நடந்தவை தான் நம்புங்கள் – ஐந்தாம் ஜார்ஜ் பாராட்டிய எழுத்தாளர்! (Post No.12,461)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,461

Date uploaded in London –  24 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 7

ச.நாகராஜன்

ஐந்தாம் ஜார்ஜ் பாராட்டிய எழுத்தாளர்!

ஜான் புச்சன் (John Buchan) என்ற பிரபல நாவலாசிரியர் ‘தி தர்ட்டிநைன் ஸ்டெப்ஸ்’ (The Thirtynine Steps) என்ற அவரது நாவலால் புகழ் பெற்றவர்.

அவர் 1935ஆம் ஆண்டு ஒரு நாள் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைப் பார்க்கச் சென்றார்.

பேச்சின் போது மன்னர் ‘தி தர்ட்டிநைன் ஸ்டெப்ஸ்’ நாவலைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசினார். புச்சனும் மிகவும் மகிழ்ந்தார்.

மன்னரைப் பார்த்த பிறகு ராணியைப் பார்க்கப் போனார் அவர்.

பேச்சின் போது ராணியார் புச்சனிடம் மன்னருக்கு புத்தகங்கள் படிக்க நேரமே இல்லை என்று குறைப்பட்டுக் கொண்டவர், “அவர் எதையாவது படித்தார் என்றால் அது மிக மட்டரகமான புத்தகமாகத் தான் இருக்க்கும்” என்றார்!

கிளைவ் அனுப்பிய யானை!

ராபர்ட் கிளைவ் இந்தியாவில் பதவி வகித்த போது அவரது சகோதரிகள் இங்கிலாந்திலிருந்து அவருக்கு அழகான பரிசுப் பொருள்களை அனுப்பினர்.

உடனே கிளைவ் அந்தப் பரிசுகளை அனுப்பியதற்கு நன்றி தெரிவித்து விட்டு, பதிலுக்கு ஒரு யானை அனுப்பி இருக்கிறேன்” என்று கடிதம் மூலமாகத் தெரிவித்தார்.

கடிதத்தைப் படித்த சகோதரிகள் திடுக்கிட்டுப் போனார்கள். யானையை எதற்காக அனுப்ப வேண்டும்? அதைக் கட்டித் தீனி போடுவது யார்? எப்படி?, என்று அவர்கள் திகைத்தனர்.

பின்னர் தான் ஒருவாறாக அவர்கள் புரிந்து கொண்டனர் – தாங்கள் கடிதத்தில் படித்த வார்த்தை elephant என்று. ஆனால் கிளைவ் எழுதிய வார்த்தை -Equivalent என்று. (உங்கள் பரிசுகளுக்குச் சமமான பரிசை அனுப்பி இருக்கிறேன்)

ஜான்ஸனின் நான்சென்ஸ் விளக்கம்!

டாக்டர் சாமுவேல் ஜான்ஸன் ஆங்கிலத்தில் அகராதியையே தொகுத்தவர்.

அவரிடம் ஒருவர் சென்று நான்சென்ஸ் என்பதற்கு விளக்கம் சொல்லுங்களே என்றார்.

உடனே ஜான்ஸன், “கதவை வேகவைத்த காரட்டைச் சொருகி தாழ்ப்பாள் போடுவது நான்சென்ஸ்” என்றார்.

(Sir, it is nonsense to bolt a door with a boiled carrot)

கவிஞரின் கமெண்ட்!

சாமுவேல் ஃபுட் (Samuel Foote) என்பவர் பிரபலமான கவிஞர். அவர் இசைக் கலைஞர் ஒருவரிடம், “ஏன் ஒரே டியூனையே திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்.

“ஏனென்றால் அது என்னைத் துரத்தித் துரத்தி அடிக்கிறது” என்றார் பெருமையுடன் அவர்.

“ஓஹோ! அதனால் தான் அதைத் திருப்பித் திருப்பிக் கொலை செய்து கொண்டே இருக்கிறீர்களோ?” என்றார் கவிஞர்!

லார்ட் செஸ்டர்ஃபீல்டின் சொல் ஜாலம்!

சொல் ஜாலத்தில் வல்லவர் லார்ட் செஸ்டர்ஃபீல்ட். (Lord Chesterfield).

ஒரு முறை ஒரு கல்யாணத்திற்குச் சென்றிருந்த அவர் கூறினார் இப்படி: “Nobody’s son had married Everybody’s daughter.

ஒரு முறை ஒரு இசை நிகழ்ச்சியில் இரண்டு பேர் மெதுவாக ஆட வேண்டிய  நடனம் ஒன்றை ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கூறினார் இப்படி: “இவர்களைப் பார்த்தால் நடனம் ஆடுவதற்கு பணம் கொடுத்து ஏற்பாடு செய்து வாடகைக்கு அமர்த்தி ஆடச் சொன்னவர்கள் போல இருக்கின்றனர். அத்தோடு பணம் தராமல் போய் விடுவார்களோ என்று சந்தேகப்பட்டு ஆடுவது போல இருக்கிறது!” (“They looked as if they wer hired to do it, and were doubtful of being paid.)

***

Leave a comment

Leave a comment