திருக்கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 34 (Post No.12617)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,617

Date uploaded in London – –  –  21 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 34

68.திருக்கோவில் சித்திர வேலாயுத கந்தசாமி கோவில்

சித்திர வேலாயுத என்ற அடைமொழியுடன் உள்ள மூன்றாவது கோவில் இது. கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பு வட்டாரத்தில் உளது .மட்டக்களப்புக்கு தெற்கில் கடலோரமாக 50 மைல் தொலைவு சென்றால் திருக்கோவிலை அடையலாம்; இது பாண்டியர் கால 13 ஆம் நூற்றாண்டுக் கோவில். இந்த ஆலயத்தின் விமானம், எஞ்சி நிற்கும் தூண்களைக் கொண்டு ஆலயத்தின் வயதை தொல் பொருட் துறையினர் கண்டு பிடித்தனர் .

மாயூரம் அருகில் வைத்தீஸ்வரன் கோவில் என்ற ஆலயம் பெயரே ஊர்ப்பெயர் ஆனது போல, இங்கும் திருக்கோவில் என்ற ஆலயமே ஊருக்கும் பெயரைக் கொடுத்துவிட்டது

ராவணன், திருகோண மலையில் உள்ள கோணேஸ்வர லிங்கத்தைக் கும்பிடப்போகும்போது, இங்கு தங்கிச் சென்றான் என்பது கர்ண பரம்பரைக் கதை.  அவன் சென்ற வழியில் எல்லாம் சிவன் கோவில்கள் தோன்றின..

வெட்டா Vedda என்னும் வேடர்கள் வசித்த இடம் இது. அவர்கள் ஈட்டியையும் வில் அம்பினையும் வைத்து மிருகங்களை வேட்டையாடி வந்தனர். ஆகவே ஈட்டி போன்ற வேல் என்பதையும் அவர்கள் வணங்கத் துவங்கினர். அந்த இடங்கள் எல்லாம் பிற்காலத்தில் கோவில்கள் ஆயின.

உகந்த மலை, வெருகல், மண்டூர் முதலிய ஆலயங்கள் இதற்குச் சான்று பகரும்.

இந்த ஆலயங்கள் குறித்து மட்டக்களப்பு மான்மியம் ஒரு செய்தியைத் தருகிறது  அசுரர்களை முருகப்பெருமான் அழித்த போது உண்டான ஒளிக்கதிர்கள் உகந்த மலை, மண்டூர் , திருக்கோவில் ஆகிய 3 இடங்களில் தங்கின. அவை நாவல், தில்லை மரங்களிலும் தங்கின. வேடர்கள் அங்கெல்லாம் வழிபாட்டினைத் துவக்கினார்கள். முன்காலத்தில் இந்த இடம் நாகர் முனை என்னும் துறைமுகமாக விளங்கியது.

மட்டக்களப்பு மான்மியம், திருக்கோவில் தோன்றிய கதையை விரிவாகவே விளம்புகிறது .

பிரசன்ன சித்து என்பவர் இந்தப் பகுதியை ஆண்டபோது, கலிங்க நாட்டிலிருந்து புவனேக கஜபாகு என்ற இளவரசர் வந்தார். அவர் இலங்கையிலுள்ள சிவத் தலங்களைத் தரிசிக்க மனைவியுடன்  வந்தார். அவருக்கு ராஜ உபசாரம் கிடைத்தது. அவருடன் வந்த இளவரசி சோழ நாட்டைச் சேர்ந்தவள். திருக்கோவிலில் ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க ஆசை கொண்டாள் அது நிறைவேறியது. சோழ  நாட்டுச் சிற்பிகள் வந்து கோவிலை எழுப்பினர்.  இளவரசியின் பெயர் தம்பதி நல்லாள். அவள் பெயரில் இன்றும் தம்பிலு வில்லு என்ற இடமுள்ளது .அவர்கள் இங்கேயே குடியேறினர்  இது நடந்தது கி.பி அல்லது பொது ஆண்டு 28 ஆகும். அவர்களுடய மகன் மனு நேய கஜபாகு,  பெற்றோரின் பணியினைத் தொடர்ந்தான். கோவில் ஏழு நிலைக்கு கோபுரமாக உயர்ந்தது. அவன் பல பாசனைக் குளங்களையும்  வெட்டினான்.

பின்னர் பாண்டிய மன்னர்கள் வந்து கோவிலைப் புதுக்கினர்.

கோவிலில் கண்ட கல்வெட்டு பற்றி HUGH  NEVILLE ஹுயூக் நெவில் தகவல் தருகிறார். அது தேவதானக் கல்வெட்டு; அதாவது தேவாலயத்துக்கு விடப்படும் தானம் பற்றியது. விஜய பாகு தேவர் , 50 ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு அளித்தார் இந்த தானத்துக்கு ஊறு செய்வோர் கங்கை நதிக்கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்ற வழக்கமான சாபத்துடன் கல்வெட்டு முடிகிறது. கல்வெட்டு குறிப்பிடும் மன்னர் மூன்றாம் விஜயபாகு 1240-1267 அல்லது ஆறாம் விஜயபாகு 1398-  1410 மன்னராக இருக்கலாம்.

1967ம் ஆண்டில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது;  இது 16 ஆம் நூற்றாடுக் கல்வெட்டு.

பிற்காலத்தில் போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்கள் கோவில் குருக் களைக்  கொன்று கோவிலையும் இடித்தார்கள் என்றும் ஊரே காலியாகி அந்த இடம் வெறிச்சோடிப்போனது என்றும் பால் ஈ  பியரிஸ் தனது நூலில் எழுதியுள்ளார்.

மத வெறியர்கள் அழித்தபோது கோவிலுக்கு 3 கோபுரங்கள் இருந்த செய்தியை போர்ச்சுகீசிய கிறிஸ்தவப் பாதிரி ரெவரெண்ட்  கிராஸ் எழுதிவைத்துள்ளார்..

டச்சுக்கார, பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில்  இந்தியாவிலிருந்து வந்த வணிகர்குல மக்கள் கோவிலை மீண்டும் கட்டினார்கள். முன்னர் இந்தக் கோவிலின் பெயர்- சிவ ஞான சங்கரர் கோவில் .

இப்போது பூஜைகளுடன் ஜூலை ஆகஸ்ட் அமாவாசையில் நிறைவு பெர்ம் பத்து நாள் உற்சவம் நடக்கிறது.

கதிர்காமக் கந்தனை தரிசிக்க பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு  திருக்கோவில் பல வசதிகளை அளிக்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆலயத்தை மக்கள், தேசத்துக் கோவில் என்று உரிமை கொண்டாடுவார்கள் ; பெருமை கொள்வர்.

ஏழாம் விஜயபாகுவால் (1513–1521) அவனது பத்தாம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட சிதைந்த கல்வெட்டொன்று, இக்கோவிலில் உள்ளது. இதே மன்னனால் நீர்ப்பாசனத்துக்கு “வோவில்” எனும் ஏரி வழங்கப்பட்டதைக் குறிப்பிடும் தம்பிலுவில் கல்வெட்டும், இதே ஆலயத்தில் வைத்துப் பேணப்படுகின்றது.

ஆடி அமாவாசையன்று கோவில் விழா பூர்த்தியாகிறது . ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்துவது மிகவும் முக்கியம் என்பதால் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

–subham—

Tags- திருக்கோவில்

Leave a comment

Leave a comment