
Post No. 12,613
Date uploaded in London – – – 20 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Quiz Serial Number 78
1.நவராத்திரி முடிந்தவுடன் வரும் விஜய தசமி யை ஏன் கொண்டாடுகிறோம் ? விஜய தசமி அன்று இந்தியாவில் துவக்கப்பட்ட அமைப்பு எது?
Xxxx
2.எத்தனை வகை நவராத்திரிகளை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்? அவை யாவை ?
xxxx
3.இந்துக்கள் கல்வியைத் துவங்கும் நாள் எது?
xxxx
4. சீமா லங்கனம் என்றால் என்ன?
xxxx
5. தசரா என்றால் என்ன? அது எங்கு நடைபெறுகிறது?
xxx
6.நவராத்திரியை மூன்று பகுதிகளாகப் பிரிப்பார்கள் ? ஏன்?
xxxx
7.பெரிய நவராத்திரி என்று துவங்கும் ?
xxxx
8.இதை குஜராத்திகள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் ?
xxxx

picture- Durga ib Holland Leiden Museum
9.வங்காளத்தில் மாநில அளவில் கொண்டாடப்படும் பண்டிகை எது?
xxxx
10.நவராத்திரியில் ஒன்பது தேவிகள் ஒவ்வொரு நாளிலும் வழிபடப்படுகிறார்கள். அவர்கள் யார் ?
Answers :
1.விஜயதசமியன்று மகிஷாசுரனை தேவி வதம் செய்தாள் . அன்றுதான் ராவணனை ராமபிரான் வதம் செய்து அயோத்திக்குத் திரும்பிய நாள் என்றும் சொல்லுவார்கள் ;ராம்லீலா கொண்டாடப்படுகிறது. அன்று டில்லி போன்ற நகரங்களில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவ பொம்மைகளை எரிப்பார்கள்.
ஆர் எஸ் எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925 ஆம் ஆண்டு விஜய தசமி அன்று துவங்கப்பட்டது
xxxx
2.சைத்ர நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி,
மாக நவராத்திரி
xxxx
3.பாரம்பர்யத்தைப் பின்பற்றும் இந்துக்கள் விஜய தசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்வார்கள். பிறந்தது முதல் இறக்கும் வரை இந்துக்களுக்கு 40 வகை சடங்குகள் உண்டு. அதில் வித்தியாரம்ப மும் ஒன்று. குழந்தைகளை நெல் முதலிய தானியங்கள் உள்ள தட்டில் ஹரி அல்லது சிவன் பெயரை கை விரல்களால் எழுத வைப்பார்கள் .
xxxx
4. ஸம்ஸ்க்ருதச் சொல் சீமா என்றால் தமிழில் எல்லை என்று பொருள். முன் காலத்தில் விஜய தசமியன்று மன்னர்கள் எல்லை தாண்டி படை எடுப்பார்கள் . இப்படி எல்லை தாண்டும் சடங்கினை இப்போதும் ராஜா வம்சத்தினர் அடையாள பூர்வமாகக் கடைப்பிடிக்கிறார்கள் லங்கனம் என்றால் தாண்டுதல்.
xxxx
5. நவராத்திரிக்குப் பின்னர் பத்தாவது நாள் விஜய தசமி. அதையே தசரா என்பர். தசரா விழா மைசூர் அரண்மனையில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது . அப்போது யானைகள் ஊர்வலமாக வரும். அதில் பெரிய யானையில் சாமுண்டீச்வரி தேவி உருவத்தை ஏற்றி வருவார்கள்
xxxxx
6.நவ ராத்ரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்கு ஒன்பது இரவுகள் என்று பொருள். மும்மூர்த்திகளின் மனை வியரான துர்கா, லெட்சுமி, சரஸ்வதியை வழிபடும் வகையில் மூன்று தேவியருக்கும் 3 நாட்கள் வீதம் ஒதுக்கப்படுகிறது. கோவில்களிலும்,வீடுகளிலும் இவ்வாறு தேவியை வழிபடுகிறார்கள்.
xxxx
7. தீபாவளிக்கு முன்னர் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி.; மஹாளய அமாவாசை முடிந்த மறுநாள் நவராத்திரி துவங்கும் .
xxxx
8.குஜராத்தியர் ஒன்பது நாள் இரவிலும் ஒரு பொது இடத்திலோ கோவிலிலோ சக்தி தேவியின் உருவம் அல்லது ஒரு விளக்கினைச் சுற்றி ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருவார்கள் எல்லாம் இறைவனின் பாடல்களாக இருக்கும். இதை கர்பா என்பார்கள். ஆண்கள் ஆடும் ஆட்டம் டாண்டியா எனப்படும். கோலாட்டமும், கும்மியும் ஆடல்களில் இருக்கும் ; எல்லோரும் இதற்காக பாரம்பர்ய உடைகளை அணிந்து கொண்டு செல்லுவார்கள் .
xxxx
9.நவராத்திரி மற்றும் விஜயதசமி ஆகிய 10 நாள் உற்சவமாக மேற்கு வங்காளத்திலும் அருகாமை மாநிலங்களிலும் வீதி தோறும் கொண்டாடப்படும் பண்டிகை இது. துர்க்கை வழிபாட்டோடு புத்தாடை அணிதல், பரிசுகளை பரிமாறிக்கொள்ளல் ஆகியவையும் விழாக்காலத்தில் நடைபெறும். மஹிஷாசுரனை , துர்கா தேவி வதம் செய்ததை , அதாவது தீமையை ஒழித்ததை மக்கள் கொண்டாடுவதே இந்தப் பண்டிகையின் கருத்து துர்கா பூஜா உலகம் முழுதும் வங்காளிளால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
Xxxx
10. · முதல் நாள்- சைல புத்ரி, இரண்டாம் நாள் – பிரம்மசாரிணி, 3 ஆம் நாள் சந்திரகாந்தா , 4ம் நாள் -கூஷ்மாண்ட , 5ம் நாள்- ஸ்கந்த மாதா, 6ம் நாள் – காத்யாயனி, 7ம் நாள் – காள ராத்திரி, 8ம் நாள் மஹா கெளரி, 9. சித்திதாத்ரி (பத்தாம் நாள் மஹிஷாசுரமர்தனி

— subham—
tags- நவராத்திரி, Quiz, கர்பா, டாண்டியா, தசரா , ராம் லீலா, துர்கா பூஜா,