
Post No. 12,131
Date uploaded in London – 14 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
யமனின் 14 பெயர்கள்!
ச.நாகராஜன்
யமனின் 14 பெயர்கள்!
ம்ருத்யு என்றும் காலன் என்றும் யமன் என்றும் அழைக்கப்படும் தர்மதேவதையை நினைத்தால் பயப்படாதவர் யார்?
நரக சதுர்த்தசி அன்று யமனை அவனது 14 பெயர்களைச் சொல்லி நாம் வணங்குவது வழக்கம்.
அந்த 14 பெயர்கள் இதோ:
1) யமன் 2) தர்மராஜன் 3) ம்ருத்யு 4) அந்தகன் 5) வைவஸ்வதன் 6) காலன் 7) சர்வபூதக்ஷயன் 8) ஔதும்பரன் 9) தத்னன் 10) நீலன் 11) பரமேஷ்டி 12) வ்ருகோதரன் 13) சித்ரன் 14) சித்ரகுப்தன்
மதன பாரிஜாதத்தில் (ப்ரு 296) வரும் ஸ்லோகம் இது:
யமாய தர்மராஜாய மிருத்யவே சாந்தகாய ச |
வைவஸ்வதாய காலாய சர்வபூதக்ஷயாய ச ||
ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே |
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம: ||
சந்த்யாவந்தன காலத்தில் தெற்கு திசையை நோக்கி இந்த மந்திரங்களைச் சொல்லி யமனை வழிபடுவது காலம் காலமாக இருந்து வரும் மரபாகும்.
இன்னொரு 14 பெயர்களாலும் யமன் அழைக்கப்படுகிறான்.
அவையாவன 1) காம 2) க்ருபணதா 3) சந்தாப 4) அஜஸ்ர 5) க்ரோத 6) அக்னி 7) பாப 8) ஹீனதா 9) ஈர்ஷ்யா-நிந்தா 10) தரித்ரதா 11) அபயஷ 12) குசங்க 13) தனபோஷண 14) தத்காலி இந்த பதிநான்கும் கூட 14 யமன்கள் என்று கூறப்படுகின்றன. இவற்றோடு அகங்காரத்தையும் சேர்த்துக் கொள்வர்.
பதினான்கு லோக மாதாக்கள்
லோகமாதாக்கள் பொதுவாக ஏகாதச லோகமாதாக்கள் என்று அழைக்கப்படுவர். அதாவது 11 லோகமாதாக்களை ச்ராத்த தத்வம் கூறுகிறது:
கௌரி பத்மா சசி மேதா சாவித்ரி விஜயா ஜயா |
தேவசேனா ஸ்வதா ஸ்வாஹா மாதரோ லோக மாதர: ||
மாதரோ என்றால் குல தேவதைகள் என்று பொருள் கொள்வர்.
இந்த 11 லோகமாதாக்களுடன் 1) த்ருதி 2) புஷ்டி 3) துஷ்டி ஆகிய மூவரையும் சேர்த்து 14 லோகமாதாக்கள் என்று சொல்கிறது கோபில ஸ்ம்ருதி (1/11-12)
ஆடைகளை அணிவிக்க வேண்டிய 14 நக்ஷத்திரங்கள்!
வஸ்த்ராபரண நக்ஷத்திரங்கள் என்று கூறப்படுபவை 14.
இதை ப்ருஹத் சம்ஹிதா 71 அத்தியாயத்தில் காணலாம்.
அஸ்வினி நக்ஷத்திரத்தில் புதிய ஆடை அணிந்தால் ஏராளமான ஆடைகள் பெருகும்.
ரோஹிணி நக்ஷத்திரத்தில் அணிந்தால் தன ப்ராப்தி அதாவது செல்வம் சேரும்.
புனர்வசு நக்ஷத்திரத்தில் புத்தாடை அணிந்தால் சுபம்.
புஷ்யம், பல்குனி நக்ஷத்திரங்களில் அணிந்தால் செல்வம் சேரும்.
ஹஸ்த நக்ஷத்திரத்தில் அணிந்தால் கர்ம சித்தி அதாவது காரிய வெற்றி உண்டாகும்.
சித்திரை நக்ஷத்திரத்தில் அணிந்தால் சுபம் உண்டாகும்.
ஸ்வாதி நக்ஷத்திரத்தில் அணிந்தால் உத்தம போஜனம் அதாவது நல்ல சாப்பாடு கிடைக்கும்.
விசாக நக்ஷத்திரத்தில் அணிந்தால் ஜனபிரியராகலாம். அதாவது மக்களால் போற்றப்படுவர்.
அனுராதா நக்ஷத்திரத்தில் அணிந்தால் நண்பர்களின் சேர்க்கை ஏற்படும்.
உத்தராஷாடா நக்ஷத்திரத்தில் அணிந்தால் பிஷ்டான்னம் கிடைக்கும்.
தனிஷ்டா நக்ஷத்திரத்தில் அணிந்தால் உணவு கிடைக்கும்.
உத்தராபாத்ர நக்ஷத்திரத்தில் அணிந்தால் புத்ரப் பேறு ஏற்படு.
ரேவதி நக்ஷத்திரத்தில் அணிந்தால் ரத்ன லாபம் ஏற்படும்.
நட்சத்திரங்களை நாம் தமிழில் அழைப்பது இப்படி:
புனர்வசு – புனர்பூசம்
புஷ்யம் – பூசம்
பல்குனி – பூரம்
அநுராதா – அனுஷம்
உத்தராஷாடா – உத்தராடம்
தனிஷ்டா – அவிட்டம்
உத்தராபாத்ரா -உத்திரட்டாதி
***