
Post No. 12,476
Date uploaded in London – – 28 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ரிஷிகேஷ் பத்து
QUIZ SERIES No. 72
1.ரிஷிகேஷ் எங்கே இருக்கிறது? அங்கிருந்து எந்த மலையை, எந்த நதியைக் காணலாம்?
XXX
2.ரிஷிகேஷ் என்னும் தலத்தை உலகிற்குப் பிரபலப்படுத்திய மஹான் யார் ?
XXX
3.சுவாமி சிவானந்தா , ரிஷிகேஷில் துவங்கிய சங்கத்தின் பெயர் என்ன?
XXX
4.மகேஷ் யோகிக்கும் ரிஷிகேஷுக்கும் என்ன தொடர்பு ?
XXX
5.பீட்டில்ஸ் பாடகர்களுக்கும் ரிஷிகேஷுக்கும் என்ன தொடர்பு?
XXX
6.ரிஷிகேஷில் எத்தனை ஆஸ்ரமங்கள் இருக்கின்றன ?
XXX
7.ரிஷிகேஷ் பற்றி இந்துமத நூல்கள் குறிப்பிடுகின்றனவா ?
XXX
8.ராம, லெட்சுமணர்களைத் தொடர்புபடுத்த்தும் இரண்டு விஷயங்கள் எங்கே உள்ளன ?
XXX
9.ரிஷிகேஷில் கோவில்கள் உள்ளனவா?
XXX
10.ரிஷிகேஷை பிரபலப் படுத்திய இன்னும் ஒரு யோகி யார் ?
XXX


விடைகள்
1.உத்தரகண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் உள்ளது. இமயமலை அடிவாரத்தில் கங்கை நதியின் கரையில் RISHIKESH அமைந்துள்ளது.
xxxx
2.சுவாமி சிவானந்தா (Sivananda Saraswati (or Swami Sivananda; 8 September 1887 – 14 July 1963)) ; நெல்லை ஜில்லா பத்தமடையில் பிறந்து, டாக்டராகப் பணியாற்றி இமயமலைக்குச் சென்று ஆஸ்ரமம் அமைத்தார்.
XXX
3.தெய்வ நெறிக் கழகம் DIVINE LIFE SOCIETY. 1936-ம் ஆண்டில் அவர் இதைத் துவக்கினார். தெய்வ நெறிக்க கழகத்துக்கு உலகம் முழுதும் கிளைகள் இருக்கின்றன .
XXX
4.பிரம்மானந்த ஸரஸ்வதி என்பவரிடம் மகேஷ் யோகி ஆன்மீகப் பயிற்சி பெற்று 1953ல் ரிஷிகேஷில் ஆஸ்ரமம் அமைத்தார்
XXX
5.லண்டனில் ஹில்டன் ஹோட்டலில் 1967ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடந்த மகேஷ் யோகி உபன்யாசத்துக்கு (சொற்பொழிவுக்கு) பீட்டில்ஸ் (THE BEATLES) பாடகர்களும் வந்திருந்தனர். அவரது உபதேசத்தால் கவரப்பட்ட அவர்கள், மகேஷ் யோகியைக் குருவாகஏற்றவுடன் யோகியின் புகழும் அவரது ரிஷிகேஷ் ஆஸ்ரமம் புகழும் மேலை நாடுகளில் பரவியது. அவர் கற்பித்த மனம்கடந்த ஆழ் நிலைத் தியானம் (TANSCENDENTAL MEDITATION) உலகம் முழுதும் பரவியது .
XXX
6.சுவாமி சிவானந்தா துவக்கிய ஆஸ்ரமத்துக்குப் பின்னர் நூற்றுக் கணக்கான ஆஸ்ரமங்கள் தோன்றிவிட்டன.இப்பொழுது அது உலகின் யோகா தலை நகர் Yoga Capital of the World and Gateway to the Garhwal Himalayas என்று அழைக்கப்படுகிறது.
XXX
7.கங்கை நதியின் கரையில் உள்ள எல்லா ஊர்களும் இந்துக்களுக்குப் புனிதமானவைதான். ஆயினும் இந்த இடம் ராம லட்சு மணர்கள் தவம் செய்த இடமாகக் கருதப்படுகிறது.கந்த புராணத்தில் ரிஷிகேஷின் பெருமை பேசப்படுகிறது.
XXX
8.லெட்சுமணன் கங்கை நதியைக் கடக்கப் பயன்படுத்திய கயிற்றுப் பால த்தின் பெயர் லட்சுமண் ஜுலா .இது பலமுறை கங்கை நதியால் அடித்துச் செல்லப்பட்டு மீண்டும் மீண்டும் புதுக்கப்பட்டுள்ளது .
XXX
9.ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கருதப்படும் சத்ருக்ன மந்திர், பாரத் மந்திர், லக்ஷ்மண் மந்திர் (மந்திர் என்றால் தமிழில் கோவில்கள்), முதலிய பல கோவில்கள் உள்ளன .
XXX
10.சுவாமி விஷ்ணு தேவானந்தா.Vishnudevananda Saraswati (31 December 1927 – 9 November 1993). இவர் சுவாமி சிவானந்தாவின் சீடர்.
மேலை நாடுகளுக்குச் சென்று ஆசனங்களைப் பயிற்றுவித்து சர்வதேச யோக வேதாந்த கேந்திரங்களை அமைத்தார். அத்தோடு நில்லாமல் உலக சமாதானத்தை நிலைநாட்ட, பெர்லின் சுவர் முதலியவற்றின் மீது விமானத்தில் பறந்து சென்று உலகம் முழுதும் பறக்கும் சாமியார் என்று அழைக்கப்பட்டார் . இவர் மூலமாகவும் ரிஷிகேஷ் புகழ் பரவியது பிற்காலத்தில் இவரது பெண் சீடர்கள் இவர் மீது புகார்களையும் வீசினார்கள் .
—SUBHAM—
Tags- சுவாமி சிவானந்தா , சுவாமி விஷ்ணு தேவானந்தா, மகேஷ் யோகி, ரிஷிகேஷ், தெய்வ நெறிக் கழகம், DIVINE LIFE SOCIETY,Swami Sivananda