
Post No. 12,633
Date uploaded in London – – – 25 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 38
77. இணுவில் சிவகாமி அம்மன் கோவில்
புலவர் ஒருவர் வாழ்வில் அற்புதம் நடத்தியதால் புகழ் பரவிய கோவில் சிவகாமி அம்பாள் கோவில் ஆகும். இலங்கையில் இரண்டு சின்னத்தம்பி புலவர்கள் தமிழ் மணம் பரப்பிப் புகழ்க்கொடி நாட்டினார்கள் அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்து சின்னத்தம்பிப் புலவர் ; இன்னும் ஒருவர் இணுவை சின்னத்தம்பிப் புலவர். அவருடைய தந்தை பெயர் சிதம்பர நாதர் அவர் டச்சுக்காரர் / ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் . அதாவது இற்றைக்கு 350 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவரை தவறான குற்றச்சாட்டின் பேரில் ஆட்சியாளர்கள் சிறையில் தள்ளினார்கள் . மனம் நொந்து போன அவர் சிவகாமி அம்மையின் அருள் வேண்டி, ஒரு பாமாலை புனைந்தார் . . அவர் பாடிய பதிகத்தில் எட்டாவது செய்யுள் பாடுகையில் சிறைக்கதவுகள் தானாகாத் திற க்கவே அவர் கம்பீரமாக வெளியே நடந்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். அதுமுதல் அவர் புகழும் அம்மன் புகழும் திக்கெட்டும் பரவியது . இது நடந்தது 1760 ஆம் ஆண்டில் .
அவர் பல துதிகளை அம்மன் மீது பாடினார் . அவைகளின் பெயர்கள் —
சிவகாமியம்மை பதிகம்
சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
சிவகாமியம்மை சதகம், ஊஞ்சல், இரட்டைமணிமாலை
சிவகாமியம்மை துதி.
கோவிலுக்குள் உள்ளூர் மக்கள் புலவர் பெயரில், ஒரு மண்டபத்தைக் கட்டி , அவர் புகழ் நீடித்து நிற்கச் செய்துள்ளனர்
பஞ்சவன்ன தூது , நொண்டி நாடகம், கோவலன் நாடகம் முதலிய பல நாடகங்களையும் இயற்றினார். இவருக்கு சான்றோர்கள் ஒன்று கூடி, கதிர்காம சேகர மநு முதலியார் என்ற பட்டத்தினையும் நல்கி னர் .. புலவர் வாழ்ந்த காலத்தில் பிரபல கணேச ஐயர் 1709- 1784, மயில்வாகனப் புலவர் 1770-1867, நல்லூர்க் கவிஞர் 1716-1780 ஆகியோரும் வாழ்ந்தனர்
xxxxx
கோவில் வரலாறு
யாழ்ப்பாண நகரிலிருந்து 4 மைல் தொலைவில் இணுவில் இருக்கிறது . தமிழ் அரசர்கள் ஆண்ட காலத்தில் இந்தியாவிலிருந்து பல தளபதிகளை மன்னர்கள் வரவழைத்தார்கள் ; அவர்களில் ஒருவர் திருக்கோவிலூரிலிருந்து வந்த பேராயிரவன் ஆவார். மக்களுக்கும் தெய்வத்துக்கும் அருந்தொண்டாற்றியதால் அவர் மக்களின் பேராதரவினைப் பெற்றார். அவர் சிதம்பரத்திலிருந்து சிவகாமி அம்மனின் விக்கிரகத்தைக் கொண் டுவரச் செய்து இந்தக் கோவிலைக் கட்டினார் அந்தப் பகுதியில் ஏற்கனவே பல ஆலயங்கள் இருந்தன பேராயிரவன் இறந்த பின்னர் காலிங்கராயன், கைலாயநாதன் ஆகியோர் அப்பகுதியை நிர்வகித்தனர் . அவர்களும் அம்பாள் மீது தூய அன்புகொண்டு ஆலயத்தைப் பராமரித்தனர் . போர்சுகீசிய- ஹாலந்து நாட்டு மதவெறியர்கள் ஆட்சி அழிந்த பின்னர், கோவில் புத்துயிர் பெற்றது..
