எப்போதும் நினைவில் இருத்த வேண்டியவர்கள்! (Post No.12,214)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,214

Date uploaded in London –  July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 எப்போதும் நினைவில் இருத்த வேண்டியவர்கள்!

ச.நாகராஜன் 

தூய்மை ஐந்து வகை

தூய்மை ஐந்து வகை.

1) சத்யம் 2) மனம் 3) இந்திரியங்களை அடக்குதல்

4) தயை 5) ஜலம்

சத்யசௌசம் மன: சௌசம்  சௌசமிந்த்ரியநிக்ரஹ: |

சர்வபூதே தயா சௌசம் ஜலசௌசம் ச பஞ்சமம் ||

–          கருட புராணம் 1 3. 37

*

சாக்ஷிகள் ஐந்து வகைப்படும்

சாக்ஷிகள் ஐந்து வகைப்படும்.

1)  லிகித: – எழுதப்பட்ட ஆவணம்

2) ஸ்மாரித:  – பார்த்ததை நேரில் விவரிப்பது

3) யத்ருச்சாபிக்ஞ – எதிர்பாராமல் வந்து ஊடையில் புகுபவர்

4) கூட: – ஒற்றன்

5) உத்தரசாக்ஷி – சாக்ஷி கூறுவதைக் கேட்பவர்

லிகித: ஸ்மாரிதஸ்சைவ யத்ருச்சாமிக்ஞ ஏவ ச |

கூடச்ஸோத்தரசாக்ஷீ ச சாக்ஷீ பஞ்சவித்ய: க்ருத: ||

–          நாரத ஸ்மிருதி 1.27

*

ஒரு சர்ஜனுக்குத் தேவையான குணங்கள்

ஒரு சர்ஜனுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் என்னென்ன?

சௌர்யம் – பயமின்மை

ஆசுக்ரியா – நளினமாகக் கையாளும் தன்மை

சஸ்த்ரதைக்க்ஷண்யம் – மிகுந்த கூர்மையான ஆயுதங்கள்

அஸ்வேதவேபது – வியர்வையொ அல்லது நடுக்கமோ இல்லாதிருத்தல்

அஸம்மோஹ: – குழப்பமின்றி இருத்தல்

பயமில்லாமல் கூரிய ஆயுதங்களைக் குழப்பமில்லாமல் நடுக்கமில்லாமல் வியர்வை சிந்தாமல் நளினமாகக் கையாள வேண்டும். அப்போது தான் தனது தொழிலில் அந்த சர்ஜன் ஒரு நிபுணன் என்று சொல்ல முடியும்.

சௌர்யமாசுக்ரியா சஸ்த்ரதைக்க்ஷண்யமஸ்வேதவேபது |

அசம்மோஹஸ்ச வைத்யஸ்ச சஸ்திரகர்மணி சஸ்யதே ||

–          சுஸ்ருதர் (சூத்ரம் V – 10)

*

எப்போதும் நினைவிலிருத்த  வேண்டியவர்கள்

வாழ்க்கையில் நாம் எப்போதும் நம் நினைவில் இருத்த வேண்டியவர்கள் ஐவர்.

1) பெற்ற தாயார்

2) தந்தை

3) குரு (வித்தையைக் கற்பித்தவர்)

4) தேசம் (தாய்நாடு)

5) தர்மோபதேஸ்தா – தர்மத்தை நமக்கு உபதேசித்தவர்

ஜனனீ ஜன்மதாதா ச சுவித்யாம் ப்ரததாதி ய: |

ராஷ்ட்ரம் தர்மோபதேஷ்டா ச பஞ்சகம் சந்ததம் ஸ்மரேத் ||

*

உணவு ஜீரணமாக நினைக்க வேண்டியவர்கள்

அடுத்து நாம் உண்ட உணவு நன்கு ஜீரணமாக வேண்டுமெனில் நினைக்க வேண்டியவர்கள்

அகஸ்த்யர்

கும்பகர்ணன்

சனி

வடவானலம் (அக்னி)

வ்ருகோதரம்  (பீமன்)

இந்த ஐவரையும் நினைத்து உண்டால் உண்ட உணவு நன்கு ஜீரணமாகும்.

அகஸ்தித கும்பகர்ணம் ச சனி ச வடவானலம் |

ஆஹாரபரிபாகார்தம் ஸ்மராமி ச வ்ருகோதரம் ||

*

வேத அறிவைப் பெறும் போது நினைக்க வேண்டியவர்கள்

அடுத்து வேத ஞானத்தைப் பெறும் போது நாம் நினைக்க வேண்டியவர்கள்

கணநாதர்

சரஸ்வதி

ரவி

சுக்ரன்

ப்ருஹஸ்பதி

கணநாதசரஸ்வதி  ரவிசுக்ரப்ருஹஸ்பதீன் |

பஞ்சைதானி ஸ்மரேந்நித்யம் வேதவாணீப்ரவ்ருத்தயே ||

***

Leave a comment

Leave a comment