளியுங்கள் என்றேன்.
xxx
இங்கே, காந்திஜி சொன்ன விஷயம் ஒன்றும் நினைவுக்கு வருகிறது.
ஓ காந்திஜி அவர்களே! தினமும் மாலையில் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும்போது, எதற்காக இரண்டு இளம்பெண்களின் தோள்களில் கைகளைப் போட்டுக்கொண்டு போகிறீர்கள்? கைத்தாங்கல் கொடுக்க வேறு ஆளே கிடைக்கவில்லையோ.? என்று ஒருவர் கடிதம் எழுதினார்.
அவருக்கு காந்திஜி பணிவுடன் பதில் எழுதினார். மிகவும் நியாயமான கேள்வி. இதற்கு நான் எத்தனை நீளமான பதில் எழுதினாலும் நீங்கள் நம்பாது போகலாம். தயவு செய்து என்னுடன் சில நாட்களுக்காவது வந்து தங்கிப் பாருங்கள் என்று.
இப்படி இன்று எத்தனை தலைவர்கள் எழுத முடியும் ? சிந்தித்துப் பாருங்கள்
xxxx
உங்களிடம், உங்கள் 20 வயது மகனோ மகளோ இப்படி நல்லவர் யார் ? எனக்குக் காட்டுங்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?
அப்படியே நீங்கள் பதில் சொன்னாலும் அவர்கள் எதிர்க் கேள்வியோ, புதிர்க் கேள்வியோ போடாமல் நீங்கள் சொல்லுவதை அப்படியே ஏற்பார்களா? எண்ணிப் பாருங்கள் .
xxx
சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள்
அடடா, முடிப்பதற்குள் வேறு இரண்டு விஷயங்களும் ஞாபகத்துக்கு வருகின்றன . ரிக் வேதக் கிளை (சாகை) ஒன்றை முழுதுமாகக் கற்றுத் தேர்ந்து காஞ்சி மஹா சுவாமிகளிடம், சால்வை, பசுமாடு, தங்கக்காசு பெற்றவர் கூத்தனூர் சிங்கார சுப்பிரமணிய சாஸ்திரிகள். மதுரை டி .வி. எஸ் நிறுவனத்தார் அவரை ராமாயண சொற்பொழிவுகளை நிகழ்த்த அழைப்பார்கள்.அவர் தங்கும் நாட்களை நீடிக்கச் செய்து எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள கிருஷ்ணாராயர் தெப்பக்குளத்தெரு ஆஞ்சனேயர் கோவிலிலும் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தச் சொல்லுவார்கள் . நாங்கள் மதுரை வடக்கு மாசி வீதி, குட்ஷெ ட் தெருக்களில் வசித்த காலங்களில் எங்கள் வீட்டில்தான் தங்குவார். நாங்களும் தினமணிப் பத்திரிகையில் அவருடைய உபன்யாசங்களை வெளியிட்டு வந்தோம் .
அவர் உத்தமோத்தமர்களே ! என்று சொல்லி உபன்யாசத்தைத் துவங்குவார். என் அருகில் தினமும் அமரும் ஒரு அன்பர். இங்கு எவன் உத்தமன்; என் உள்பட எல்லோரும் அயோக்கியர்கள் என்பார். அவருடைய ஹானஸ்டியை HONESTY மெச்சி நானும் ‘ஆமாம் சாமி’ போடுவேன்.சமயச் சொற்பொழிவு கேட்போரிடையே இந்த நிலை என்றால், வேறு இடங்களில் கேட்கவே வேண்டாம்.
