
Post No. 12,437
Date uploaded in London – – 18 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார் !- Part 1 (Post No.12,437)
கன்பூசியஸ் Confucius) , ஒரு சீன தத்துவ வித்தகர்; ஏறத்தாழ புத்தர் காலத்தைச் சேர்ந்தவர்; அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வந்தவர் திருவள்ளுவர் (Tiru Valluvar). ஆயினும் பெரியோர்கள் ஒரே மாதிரி சிந்திப்பர் GREAT MEN THINK ALIKE என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணங்க இரு பெரியாரிடையே பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது .
XXXX
Appearance தோற்றம்
தன்னுடைய புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைத்தான் இந்த உலகம் விரும்புகிறது.– கன்பூசியஸ்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ்ப்பழமொழி. ஆனால் வஞ்சகர்கள் பசுத்தோல் போர்த்திய புலி ஆக இருப்பார்கள் ; அது கூடாது என்பது இரு ஞானிகளின் கருத்து
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. – 273
கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.
இன்னொரு குறளில்
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது என்கிறார் வள்ளுவர்
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. – 274
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு– குறள் 79
உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.
உள்ளத்தில் அன்பில்லாமல் வெளியே அழகாக இருந்து என்ன பயன்?
Xxxxx

Do what you want others to do to you !
உங்களுக்கு எதை மற்றவர் செய்தால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்களோ அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள்.– கன்பூசியஸ்
எல்லோரையும் நேசியுங்கள்; கொஞ்சம் பேரை நம்புங்கள்; எவருக்கும் தீங்கு செய்யாதீர்கள் – என்பது ஷேக்ஸ்பியர் வாக்கு -All’s Well that Ends Well
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்–குறள் 318
அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு-குறள் 190
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
xxxxxx
Anger சினம்/கோபம்
“When anger rises, think of the consequences.” என்கிறார் கன்பூசியஸ் .
கோபம் வருகையில், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று (முதலில்) சிந்தியுங்கள் — கன்பூசியஸ்
வள்ளுவனும் இதையே சொல்கிறான்
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.- 305
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்–குறள் 306
சம்ஸ்க்ருதத்தில் கோபத்துக்கு சேர்ந்தாரைக்கொல்லி என்று பெயர். ஏனெனில் அரணிக்கட்டையில் பிறக்கும் தீயைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால் அது அந்தக் கட்டையை எரித்த்துவிடும் ; காடுகளில் இரண்டு மரங்கள் ஒன்றை ஒன்று கொஞ்சி, குலவி, உரசி மகிழ்கையில், தீப்பொறி உண்டாகும். அது காட்டையே அழித்துவிடும். இதனால் ஆஸ்ரயாஸஹ என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்வர் .
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும் (காட்டையே அழிக்கும் காட்டு தீ போல)
Xxxx
நடையை மாத்து
“When it is obvious that the goals cannot be reached, don’t adjust the goals; adjust the action steps.”
லட்சியத்தை அடைய முடியாதென்பதற்காக லட்சியங்களை / குறிக்கோளை மாற்றாதே ; உன்னுடைய செயல் திட்டங்களை (குறிக்கோளை நோக்கி) மாற்றிக்கொள் – கன்பூசியஸ்
இதை வினை செயல்வகை, வினைத்திடப்பம் என்ற அதிகாரங்களில் வள்ளுவரும் காட்டுகிறார்
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.-675
பொருள்
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும்
இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.
பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.–குறள் 675
பொருள்
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Xxxxx
“It does not matter how slowly you go so long as you do not stop.”
எவ்வளவு மெதுவாக குறிக்கோளை நோக்கிச் செல்கிறாய் என்பது பற்றிக் கவலை வேண்டாம் . நில்லாமல் செல் – என்கிறார் கன்பூசியஸ்
இதையே சுவாமி விவேகானந்தரும்
உத்திஷ்ட, ஜாக்ரத , ப்ராப்யவரான் நிபோதத
எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும்வரை நிற்காதே என்று கூறுவார் (Arise, Awake, Stop not till the goal is reached)
To be continued…………………………….
Tags- கன்பூசியஸ் , வள்ளுவர், குறள் , சினம், தோற்றம்