
Post No. 12,589
Date uploaded in London – – – 15 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 28
57.வல்லிபுர ஆழ்வார் கோவில்
இலங்கையின் வடபகுதியில் பருத்தித்துறையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் வல்லிபுரம் கிராமம் இருக்கிறது . இங்கு புகழ்மிகு வல்லிபுர ஆழ்வார் கோவில், எழில்மிகு கோபுரத்துடன் காட்சி தருகிறது .
முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் BULLET POINTS
இலங்கை இந்துக்களிடையே உள்ள வினோத விஷயம் மூர்த்திக்குப் பதிலாக அவரது ஆயுதத்தை வைத்து வழிபடுவதாகும் . யாழ்ப்பாண நல்லூர் கந்த சாமி கோவிலில் முருகனுக்குப் பாதிலாக அவரது ஆயுதமான வேல், மூலஸ்தானத்தில் வழிபடப்படுகிறது . அதே போல வல்லிபுரத்தில் திருமாலின் சுதர்சன சக்கரமே மூலஸ்தானத்தில் வழிபட ப்படுகிறது.
இரண்டாவது விநோதம், பிள்ளையாருக்குப் பூஜை செய்த பின்னரே வல்லிபுர ஆழ்வாருக்கு பூஜை நடைபெறும். விநாயகர் வழிபாட்டை பெளத்த மதத்திலும் கூடக் காணலாம். ஆயினும் தமிழ்நாட்டில் தற்கால வைணவக் கோவில்களில் பிள்ளையார் வழிபாடு அரிது. வல்லிபுரத்திலோ, குருக்கட்டு சித்தி விநாயகருக்குப் பூசை செய்த பின்னர் தான் பெருமாளுக்குப் பூஜை.
இன்னும் ஒரு அரிதான விஷயம், தீபாவளி தினத்தன்று நரகாசுர வதம் விழாவாக அனுஷ்டிக்கப்படுவது ஆகும். தீபாவளிக்கு சமண மதம் வரை பல காரணங்கள் சொல்லப்பட்டு கொண்டாடுகின்றனர். ஆயினும் கிருஷ்ணன் செய்த நரகாசுர வதத்தை தீபாவளியுடன் தொடர்பு படுத்துவது தமிழ்நாட்டில்தான் பரவலாக இருக்கிறது .
வல்லிபுரம் புகழ் அடைய மற்றோர் காரணம் அங்கே கிடைத்த சிறிய தங்கத் தகட்டில் உள்ள கல்வெட்டு ஆகும். இதில் பிராமி லிபியில் சில வரலாற்றுச் செய்திகள் கிடைக்கின்றன . 1936–ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத் தகடு .
பல கோவில்களைப்ப போல இதுவும் இந்தியாவுடன் தொடர்புடைய கோவில்.
ஐந்தாவது அதிசயம் இங்கு விபூதியும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. தமிழ் நாட்டின் வைவணக் கோவில்களில் இதைக் காண முடியாது
Xxxx
கொஞ்சம் கிசு, கிசு ; சொந்த புராணம்
(லண்டனுக்கு வந்த ஒரு வைணவ உபன்யாசகரை லண்டன் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். காரணம் அங்குள்ள ஹாலில் நடந்த நிகழ்ச்சி. அவருக்குப் பொன்னாடை போர்த்தி ஒரு கவரில் பணமும் அன்பளிப்பாகக் கொடுக்க ஏற்பாடாகியிருந்தது. உபன்யாசம்/ சொற்பொழிவு முடிந்த பின்னர் முருகன் சந்நிதிக்கு அழைத்துச் சென்றேன்.; அவரும் மறுக்காமல் என்னுடன் வந்தார்.
முருகன் சந்நிதியில் தக்க மரியாதைகளைத் செய்த குருக்கள் , அவர் கையிலும் விபூதியைக் கொடுத்தார். அதை அவர் தமிழ் நாட்டின் திராவிட முரடர்கள், முட்டாள்கள் செய்வதைப்போல கீழே உதறிவிட்டார். குருக்கள்மார்களின் முகங்கள் சிவந்தன . ஆயினும் வைதாரையும் வாழவைப்பவன் முருகன். அவனைத் தமிழிலில் திட்டினால் கூட அவன் மகிழ்வான் என்று அருணகிரி பாடியதை நெஞ்சில் குடிகொண்ட குருக்கள்கள் ஒன்றும் சபிக்கவில்லை. ஆயினும் அவருக்காக எல்லா குருக்கள்களும் ஒரு கவரில் போட்டுவைத்த பணத்தைக் கொடுக்கவில்லை. அவர்கள் மனம் ஒப்பவில்லை. நானும் வந்த உபன்யாசகரை காரில் ஏற்றிவிட்டுத் திரும்பினேன்; கார் சிட்டாகப் பறந்தது.