Xxxx
சுவாமி சாந்தானந்தாவின் ஸத்யமான வாக்கு
புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் , காடுகளில் தவத்தை முடித்துக்கொண்டு பொது சேவையில் இறங்கிய காலம். எப்போது மதுரைக்கு வந்தாலும் எங்கள் வீட்டில் பிட்சை (அன்னம்) ஏற்றுவிட்டு என் தந்தை வெ . சந்தானத்திடம் ‘தினமணி’க்கான செய்திகளைக் கொடுத்து விட்டுப்போவார். பிரமாண்டமான சஹஸ்ர சண்டி யக்ஞத்தை ஏற்பாடு செய்த சமயம். அப்போது திராவிடக் கழகத்தினர் , யாகத்துக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். அதை எனது தந்தை அவரிடம் சுட்டிக்காட்டியபோது,
அவாள் ஏன் அப்படிச் செய்யறாள் ? நான் ஸத்யமான வாக்கைத்தானே சொல்லறேன் ;
நான் சொல்றது ஸத்யமான வாக்கு ,ஸத்யமான வாக்கு என்று திரும்பத் திரும்பச் சொல்லுவார்.
அவர் போன பின்னர் நாங்கள் எல்லோரும் அடக்கடவுளே, உலக நடப்புகளை அறியாத அப்பாவி (INNOCENT) சாமியாராக இருக்கிறாரே என்று அதிசயப்படுவோம். நெடிய உருவம். முகத்திலோ ஆயிரம் வாட் பல்பு 1000 WATT BULB போட்டது போல தேஜஸ். நீண்ட சடையோ 100 கிலோ வெயிட் WEIGHT இருக்கும். அது தரையில் புரள நடந்துவருவார். அற்புதமான காட்சி.
xxx
தேனி வேதபுரி ஆஸ்ரம ஓம்காரானந்தா
Following matter is repeated by me :
முன்னரே நான் எழுதியதை மீண்டும் சுருக்கமாக எழுதி விடை பெறு கிறேன் . அண்மைக் காலத்தில் கொரோனா வியாதியால் திடீரென்று உயிரிழந்த உத்தமர் , பேரறிஞர், தேனி நகர ஓம்காரானந்தா ஆவார் . அவரை இரண்டு முறை லண்டனுக்கு அழைத்து உபன்யாசங்களை ஏற்பாடு செய்தேன் . மூன்றாவது முறை அவரே டாக்டர் சொன்னதால் லண்டன் பயணத்தை CANCEL கேன்சல் செய்தார்.
அவருக்கு லண்டனில், இலங்கைத் தமிழர்கள் நடத்தும் சிவன் கோவிலில் ஒரு சொற்பொழிவு ஏற்பாடு செய்தேன்.
முதல் நாள் போன் PHONE செய்து, நாளை எவ்வளவு கூட்டம் வரும்? எத்தகைய ஆடியன்ஸ் AUDIENCE என்று தெரிந்தால் சுவாமிகளிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவேன் என்றேன்.
அவர் சொன்னார் : தம்பீ, கவலைப்படா தீங்க ; தமிழ் ஸ்கூல் பிள்ளைகள் 100 பேரையும் ஆசிரியர்கள் அழைத்து வந்துவிடுவார்கள்.
இதைக்கேட்ட எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அடக்கடவுளே! அவர் உபநிஷதங்களைக் கரைத்துக் குடித்தவர். வேத வேதாந்தங்களின் கரை கண்டவர். சின்னப் பிள்ளைங்க வருவாங்கன்னு சொல்றீங்களே !என்றேன் (டெலிபோனில்)
அவர் சொன்னார்; தம்பீ ! நீங்க உண்மையான சாமியார் ஒருவர் இந்தியாலேருந்து வரார்னு சொன்னீங்க. . எங்க பிள்ளைங்க எல்லாரும் சினிமாவிலே வேஷம் போட்டு வரும் சாமியாரத்தான் பாத்திருக்காங்க. அதானாலத்தான்….. என்று இழுத்தார்.
ஒரு நொடியில் அவர் என் ஞானக் கண்களைத் திறந்தார். உண்மையான , திறந்த வாழ்வு உடைய சாமியார்களை நம் சிறுவர்களுக்குக் காட்டினாலே போதும். அவர்கள் பெரிய, அடுக்கு மொழிச் சொற்பொழிவுகளை பேச வேண்டும் என்று அவசியமில்லை.! அது ஞான ஒளியைப் பரப்பும் என்பதில் ஐயமில்லை .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஓட்டுப் போட டிப்ஸ் தரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி!
