
Post No. 12,227
Date uploaded in London – – 5 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.ஸம்ஸ்க்ருதத்தில் எத்தனை நாடகங்கள் உள்ளன?
xxx
2.இந்த மொழியில் உள்ள பிரபல மருத்துவ நூல்கள் எவை ?
xxxx
3.மேலை நாடு முழுதும் பரவிய ஸம்ஸ்க்ருத செக்ஸ் SEX நூலின் பெயர் என்ன?
xxxx
4.காளிதசாரின் புகழ்பாடிய ஜெர்மன் கவிஞர் யார்?
xxxxx
5.ஸம்ஸ்க்ருத மொழிக்கு இலக்கணம் எழுதிய எந்த மூவரை பெரியோர்கள் போற்றுகின்றனர் ?
xxxxx
6.பாணினி யார்? அவர் எங்கு எப்போது பிறந்தார்? அவர் எழுதிய சம்ஸ்க்ருத இலக்கண நூலின் பெயர் என்ன ?
xxxxxx
7.சம்ஸ்க்ருத மொழியில் எத்தனை வினைச் சொற்கள் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது?
xxxxxx
8.ஏனைய பழங்கால மொழிகளுக்கு இல்லாத என்ன சிறப்பு ஸம்ஸ்க்ருதத்துக்கு இருக்கிறது?
xxxxx
9.சம்ஸ்க்ருத மொழியில் நாணயம் வெளியிட்ட முஸ்லீம் சுல்தான் யார்
xxxxx
10.ஐ.நா. சபை மூலம் நமது காலத்தில் உலகம் முழுதும் ஒலித்த ஸம்ஸ்க்ருதப் பாடல் எது ?
Xxxxx

விடைகள்
1.ஸம்ஸ்க்ருத மொழியில் பாஷா, காளிதாசன்,சூத்ரகன், ஹர்ஷர் முதல் ஒன்பதாம் நுற்றாண்டு முராரி வரை பலரும் நாடகங்களை எழுதினர். சில்வன் லெவி (SYLVAIN LEVY) என்ற பிரபல இந்தியவியல் அறிஞர் 189 ஆசிரியர்கள் எழுதிய 377 நாடகங்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பின்னர் வெளியான ஒரு பட்டியலில் 650 நாடகங்கள் இருப்பதாக நேருஜி தனது புஸ்தகத்தில் (Discovery of India) எழுதியுள்ளார்.
xxxx
2.சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதா ; சரகர் எழுதிய சரக சம்ஹிதா
Xxxx
3.சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்ரம் என்னும் நூல்
Xxxxx
4.Johann Wolfgang von Goethe yow-han-guh–tuh (உச்சரிப்பு) யோஹன் கெத்தா (கெதே என்று பலரும் எழுதினர்)
French Scholar Antoine Leonard de Chezy presented Goethe with his French edition of Shakuntala. In a letter of gratitude to Antoine Chezy, Johann Goethe opened up himself before European world : “The first time I came upon this inexhaustible work, [Shakuntala] it aroused such enthusiasm in me and so held me that I could not stop studying it. I even felt impelled to make the impossible attempt to bring it in some form to the German stage. These efforts were fruitless but they made me so thoroughly acquainted with this most valuable work, it represented such an “epoch in my life”, I so absorbed it, that for thirty years I did not look at either the English or the German version. It is only now that I understand the enormous impression that work made on me at an earlier age.”
Xxxxx
4.சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்ரம் என்னும் நூல்
xxxx
5.இலக்கணம் எழுதிய பாணினி , அதற்கு விளக்க உரையாக மஹாபாஷ்யம் எழுதிய பதஞ்சலி , பாணினி இலக்கணத்துக்கு குறிப்புரை (வார்த்திகம் ) எழுதிய வரருசி காத்யாயனர் ஆகியோரை உலகம் போற்றுகிறது
xxxxx
6.உலகமே வியக்கும் வண்ணம் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர் பகவான் பாணினி. அவர் பிறந்த சாலாதுரா இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததை கோல்ட்ஸ்டக்கர் (Theodor Goldstucker) என்ற யூத மத சம்ஸ்கிருத அறிஞர் நிரூபித்துள்ளார். ஏனைய சிலர் 2400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்பர். பாணினி எழுதிய நூலின் பெயர் அஷ்டாத்யாயி (எட்டு அத்தியாயம்).
xxxx
7.சம்ஸ்கிருதத்தில் 2000 வினைச் சொற்கள் இருந்ததை பாணினி கால நூல்கள் காட்டுகின்றன. ஆயினும் சுமார் 700 வருடங்களுக்குப் பின்னர் பாணினியின் புஸ்தகத்துக்கு பேருரை – மஹா பாஷ்யம் — எழுதிய பதஞ்சலி முனிவர் காலத்தில் (150 BCE) சம்ஸ்கிருதத்தில் 800 வினைச் சொற்களே உபயோகத்தில் இருந்தன . இதைக் குறிப்பிடும் பதஞ்சலி முனிவர் ஏனைய 1200 வினைச் சொற்களை கற்பனை என்று கருதிவிடக்கூடாது என்றும் நம்மை எச்சரிக்கிறார் . அதாவது காலக்கிரமத்தில் நிறைய சொற்கள் வழக்கொழிந்து போகின்றன.
xxxx
8. ஏனைய பழங்கால மொழிகள் அனைத்தும் அந்த இனத்தின் பெயரால் அமைந்தன . சம்ஸ்க்ருதம் பொது மொழி என்பதால் செம்மொழி (சம்ஸ்க்ருதம்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது
xxxxx
9.கஜினி முகமது
xxxxx
10.மைத்ரீம் பஜத பாடல்
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) எழுதிய சம்ஸ்கிருதப் பாடல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இனிய வாய்ப்பாட்டு மூலம் உலகெங்கும் ஒலித்தது
மைத்ரீம் பஜத, அகில ஹ்ருஜ்-ஜேத்ரீம்!
ஆத்மவதேவ பராநபி பச்யத!
யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!
த்யஜத பரேஷ்வக்ரமம்-ஆக்ரமணம்!
ஜநநீ ப்ருதிவீ காமதுகாஸ்தே,
ஜநகோ தேவ: ஸகல தயாளு:!
தாம்யத! தத்த! தயத்வம் ஜநதா:!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
இந்த கீதத்தின் தமிழாக்கம்:
அனைத்துளம் வெல்லும் அன்பு பயில்க!
அன்னியர் தமையும் தன்னிகர் காண்க!
போரினை விடுக! போட்டியை விடுக!
பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க!
அருள்வாள் புவித்தாய், காமதேநுவாய்!
அப்பன் ஈசனோ அகிலதயாபரன்!
அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக! – என்பதுதான்.
XXXXXXXXXXXXXXXXXXX
TAGS– சம்ஸ்க்ருதம் , ஸம்ஸ்க்ருத , அதிசயங்கள் , நாடகங்கள், வினைச்ச்சொற்கள், பாணினி, மைத்ரீம் புஜத பாடல்