திரும்பிப் பார்த்தேன்; தலைமைக் குருக்கள் கையில் (ENVELOPE ) பண உறையுடன் ஓடிவந்தார்; அவரிடம் சொன்னேன் — கவலைப் படாதீர்கள்; நீங்கள் ஏன் பண முடி ப்பைக் கொடுக்கத் தயங்கினீர்கள் என்பதை நானும் கவனித்தேன். நீங்கள் செய்த காரியம் முற்றிலும் சரியானதே; எனக்கும் உங்களைப் போலவே வருத்தம் ஏற்பட்டது என்றேன்..
திராவிட அசடுகள் போல பலர் உண்டு.
உலகம் முழுதும் ஹரே கிருஷ்ண (ISKCON) இயக்கத்தைப் பரப்பி, வெள்ளைக்காரர்களையும் குடுமி வைத்துக்கொள்ள வைத்து, உலக நகரங்களில் வெள்ளைக்கார பெண்களை டான்ஸ் ஆட வைத்த பெரியவர் பக்தி வேதாந்த பிரபுபாத ( FOUNDER OF ISKCON) ஆவார் . அவரும் பகவத் கீதை பேருரையில் ஸ்லோகத்துக்கு ஸ்லோகம் சிவபெருமானை வம்புக்கு இழுத்து அவரை டெமி காட் DEMI GOD – குட்டி தேவதை – என்று திட்டுகிறார். ஆக உலகில் இப்படிப் பல அசடுகள் உண்டு.
மதுரையில் ஒரு ஜீயர் உபன்யாசம் செய்தார்; மதுரையிலுள்ள பிரபல தொழில் நிறுவனம் வைணவர்களால் நடத்தப்படுவதால் அவருக்கு ராஜ உபசாரம் செய்தனர். அவர் ஒருநாள் உபன்யாசத்தில் சிவபெருமானை வம்புக்கு இழுத்து. சிவன் ஜடை நாற்றம் பிடித்தது. அதிலிருந்து புனித கங்கை எப்படிவரும் ? என்று அங்கலாய்த்தார். நுணலும் தன வாயால் கெ டுமென்பது பழமொழி; அவர் உபன்யாசத்தைக் கேட்கப்போன சைவர்கள் அன்றோடு அவர் இருக்கும் பக்கத்துக்கே செல்லவில்லை . இப்போதும் தமிழ் நாட்டு வைணவக கோவில்களில் அந்தந்த வகை நாமம் போட்டோருக்கு அந்தந்த கோவில்கள் (வடகலையா, தென் கலையா , U யூ நாமமா, ஒய் Y நாமமா) சிறப்பு மரியாதை செய்வதையும் என்னைப்போல விபூதி பூசியோருக்கு வேறுவித, மாற்றாந்தாய் மனப்பான்மையைக் காட்டுவதையும் பார்க்கலாம் ).
xxxxx

நிற்க; ஊர் வம்பு, கிசு கிசுக்களை ஒதுக்கிவிட்டு வல்லிபுரம் ஆழ்வாரை தரிசிப்போம். இங்கும் ஒரு அதிசயக் கதை சொல்லப்படுகிறது . நேற்று பொன்னாலை வரதப்பெருமாள் கோவிலில் விஷ்ணு, கூர்ம அவதாரம் எடுத்த கதையைக் கண்டோம். வல்லிபுரத்தில் மச்சாவதாரம் எடுத்த கதையைக் காண்போம்.
வல்லி நாச்சியார் என்ற மீனவப் பெண்ணுக்கு நீண்ட காலத்துக்குக் குழந்தையே பிறக்கவில்லை.அவர் வல்லிபுரம் அருகில் கடலில் பயணித்தபோது ஒரு அதிசய மீன் ,பெரிய மீன், துள்ளிக் குதித்தது ; அது அவருடைய மடியில் வந்து விழுந்தது. அதை அவர் அன்போடு அர வணைக்கவே அது குழந்தையாகிப் பின்னர் திருமாலின் ஸுதர்சனமாக மாறியது. அந்த சுதர்சன சக்கரத்தை மேளதாள முழக்கத்துடன் ஏற்றிவந்தனர். பல்லக்குத் தூக்கிகள் ஓய்வெடுப்பதற்காக சற்று நேரம் பல்லக்கினை இறக்கிவைத்தனர் ; மீண்டும் வந்து தூக்க முயன்றபோது அதைத் தூக்க முடியவில்லை. அந்த ஊரின் மகிமையை உணர்ந்த அவர்கள் அங்கேயே சுதர்சன சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்தனர் . இன்றுவரை உயர்ந்த கோபுரம் கட்டி , முறையான பூஜைகள் விழாக்களுடன் அவரை ஆராதித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் பல விழாக்கள் நடைபெறுகின்றன .
