திருவாசகம் பற்றிய அரிய தகவல்கள்-1 (Post No.12,274)

Temple priest is welcoming speaker Prof. S S M. Sundaram

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,274

Date uploaded in London – –  14 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

லண்டனில் தொடர் சொற்பழிவாற்றிவரும் மதுரைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் சொ சொ மீ சுந்தரம் (PROFESSOR S S M SUNDARAM, MADURAI), மாணிக்கவாசகரின் திருவாசகம் பற்றி நேற்று 13-7-23 காலையில் நடத்திய சொற்பொழிவில் பல வியப்பான தகவல்களைத் தந்தார் . 18-7-23 முடிய காலையிலும் மாலையிலும் 60 நிமிடச் சொற்பொழிவுகள் லண்டன் ஈலிங் பகுதியில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெறும் ( 11 AM , 7 PM ).

Xxxxx

திருவாசகத்தில் 658 பாடல்கள் இருக்கின்றன. இந்த அதிசய நம்பரை மாணிக்கவாசகரே முதல் பாடலில் மறைமுகமாகச் சொல்லிவிடுகிறார். முதல் பாடலான சிவபுராணத்தில் முதலில் 6 வரிகளில் வாழ்க, அடுத்து 5 வரிகளில் வெல்க, அடுத்த 8 வரிகளில் போற்றி (6,5,8) வருகின்றன!!!

xxx

ஏனைய பாடல்கள் கடவுள் பற்றிய பாடல்கள் ; திருவாசகமோ கடவுளோடு பேசிய பாடல்கள்

xxx

யார் புத்திசாலி?

தந்தது உன் தன்னை கொண்டது என்தன்னை

யார்கொலோ சதுரர் ? என்று மாணிக்கவாசகர் சிவனிடம் கேட்கிறார் .

அதாவது ஒன்றுமில்லாத என்னை ஏற்றுக்கொண்டு உன்னையே தந்துவிட்டாய் . நீ புத்திசாலியா? என்பது கேள்வி . நாமும் யார் புத்தி சாலி என்று யோசிப்போம் .

உண்மையில் சிவன்தான் புத்திசாலி. அதனால்தான் தேன்  போன்ற திருவாசகம் நமக்கு கிடைத்தது..

Xxx

சிதம்பரத்தில் நடராஜக் கடவுளுக்கு வலது பக்கம் மாணிக்கவாசகர்; இடது பக்கம் சிவகாமி . அவ்வளவு முக்கியத்துவம்.

மாதவ சிவஞான முனிவர், இவரை ஞானத்தால் சிவமே ஆனவர் என்று போற்றுகிறார்  .

முதலில் மூவர் மட்டுமே இருந்தனர். சிவப்பிரகாச சுவாமிகள்தான் மூவரோடு இவரையும் சேர்த்து நால்வர் என்ற அணியை உருவாக்கினார்.

Xxxx

பைபிளைத் தவிர வேறு எந்த நூலையும் அச்சிடக்கூடாது என்று கிறிஸ்தவ வெள்ளைக்காரர்கள் உலகம் எங்கும் தடை போட்டிருந்தனர். அந்தத் தடை நீக்கப்பட்டவுடன் முதலில் வெளியான பக்தி நூல் திருவாசகமே.

xxx

மேலை நாட்டிலுள்ள எல்லா பக்தி இலக்கியத்தையும் ஒரு தராஸுத் தட்டில் வையுங்கள். திருவாசகத்தின் ஒரு வரியை இன்னொரு தட்டில் வையுங்கள். திருவாசகம் எடை மிக்கது என்று கிறிஸ்தவ குருநாதரிடம் ரெவரெண்ட் ஜி.யூ.போப் REV. G U POPE சொன்னார். அவர் வியப்புடன் காரணம் கேட்டபோது இமைப்பொழுதும் என்  நெஞ்சில் நீங்கதான் தாள் என்ற ஒரு திருவாசக வரிக்கு சமம் எதுவும் இல்லை என்றார்  ஜி.யூ.போப்..

xxx

ஜி.யூ.போப்  மீது வழக்கு

ஜி.யூ.போப்  கிறிஸ்தவ பாதிரியார்.. அவர் கிறிஸ்தவ மதத்தைப்  பரப்பாமல் திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால் ஏசு சபையாருக்குக் (SOCIETY OF JESUS) கோபம்; ஆத்திரம் பொங்கியது . அவர் மீது லண்டனில் கேஸ் போட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு ஒரு வாரத்துக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கினார் ; கோர்ட்டில் ஒரே கூட்டம் ;பரபரப்பு . போப்புக்கு நிச்சசயம் சிறைத்தண்டனை என்று எல்லோரும் கருதினர். ஆனால் நீதிபதியோ ஜி.யூ போப் அவர்களை வணங்கிவிட்டு அவர்தான் உண்மையான கிறிஸ்தவர் HE IS A TRUE CHRISTIAN  என்றார் . அவர் இவ்வளவு அருமையான நூலை மொழிபெயர்த்த பின்னரும் மதம் மாறவில்லை ; அவரே உண்மையான கிறிஸ்தவர் என்றார் . ஏசு சபை யாருக்கு பெருத்த ஏமாற்றம்.

Xxxx

திருவாசகத்துக்குள் சொ சொ மீ .

நானும் என் தம்பியும் சிறுவயது முதலே தினமும் திருவாசகம் படிப்போம். மதுரையில் என் வீட்டின் பெயரே திருவாசகம்தான் . . ஒருவர் என் வீட்டிற்கு வருகை புரிந்தார். இதுவரை திருவாசக ம் வெளியே இருந்தது . இப்பொழுது திருவாசகத்துக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்கிறார்! (உங்களுக்குள் திருவாசகம் வந்துவிட்டது)

XXXX

ராஜாஜியும் திருவாசகமும், காந்திஜியும் திருவாசகமும் திரு.வி.க. கவும் திருவாசகமும் , ஜட்ஜ் சுப்ரமண்ய ஐயரும் திருவாசகமும் என்ற தலைப்பில் இன்னும் அரிய விஷயங்களைத் தொடர்ந்து சொன்னார். அவற்றையும் காண்போம்.

தொடரும்………………..TAGS- திருவாசகம், சொ சொ மீ , லண்டன் சொற்பொழிவு

Leave a comment

1 Comment

  1. atpu555's avatar

    Thanks for all your posts. Especially this one! Please continue your service to Tamil and Religion. Thank you.

Leave a comment