
Post No. 12,112
Date uploaded in London – – 10 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
சென்னை தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும் பதில் சொன்னால், உங்களுக்கு மதராஸி அல்லது சென்னைக்காரன் என்ற பட்டத்தை வழங்குகிறோம் :-
1.சென்னை வேளச்சேரியில் இருக்கும் புகழ்பெற்ற கோவிலின் பெயர் என்ன?
2.திருவொற்றியூரில் என்ன கோவில் இருக்கிறது?
3.சென்னை அல்லிக்கேணி பெருமாள் யார்?
4.வடபழனி என்ற பெயர் ஏன் உண்டாயிற்று?
5.சென்னையில் பெரிய அனுமார் எங்கே காட்சி தருகிறார்?
6. கபாலி என்றால் என்ன ? சென்னை மக்களிடையே இந்தப் பெயர் அதிகம் காணப்படுவது ஏன்?
7.சத்ரபதி சிவாஜி வணங்கிய சென்னைக் கோவில் எது ?
8. எட்டு லெட்சுமி கோவில் சென்னையில் எங்கே கட்டப்பட்டுள்ளது?
9.சென்னையை தருமமிகு சென்னை என்று ராமலிங்க சுவாமிகள் பாடினார் .அவர் பாடிய கோவில் எது?
10.திருவான்மியூர் கோவிலில் குடிகொண்ட இறைவன், இறைவி பெயர்கள் என்ன?
Xxxx

Answers
1.தண்டீஸ்வரர் கோவில் ; கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் என்னும் சிவன்; சஷ்டியப்தபூர்த்தி செய்வதற் கு பலரும் வரும் கோவில் .
2. ஒற்றீஸ்வரர் எனும் பாடல் பெற்ற சிவன் கோவில். சென்னையிருந்து 12 கிலோமீட்டர் தொலைவு .
3.பார்த்த சாரதிப் பெருமாள் கோவில்; ஆழ்வார்களால் பாடப்பெற்றது. சுவாமி விவேகானந்தரால் புகழப்பட்டது
4.முருகன் கோவில் இருப்பதால் ; வடபழநி : பழைய பெயர் புலியூர்க்கோட்டம்
“அசைதலும் உரியன் அதா அன்று” என்று திருவாவினன் குடிப்பகுதியிலே திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பாடினார். இப்படி இவர் பாட, தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள பழநி முருகன் கோயிலிலே பழனி ஆண்டி, இரண்டு முறை அசைந்து விட்டார். முதலில் அமைந்தது தென்பழநி என்றமையால், வடக்குப் பகுதியில் அமைந்த இப்பழநி, வடபழநி என்றாகி விட்டது..
5.நங்க நல்லூர் ஆஞ்ச நேயர் கோவில் ; 35 அடி உயரம் ; 150 டன் எடையுள்ள அனுமன் சிலை
6. சென்னை மயிலாப்பூரில் பாடல் பெற்ற கபாலீச்வரர் கோவில் இருப்பதால் சென்னனயில் வசிப்போர் குழந்தைகளுக்கு இந்தப் பெயர் சூட்டுவர். கபாலி என்பது சிவனின் பெயர். கபாலம் எனப்படும் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்தவர் சிவன் ; 11 ருத்ர்களின் பெயர்களில் ஒன்று .
7. சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவில்;3 அக்டோபர் 1677 அன்று மராத்தியப் பேரரசர் சிவாஜி காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து அம்மனை தர்சனம் செய்ததாக, இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
8.அஷ்டலெட்சுமி கோவில் சென்னை பெசண்ட நகரில் கடற் கரையை ஒட்டி இருக்கிறது .5 ஏப்ரல் 1976-இல் அகோபில மடத்தின் 44வது ஜீயர் வேதாந்த தேசிக யதீந்திர மகாதேசிகன் தலைமையில் அஷ்டலட்சுமி கோயில் குடமுழுக்குடன் நிறுவப்பட்டது.
9.ராமலிங்க சுவாமிகள் பாடிய கோவில் கந்தகோட்டம் எனும் முருகன் கோவில். சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது.
10.திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சென்னை—புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில், இருக்கிறது இங்கு மூலவர் பெயர் –மருந்தீசுவரர் தாயார் பெயர்–திரிபுரசுந்தரி அம்மன்
–subham—
Tags- சென்னைப் பத்து, கந்தகோட்டம், கபாலி