புரட்டாஸி மாதம் பெளர்ணமியில் தீர்த்த உற்சவத்துடன் 15 நாள் திரு விழா பூர்த்தியாகும் 16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நிகழ்த்தப்படும். இக்கோவில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும். நாராயணனின் நரகாசுர சம்காரம் தீபாவளி தினத்தன்றும், மார்கழி மாதம் முழுவதும் காலையில் விசேட பூசைகளும் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையே வல்லிபுர ஆழ்வாருக்கு விசேஷ நாளாகும். இவ்வாறு பலவிதமான சிறப்புகள் உடைத்து .
இந்த வல்லிபுரம், யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பகுதியில் இருக்கிறது; இங்கு தொண்டை நாட்டின் மறவர்கள் குடியேறியதால் இந்தப் பெயர் என்று சரித்திர ஆசிரியர்கள் கருதுகின்றனர் .
இயற்கை எழிலும், நல்ல கடல் மணலும் நிரம்பிய இந்த ஊர், ஒருகாலத்தில் சிங்கை நகர் என்னும் தலை நகராக விளங்கியது மேற்கண்ட பல விஷயங்களுக்கு ஆதாரம் வல்லிபுர வைபவம் என்ற தலைப்பில் தட்சிண கைலாச மான்மியம் , தட்சிண கைலாச புராணம் என்ற இரண்டு நூல்களில் இருக்கிறது.
ஆழ்வான் என்பது வைணவத் தொண்டரையும், நம்மை எல்லாம் ஆளும் பெருமாளையும் குறிக்கும்
இந்தக் கோவிலில் விஷ்ணு, விநாயகர், நாகர், நாச்சியார், ஹனுமார், நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன . 71 அடி உயர ராஜ கோபுரம் கிருஷ்ண லீலைகளை சித்தரிக்கிறது .
கோவில் பற்றி தற்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகள் ,
வல்லிபுரம் பதிகம், புலவர் பீதாம்பரம், 1819
வல்லிபுரம் பதிகம், சிவசம்பூ புலவர், 1852-1910
கும்பாபிஷேக மலர், 1977
Xxx
58. மட்டக்களப்பு விஷ்ணு கோவில்கள்
மட்டக்களப்பு வட்டாரத்தில் விஷ்ணு, கிருஷ்ணன் கோவில்கள் அதிகம் இருக்கின்றன . முல்லை நிலம் மலிந்துள்ளதாலும் பாலுக்கும் நெய்யுக்கும் பஞ்சமில்லாத மேய்ச்சல் நிலங்களில் கறவைப் பசுக்கள் நிறைந்திருப்பதாலும் கிருஷ்ணனுக்குக் குறைவின்றி பாலும் வெண்ணெயும் கிடைக்கின்ற்ன கலிங்க மகா மன்னன்/ மாகோன் 1215-1255 இந்தியாவிலிருந்து வ து ஆண்டதாலும் அவன் ராமர், கிருஷ்ணர் மீது பக்தி கொண்டவன் என்பதாலும் இங்கே பெருமாள் கோவில்கள் பெருகின.. சில கோவில்கள் ஆண்டுதோறும் கல்யாண உற்ச வத்துக்கு மட்டுமே திறக்கின்றன அப்போது 9 நாட்களுக்கு கண்ணனின் வீரதீரச் செயல்களை வருணிக்கும் கஞ்சன் அம்மானை பாராயணம் நடைபெறும். . ருக்மிணி– கிருஷ்ணர் கல்யாண வைபவத்துடன் விழாக்கள் நிறைவுபெறும்.
திமிலை தீவு , வந்தாறு மூலை , தம்பிளை வில்லு விஷ்ணு கோவில்கள் , மட்டக்களப்பு திருப்பழுகாமம் – அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு திருக்கோயில், குருக்கள் மடம் , குருகல்மாதம் ,களுதாவளை கோவில்கள் குறிப்பிடத்தக்கன. திமிலை தீவு , வந்தாறு மூலை கோவில்களில் நாடகங்கள் வாயிலாக புராண, இதிஹாஸக் கதைகளை நடிப்பது குறிப்பிடத்தக்கது .