ச.நாகராஜன்
ஶ்ரீ பி.கே.பாசு என்பவர் இந்திய அரசாங்கத்தில் செக்ரட்டரி பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.
அவர் தனது அனுபவத்தைப் பற்றி ஒரு கடிதத்தை நண்பர்களுக்கும் நாட்டில் வாழும் சகாக்களுக்கும் எழுதியுள்ளார்.
அது இது தான்:
நண்பர்களே, சக தேசவாசிகளே
ஒரு ஐஏஎஸ் ஆபிஸராக பணியாற்றிய நான் எல்லா கட்சிகளிடமிருந்து சம அளவில் தூரத்திலேயே இருந்து வந்திருக்கிறேன்.
எனது முதலும் முற்றிலுமான விஸ்வாசம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எனது மனச்சாட்சிக்கும் தான்.
எனது பணிக்காலத்தில் ஏராளமான அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
எனக்கு பணி செய்ய ஒதுக்கப்பட்ட மாநிலம் பீஹார். அங்கு கர்பூரி தாகூர், ஜகந்நாத் மிஸ்ரா, சந்திரசேகர் சிங், பிந்தேஸ்வரி டுபே, பகவத் ஜா ஆஜாத், சச்சிதானந்த சிங், லல்லு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோரை முதல் மந்திரிகளாகப் பார்த்திருக்கிறேன்.
மத்திய அரசிலோ என்றால், கல்பநாத் ராய், என் கே பி சால்வே, வேணுகோபாலாசாரி, ஒய் கே ஆலக், அருண் சௌரி, பி. சிதம்பரம் ஷரத் பவார் ஆகியோரை எனது மந்திரிகளாகப் பார்த்திருக்கிறேன்.
இது தவிர, ப்ரணாப் முகர்ஜி, ஜஸ்வந்த் சிங், அருண் ஜெய்ட்லி ஆகியோரையும் மந்திரிகளாகப் பார்க்க வேண்டியிருந்தது,
ஆனால் இந்த யாரும் என்னை நினைவு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.
தேவே கௌடா, ஆர் கே குஜ்ரால், நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாயி, மன் மோஹன் சிங் ஆகியோரையும் பிரதம மந்திரிகளாக நெருக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.
நான் அக்ரிகல்சுரல் செக்ரடரியாக பணியாற்றிய பின்னர் 2012 மே மாதம் பணி ஓய்வு பெற்றேன்.
மேலே கூறியவற்றால் ஓரளவு போதிய அனுபவம் பெற்றவன் தான் நான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் பதவிக்கு வந்த பிரதம மந்திரியின் பணி பற்றி நான் கவனித்து வருகிறேன். உண்மையைச் சொல்லப் போனால், சென்ட்ரல் அட்மினிஸ்ட்ரேடிவ் டிரிப்யூனலில் ஒரு அங்கத்தினராக இருந்து ஓய்வு பெற்றவன் நான்.
நமது பிரதம மந்திரியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதற்கான காரணம் இந்த மனிதரிடம் சுபாஷ் சந்திர போஸ், லோகமான்ய பால கங்காதர திலகர், சர்தார் வல்லப் பாய் படேல் போன்றவர்களிடம் இருக்கும், இதர தலைவர்களிடம் இல்லாத ஒரு தேசீய வெறி இருப்பதைப் பார்க்கிறேன்.
நான் பிரதம மந்திரி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவரைப் பார்க்க விண்ணப்பித்தேன். 2017 மே மாதம் CATஇலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இதைச் செய்தேன்.
ஓய்வு பெற்ற பின் எந்த வித பணியையும் நான் அடைவதற்காக அவரைப் பார்க்க விரும்பவில்லை என்பதைத் தெளிவு படுத்தினேன்.
