QUIZ காஷ்மீர் அதிசயங்கள் பத்து QUIZ (Post No.12,223)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,223

Date uploaded in London – –  4 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Part 28 in Tamil Quiz Series

1.காஷ்மீரில் சங்கராச்சாரியார் கோவில் எங்கு உள்ளது ?

xxxxx

2.காஷ்மீரில் ஏசுவின் சமாதி எங்கு உள்ளது?

xxxxx

3.காஷ்மீரில் முகமது நபியின் முடி எங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது ?

xxxxx

4.காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் நூலின் பெயர் என்ன அதை எழுதியவர் யார்

Xxxxx

5.காஷ்மீரை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்கள் எப்போது கைப்பற்றினர்?

xxxx

6.ஜம்மு-காஷ்மீரிலுள்ள புகழ் பெற்ற பனிக்கட்டி லிங்கக் கோவில், தேவியின் குகைக் கோவில் பெயர்கள் என்ன ?

xxxxxxx

7.காஷ் மீரின் தலை நகர் ஸ்ரீ நகர் என்பது தேவியின் பெயர். இந்த ஊரை யார் நிறுவினார் ?

xxxxx

8.ஸ்ரீ நகரில் படகு வீடுகளுடன் உள்ள பெரிய ஏரியின் பெயர் என்ன?

xxxxx

9.காஷ் மீரைச் சேர்ந்த, பிரிட்டிஷாரை எதிர்த்து சிறை சென்ற  பிரபல அரசியல்வாதி  யார் ?

xxxxxx .

10.காஷ் மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்த எந்த சட்டத்தை நரேந்திர மோடி அரசு ரத்து செய்தது ?

xxxxx

விடைகள்

1.காஷ்மீர் மாநிலத் தலை நகர் ஸ்ரீ நகரில் சங்கராச்சார்யார் குன்று இருக்கிறது.அந்தக் குன்றில் ஆயிரம் அடி உயரத்தில் ஆதி சங்கராசார்யார் கட்டிய ஜேஷ்டேஸ்வரா சிவன் கோவில் அமைந்துள்ளது.

Xxxxxx

2.ஸ்ரீ நகரில் ரோஸா பால் வழிபாட்டுத் தலத்தில் ஏசு கிறிஸ்து இறுதிக்காலத்தைக் கழித்து சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது. பைபிளில் அவருடைய 20 ஆண்டுக்கால இளமைப் பருவம் பற்றி மர்மமாக உள்ளதால் அவர் காஷ்மீருக்கு வந்து உபநிஷத்துக்களைக் கற்றார் என்று இந்து சந்யாசிகள் எழுதி இருக்கின்றனர்

Xxxxx

3.ஸ்ரீ நகரில் மிகவும் புனிதமான மசூதி ஹஸ்ரத்பால் மசூதி. அதை தர்கா ஷரீப் என்று அழைப்பர். அங்கு இஸ்லாம் மத ஸ்தாபகரான முகமது நபியின் ஒரு முடி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

Xxxxx

4.கல்ஹணர்; எழுதிய ராஜ தரங்கிணி

xxxxxxxx

5.பதினான்காம் நூற்றாண்டில் இந்துக்கள் ஆட்சி முடிந்தது. அதற்கு முந்தைய 3000 ஆண்டுகளுக்கு அதை இந்துக்கள் ஆண்டதாக கல்ஹணர் சொல்கிறார்

xxxxxxx

6.இயற்கை அதிசயமான ஐஸ் லிங்கம் தோன்றுவது அமர்நாத் குகையில்; தவழ்ந்து சென்று காண வேண்டிய தேவி கோவில் வைஷ்ணவ தேவி கோவில்; இது ஜம்மு பகுதியில் குகைக்குள் இடம்பெற்றுள்ளது.

xxxxxx

7.அசோகர் நிறுவியதாக கல்ஹணர் சொல்கிறார். ஆதிசங்கரர் நிறுவியதாக இந்துக்கள் சொல்லுவார்.கள் . வரலாற்றுக்கு முந்தைய கோநந்த வம்சத்தினரின் தலைநகரை ஒவ்வொருவரும் மாறி மாறி சீரமைத்தனர் . இறுதியாக பிரவர சேனன் இதை மாற்றி அமைத்தார்.

 xxxxx

8. தால் ஏரி 

xxxxxx

9.இந்தியாவின் முதல் பிரதமாரன ஜவஹர்லால் நேரு ஒரு காஸ்மீரி பிராமணன் . அங்கு பிராமணர்களை பண்டிட்  என்று அழைப்பார்கள் .ஆனால் அவரது குடும்பம் வசித்தது உத்தர பிரதேச அலகாபாத்தில்.

xxxxx

 10.இந்திய அரசியல் சட்டத்தின் 370-ஆவது பிரிவு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்களைக் கொடுத்திருந்தது. இதை நரேந்திர மோடி அரசு 2019 ஆகஸ்டில் ரத்து செய்து இதர மானிலங்களைப் போலவே காஷ்மீர் என்று மாற்றியது.

 —-subham——

Tags-  காஷ்மீர் அதிசயங்கள், பத்து, Quiz

Leave a comment

Leave a comment