முஸ்லீம்களை படுகொலை செய்த வெள்ளைக்காரன்! (Post No.12,158)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,158

Date uploaded in London – –  20 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பஞ்சாப் மாநில அமிர்தசரஸில் ஜாலியன் வாலா பாக் தோட்டத்தில் 400 பேரை, குருவி சுடுவது போல, வெள்ளைக்காரன் சுட்டுக்கொன்றதை நாம் அறிவோம். இது தவிர கட்டபொம்மன், பகத் சிங், சுகதேவ், ராஜ குரு போன்றோரைத் தூக்கில் போட்டுக் கொன்றதை நாம் அறிவோம். ஆனால் இது தவிர பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்ததை பலரும் அறியார். இதனால்தான் சுவாமி விவேகானந்தர் அவரது பிரசங்கத்தில் இந்து மஹா சமுத்திரத்தில் உள்ள அத்தனை சகதியையும் உங்கள் மீது வீசினாலும் போதுமான பதிலடி கொடுத்தது ஆகாது என்று வெள்ளைக்காரர்களை ஏசினார் .

பிரின்ஸ் ஆப் வேல்ஸ் Prince of Wales இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்தபோது அவருடன் வந்த சிட்னி லோ என்ற பத்திரிக்கை நிருபர் எ விஸன் ஆப் இந்தியா  (A Vision of India by Sidney Low; year 1906) என்ற நூலில் தரும் தகவல் இதோ:

“அதோ ஹுமாயுன் கல்லறை கண்களில் படுகிறது. காலை இளஞ் சூரியன் வெளிச்சத்தில் காணும் போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின் செந்நிற வானத்தில் காணும்போதும் கடந்தகாலத்தில் இந்தக் கல்லறையில் நடந்த புனிதமற்ற ஒரு காட்சி மனக் கண்களில் ஓடுகிறது. 1857-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் இந்த இடத்திலிருந்துதான் ஹாட்சனும் (Hodson) அவனுடைய குதிரை வீரர்களும் கடைசி மொகலாய அரசனை வெளியே இழுத்து வந்தார்கள். அந்த அரசன் சிப்பாய்கள் நடத்திய கலகத்தின் பொம்மை அரசன் (Puppet King of Rebellion ) (1857ம் ஆண்டு சுதந்திர போரை வெள்ளைக்காரர்கள் சிப்பாய்க் கலகம் என்ற சொல்லால் ஏசுவர் ).

நடு நடுங்கிக்கொண்டிருந்த அந்தக் கிழட்டு  சதிகாரனை , இங்கிலாந்தின் பிடியிலி ருந்தும் சிறையிலிருந்தும் ஹுமாயுன் கல்லறை காப்பாற்ற முடியவில்லை. அவனுடைய மகன்களின் கொடூர முடிவுகளையும் காப்பாற்ற இயலவில்லை. துணிச்சல் மிக்க, எதற்கும் அஞ்சாத ஹாட்சன் (Hodson) அங்கே ஒளிந்து கொண்டிருந்த மொகலாய இளவரசர்களை மறுநாள் (புரட்சி வெடித்த மறுநாள்) வேட்டை ஆடினான்.

நல்ல உயரமானவன் (ஹாட்சன்); செம்ப ட் டைத் தலையன்; நீல நிற கண்களுடையவன்; ஆங்கிலேயர்களின் கோபம் முழுவதையும் இதயத்தில் கொண்டவன். அந்தக் கல்லறையை  சூழ்ந்திருந்த கும்பல் நின்ற இடத்தில் 100 குதிரை வீரர்களுடன் பாய்ந்தான் அந்த கொரில்லா வீரன்.

பழிவாங்கும் அந்த மனிதன் முன்னால் , முஸ்லீம்களின் வெறி பின்வாங்கி ஓடியது. கல்லறையின் தோட்டத்தில் நின்றவர்கள் கைகளில் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் பத்தே வீரர்களின் உதவியால் பறிமுதல் செய்தான். ஆயிரம் வாட்களையும் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தான்  கல்லறைக்குள் ஒளிந்து கொண்டிருந்த ஆட்களை வெளியே கொணர்ந்து கொலைகார டில்லி வாயிலுக்கு (Delhi Gate) விரட்டிச் சென்றான். தன்னுடைய கையில் இருந்த துப்பாக்கியால் அவர்களைச் சுட்டுக்கொன்றான். அதை பார்த்துக்கொண்டிருந்த முகமதியர்கள் வெலவெலத்து, நடுநடுங்கி பயத்தில் ஸ்தம்பித்து நின்றார்கள் . இரத்தக் களரி ; கொலைவெறிதான். ஆயினும் இதைச் செய்த ஹாட்ஸனின் செயல்பற்றி அவசரப்பட்டு விமர்சனம் செய்து விடாதீர்கள். அதே ஆண்டில்தான் கான்பூர் படுகொலை நடந்தது என்பதை நாம் (பிரிட்டிஷ்காரர்கள் ) நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் “

1906ம் ஆண்டில் சிட்னி லோ எழுதியது

(இணைத்துள்ள ஹாட்ஸன் படத்தையும் காணவும் )

–சுபம்— .

tags- ஹாட்சன் , சிட்னி லோ , வெள்ளைக்காரன், முஸ்லீம்கள், படுகொலை 

Leave a comment

Leave a comment