குறிப்பிட்ட தேதியான 22 ஆம் தேதி ஜூலை 2017இல் அவரைச் சந்தித்தேன்.
அவர் தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்து என்னை வரவேற்றார்.
இரு கைகளாலும் என்னை இந்திய முறைப்படி வரவேற்றார்.
15 முதல் 20 நிமிடங்கள் வரை அவருடன் இருக்க முடிந்தது. நான் தான் அதில் பெரும்பாலும் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கவனமாக எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்பொழுது குறிப்பாக தேவையான கேள்விகளைக் கேட்டார்.
நான் எழுந்த போது அவரும் எழுந்து இரு கரங்களாலும்
எனது கரங்களைக் குலுக்கினார்.
அவருடன் இருந்த நேரம் முழுவதும் மிகுந்த மரியாதையுடன் என்னை நடத்தினார்.
இப்படிப்பட்ட ஒரு மரியாதையை ஒருபோதும் வெறேங்கும் நான் கண்டதில்லை. இப்படி ஒரு சாமானியனுடன் இந்திய பிரதம மந்திரி பேசிக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வே எனக்கு இல்லை.
ஆக நண்பர்களே, எல்லோரையும் எனது நெடிய பணிக் காலத்தில் நான் பார்த்து விட்டேன்.
இவர் ஒரு sui generis!
(ஆம் ஒப்பற்ற ஒரு தனிப்பெரும் மனிதர்!!)
உலகில் இந்தியாவிற்கு கர்வமான தனி ஒரு இடத்தைத் தர இங்கு இருக்கிறார்.
அவரது முதலும் முடிவுமான முன்னுரிமை நாடு தான்!
அவரது நெருங்கிய உறவினர்கள் எப்படி இப்போது வாழ்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.
நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்ட விஷயங்களுக்கு அவர் எப்படி தைரியமாக முடிவை எடுத்துள்ளார் என்பதைப் பாருங்கள் :
ஜி எஸ் டி, வங்கி திவால் சட்டம், ஸ்வச்ச பாரத் திட்டம், ஆயுஷ்மான் திட்டம், விவசாயிகளின் இன்ஷூரன்ஸ் திட்டம் டி பி டி, கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம், கிராமப்புற மின் இணைப்பு, நாட்டின் ஒவ்வொரு மூலைக்குமான சாலை இணைப்பு, அரக்கத்தனமான பாகிஸ்தானை மண்டியிடச் செய்தது, பயங்கரமான ட்ராகனை முடக்கியது, கட்டமைப்பில் உயர ஏறும் கோலாகலம், நமது பாதுகாப்பை வலுப்படுத்துவது, உலகில் இந்தியாவின் சித்திரத்தை உயர்த்துவது.
கும்பகோணத்தில் இறங்கிய 19-2-2023 அன்றே ஆறு கோவில்களைத் தரிசனம் செய்தோம் !!! அப்படி ஆசைப்பட்டதில் கொஞ்சம் இழப்பும் இல்லாமல் இல்லை. கடைசியாக கும்பேஸ்வரர் தரிசனத்தை வைத்துக்கொண்டதால் இரவு எட்டு மணி ஆகி விட்டது. நல்ல புகைப்படம் எடுக்க முடியவில்லை. மகாமக குளத்தையும் காரில் வலம் வந்தோமேயன்றி இறங்கிப் பார்க்க முடியவில்லை. இருந்த போதிலும் கும்பேஸ்வரர் நல்ல தரிசனம் கொடுத்தார்.
கோவிலில் கலை விழா நடந்து கொண்டிருந்தது. நிறைய டான்ஸ்; நிறைய கைதட்டு. கொஞ்சம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டே கோவில் யானையின் சேட்டைகளையும் புகைப்படம் எடுத்தேன். சந்நிதிக்குள் நுழைந்தோம் .
