.jpg)
Post No. 12,095
Date uploaded in London – – 7 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பகுதி 1 நேற்று வெளியானது.
இரண்டாவது கதை
சாந்திபூரில் ஒரு கற்றறிந்த பிராமணன் இருந்தான் . அவன் பெயர் தேவ மாலி. ஏராளமான செல்வம் இருந்தும் மகப்பேறு இல்லாத குறை இருந்தது. நீண்ட பிரார்த்தனைக்குப் பின்னர் நாரதர் அவன் முன் தோன்றி, யாக யக்ஞங்கள் செய்தால் குழந்தை பிறக்கும் என்றார் . அவனும் அப்படியே செய்தான். யாகத் தீயிலிருந்து இரண்டு குழந்தைகள் தோன்றின ஒரு குழந்தைக்கு யக்ஞ மாலி என்றும் இரண்டாவது குழந்தைக்கு சுமாலி என்றும் நாமகரணம் செய்தான். பின்னர் அவன் தன் மனைவியுடன் கானகம் சென்று வானப் பிரஸ்தாச்ரமம் கடைப்பிடித்தான். அங்கு ஒருநாள் ஜானந்தி முனிவர் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்வதைப் பார்த்து தனக்கும் அருளுரை வழங்க வேண்டும் என்றும் தான் பார்கவ (பிருகு முனிவர்) குலத்தில் தோன்றியவன் என்றும் சொன்னான் ; அவர் விஷ்ணுவை உபாசிக்கும்படி சொல்லவே அவனும் மனைவியும் அவ்வாறே செய்து வைகுண்டப் பிராப்தி ஆனார்கள் .
இதற்கிடையில் இரண்டு பிள்ளைகளும் வளர்ந்து திருமணம் முடித்து பிள்ளைபெற்று வாழ்ந்தனர். யக்ஞ மாலி நல்லவனாக வாழ்ந்து தந்தையைப்போலவே விஷ்ணுவை வணங்கி ஏகாதசி விரதம் கடைப்பிடித்து வாழ்ந்தான்; சுமாலியோவெனில் தவறான வழியில் சென்று கடைந்தெடுத்த, கலப்படமில்லாத அயோக்கியன் என்று பெயர் எடுத்தான் .
அவன் செய்த பெரும் தவறுகளுக்கு எல்லாம் கிராம அதிகாரி தண்டனை கொடுத்தார்; சகோதரன் மீது பரிதாபம் கொண்டு யக்ஞ மாலி அவனைக் காப்பாற்றினான் ; ஆண்டுகள் உருண்டோடின. இருவரும் ஒரே நாள் இறக்கவே, சுமாலியை யமதூதர்கள் அடித்து உதைத்து யமலோகத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள் . அதே நேரத்தில் யக்ஞமாலியை உபசாரங்களுடன் வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார்கள். தனது சகோதரனின் துயரத்தைப் பார்க்கச் சகிக்காத யக்ஞமாலி தனது ஏகாதசி விரத புண்ணியத்தில் ஒரு பகுதியை சகோதரன் சுமாலிக்கு கொடுக்கவே எம தூதர்கள் அவனை விடுவித்தனர் ; இருவரும் வைகுண்டம் ஏகினர். ஏகாதசியின் மகத்துவம் அவ்வளவு மகத்தானது .
Xxx
மூன்றாவது கதை
தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமானது ருக்மாங்கதன் கதை ஆகும். இது நாரத புராணத்தில் உளது.
ருக்மாங்கதன், விதர்ப்ப நாட்டை ஆண்டுவந்த மன்னன் ; அவனுடைய மனைவி பெயர் சந்தியாவலி ; அவர்களுடைய மகன் பெயர் தர்மா ங்கதன். இந்த மன்னன் ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதில் கடும் சட்டங்களை போட்டான். நாட்டு மக்களும் ஏகாதசி பட்டினி கிடக்கவேண்டும் அல்லது கடுமையான தண்டனை என்று அறிவித்தான். மன்னன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்பது பழமொழி. அவர்களும் அப்படியே விரதம் இருந்தனர் ; இதனால் எல்லோருக்கும் வைகுண்டப் பிராப்தி கிடைத்தது. யமலோகத்துக்கு வாடிக்கையாளர் Customers குறைந்தது; பிசினஸ் Business இல்லாமல்போன யமன் பிரம்மாவிடம் Complaint கம்பளைண்ட் (புகார்) கொடுத்தான். அவரும் விசாரிக்காமல் யாரையும் தண்டிக்க முடியாது; நானும் அவனை எடைபோட்டு தண்டனை கொடுக்கிறேன் என்றார் .
தேவலோக அப்சரஸை அழைத்து நீ அழகிய பெண்ணாகச் சென்று ருக்மாங்கதனை காதல் வலையில் சிக்க வை; கிட்ட நெருங்கும்போது ஏகாதசி விரத்தைக் கை விட்டால்தான் அது நடக்கும் என்று சொல் என்றார் பிரம்மா .
அவளும் பூமியில் அவதரித்து மோகினி என்ற பெயரில் பூலோக ரம்பை என வலம் வந்தாள் ; அவளது காம வலையில் சிக்கிய மன்னன், எட்டு ஆண்டு இன்ப வாழ்வுக்குப் பின்னர், அவளை மணம் முடிக்க எண்ணினான். அவளோ வேண்டும் வரம் எல்லாம் தந்தால் கல்யாணம் கட்டலாம் என்றாள் . மன்னனும் மசிந்தான் . ஒரு ஏகாதசி வந்தபொழுது அதைக் கைவிட வேண்டும் என்று மன்னனுக்கு மோகினி கட்டளையிட்டாள் ; வேண்டுவன யாவும் தருவேன் விரதத்தைக் கைவிட முடியாது என்றான் . இருவரும் முதல் மனைவியான சந்தியாவலீயிடம் முறையிட்டனர். அவளும் ஏகாதாசியின் மகத்துவத்தைக் சொன்னாள் . அப்படியானால் உங்கள் மகனை உயிர்ப் பலியாகக்கொடு ; நான் விரதம் பற்றிய விஷயத்தை விடுகிறேன் என்று Condition கண்டிஷன் / நிபந்தனை போட்டாள் . மகன் தர்மாங்கதனும் தந்தையின் ஏகாதசி விரதம் காக்க உயிர்த்தியாகம் செய்யத் தயார் என்றான். ருக்மாங்கதன், அவனை வெட்டுவதற்காக கத்தியை உருவியபோது விஷ்ணுவே அவர்கள் முன்னால் தோன்றி மூவரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார்.
ஒரு வருடத்தில் குறைந்தது 24 ஏகாதசிக்கள் வரும். ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரும் அதற்கான காரணமோ கதையோ இருக்கும். அவைகளை அடுத்த பகுதியில் காண்போம்.
To be continued…………………………..
Xxx suham xxxxx
tags- ஏகாதசி, மோகினி, சந்தியாவலீ, தர்மாங்கதன் ருக்மாங்கதன், தேவ மாலி யக்ஞ மாலி ,சுமாலி