EVERYONE MUST WATCH THE BEAUTIFUL SCENES , DRAMAS IN FACEBOOK
இதோ திமிலைத் தீவுக் காட்சிகள் (பேஸ்புக், Facebook, You Tube யூ ட்யூபில் பொம்மலாட்ட நாடகக் காட்சிகளைக் காணலாம்)

FOLLOWING IS FROM FACEBOOK
“ஈழமணித் திருநாட்டின் கீழ்க்கரையின் பாடும் மீன் பண்ணிசைக்கும் கதிர் நாடாம் மட்டுமாநகரின் செந்தமிழும் சைவமும் சேர்ந்து மணம் பரப்பும் #திமிலைதீவு# எனும் பதிதனிலே விஷ்ணு ஆலயம் எனப் பெயர்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வருடாந்த உற்சவம் தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் .திருவிழா நிகழ்வுகள் யாவும் நாடகபாணியில் இடம்பெற்று 10ம் நாள் ( ருக்மிணி )கல்யாண அமுதுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறும்
திருவிழா காலங்களின் எம் பெருமாள் வெளி ஊர்வலம் வரும் வேளையில் இவ் பொம்மை ஆட்டங்கள் மிகவும் அழகான முறையில் ஆடப்படும். இப் பொம்மைகளை எமது ஆலயத்தினை சார்ந்த இளைஞர்கள் சிறுவர்கள் தாமாகவே வடிவமைத்து திறன்பட நிகழ்த்துவார்கள் இக் கலையானது பல வருடங்களாக திருவிழாக் காலங்களில் எமது ஆலயத்தில் செய்யப்பட்டு வருகின்றது .
முதலாம் நாள் திருவிழா: மாங்கனி பறித்தல் வேட்டைக்கு செல்லும் கம்சன் தனது சகோதரிக்காக மாங்கனி பறித்து சாபம் பெறுதல்.
இரண்டாம் நாள் திருவிழா : பூதகி வதம்- நச்சுப்பால் கொடுத்து கண்ணனைக் கொல்வதற்காக கம்சனால் அனுப்பப்பட்ட பூதகியை வதம் செய்தல்..
மூன்றாம் நாள் திருவிழா: மருதுகால் சாய்தல் — கம்சனின் ஏவலால் கண்ணைக் கொல்ல வந்து மருத மரங்களாய் நின்ற அசுரர்களை ஊர்ந்து அழித்தல். ஶ்ரீ கிருஷ்னரின் லீலைகள் யாவும் திருவிழாக் காலங்களில் நாடக பாணியில் நடைபெறுவது எமது ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும்.
·
நான்காம் நாள் திருவிழா: கன்று கொன்று கனிக்கெறிதல் – கண்ணணைக் கொல்ல வந்து கன்றுகளாவும் விளாமரமாகவும் நின்ற அசுரர்களை வதம் செய்தல் . ·
5ம் நாள் திருவிழா: கூத்தரைக் கொல்லுதல். கண்ணனை அழிக்கக் கூத்தாடிகளாய் வந்த அசுரர்களை கூத்தாடியே வதம் செய்தல்
·ஆறாம் நாள் திருவிழா: வாணன் யுத்தம் – கண்ணன் தன் எதிரியான வாணனைக் யுத்தம் செய்து மாய்த்தல்
·
ஏழாம் நாள் திருவிழா- நரகாசூரன் வதை – அனைத்து உலக உயிர்களையும் தன் கொடுமையால் துன்புறுத்திய நரகாசூரனைப் திருமால் வதம் செய்து அருள்பாலித்தல் –
எட்டாம் நாள் திருவிழா- கம்சன் சம்ஹாரம் – தன்னைக் கொல்வதற்காக சதா சூழ்ச்சிகள் புரிந்த தன் தாய்மாமன் கம்சனைக் கிருஷ்ணர் சம்ஹாரம் செய்தல்
RUKMINI KALYANAM
ஒன்பதாம் நாள் திருவிழா – திருக்கல்யாணச் சடங்கு – ஶ்ரீ கிருஷ்ணர் தன்னைக் காதலித்த மங்கை உருப்பினி (RuminiIயைச் சிறையெடுத்துச் சென்று திருமாங்கல்யதாரணம் செய்தல்.
To be continued……………………………..
Tags- திமிலைத் தீவு, பொம்மலாட்டம், கஞ்சன்(Kamsan) அம்மானை , வந்தாறு மூலை , தம்பிளை வில்லு, விஷ்ணு கோவில்கள், Rukmini Kalyanam, மட்டக்களப்பு