
Post No. 12,157
Date uploaded in London – – 20 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.தமிழில் ஓரெழுத்து, ஐந்தெழுத்து, எட்டெழுத்து , ஆறெழுத்து (ஏகாட்சரம், பஞ்சாட்சரம் , அஷ்டாக்ஷரம், சடாக்ஷரம் ) என்றெல்லாம் போற்றப்படும் மந்திரங்கள் என்ன?
2.சந்தக் கவிகளாலேயே முருகனைப் போற்றியவர் யார் ?
3.தமிழ் மொழியில் மஹாபாரதம் பாடிய முக்கியப் புலவர்கள் யார்?
4.தமிழ் மொழியில் திருவிளையாடல் புராணம் பாடிய முக்கியப் புலவர்கள் யார்?
5.ஆதிசங்கரர் வகுத்த அறு சமயம் யாவை ?
6.விநாயகர் அகவல் பாடியவர் யார்?
7.முருகன், கணபதி, நடராஜர் வதைத்த முக்கிய அசுரர்கள் பெயர்கள் என்ன?
8.சிவபெருமான் எரித்த முப்புரங்களுக்கு உரிய அசுரர்கள் யார்?
9.பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை எது?
10. துதிகளில் 5, 8, 10, 100, 108, 1008 எண்களில் பாடல்களோ ஸ்லோகங்களோ இருந்தால் அவற்றை எப்படி அழைப்பர் ?
xxxxx

விடைகள்
1.ஓம் (1) , நமசிவாய (5), ஓம் நமோ நாராயணாய (8), சரவணபவ (6)
2.அருணகிரிநாதர்; திருப்புகழில்
3.வில்லிபுத்தூரார் (பாதி கிடைத்தது); பெருந்தேவனார் (முழுதும் கிடைக்கவில்லை)
4.பரஞ்சோதி முனிவர் , பெரும்பற்றப் புலியூரார்
5.காணாபத்யம் (பிள்ளையார் ); கெளமாரம் (குமரன்/முருகன்); செளரம் (சூரிய வழிபாடு), சாக்தம் (சக்தி); சைவம் (சிவன்), வைஷ்ணவம் (விஷ்ணு).
6. ஒளவையார் (சங்க கால ஒளவையார் வேறு)
7.சூரபத்மன் (முருகன்); கஜமுகாசுரன் (கணபதி); முயலகன் (நடராஜர்)
8.தாரகாக்ஷன் , கமலாக்ஷன், வித்யுன்மாலி
9. மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்
10. பஞ்சகம் /பஞ்ச ரத்ன ம் (5), அஷ்டகம் (8); பதிகம் (10; பல ஸ்ருதியுடன் 11); சதகம் (100), அஷ்டோத்தரம் (108); ஸஹஸ்ரநாமம் (1008).
—subham—
Tags- தெய்வத் தமிழ், பத்து, QUIZ