
Post No. 12,162
Date uploaded in London – – 21 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.பதிற்றுப்பத்து என்றால் என்ன ?
2.பதிற்றுப்பத்து நூல் யார் மீது எழுதப்பட்டது ?
3.பதிற்றுப்பத்து நூலைப் பாடியவர் யார் ?
4.இந்த நூலில் யார், யார் வரலாறு உள்ளது?
5.இந்த நூல் கூறும் ஆட்சி ஆண்டுகளில் என்ன வியப்பான விஷயம் தெரிகிறது?
6.இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் யார்?
7.இந்த நூலில் உள்ள மர்மச் செய்தி, அதிசயச் செய்தி என்ன ?
8.இந்த நூலிலிருந்து நமக்குக் கிடைக்கும் சேரமன்னர்களின் வேறு பெயர்கள் என்ன ?
9.இந்த நூலில் அக்குரன் பற்றி என்ன வியப்பான தகவல் கிடைக்கிறது?
10. புலவர்க்குக் கிடைத்த வியப்பான பரிசுகள் என்ன ?
XXXXX

ANSWERS
1.பதிற்றுப்பத்து என்பது சங்க கால நூல் . எட்டுத்தொகையில் ஒரு நூல்.
இதன் பொருள் 10 x 10 பாடல்கள்
2.சேர மன்னர்களின் கொடைச் சிறப்பையும், படை மறத்தையும் கூறும் வரலாற்று இலக்கிய நூல்
3. இந்த நூலில் முதல் பத்தும் இறுதிப்பத்தும் கிடைத்தில.; ஏனைய 8 x 10=80 பாடல்களைப் பாடியவர்கள் 8 புலவர்கள் ; அவர்களுடைய பெயர்கள்:குமட்டூர் கண்ணனார், பாலைக் கெளதமனார் , காப்பியாற்றுக் காப்பியனார் , பரணர், காக்கைபாடினியார் நச்செள்ளையார் , கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார்.
4.பதிற்றுப்பத்து நூலில் குறைந்தது எட்டு சேர மன்னர்களின் வரலாறு இருக்கிறது; அவர்களுடைய பெயர்கள் -இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானை செல்கெழுகுட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் , கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் , ஆடுகோட்பாடுச் சேரலாதன், செல்வக்கடுங்கோ வாழியாதன் பெருச்சேரல் இரும்பொறை , குடக்கோ இளஞ் சேரல் இரும்பொறை.
5.பொதுவாக ஒரு மன்னருக்கு 25 ஆண்டுகள் சராசரி ஆட்சி ஆண்டுகள் என்பது மேலை நாட்டுக் கணக்கு . ஆனால் எட்டு சேர மன்னர்கள் 259 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக நூலின் பதிகம் சொல்லுவதால் சராசரி ஆட்சி ஆண்டு 32 வருகிறது ; குப்தர்களைப் போலவே சீரான, அமைதியான, திறமையான அசரசாட்சியை இது காட்டுகிறது.
மேற்கூறிய மன்னர்கள், 58, 25, 25, 55, 38, 25, 17, 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகப் பதிகச் செய்யுட்கள் பகர்கின்றன.
6.இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ; 58 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். பிற்கால நூல் சிலவற்றில் கரிகாலன் இதை விட நீண்ட ஆண்டுகள் ஆண்டதாகச் சொன்னாலும் அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. இங்கு இலக்கிய ஆதாரம் இருக்கிறது
7. பாலைக் கெளதமனார் என்னும் அந்தணப் புலவரை என்ன வேண்டும் என்று பல்யானைச் செல்குழு குட்டுவன் கேட்டான். தானும் தனது பார்ப்பனியும் (மனைவி) நேராக சொர்க்கம் போக வேண்டும் என்று சொல்ல, அவர் சொன்னபடி பத்து வேள்விகள் செய்தபோது, அவர்கள் இருவரும் மாயமாய் மறைந்தனர்
8.சேரன் தவிர, அவர்கள் ஆதன், குட்டுவன், இரும்பொறை என்ற பெயர்காளாலும் அழைக்கப்பட்டனர் 3 ஆதன், 2 இரும்பொறை, இரண்டு குட்டுவன் , ஒரு சேரன் பெயர்கள் உள்ளன.
9.இரண்டாம் பத்தில் அக்குரன் போன்ற வள்ளல்தன்மை (கைவன்மை) என்று வருகிறது. இவர் தலை எழு வள்ளல் களில் ஒருவராக இருக்கலாம் அல்லது கர்ணன் ஆக இருக்கலாம் என்று உ.வே.சா. கருதுகிறார் .
10.ஆயிரக்கணக்கில் பொற்காசுகளும் , லட்சக் கணக்கில் பொற் துகளும் பரிசாகக் கொடுக்கப்பட்டுள்ளது. செங்குட்டுவன் தன் மகனையே பரணருக்குப் பரிசாகக் கொடுத்து, நாட்டின் ஒரு பகுதியை யும் அளித்தான் . குமட்டூர் கண்ணனாருக்கு 500 ஊர்களும் தென்னாட்டு வருவாய் ஒரு பகுதியும் கிடைத்தது. கபிலருக்கோ மலை உச்சி மீது நின்று கண்ணில் கண்ட ஊர்கள் அனைத்தும் உமக்கே சொந்தம் என்கிறான் செல்வக் கடுங்கோ வாழியாதன் .
—subham—
Tags– பதிற்றுப்பத்து, Quiz அக்குரன், சேரன் , ஆதன், குட்டுவன், இரும்பொறை