என்னைப் போன்ற தஞ்சை மாவட்டத்தில் பிறந்த பார்ப்பனர் இடையே ஒரு பழமொழி உண்டு. அவனா, அவன் மாமாங்கத்துக்கு ஒரு முறை வந்தாலே அதிசயம் என்போம். அத்தி பூத்தாற்போல என்பதற்கு இணையான பழமொழி இது. அதாவது 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மஹா மகம்! திருவிழா போன்றது , அபூர்வமாக நிகழக்கூடியது என்பது இதன் பொருள்.
கிருஷ்ண தேவராயர் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு வந்து, பின்னர் கும்போணம் (இப்படி உச்சரித்தால் அவன் தஞ்சாவூர்க்காரன் என்று பொருள் ; அல்லது எம்பளத்தைந்து 85, திருப்ளாத்துறை , திருக்ளாவூர் என்பதைவைத்தும் கண்டுபிடிக்கலாம்).சென்று மஹாமக குளத்துக்குச் சென்றதை கல்வெட்டுகள் விரிவாகப் பேசுகின்றன (என் முந்தைய கட்டுரைகளில் கல்வெட்டு விவரம் காண்க )
தஞ்சாவூர்ப் புராணத்தை இன்னும் ஒன்று சொல்லி முடித்து விடுகிறேன் . ஒரு முறை நான் என் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு கத்தரிக்காய் ரசவாங்கி ரொம்பப் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் கத்தரிக்காய் பிட்டளை தான் செய்கிறார்கள் என்று பேச்சுவாக்கில் சொன்னேன். நீங்கள் தஞ்சாவூர்க்காரரா? என்றார்.. சிரித்துக்கொண்டே ஆமாம், அதற்கும் ரசவாங்கிக்கும் என்ன சம்பந்தம் ? திடீரென்று கோகுலகுஷ்டமிக்கும் குலாம்காதருக்கும் முடிச்சுப் போடுகிறீர்களே! என்று வினவினேன். ரசவாங்கி என்பது மராட்டிய ஐட்டம் item ; தஞ்சாவூர், சிவாஜி மன்னரின் பரம்பரையினர் (சரபோஜி)ஆட்சிக்குட்பட்டிருந்ததால் அந்த உணவு பிரபலமாகியது என்றார் . புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டேன்.
xxx
கும்பேஸ்வரரைத் தரிசிப்போம்.
சென்ற முறை கும்பகோணம் சென்றது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர். தொல்பொருட் துறை பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி நடத்திய 1000 மைல் இலவச வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் சென்றதுதான். அதற்குப்பின்னர் கார் மட்டும் அவ்வழியே பறக்கும். இறங்கியது இல்லை .
கும்பேஸ்வர் என்னும் பெயரில் இங்கு வீற்றிருக்கும் சிவ பெருமான்மங்களாம்பிகை என்னும் தேவி சகிதம் இந்தக் கோவிலில் இருக்கிறார். ஊர்ப்பெயர் முதல் கடவுள் பெயர் வரை எல்லாம் அமிர்தம் சம்பந்தப்பட்டது. அப்பரும், சம்பந்தரும் தேவாரப்ப பதிகங்களில் பாடிப் பரவியுள்ளதால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கும்பேஸ்வரரின் புகழ் பரவி இருந்ததை அறிய முடிகிறது . குடந்தை, குடமூக்கு என்ற பெயர்களும் அமிர்த கலசத்துடன் தொடர்புடையதே. அமுத கலசத்திலிருந்து தோன்றிய இறைவன், அமுதக் குடம் சிந்திய திருத் தலம் என்ற பொருளில் அமுத கும்பேசர் என்றும் திருநாமம்.