காலப்போக்கில் கோவிலை விரிவுபடுத்தினார்
இந்தக் கோவில் பல சிறப்புகள் உடைத்து. அவையாவன :
.சாத்திரம்மா என்பவர் ஊர் மக்களிடம் பிடி அரிசி வாங்கி கோவிலின் கோபுரத்தைக் கட்டினார் .
9 நாட்களுக்கு நவராத்திரி உற்சவம் நடத்தப்பட்டு விஜயதசமி அன்று மானம்புத் திருவிழா நடத்துகின்றனர்
பங்குனி மாதத்தில் வருடாந்திர உத்சவமும் , ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழாவும் டிசம்பரில் திருவெம்பாவை விழாவும் நடத்ததப்படுகின்றன . ஆண்டு விழா பங்குனி உத்தரத்தன்று முடிவடையும் .
திருவிழாவின்போது ராஜ ராஜேஸ்வரி விக்கிரகம் பவனி வரும்.
மூலஸ்தானத்தில் அம்பாளும், பிற சந்நிதிகளில் நடராஜர் , விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகங்களும் உள்ளனர்.
மகிழ மரம் கோவிலின் தல விருட்சம் .ஆகும்.
Xxxxxx
78. வண்ணார் பண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம் (நாச்சிமார் கோவில்)

விஸ்வ குல பொற்கொல்லர்களின் குலாதெய்வம் காமாட்சி அம்மன். யாழ்ப்பாணத்தின் வண்ணார் புண்ணை பகுதியில் காமாட்சி கோவில் இருக்கிறது . இந்தக் கோவில் கல் வழிபாட்டிலிருந்து காமாட்சி அம்மன் வழிபாட்டுக்கு உரு மாறியது சுவையான வரலாறு ஆகும்.
பெண்ணொருத்தி காலைக்கடன் கழி க்கச் சென்றபோது அவள் நின்ற மருத மரத்துக்கு அடியில் ஆளே இல்லாத இடத்தில் தன்னுடைய முலைகளை யாரோ திருகுவது போல உணர்ந்து பீதி அடை ந்தாள் ; ஊர் மக்களிடையே செய்தி பரவியது. நாவல் மரங்களும், மருத மரங்களும் பச்சைப் பசேலென்ற வயல் வெளிகளும் சூழ்ந்த இயற்கை வனப்பும் செழிப்பும் உடைய இடம் அது.
ஊரிலுள்ள ஒரு வயதான பெண்மணி, மக்களின் அச்சத்தை அகற்ற, அந்த குறிப்பிட்ட மருத மரத்தடியை சுத்தம் செய்து ஒரு கல்லினை நட்டார் . அதை நாச்சிமார் அம்மன் என்று சொல்லி வழிபடவைத்தார். மக்களின் பக்தி பெருகவே, முறையான மாரி அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அக்காலத்தில் வைத்திலிங்க பத்தர் என்பவர் தென்னிந்தியாவில் தல யாத்திரை மேற்கொண்டார் . அவரிடம் கண்ணையா ஆச்சாரியார் என்ற பிரபல சிற்பி , ஒரு காமாட்சி விக்கிரகத்தை வழங்கவே, அதை நாச்சிமார் கோவிலில் பிரதிஷ்டை செய்தார் பின்னர் அது காமாட்சி அம்பாள் ஆலயம் என்றும் நாச்சிமார் கோவில் என்றும் அழைக்கப்படலாயிற்று .
ஓரிடத்தில் வசிக்கும் மக்களுக்கு இறைவன் அருள்புரிய எண்ணுகையில், அவ்விடத்தில் வசிக்கும் ஒருவரிடம் அற்புதங்களை நிகழ்த்துவதை பெரும்பாலான கோவில் வரலாறுகளில் காண்கிறோம் .
இப்போது கோவிலில் முறையான பூஜைகளும், பல விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. மார்ச்- ஏப்ரலில் 15 நாள் உற்சவம் ; ராஜ கோபுரத்துடன் திகழும் இக்கோவிலில் அழகிய சிற்பங்கள் உள்ள தேரும் உளது .
இலங்கையில் நீர்வேலி முதலிய இடங்களிலும் காமாட்சி அம்மனுக்கு ஆலயங்கள் உள ..
—subham—
Tags – வண்ணார் பண்ணை, காமாட்சி ஆலயம், நாச்சிமார் கோவில், சிவகாமி அம்மன் , கோவில்