
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,619
Date uploaded in London – 22 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நந்திக் கலம்பகம் – கவின் மிகு சொற்கள்!
ச.நாகராஜன்
சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)
பாடல்கள் 88, தனிப்பாடல்களாக காணப்படுபவை 27.
S.ராஜம், சென்னை வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.
1. மை வடிவோ, மலை வடிவோ, மரகதத்தின் திகழ் வடிவோ,
செவ்வடிவோ, பொன்வடிவோ – சிவனே, நின் திருமேனி! (பாடல் 1)
2. அனைத்து உலகில் பிறப்பும் நீ, அனைத்து உலகில் இறப்பும் நீ. அனைத்து உலகில் துன்பமும் நீ, அனைத்து உலகில் இன்பமும் நீ (பாடல் 1)
3. ஊழி நீ, உலகு நீ, உருவும் நீ, அருவும் நீ, ஆழி நீ, அமுதம் நீ, அறமும் நீ, மறமும் நீ (பாடல் 1)
4. போகாப் பொழுது (பாடல் 2)
5. மணி நகையவர் மனம் நகுவன (பாடல் 7)
6. செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு (பாடல் 11)
7. எனக்கு என்றின் நிலவு என்னும் இளம் பிறையும் எரியே
சொரிகின்றது (பாடல் 20)
8. அங்கை அகல் வான் மின்னை மெலிவாளை, நூலின் இடையாளை
(பாடல் 24)
9. காவிரி நாட்டு அன்னப் பேடை அதிசயிக்கும் நடையாரை (பாடல்25)
10. விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால், வினையம்
மற்று உண்டோ? (பாடல் 45)
11. வைத்து என்னை ஆயிரம் செய்தீரே! (பாடல் 46)
12. ஆகிடுக மாமை; அணி கெடுக மேனி (பாடல் 51)
13. மனக்கு இனியான், அவன் இட்ட வழக்கன்றோ வழக்கு (பாடல் 53)
14. மலர்க்குல மாதவி தன் மேல் வண்டு ஆர்க்கும் காலம் (பாடல்56)
15. வரிக்குயில்கள் மாவில் இளந்தளிர் கோதும் காலம் (பாடல் 56)
16. நீல மயில் கோதை இவள் (பாடல் 57)
17.அறம் பெருகும் தனிச் செங்கோல் (பாடல் 60)
18. பகை இன்றிப் பார் புரக்கும் பல்லவர் கோன் (பாடல் 70)

தனிப் பாடல்கள்
1. கைக்குடம் இரண்டும், கனக கும்பக் குடமும் முக்குடமும்
கொண்டால் (பாடல் 2)
2. ஏம வரை சலிக்கும், ஏழ் ஆழியும் கலங்கும் (பாடல் 5)
3. சிவனை முழுதும் மறவாத சிந்தையான் (பாடல் 8)
4. கவலை பெரிது! பழிகாரர் வந்திலார்! கணவர் உறவு கதையாய்
முடிந்ததே! (பாடல் 8)
5. மங்கையர் கண் புனல் பொழிய, மழை பொழியும் காலம் (பாடல் 11)
6. கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் (பாடல் 11)
7. ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம் (பாடல் 12)
8. பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி (பாடல் 15)
9. வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் (பாடல் 21)
10. மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி (பாடல் 21)
11. கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் (பாடல் 21)
12. கற்பகம் அடைந்தது உன் கரங்கள் (பாடல் 21)
13. தேன் உறு மலராள் அரி இடம் புகுந்தாள் (பாடல் 21)
14. செந்தழல் அடைந்தது உன் மேனி (பாடல் 21)
15. கண் என்பதும் இலையே! மொழி வாய் என்பதும் இலையே;
காது என்பதும் இலையே; இது காலம் தனில் அடைவோ (பாடல் 25)
16. பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் (பாடல் 26)
17. பெரும் புலவர் தன் கலியைத் தீர்க்கும் தமிழாகர நந்தி (பாடல் 27)
18. என் கலியைத் தீர்ப்பான் இவன் (பாடல் 27)
***