இறைவி மங்களாம்பிகை, மந்திர பீடேஸ்வரி எனப்படுவதால் இந்தத்தலம் சாக்தர்களுக்கும் முக்கியமானது. மந்திர சக்தி நிறைந்த பீடத்தில் இறைவி அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
xxx
தீர்த்தவாரி
இந்தக் கோவில் ஒற்றுமையின் சின்னமாகத் திகழ்கிறது. மஹாமகம் குளத் திருவிழா வடக்கேயுள்ள கும்பமேளாவுக்கு நிகரானது. அந்தக்காலத்தில் சுற்றுவட்டாரக் கோவில் மூர்த்திகள் அனைவரும் இங்கே தீர்த்தவாரிக்கு எழுந்தருளுகின்றனர். கும்பேஸ்வர சிவன் தான் தலைவர்.
அது மட்டுமல்ல கும்பகோணத்தைச் சுற்றியுள்ள 6 கோவில்களின் மூர்த்திகள் சப்தஸ்தான திருவிழாவிலும் பங்கு கொள்கின்றனர். (குடந்தையையும் சேர்த்து 7= சப்த)
xxxx
விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயன்
மஹாமக விழாவுக்கு விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயனே துங்கபத்ரா நதிக்கரையில் இருந்து வந்திருப்பானால் இது தென்னிநிதிய இந்துக்களை ஒற்றுமைப்படுத்தியதையும் அறியலாம் . அருகிலுள்ள சுவாமிமலை சுவாமிநாதனும், திருவலம் சுழி வெள்ளைப் பிள்ளையாரும் இக்கோவிலுக்கு மேலும் மஹிமை சேர்க்கின்றனர் .
மகா மக குளத்தின் ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லும். குள த்தைச் சுற்றியுள்ள மூர்த்திகளின் கதைகளை எழுதப்போனால் அது கும்பகோண என்சைக்ளோபீடியாவாகி விடும்.
12 ஆண்டுக்கு ஒருமுறை மாசி மாத மக நட்சத்திரத்தன்று காசியிலுருந்து கங்கை நதி , மஹா மக குளத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம் .
12 வருஷத்திற்கு ஒரு முறை, குரு சிம்மராசியில் பிரவேசிக்கும் காலம் , மஹா மகத் தீர்த்தத்தில் தென்னிந்திய மக்கள் அனைவரும் நீராடுவர்.
குடந்தைக் கோவிலின் ஐந்து தேர்கள், சுற்றியுள்ள கோவில்களின் பல்லக்குகள் எல்லாம் சீரழிந்து போயிருந்தன. அண்மைக்காலத்தில் இவை சோழர்கால சீரும் சிறப்பும் புடை சூழ பவனி வருகின்றன .
நாங்கள் பிரதான சந்நிதிகளை விட்டு வெளியே வருகையில் தொலைலிருந்தே கும்ப முனி சந்நிதிக்கு கும்பிடு போட்டோம்.இந்தக் கோவில் , ஈம ரிஷி ,கும்ப முனி முதலியோரால் பூஜிக்கப்பட்ட தலம் .
கும்ப முனி , குட முனி என்பது அகத்தியரைக் குறிக்கும். அகத்தியர் சித்தியான தலங்களில் குடந்தையையும், திருவனந்தபுரத்தையும் சொல்லுவார்கள். இரண்டு அகத்தியர்களை இது குறிப்பதாகக் கொள்ளலாம் . ரிக்வேதம் சொல்லும் லோபாமுத்திரை- அகத்தியர் வேறு ; அவர் பரம்பரையில் வந்த அகத்தியர்கள் வேறு. தென் கிழக்காசியாவுக்குச் சென்று ஏழு, எட்டு நாடுக்ளில் இந்து சாம்ராஜ்யக் கொடியைப் பறக்கவிட்ட அகத்தியர் வேறு. குள்ளமாக இருக்கும் பேரை இன்றும் அகத்தியர் என்று அழைப்பதுண்டு (லண்டனில் கூட ஒரு குருக்களுக்கு நாங்கள் அகத்தியர் என்றே சொல்லுவோம் ; குருக்கள் மிகவும் குட்டையானவர்)
கும்பகோணத்தின் ஒரு புறம் காவிரி ஆறும் மற்றோர் புறம் அரிசிலாறும் ஓடுகின்றன .
