
Post No. 12,109
Date uploaded in London – – 9 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

தேவியர் தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும் பதில் சொன்னால், உங்களுக்கு தேவி பக்தன் என்ற பட்டத்தை பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் தகுதி கிடைக்கும் .
1.மதுரையில் வணங்கப்படும் தேவியின் பெயர் என்ன?
2.காமக்கண்ணி என்பது பிரபல கோவிலில் உள்ள தேவியரின் பெயர் என்பதை உ.வே.சாமிநாத அய்யரும் , காஞ்சி மஹாபெரியவ ரும் கூறியுள்ளனர். அந்த தேவியின் ஸம்ஸ்க்ருதப் பெயர் என்ன?
3.நாகப்பட்டினத்தில் வணங்கப்படும் தேவியின் பெயர் என்ன?
4. திருமீயச்சூரில் எந்த தேவியை வணங்க எல்லோரும் போகிறார்கள்?
5. காசி விஸ்வநாதரின் மனைவி யார் ?
6.சிவாஜி மஹாராஜருக்கு அருள் செய்த தேவியின் பெயர் என்ன?
7. ஜம்மு வட்டாரத்தில் ஒரு பிரபல குகைக்கோயில் உளது. அதில் குடி கொண்டிருக்கும் தேவி யார் ?
8. கேரளத்தில் பொதுவாக தேவிக்கு வழங்கும் பெயர் என்ன ?
9. சிறுவாச்சூரில் அருள் வழங்கும் அம்மன் யார் ?
10. சமயபுரம் கோவில் அம்மன் பெயர் என்ன?

விடைகள்
1.மதுரை மீனாட்சி அம்மன் 2. காஞ்சி காமாட்சி அம்மன், 3. நாகை நீலாயதாட்சி , 4.லலிதாம்பிகை , 5. காசி விசாலாட்சி , 6..பவானி தேவி , 7.வைஷ்ணவி தேவி, 8.பகவதி, 9.மதுர காளி அம்மன் , 10.சமயபுரம் மாரியம்மன் கோவில்.
–subham—
Tags- தேவியர் பத்து, Quiz, சமயபுரம், வைஷ்ணவி தேவி