ஹிப்நாடிஸத்தை ஆதரித்த பிரபலங்கள்! (Post No.12,204)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,204

Date uploaded in London –  30 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஹிப்நாடிஸத்தை ஆதரித்த பிரபலங்கள்!

ச.நாகராஜன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein – physicist)

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் ஹிப்னாடிஸம் எனப்படும் மனோவசியக் கலையை உபயோகப்படுத்திய பிரபலங்களுள் ஒருவர்.

தனது கருத்துக்களுக்கு மிகவும் உதவியாக ஹிப்னாடிஸம் இருப்பதாக அவர் கருதினார். தியரி ஆஃப் ரிலேடிவிடி என்ற பிரபலமான ஒப்புமைத் தத்துவம் கூட இப்படி அவருக்கு உதித்த ஒன்று தான் என்று சிலர் கருதுகின்றனர்.

வின்ஸ்டன் சர்ச்சில் (இங்கிலாந்து பிரதம மந்திரி) (Winston Churchill) (prime minister)

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் பிரதம மந்திரியாக இருந்து போரை எதிர்கொண்ட வின்ஸ்டன் சர்ச்சில் இரவு முழுவதும் திட்டமிடுதல், பல்வேறு உத்திகளைத் தீர்மானித்தல், போர் நிலவரங்களைக் கவனித்தல் என்று இது போன்றவற்றில் கடுமையாக ஈடுபட்டு உழைத்தவர். ஆகவே பகல் நேரத்தில் அவர் ஹிப்னாடிஸ டேப்புகளைக் கேட்பது வழக்கம். அவர் புத்துணர்ச்சி பெற இவை உதவியதாம்.

ஜாக்குலின் கென்னடி (Jackie Kennedy)

பிரபல அமெரிக்க ஜனாதிபதியான கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடி ஒரு ஹிப்னாடிஸ சிகிச்சையாளரிடம் பல அமர்வுகளை எடுத்துக் கொண்டார். தனது கணவர் கோரமாக கொலை செய்யப்பட்ட துக்கத்திலிருந்து அவரால் சீக்கிரம் மீளவே முடியவில்லை. ஆகவே அவர் இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டார்.

லார்ட் டென்னிஸன் ஆல்ஃப்ரட் (Lord Tennyson Alfred)

பிரபல ஆங்கிலக் கவிஞரான லார்ட் டென்னிஸன் தனது கவிதைகள் அனைத்தையுமே ஹிப்னாடிஸ நிலையில் இருந்து படைத்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த ஹிப்நாடிஸ மனோநிலைக்குச் சென்ற போது தான் அவரது படைப்பாற்றல் திறன் முழு அளவில் செயல்பட்டதாம்.

இது பற்றிய நிறையச் செய்திகள் உண்டு.

கெவின் காஸ்ட்னர் (நடிகர்) (Kevin Costner)

பிரபல நடிகரான கெவின் காஸ்ட்னர்  வாட்டர்வோர்ல்ட் (Waterworld) என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது தனது ஹிப்னாடிஸ்ட் சிகிச்சையாளரை தனது சொந்த விமானத்தில் அழைத்து வரச் செய்தார். அவருக்கு கடல் பயணத்தாலும் கடலில் படமெடுக்க வேண்டி வந்ததாலும்  கடல் சம்பந்தமான வியாதி ஏற்பட்டதால் அவரால் சொன்னபடி திரைப்பட ஷெட்யூலுக்குப் போக முடியவில்லை. ஹிப்நாடிஸ சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு இந்த கடல் சம்பந்தமான வியாதி போயே போய் விட்டது!

ஜூலியா ராபர்ட்ஸ் (Julia Roberts) 

பிரபல நடிகையான ஜூலியா ராபர்ட்ஸ் அகாடமி விருது பெற்ற அமெரிக்க நடிகை. (பிறந்த தேதி 28-10-1967) உலகில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளுள் இவர் முன்னணியில் இருப்பவர். அவரே கூறினார் ஒரு முறை இப்படி: “நான் இளவயதில் திக்கித் திக்கி தான் பேசுவேன். ஆனால் ஹிப்நாடிஸத்தால் இப்போது திக்கல் போய் சரளமாகத் என்னால் பேச முடிகிறது” என்றார் அவர்.

கார்ல் ஜங் மற்றும் சிக்மண்ட் ஃப்ராய்ட் (Carl Jung and Sigmund Freud )

பிரபல விஞ்ஞானிகளான இந்த இருவரும் ஹிப்நாடிஸத்தை நன்கு பயின்று அதை தினமும் நடைமுறைப் பயிற்சியாகக் கொண்டிருந்தவர்கள். இதை வைத்தே ஜங் தனது நவீன உளவியல் சிகிச்சையை உருவாக்கினார்.

மொஜார்ட் (Mozart –  1756-91)

பிரபல இசை மேதையான மொஜார்ட் தனது பிரபலமான ‘“Cosi fan tutte” என்ற ஒபேராவை (opera) ஹிப்நாடிஸ ஆழ்ந்த நிலையில் இருக்கும் போது தான் உருவாக்கினார்.

இப்படி இந்தப் பட்டியல் மிக நீண்ட ஒன்று!

***

Leave a comment

Leave a comment