
Post No. 12,096
Date uploaded in London – – 7 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
உலகப் புகழ் பெற்ற வைரங்கள் ஆந்திரத்தில் கிடைத்ததை வரலாறு நமக்குச் சொல்கிறது ; இப்பொழுதும் அந்த அதிசயம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் பெரிய வித்தியாசம் என்னவென்றால் முன்காலத்தில் கோட்டைகளிலும் , பூமியைத் தோண்டுகையிலும் மட்டும் கிடைத்தன. இப்பொழுதோ பருவ மழை வந்துவிட்டால் வயல் காட்டில் வைரங்கள் ஜொலிக்கின்றன; அதிர்ஷ்டம் மிக்க விவசாயிகள் அவற்றை எடுத்து விற்று ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுகின்றனர் . எப்படி இவ்வாறு நிலத்தின் மேற்பரப்பிற்கு வைரங்கள் வருகின்றன என்று இதுவரை தெரியவில்லை. அது பூமாதேவியின் ரகசியம் போலும்!
அந்தக் காலத்தில் விஜயநகரப் பேரரசுக்கு வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள மன்னர்களின் ரத்தினைக் கற்களை உலகில் எந்த இரத்தின வியாபாரியும் விலை மதிக்க முடியாது என்று எழுதியுள்ளனர். அது மட்டுமல்ல சந்தைகளில் காய்கறி விற்பது போல வைரக் கற்கள் விற்கப்படுகின்றன என்றும் எழுதியுள்ளனர்.
இப்பொழுது பழங்கதைகளை மறந்துவிட்டு 2023ம் ஆண்டுக்கு வருவோம்; இது இன்று (7-6-2023) டெக்கான் க்ரானிக்கில் DECCAN CHRONICLE வெளியிட்ட செய்தி:

அனந்தபூர் :- அனந்தபூர்-கர்னூல் மாவட்டங்களின் எல்லையில் குண்டக்கல்-பத்தி கொண்டா வட்டாரங்களில் பருவமழைக் காலங்களில் ஒரு அதிசயம் நிகழ்கிறது .இது இப்பொழுதும் ஆரம்பமாகிவிட்டது . வைரம் முதலிய ரத்தினக் கற்கள், விவசாய நிலங்களில் தோன்றுகின்றன .
கர்னூல் ஜில்லாவில் மடிக்கெரா மண்டலில் பசினபள்ளி கிராமம் இருக்கிறது. அங்கு விவசாயி உழும்போது பெரிய வைரக் கல் கிடைத்தது. அது ரகசிய மார்க்கெட்டில் இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. வியாபாரிகள் ரகசிய பேரம் செய்வதால் போலீசுக்கோ, ரெவின்யூ துறைக்கோ இதுபற்றி எதுவும் தெரியாது; யாரும் புகாரும் செய்யவில்லை.
விஜய நகர சாம்ராஜ்யத்தில் ராயலசீமை வட்டாரம் வைரம் முதலிய ரத்தினக் கற்களின் விற்பனைக்குப் பெயர் பெற்ற இடமாக விளங்கியது ; அந்த காலத்தில் ஹம்பி (Hampi) நகர மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பது போல வைரங்களும் விற்கப்பட்டன ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலங்களில் துக்களி , ஜொன்ன கிரி , மடிக்கெரா ,(கர்னூல் வட்டாரம்), வஜ்ரகரூர் (அனந்தபூர் வட்டாரம்) ஆகிய கிராமங்களில் காய்ந்து போன நிலத்தில் பருவமழை வந்தவுடன் வைரங்கள் கிடைக்கின்றன. இது நீண்ட காலமாக நடந்து வருகிறது; வைர வேட்டை நடத்துவோர் இந்த வட்டாரத்தை மட்டும் குறிவைக்கின்றனர் .
பசினப்பள்ளி கிராமத்தில் விவசாயி கண்டெடுத்த வைரத்தை கைதேர்ந்த வியாபாரிகள் ரகசியமாக இரண்டு கோடி ரூபாய்க்கு பேரம்பேசி முடித்துவிட்டனர் . ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா வைர வேட்டைக்காரர்கள் ஏற்கனவே இந்தப் பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளனர்.
பருவ மழைக்காலத்தில் மட்டும் எப்படி ரத்தினக் கற்கள் வயலின் மேற்புறத்துக்கு வருகின்றன என்று எவரும் ஆராய்ச்சி செய்ததாகத் தெரியவில்லை . பூகர்ப்ப, சுரங்க இயல் நிபுணர் ஒருவரும் இது பற்றி ஆராய்வது அவசியம் என்கிறார்.
2019-ம் ஆண்டில் ஒரு விவசாயி கண்டெடுத்த வைரம் 60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது
2020-ம் ஆண்டில் 2 விவசாயிகள் கண்டெடுத்த , ஐந்து அல்லது ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரங்களை ஒன்றரை லட்சத்துக்கும், 50000 ரூபாய்க்கும் விற்று விட்டனர் .
சென்ற ஆண்டு ஒருவர் தான் கண்டெடுத்த வைரத்தை 40 லட்சம் ரூபாய்க்கு விற்றார் ஜொன்னகிரி வட்டாரத்தில் 30 காரட் எடையுள்ள வைரத்தை ஒருவர் 1.2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டார் .
இப்போது பலரும் தங்கள் நல்ல வேலைகளை விட்டுவிட்டு, வைரம் ஜொலிக்கும் கிராமங்களில் முகாமிட்டுள்ளனர் நாடு முழுதுமுள்ள வியாபாரிகள் இடைத்தரகர்கள் உதவியுடன் பேரம் பேசுகின்றனர் பலரும் நிலத்தில் தற்காலிக முகாம் போட்டுள்ளனர் . அனந்தப்பூர் மாவட்ட கூட்டி (Gooty Town) நகரில் வைர வேட்டைக்காரர்கள் லாட்ஜுகளில் தங்கியுள்ளனர்.
MY OLD ARTICLE
ஸ்வயம்பு லிங்கம் தோன்றுவது உண்மைதான்:–
ஸ்வயம்பூ லிங்கங்கள் தோன்றுவது …
tamilandvedas.com
https://tamilandvedas.com › ஸ்…
30 Aug 2012 — இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில், பல கோவில்களில் இருக்கும் லிங்கங்களை …
–subham —
Tags- வைர வேட்டை, நிலத்தில் வைரங்கள், ஆந்திரத்தில், அனந்தப்பூர், ராயலசீமை, கர்னூல்