அயல் தேச சொத்து! (Post No.12,601)

Bank of Switzeland 
 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,601

Date uploaded in London –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

அயல் தேச சொத்து!

ச.நாகராஜன்

அயல் தேச சொத்தால் என்ன லாபம்?!

அயல் நாட்டில் சொத்து இருக்கிறது – நிறைய! அதனால் என்ன பிரயோஜனம் என்கிறார் கவிஞர்!

கிம் தயா சுமஹத்யாபி ஷ்ரியா தேசாந்ந்தரஸ்தயா |

ரிபவோ யாம் ந பஷ்யந்தி சுஹ்ருபித்ர்யா ந பூஜ்யதே ||

எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி, அயல் நாட்டில் அந்த சொத்து இருக்கிறது என்றால் அதைப் பார்க்கவும் முடியாது ஒருவரின் உறவினராலோ. அல்லது அவரது நண்பர்களாலோ அனுபவிக்க முடியாது.

ஆகவே அயல்நாட்டில் சொத்து சேர்ப்பது பயனில்லை.

மனைவியைப் பிரிந்த போது இளமையால் என்ன பயன்?

தேவைப்படுபவருக்குக் கொடுக்காமல் தர்மம் செய்தாயா நீ?

மற்றவர்களுக்கு உதவி செய்யாமல் செய்யும் சேவையால் என்ன பிரயோஜனம்?

தாம்பத்ய வாழ்க்கையை மேற்கொண்ட தம்பதிக்கு ஒரு மகன் பிறக்காவிடில் அதனால் என்ன பயன்?

ஒருவர் தன் மனைவியை விட்டு இளம் வயதில் பிரிந்து வாழ்ந்தால் அந்த இளமையால் என்ன தான பிரயோஜனம்?

கிம் தே க்ருதம் விதரணம் யதி நாதிர்தாய

    கிம் சேவயா யதி பரோபக்ருதௌ ந யத்ன: |

கிம் சங்கமேன தனயோ யதி நேக்ஷணீய:

    கிம் யௌவனே ந விரஹோ யதி வல்லபாயா: ||

சரியான நான்கு கேள்விகளைக் கேட்கிறார் கவிஞர்.

நமக்குத் தெரிந்த, புரியக் கூடியவை தான் பதில்கள்!

மார்பகத்தைக் கையால் மூடிய காரணம் என்ன?

ஒரு பெண் கைகளால் மார்பகங்களையும் உதடுகளையும் மூடிக் கொள்கிறாள்!

ஏன்? காரணத்தைக் கண்டுபிடித்த கவிஞர் சொல்கிறார்:

கிம் த்வம் நிகூகஸே தூதி ஸ்தனௌ வக்த்ரம் ச பாணினா |

சவ்ரணா ஏவ ஷோபந்தே சூராதரபயோதரா: ||

ஓ! எனது தோழியே! ஏன் உனது மார்பகங்களையும் முகத்தையும் (அதாவது உதடுகளையும்) உனது கைகளால் மூடி மறைக்கிறாய்? போர்வீரர்கள், உதடுகள், மார்பகங்கள் எல்லாம் அவர்களின்/அவற்றின் காயத்தினால் பிரகாசமாக இருப்பர்/இருக்கும் (என்பதாலோ!)

மழை மலையைக் கரைக்கிறது!

அத்வா ஜரா தேஹவதாம் பர்வதானாம் ஜலம் ஜரா |

அசம்போகோ ஜரா ஸ்த்ரீணாம்  வாக்‌ஷல்யம் மனஸோ ஜரா ||

பயணம் உடலைத் தளர்த்துகிறது.

மழை மலையைக் கரைக்கிறது.

தாம்பத்ய (பாலியல்) சுகம் இல்லையெனில் பெண்கள் தளர்கிறார்கள்.

வசவு வார்த்தைகள் மனதைத் தளர வைக்கிறது.

புகழில்லாத வாழ்க்கை வீணே!

அந்த: ச ஏவ ச்ருதவர்ஜிதோ ய:

    ஷட: ச ஏவார்திநிரர்தகோ ய: |

பூத: ச ஏவாஸ்தி யஷோ ந யஸ்ய

    தர்மே ந தீர்யஸ்ய ச ஏவ அ ஷோச்ய: ||

ஆன்மீக கல்வி இல்லாதவனே குருடன்.

கெஞ்சிக் கேட்டால் தான் வேலை செய்வேன் என்பவன் கபடன்.

புகழில்லாத வாழ்க்கையோடு இருப்பவன் இறந்தவன்.

தர்மத்தில் மனதைச் செலுத்தாதவன் இரக்கப்படவேண்டியவன்.

எந்த சாஸ்திரங்கள் வீணானவைஏன்?

அன்யானி சாஸ்த்ராணி விநோதமாத்ரம்

    ப்ராப்தேஷு காலேஷு ந தைஸ்ச கிஞ்சித் |

சிகித்ஸிதஜ்யோதிஷமந்த்ரவாதா:

    பதே பதே ப்ரத்யயமாவஹந்தி ||

மற்ற சாஸ்திரங்கள் எல்லாம் பொழுதுபொக்குக்கு மட்டும் உகந்தவையே. மிக முக்கியமான தேவை உள்ள சமயங்களில் அவை உதவாது.

ஆனால் சிகித்ஸை அதாவது மருத்துவம், ஜோதிடம், மந்திர சாஸ்திரம் ஆகியவை மட்டுமே வாழ்க்கையில் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் நம்பிக்கையைத் தருபவை.

**

Leave a comment

Leave a comment