QUIZ சங்கீதத்தில் ஊர்கள் பத்து QUIZ (Post No.12,473)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,473

Date uploaded in London – –  27 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 சங்கீதத்தில் ஊர்கள் பத்து

QUIZ SERIES No.71 

சங்கீதக் கச்சேரிகளினால் சின்ன கிராமங்களும் புகழ் பெற்றன ; உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் .

1.புதுக்கோட்டை  மாவட்டம் வலையப்பட்டி எப்படிப் புகழ் அடைந்தது?

xxxx

2.காருக்குறிச்சி என்றால் யார் நினைவுக்கு வருவார்ஏன் ?

xxx

3.வயலின் வித்வான் வைத்யனாதானால் பிரபலமான கிராமம் எது?

Xxxx

4.கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களும்தான் இசை உலகில் பெயர்பெற்றன. பாம்பே என்று ஒருவர் சொன்னால் எந்த கர்நாடக இசை மேதையின் பெயரைச் சேர்ப்பீர்கள் ?

xxxx

5.உமையாள்புரம் வாசிக்கிறார் என்றால்  என்ன பொருள்அது வெறும் ஊர்ப்பெயர் ஆயிரன்றே!

Xxxx

6. கர்நாடக இசை ரசிகர்கள், கீழ்கண்ட ஊர்களுடன் யார் பெயரைச் சேர்ப்பார்கள்?

6.நாமகிரிப்பேட்டை–

பாபநாசம் –

பாலக்காடு —

காரைக்குடி —

xxxx

7.மதுரை நகரைப் பெயருடன் இணைத்து மதுரைக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்த 2 கர்நாடக  இசைப் பாடகர்கள் யார் ?

xxxx

8.ஊத்துக்காட்டிற்கு புகழ் சேர்த்த வேங்கடசுப்பையர் எப்படிப்புகழ் சேர்த்தார் ?

Xxx

9.திருவாரூர் என்றால் சங்கீத முமூர்த்திகள் நினைவுக்கு வருவது ஏன்?

xxxx

10.ஜனவரியில் எல்லா பிரபல சங்கீதக் கலைஞர்கர்களும்  திருவையாருக்குப் பயணம் செய்வது ஏன்?

xxxx

விடைகள் 

Xxxx

1.வலையப்பட்டி தவில் :வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார் .2014ல் சங்கீத கலாநிதி விருதினைப் பெற்றார்.

xxxx

2.காருக்குறிச்சி அருணாசலம் சிறந்த நாதசுரவித்வான்.

xxxx

3.குன்னக்குடி ; வைத்யநாதன் சிறந்த வயலின் வித்வான்

xxxx

4.பாடகி பாம்பே ஜெயஸ்ரீ

xxxx

5.உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன் (பி. டிசம்பர் 17, 1935), ஒரு மிருதங்க வித்வான் ,  பத்ம விபூசண் விருதை 2010-ஆம் ஆண்டு பெற்றார்;

xxxx

6.நாமகிரிப்பேட்டை– கிருஷ்ணன் 

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் (2 ஏப்ரல் 1924 – 30 ஏப்ரல் 2001)[1], தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர்

பாபநாசம் – சிவன்

பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 – அக்டோபர் 1, 1973) கருநாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிய இசை அறிஞர் ஆவார்.

பாலக்காடு –மணி ஐயர்

பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் (10 ஜூன் 1912 – மே 30, 1981) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். இவரை நேயர்கள், ‘கலியுக நந்திகேசுவரர்’ என்று செல்லப் பெயரால் அழைத்தனர்.

காரைக்குடி மணி– மிருதங்க கலைஞர் 

xxxx

7.மதுரை சோமு

பாரத ரத்னா  பட்டம் பெற்ற மதுரை எஸ் சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி;16 September 1916 – 11 December 2004)

xxxx

8.ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்  (1715 – 1775) 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர். தமிழிலும் வடமொழியிலும் பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், ஜாவளி, தில்லானா, காவடிச்சிந்து போன்ற பல்வகை இசைவடிவங்களையும் இயற்றியவர் (வாக்கேயகாரர்)

xxx

9.கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்..

Xxxx

10.தியாகராஜர் சமாதி திருவையாற்றில் உள்ளதால் அவர் இறந்த திதியில் அங்கு ஆராதனை நடக்கும் . எல்லோரும் அதில் காலத்து கொண்டு பஞ்ச ரத்னக் கீர்த்த னைகளைப் பாடுவார்கள்.

—subham—

Tags– சங்கீதத்தில் , ஊர்கள் பத்து , Quiz, தியாகராஜர் சமாதி, ஊத்துக்காடு, பாபநாசம் சிவன், காருக்குறிச்சி காரைக்குடி மணி-, மிருதங்க கலைஞர் 

Leave a comment

Leave a comment