காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 8 (Post No.12,445)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,445

Date uploaded in London –  20 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 8 

ச.நாகராஜன்

இரட்டைக் குழந்தைப் பிறப்பில் ஒரு  சோகம்!

ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம் இது.

கேட் ஓக் (Kate Ogg) என்ற பெண்மணி சிட்னி மருத்துவமனை ஒன்றில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். 27 வாரங்களிலேயே அந்தக் குழந்தைகள் பிறந்து விட்டன. (ஆறே முக்கால் மாதம் தான் கர்ப்பவாசம்!) ஒவ்வொரு குழந்தையின் எடையும் இரண்டு பவுண்டுகள் தான்!

சின்னக் குழந்தையான எமிலி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் அந்தக் குட்டியின் சகோதரனான ஜேமி (Jamie) மூச்சு விடவில்லை.

20 நிமிடங்கள் கடுமையான முயற்சியை மேற்கொண்ட பின்னர் மருத்துவமனை பணியாளர்கள் தங்கள் முயற்சி தோல்வி அடைந்ததை ஒட்டி கேட்டிடம் ஜேமி பிழைக்கவில்லை என்று கூறினர்.

கேட்டிடம் டாக்டர், ‘உனது பையனுக்கு ஏதாவது பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறாயா’ என்று கேட்ட போது கேட், “ஆம், ஜேமி என்று பெயர் வைத்திருக்கிறேன்” என்றார்.

அந்தக் குழந்தையைக் கையில் அடக்கமாக வைத்திருந்த அந்த டாக்டர், “நாம் ஜேமியை இழந்து விட்டோம். அவனால் பிழைக்க முடியவில்லை. சாரி” என்று கூறினார்.

திடுக்கிட்டு சோகத்தில் ஆழ்ந்த கேட் பிளாங்கட்டில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஜேமியை வெளியே எடுத்துப் பார்த்தார். குழந்தையிடம் அசைவே இல்லை.

கங்காரு கவனிப்பு! (Kangaroo Care)

சேனல் 7இல் ‘Today Tonight’ நிகழ்ச்சியில் “பின்னால் பேசும் போது ஓக் கூறினார்: “என் தோளுடன் குழந்தையை அணைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். எனது கவுனை எடுத்து விட்டு குழந்தையை எனது மார்போடு அணைத்துக் கொண்டு கையால் அவனைச் சுற்றி வைத்துக் கொண்டேன்.”

ஒரு இயக்கமும் குழந்தையிடம் இல்லை. கேட் குழந்தையிடம் பேச ஆரம்பித்தார். அவனது பெயர் ஜேமி என்றும் அவனுக்கு ஒரு சகோதரி உண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் மட்டுமல்ல தொடர்ந்து அவன் வாழும் போது அவனுடன் தாங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்பினோம் என்பதைக் கூறிக் கொண்டே இருந்தார்.

இரண்டு மணி நேரம் இப்படிக் கழிந்தது.

பிறகு உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் குழந்தையிடம் தோன்ற ஆரம்பித்தன!

மூச்சு விட ஜேமி திணறியது.

அது நிர்பந்தப்படுத்தப்பட்ட ஒரு செயல் என்று டாக்டர்கள் கூறினர்.

ஆனால் கேட் விடவில்லை.

குழந்தையை அங்கும் இங்கும் தாலாட்டி அசைத்துக் கொண்டே இருந்தார். குழந்தை இன்னும் அதிகமாக மூச்சு விட அவஸ்தைப்பட்டுத் திணறுவதைக் காண்பித்தது.

பிறகு சீராக இந்தத் திணறல் தொடர ஆரம்பித்தது. கேட் உடனே ஜேமிக்கு மார்பிலிருந்து பாலை எடுத்து விரலால் கொடுக்க ஆரம்பித்தார். அதை எடுத்துக் கொண்ட குழந்தை இப்போது சீராக மூச்சு விட ஆரம்பித்தது.

கேட்டின் உடலானது ஒரு ‘இன்குபேடர்’(Incubator) போலச் செயல்பட்டு

குழந்தையின் உடலை கதகதப்பாக வைத்து அதன் மூச்சை சீராகச் செயல் பட வைத்தது. இப்படி டாக்டர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

இது கங்காரு கவனிப்பு (Kஎன்ற ஒரு கொள்கையை உறுதிப்படுத்தியது.

கங்காரு தனது குட்டிகளைத் தன் மார்பில் உள்ள பையில் வைத்து மார்போடு அணைத்து வளர்க்கும்.

அது கேட்-ஜேமி விஷயத்தில் நடந்து அந்தக் கொள்கையை உறுதிப்படுத்தியது.

காலம் வரும் முன்னே காலன் வரமாட்டான் – ஒரு போதும்!

இதை மெய்ப்பிக்கும் வகையில் நடக்கும் ஏராளமான அதிசய நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

இந்தச் செய்தி ஆஸ்திரேலியா நாடெங்கும் பரவி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதை லண்டன் செய்தி நிறுவனமான IANS உலகெங்கும் பரப்பியது

நமது நாட்டில் Times of India, இந்தச் செய்தியை 2010, ஆகஸ்ட் 28ஆம் தேதி Kolkata பதிப்பில் வெளியிட்டது.

தகவல், நன்றி : கொல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில இதழான TRUTH Volume 78 Issue 24 Dated 24-9-2010)

***

Leave a comment

Leave a comment