Xxx
தருமபுர ஆதீனத் தேவரப்பதிப்பு மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளது :
இத்தலம் தேவாரங்களில் குட மூக்கு என வழங்கப்பெறும்.பஞ்சக்ரோச தலங்கள் சூழ்ந்தது .
28 Aug 2019 — Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com …
-subham—
Tags– கும்பேசர், கும்பமுனி, மகாமகம், குளம், விழா ஸப்தஸ்தானம், மாமாங்கம், கிருஷ்ணதேவராயர், கத்தரிக்காய் ரசவாங்கி, தஞ்சாவூர் தமிழ்
10-3-23 11788 ஏழை கோடீஸ்வரனாகி செய்த அற்புத சேவை! 11-3-23 11792 அர்த்தநாரீஸ்வரராக சிவபிரான் எழுந்தருளும்
திருச்செங்கோடு!
12-3-23 11796 ஐந்து வகை உபசாரம், ஐந்து வகை வழிபாடு, ஐந்து வகை
கர்மம்!
13-3-23 11800 மிகுந்த வேதனையிலும் கூட அன்பு செலுத்திய புத்த குரு
மாஸ்டர் ஷு யுன்!
14-3-23 11804 தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
15-3-23 11807 காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 2
16-3-23 11810 கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த ஆரத்தி! – 1 17-3-23 11813 கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த ஆரத்தி! – 2 18-3-23 11817 கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த ஆரத்தி! – 3 19-3-23 11819 உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 4 20-3-23 11821 திருடனின் கம்பு!
21-3-23 11823 கோவில் சொத்தை துஷ்பிரயோகம் செய்யும் திராவிட
மாடல் அதிகாரிகளுக்காக ஒரு ராமாயண சம்பவம்!
22-3-23 11826 நீடித்த ஆயுள் பெற ஒரு வழி : சிருங்கேரி ஆசார்யாளின் அருளுரை!
23-3-23 11829 இறைவன் கொடுத்த அங்கங்களைக் காப்பது எப்படி?
(மஹாபாரத மர்மம்)
24-3-23 11833 காவேரி ஆறு உற்பத்தி ஆனதும் கொங்கு. மண்டலத்திலேயே! ( கொங்குமண்டல சதகம் பாடல் 10). 25-3-23 11837 பிரக்ஞை பற்றி புத்தபிரானின் அருளுரை! 26-3-23 11841 யமுனா நதியில் குளியல்!
27-3-23 11844 உண்மையான மகன் யார்? மனைவி யார்? நண்பன் யார்? சுபாஷிதச் செல்வம் 28-3-23 11847 யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 1 – நித்யானந்த மர்மம்! 29-3-23 11850 யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 2 – நித்யானந்த மர்மம்! 30-3-23 11853 செகுலரிஸத்தின் பேரால் தர்ம ஹிம்ஸை செய்யப்படும் ஹிந்து மதம்! – ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து எழுவார்களா? – 1 31-3-23 11856 செகுலரிஸத்தின் பேரால் தர்ம ஹிம்ஸை செய்யப்படும் ஹிந்து மதம்! – ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து எழுவார்களா? – 2
******
SNR Article Index : February 2023
FEBRUARY 2023
1-2-23 11734 ஒரு கடினமான விஷயத்தை ஆரம்பிக்கும் முன்னர் செய்ய
வேண்டியது என்ன? ஹனுமான் காட்டும் வழி! 2-2-23 11737 புத்திமதி மூன்று வகைப்படும்!
3-2-23 11741 இந்தியாவின் ஒரு அபூர்வமான பிரதம மந்திரி!
4-2-23 11744 SNR Article Index : January 2023
5-2-23 11748 தந்தையின் ஆணையை ஏற்று சொந்தத் தாயை பரசுராமர்