QUIZ சங்கீத (முத்து சுவாமி தீட்சிதர்) பத்து QUIZ (Post No.12,144)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,144

Date uploaded in London – –  17 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

1.சங்கீத மும்மூர்த்திகள் யாவர் ?

2.சங்கீதம் கற்க வருவோருக்கு தீட்சிதரின் க்ருதியைத்தான் முதலில் சொல்லித் தருவார்கள் . அது என்ன பாடல் ?

3.தீட்சிதரின் காலம் என்ன? பிறந்த ஊர் எது?

4.ஒவ்வொரு பாடகரும் இறுதியில் ஒரு முத்திரை வைப்பர்; எதை வைத்து தீட்சிதர் க்ருதி என்று கண்டுபிடிக்கலாம் ?

5.தீட்சிதர் பாடிய முதல் க்ருதி எது ? எங்கே பாடினார் ?

6.காஞ்சிபுரத்தில் யாரிடம் தீட்சிதர் தத்துவம் கற்றார்?

7.தீட்சிதரை தஞ்சாவூரில் சந்தித்த பிரபல பாடகர் யார் ?

8.எட்டயபுரத்தின் வறட்சியைக் கண்டு மனம் நொந்து,

 என்ன கீர்த்தனை பாடி மழையை வருவித்தார் ?

9.கங்கையில் தீட்சிதருக்கு என்ன கிடைத்தது ?

10.நவாவர்ண கிருதிகள் என்பது என்ன ?

XXX

விடைகள்

1. தியாகராஜ சுவாமிகள், முத்து சுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்

2. ஹம்சத்வனி ராகத்திலுள்ள ‘வாதாபி கணபதிம் பஜே ‘.

3. பிறந்த ஊர் திருவாரூர் . அவர் வாழ்ந்த காலம் 1775-1835.

4. அவர் பாடல்கள் அனைத்தும் ‘குரு குஹ’ என்ற முத்திரையுடன் முடியும் .

5.திருத்தணியில் முருகன் மீது பாடினார். மாய மாளவ கெளல ராகம் ;

‘ஸ்ரீ நாதாதி குருகுஹோ ஜயதி ஜயதி’.

6.உபநிஷத் பிரம்மன்

7.சாமா சாஸ்திரிகள் (சியாமா சாஸ்திரிகள்)

8.ஆனந்தாமிர்தகர்ஷினி – அமிர்தவர்ஷினி ராகம்

9. வீணை கிடைத்தது

10. திருவாரூரில் குடிகொண்டுள்ள அன்னை கமலாம்பாள் மீது தீட்சிதர் பாடியவை நவாவர்ண கிருதிகள். தேவியானவள் ஸ்ரீ சக்ரத்தில் ஒன்பது முக்கோண  கோட்டையின் நடுவில்  அமர்ந்திருப்பது நவ ஆவரணம் எனப்படும் . இதில் அவர் வெவ்வேறு சம்ஸ்க்ருத வேற்றுமைகளை (விபக்தி) வைத்துப்  பாடினார் . தீட்சிதர் சுமார் 440 கிருதிகளைப் பாடியுள்ளார் .

—subham—

Tags– மழை , அமிர்தவர்ஷினி, எட்டயபுரம், முத்து சுவாமி தீட்சிதர் , நவாவர்ணம் , கிருதிகள், வாதாபிம் , குருகுஹ

Leave a comment

Leave a comment