பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் மகிழ்ச்சி தரும் (Post No.12,610)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,610

Date uploaded in London –  20 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் மகிழ்ச்சி தரும் தேவி!

ச.நாகராஜன்

பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் மகிழ்ச்சி தான்!

ச்ருதம் த்ருஷ்டம் ஸ்ப்ருஷ்டம் ஸ்மிருதமபி ந்ருணான் ஹ்ராதஜனனம்,

ந ரத்னம் ஸ்த்ரீப்யோன்யத க்வசிதபி க்ருதம் லோகபதிநா |

ததர்தம் தர்மார்தௌ விபவவரசௌக்யானி ச ததோ,

க்ருஹே லக்ஷ்ம்யோ மான்யா: சததமபலா மானவிபவை: ||

அந்த அழகியைக் கேட்டாலும், பார்த்தாலும், தொட்டாலும், நினைவுபடுத்திக் கொண்டாலும் இன்பம் தருவதால் அது போன்ற ஒரு ரத்தினம் வேறெங்குமில்லை.

இல்லங்களில் செல்வம் தரும் லக்ஷ்மிக்கு ஒரு கௌரவமான இடம் உண்டு.

இப்படித்தான் அவன் உலகத்திற்கே தலைவனான இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறாள்.

அனைத்து விதத்திலும் மகிழ்ச்சி அடைய செல்வமும் புண்யமும் அடைய அவள் உதவுகிறாள்.

ஆக இப்படி ஒரு தேவியைப் போல அண்டத்தில் வேறொரு தெய்வம் உண்டா என்ன?

கடன் வாங்கியும் நெய் சாப்பிடு!

யாவத்ஜீவேத் சுகம் ஜீவேத்ருணம் க்ருத்வா த்ருதம் பிபேத் |

பஸ்மீபூதஸ்ய தேஹஸ்ய புனராகமனம் க்ருத: ||

எவ்வளவு நாள் வாழ்கிறோமோ அவ்வளவு நாள் சுகமாக வாழ வேண்டும். கடன் வாங்கியும் கூட நெய் சாப்பிட வேண்டும். உடல் சாம்பலாக ஆகி விட்டால் அது எப்படி தனது முந்தைய நிலைக்கு வர முடியும்?

அனுபவி ராஜா அனுபவி! இருக்கும் வரை வாழ்ந்து விடு, இரண்டினில் ஒன்று பார்த்து விடு! – இது வாழும் வகைக்கான ஒரு உபதேசம்!

பரோபகாரி உலகில் அரிதாகவே காணப்படுவர்!

பரோபகாரைகதிய: ஸ்வசுகாய கதஸ்ப்ருஹா: |

ஜகத்ஹிதாய ஜாயந்தே விரலா: சாதவோ புவி ||

மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட நல்லவர்கள், தங்களது மகிழ்ச்சி பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்.இப்படிப்பட்டவர்கள் மிக அரிதாகவே உலகில் காணப்படுவர்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகலே அறிவு!

பஞ்சபி: சஹ கந்தவ்யம் ஸ்தாதவ்யம் பஞ்சபி: சஹ |

பஞ்சபி: சஹ வக்தவ்யம் ந துக்கம் பஞ்சபி: சஹ ||

ஐந்து பேரோடு சேர்ந்து ஒருவன் செல்ல வேண்டும். அவர்களோடு சேர்ந்தே இருக்க வேண்டும். அவர்களுடன் கூடவே பேச வேண்டும். ஆகவே அவன் துன்பப்பட மாட்டான்.

திருவள்ளுவர் கூற்றை இங்கு ஒப்பு நோக்கலாம்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலாதார் – குறள் 140

நான்கு உபாயங்கள்!

சாம தான பேத தண்டமே எதிரியை வெற்றி கொள்வதற்கான நான்கு உபாயங்கள்!

யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படை, காலாட் படை ஆகிய இந்த நான்கு பிரிவுகளே படையின் அங்கங்கள்!

இதைத் தெரிவிக்கும் சுபாஷிதம் இது:

சாமதானே தண்டபேதாவித்யுபாயசதுஷ்டயம் |

ஹஸ்த்யஸ்வரதபாதாதம் சேனாங்கம் ஸ்யாச்சதுஷ்டயம் ||

பசுவைப் பின்பற்றும் கன்று போல கர்மா தொடரும்!

பசு மந்தையில் தன் தாயைக் கண்டு தொடரும் கன்று போல நல்ல கர்மங்களோ அல்லது திய கர்மங்களோ,  செய்த ஒருவனை (தவறாது) பின் தொடரும்.

கர்மா தியரி என்பதை உலகமெங்கும் உள்ள மக்கள் இப்போது அங்கீகரிக்கத் தொடங்கி விட்டனர்.

அதை விளக்கும் ஸ்லோகம் இது:

யதா தேனு சஹஸ்ரேஷு வத்ஸோ விந்ததி  மாதரம் |

ததா சுபாசுபம் கர்ம கர்த்தாரமனுகச்சதி ||

***

Leave a comment

Leave a comment