கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் -Part 1 (Post No.12,232)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,232

Date uploaded in London – –  6 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மஹாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் பற்றி எழுதி  முடித்தவுடன் அதை புத்த கமாக அச்சிட அனுப்பிவிட்டேன். இப்போது கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்  பற்றியும் எழுத ஆசை பிறந்தது .வெப் சைட்டுகளில்  நுழைந்தால் சிறியதும் பெரியதுமாக 400 கோவில்களின் பெயர்கள் வருகின்றன. அவற்றில் 108 கோவில்களை மட்டும் தெரிந்தெடுப்பது கடினமானதே ; முயன்றுதான் பார்ப்போமே சில கோவில்களில் வழிபாடு இல்லா மல் சிற்பங்கள் மட்டும் இருக்கும். இன்னும் சில இந்து மதத்துக்குப் புறம்பான சமண தலங்கள் (உ.ம். சிரவண பெல கோலா ) .அவைகளையும் காண்போம்.

தமிழ்நாட்டைப்போலவே கர்நாடக மாநிலத்திலும் 30,000 கோவில்களுக்கு மேல் உள்ளன. இந்தியாவில் ஐந்து லட்சம் கோவில்கள் உள்ளன. இவை அனைத்திலும் அயோத்தியா கோவில் திறப்பு தினத்தில் விசேஷ பூஜைகள் செய்ய ராமர் விக்ரக பிரதிஷ்டை செய்வோர் அழைப்பு விடுத்துள்ளனர்  பெங்களூரு வட்டாரத்தில் மட்டுமே நூற்றுக் கணக்கான கோவில்கள் இருக்கின்றன

முக்கியமான வழிபாட்டுத் தலங்கள் அல்லது இந்து சமய புராணக் காட்சிகளை விளக்கும் சிற்பங்கள் உள்ள இடங்களின் பட்டியல் இதோ:–

XXXXXX

முதலில் பெங்களூரிலுள்ள முக்கியக் கோவில்களை ‘புல்லட்bullet points  பாயிண்டு’களில் (சிறப்பு அம்ஸங்களை மட்டும்) காண்போம்

1.The Chokkanathaswamy Temple

சொக்கநாத சுவாமி கோவில் பெங்களூர்

தொல்மூர் பகுதியில் உள்ள சொக்கநாத சுவாமி கோவில் விஷ்ணு கோவில் ஆகும். மதுரையில் இதைச் சொன்னால் சிவன் கோவில் என்று பொருள்படும். ஆனால் இங்கோ சொக்க பெருமாள் குடிகொண்டுள்ளார். சுந்தர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம் சொக்க . இது மிகப்பழமையான கோவில். சோழர்கால கோவில். தமிழ்க்  கல்வெட்டுகளும் கன்னடக் கல்வெட்டுகளும் இருக்கும் இடம். கலை  வேலைப்பாடு அமைந்த தூண்களையும் சிற்பங்களையும் இங்கே காணலாம். ஒரே கம்பத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

xxxxx

2. The Nandhi Temple

நந்தி கோவில்

கெம்ப கவுடாவினால்  (1500 CE ) கட்டப்பட்ட இந்தக் கோவில் பசவன குடியில்  இருக்கிறது

கன்னடத்தில் பசவ என்றால் காளை . இங்கு சிவ பெருமானின் பெரிய வாகனமான நந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டு காட்சி தருகிறது உயரம் 4-6 மீட்டர் அதன் தலையில் இரும்புத் தகடு இருக்கிறது. அது வளராமல் இருக்க இப்படிச் செய்ததாகச் சொல்லுவார்கள்  அதைத் தாண்டி உள்ளே சென்றால் பெரிய கணபதியைக் காணலாம். விஜயநகர ஆட்சியில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது . இங்கு நடைபெறும் நிலக்கடலைத் திருவிழா  (Kadalekaye Parishe Festival (groundnut fair) மிகவும் பிரசித்தமானது. அன்று இறைவனுக்கு நிலக்கடலை மலை போலக்  குவியும்.

xxx

3. ISKCON Temple

ஹரே கிருஷ்ணா கோவில்

அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட கவர்ச்சிமிகு தங்கக்கோவில் . மிகப்பெரிய 56 அடி உயர த்வஜ ஸ்தம்பம் தங்கத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. அதே போல கலச சிகரமும் தங்கத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது.. ஒரு கோடி டாலர் செலவில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் ராதா- கிருஷ்ணர் , பலராமனை தரிசிக்கலாம் . நீரூற்றுகளும் பெரிய அலங்கார வளைவுகளும் நம்மை வரவேற்கும். கோவிலுக்குள் ஐந்து பிரார் த்தனை ஹால்/ HALLS மண்டபங்கள் இருக்கின்றன

