
Post No. 12,215
Date uploaded in London – – 2 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.குறளில் எத்தனை அடிகள், பொதுவாக வெண்பாவில் எத்தனை அடிகள் இருக்கும் ? இதைப் போற்றும் பழமொழி என்ன ?
XXXXX
2.தமிழில் 4 வகைக் கவிகள் இருக்கின்றன அவை யாவை?
Xxxxx
3.ஆசு கவி என்றால் என்ன ?
xxxxxx
4.தாண்டக வேந்தர், வாகீசர் என்ற சிறப்புப்பட்டங்களைப் பெற்றவர் யார்?
xxxxx
5..தாண்டகம் என்றால் என்ன ?
XXXX
6. தாண்டகம் பாடிய ஆழ்வார் யார் ?
XXXX
7.சிந்து என்றால் என்ன ? யார் பாடிய சிந்து புகழ்பெற்றது?
Xxxx
8.கவிபாடலாம் என்ற நூலை எழுதி கவிதை இயற்று வதைக் கற்றுக் கொடுத்த தமிழர் யார் ?
Xxxx
9.அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்றால் என்ன ?
xxxxxx
10.உலகில் கண்தெரியாமல் இருந்து கவி படியோர் (அந்தகப் புலவர் ) யாவர் ?
xxxxxxxxxxx
விடைகள்
1.குறள் – 2 அடிகள், வெண்பா- பொதுவாக 4 அடிகள் ; ஆலும் வேலும் பல்லுக்குறுதி ; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி .. ஆனால் 12 அடிகள் வரையுள்ள பாடல்களும் வெண்பாவின் கீழ் வரும்
Xxxxxx
2.ஆசு கவி, சித்திரகவி மதுரகவி , வித்தாரகவி
Xxxxxx
3.ஒரு சொல்லையோ பொருளையோ கொடுத்து இதை வைத்துக் கவிபாடுங்கள் என்று சொன்னால் அடுத்த நிமிடத்தில் அந்தப் பொருளில் கவி பாடும் வல்லமை உடையோரை ஆசு கவி என்பர். காள மேகப் புலவர் இப்படிப் பல கவிதைகள் பாடியுள்ளார். ஸம்ஸ்க்ருதத்தில் आशु āśu என்றால் விரைவாக சுலபமாக என்பது பொருள் ; சிவனுக்கு ஆசுதோஷ என்ற பெயர் உண்டு. விரைவில் அவரை ஏமாற்றிவிடலாம். பஸ்மாசுரன் முதலியர் அவரைப் புகழ்ந்து பாடி எளிதில் வரம் பெற்றதை அறிவோம்..
Xxxxxx
4.அப்பர் என்னும் திருநாவுக்கரசர்.
Xxxxxx
5.தாண்டகம் என்பது தமிழ்ச் செய்யுள் வகையில் ஒன்று.
அறுசீரடி அல்லது எண்சீரடி பயின்ற செய்யுளினால் ஆடவரையோ கடவுளரையோ பாடுவதற்குரியது தாண்டகம் ஆகும். அறுசீரடியினாலாகிய தாண்டகத்தினைக் குறுந்தாண்டகம் என்றும் எண்சீரடியால் அமைந்ததினை நெடுந்தாண்டகம் என்றும் பன்னிருபாட்டியல் கூறும் .
Xxxxx
6.திருமங்கையாழ்வார்; அவர் பாடிய திருநெடுந்தாண்டகமும் ,திருநாவுக்கரசர் (அப்பர்) பாடிய திருத்தாண்டகமும்,ஒரே வகையான பாடல்கள்..
Xxxxx
7.சிந்து என்பது இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அது ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு. எடுப்பு 1, தொடுப்பு 1, உறுப்பு 3 என்று 5 உறுப்புகளைக் கொண்டது ‘சிந்து’ பாடல். அவை பல்லவி, அநுபல்லவி, மூன்று கண்ணிகள் அடங்கிய சரணம் ஆகும்.. காவடிச் சிந்து பல்லவியும் அநுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து புகழ்பெற்றது.
Xxxxx
8.தமிழ் அறிஞர் கி.வா .ஜகந்நாதன்
Xxxxx
9.சென்னை பூவிருந்தவல்லி கலியாணசுந்தர முதலியார் ஒரு அஷ்டாவதானி; அதாவது ஒரே நேரத்தில் எட்டுவித செயல்களைச் செய்யும் அற்புதம் நிகழ்த்துபவர். அவருடைய 60-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அவர்களுடைய மாணவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட மலர் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது. இதே போல பத்து செயல்களை ஒரே நேரத்தில் செய்பவர் தசாவதானி. பத்துக்கும் மேலான செயல்களை செய்வோர் சதாவதானி ; சதம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு 100 என்று பொருள். இப்படிச் செய்வோர் அனைவரும் கவிஞர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Xxxxx
10.உலகிலேயே மிகவும் பழைய குருட்டுக் கவிஞர் ரிக் வேதக் கவிதைகள் பாடிய தீர்க்கதமஸ் ஆவார். அவருடைய பெயர் தமிழில் நீண்ட இருள். கிரேக்க நாட்டில் இலியட் , ஆடிஸி ஆகிய இரண்டு இதிகாசங்களை இயற்றிய ஹோமர் ஒரு குருடர் ; தமிழில் இரட்டைப்புலவர்களில் ஒருவர் கண்பார்வையற்றவர் .அந்தகக் கவி வீர ராகவ முதலியார், ஆங்கிலப் புலவர் மில்டன் முதலிய பலரும் கண்பார்வை அற்றவர்களே.
–subham—
Tags-. குறள் , வெண்பா, தாண்டகம், சிந்து, அந்தக கவிஞர், அஷ்டாவதானி, தீர்க்க தமஸ், கவிதை, கேள்வி பதில், Quiz