
Post No. 12,219
Date uploaded in London – – 3 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Part 27 in Tamil Quiz Series. Go to June 9, 2023 for the first quiz.
1.ஆகஸ்ட் 15-ம் தேதி ஏன் கொண்டாடப்படுகிறது?
xxxxx
2.குடியரசு தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
xxxxx
3.ஜூன் 17, 1911-ல் தமிழ் நாட்டை உலுக்கிய சம்பவம் எது ?
xxxx
4.ஜனவரி 30 ம், அக்டோபர் 2-ம் காந்திஜியுடன் எந்த வகையில் தொடர்புடையன?
xxxx
5.பாரதி என்று சொன்னால் எந்த இரண்டு தேதிகள் உங்கள் நினைவுக்கு வரும்?
xxxx
6.ஜூன் 25ம் தேதியை ஏன் இந்தியர்கள் துக்க தினம் என்கின்றனர் ?
xxxx
7.அக்டோபர்20 , 1962ல் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம் பவம் எது ?
xxxxxx
8. இந்தியா அ ணுகுண்டு வெடித்து உலகையே வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகிய நாள் எது?
xxxx
9). 14-ம் தேதி தமிழர்களுக்கு எவ்வகையில் சிறப்புடைத்து ?
xxxxx
10.ஆடி 18-ம் நாளை தமிழர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் ?
Xxxxxx


விடைகள்
1). 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றது.
xxxxxx
2.ஜனவரி 26ம் தேதி; ஏனென்றால் 1950 ஜனவரி 26-ல் இந்தியா குடியரசு நாடு ஆகியது.
xxxxx
3.வீர வாஞ்சிநாதன் கலெக்டர் ஆக்ஷ் என்பவனை சுட்டுக்கொன்று தியாகி ஆன தினம்.
Xxxxx
(4). 1869 அக்டோபர் 2ம் தேதி காந்திஜி பிறந்தார் ; 1948 ஜனவரி 30ம் தேதி டில்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Xxxxx
5.செப்டம்பர் 11 அவர் இறந்த நாள்.; டிசம்பர் 11 அவர் பிறந்த நாள் .
xxxxxx
6). 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதியன்று, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி எமர்ஜென்சி என்னும் அவசர நிலைப் பிரகடனம் வெளியிட்டு எதிர்க் கட்சித்தலைவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தார்.
Xxxxx
7.சீனா இந்தியாவின் மீது படை எடுத்து லடாக்கின் ஒரு பகுதியை ஆக்ரமித்துக்கொண்டது
Xxxxx
8). 1974 மே 18-ம் தேதி ராஜஸ்தானிலுள்ள பொக்ரான் என்னும் இடத்தில் இந்தியா அதன் முதலாவது அணுகுண்டு வெடிப்பினை வெற்றிகரமாக நட த்தியது.
Xxxxx
9.ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை; ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினம். இவை தை மாத முதல் நாள், சித்திரை மாத முதல் நாள் ஆகும் .இது பெரும்பாலும் மாறாது .
Xxxx
10.ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படும் ஆடி 18ம் நாள் காவிரியில் புது வெள்ளம் வரும் நாள். நெல் சாகுபடி இந்தக் காவிரி நதியை சார்ந்துள்ளது ஏனைய நதிக் கரைகளுக்கும் மக்கள் சென்று உணவருந்தி மகிழ்வர்.
—-subham—-
Tags- QUIZ ,தேதிப் பத்து,