இருப்பிடம்– ராஜாஜி நகர், ஹரே கிருஷ்ணா குன்று

xxxxxx

4. Shivoham Shiva Temple

சிவோஹம் சிவன் கோவில்

பழைய விமான நிலைய ரோட்டில் அமைந்த சிவோஹம் சிவனை யாரும் மிஸ் MISS பண்ண முடியாது. ஏனெனில் சிவபெருமானின் உயரம் 65 அடி. ஆண்டுக்கு 5 லட்ச ம் பேர் தரிசனத்துக்கு வருகின்றனர் . 1995-ல் சிருங்கேரி சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னணியில் கைலாஷ் பர்வதம் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.32 அடி உயர கணபதி28 அடி உயர சிவலிங்கம் ஆகியன எல்லாம் நினைவிலிருந்து நீங்காத அளவுக்கு பெரியவை. சிவன் தலையிலிருந்து கங்கை பாய்கிறது.

xxxxx

5. Banashankari Amma Temple

வனசங்கரி அம்மன் கோவில்

இந்தக் கோவில் கனகபுர சாலையில் நிற்கிறது அண்மைக்கால கோவில் ஆனாலும் இங்கு நடைபெறும் ராகுகால பூஜை பிரபலம் அடைந்துள்ளது. பார்வதியின் உருவமான ஷாகம்பரி  தேவியை கன்னடியர்களும் மராட்டியர்களும் வழிபடுகின்றனர்.

6.Annamma Temple

அன்னம்மா கோவில்

அன்னம்மா தேவி இந்த நகரத்தின் காவல் தேவதையாக கருதப்படுகிறா ள்  ; உள்ளூர் மக்கள் திருமணத்திற்கு முன்னர் வழிபடுவது சம்பிரதாயம். இது நகரின் மெஜஸ்டிக் பகுதியில் கடைகளுக்கு இடையே அமைந்துள்ளது. பாறையில் செதுக்கப்பட்ட ஒற்றைக் கல் புடைப்புச் சிற்பமாக அமமன்  உள்ளார்

7. Dharmaraya Swamy Temple

தர்மராய கோவில்

800 ஆண்டுகளுக்கு முன்னர் வன்னி குல க்ஷத்ரியர் கட்டிய கோவில் இது.  நகரின் கடைத் தெரு பகுதியில் கம்ப கவுடா பஸ்  நிலையம் அருகில் அமைந்தது . விவசாயிகள் வணங் கும் இந்தக் கோவிலின் சித்திரைமாத காவடி உற்சவம் மிகவும் புகழ்பெற்றது.

Xxxxx

8. Shrungagiri Shanmukha Temple

 ச்ருங்ககிரி ஷண்முக கோவில்

ராஜ  ராஜேஸ்வரி நகரில் அமைந்த முருகன் கோவில் இது.  இங்கு சுப்ரமண்யர் ஆறுமுகங்களுடன் காட்சி தருகிறார் . 240 அடி உயரமுள்ள சிறு குன்றில் கோவில் கட்டப்பட்டுள்ளது கோபுர உயரம் 62 அடி மேலே 3000 படிகமுள்ள கிரிஸ்டல் மாடம் CRYSTAL DOME இருக்கிறது பகலில் சூரிய ஒளியில் வானவில்லின் வர்ண ஜாலங்களைக் காட்டும் . இரவில் மின்விளக்குகளால் பலவண்ண ஒளி அலை வீசும் . கோபுரத்தில் உள்ள சண்முகருக்கு சூரிய கிரண அபிஷேகம் செய்ய இது அமைக்கப்பட்டது. கோவிலின் நுழை வாயிலில் இரட்டை மயில்களும் மேலே திரி சூலமும் , பஞ்சமுகி ( 5 முக) கணபதியும் நம்மை வரவேற்பார்கள் பின்னர் ஆறுமுக இறைவனைக் காணலாம்

To be continued…………………………………………..

tags-  கர்நாடகம், 108 கோவில், முதல் பகுதி, ஷண்முகர் , சிவன் , கோவில், பெங்களூரு 

Leave a comment

Leave a comment