

Uduvil Meenakshi
Post No. 12,637
Date uploaded in London – – – 26 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 39
79.உடுவில் மீனாட்சி அம்மன் கோவில்
யாழ்ப்பாண நகருக்கு வடக்கில் ஆறு மைல் தொலைவில் மீனாட்சி அம்மன் கோவில் இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வயல்வெளியில் ஒரு புனிதக் கல் கண்டுபிடிக்கப்பட்டது அது கண்ணகி சிலையும் சிலம்பு அடங்கிய சந்தனப் பேழையும் ஊர்வலமாகச் சென்ற வழியில் இருந்ததால் கண்ணகை அம்மன் என்று மக்கள் வழி படத் துவங்கினர். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரங்கநாத அய்யர் என்பவர் இந்தியாவிலிருந்து மீனாட்சி விக்கிரகத்தை அங்கே பிரதிஷ்டை செய்து முறையான வழிபாட்டினைத் துவக்கி வைத்தார். இப்போது பக்தர் கூட்டம் பெருகி, பெரிய அளவில் விழாக்கள் நடத்தப்படுகின்றன.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவிலின் புகழ் பரவவே, இலங்கை யிலும் கடந்த 300 ஆண்டுகளில் பல இடங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயங்கள் தோன்றியுள்ளன. தனியாகக் கோவில் இல்லாத இடங்களிலும் மீனாட்சி பக்தர்கள் சந்நிதிகளை அமைத்துள்ளனர். சுமார் 300 ஆண்டு வரலாறு உடையது உடுவில் மீனாட்சி அம்மன் கோவில்..

XXXX
இலங்கையில் மேலும் பல மீனாட்சி அம்மன் கோவில்கள்
80.மடத்தடி மீனாட்சி அம்மன் கோவில்
காரைதீவு, மாட்டுப்பளை, மடத்தடி ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் மதுரையைப் போலவே சித்திரா பெளர்ணமி காலத்தில் விழா நடத்தப்பட்டுகிறது .
வரலாற்றுப் பிரசித்திபெற்ற அருள்மிகு மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப்பெருவிழா 2022 ஏப்ரல் மாதம் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலிருந்து பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
xxxx
81.ஊரெழு மீனாட்சி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊரெழு எனும் இடத்தில் அமைந்துள்ளது.
xxxx
82. கந்தரோடைக்கு அணித்தே மாகியப்பட்டி கண்ணகை அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மனும் கண்ணகியும் வழிபடப்படுகின்றனர்
இலங்கை வேந்தன் கஜபாகு 1900 ஆண்டுகளுக்கு முன்னர் சேர நாட்டில் கண்ணகி சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட செய்தி சிலப்பதிகார காவியத்தில் கிடைக்கிறது; கஜபாகு மன்னன் கொண்டுவந்த கண்ணகி சிலையும் சிலம்பு அடங்கிய சந்தனப் பேழையும் கண்டி கதிர்காமம் வரை ஊர்வலமாகச் சென்றது.
அது முதற்கொண்டு கண்ணகி சிலை சென்ற வழியெல்லாம் கண்ணகை அம்மன் கோவில்கள் தோன்றின. மதுரை நகரினை ஒரு முலையால் கண்ணகி எரித்த செய்தி உலகறிந்தது. ஆகையால் அவளை மதுரை மீனாட்சி அம்மன் போலவே மக்கள் கருதினர். இதனால் பல இடங்களில் மீனாட்சியுடன் சேர்த்தே கண்ணகி வழிபடப்பட்டாள் ; காலப் போக்கில் கண்ணகையை ராஜ ராஜேஸ்வரி முதலிய தேவிகளாகவும் வழிபட்டு அந்த விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்ததை இலங்கைக் கோவில்களின் வரலாற்றை ஊன்றிப் படிப்போர் அறிவர்.
Xxxxx

Pungudu Tivu Raja Rajeswari Temple
இலங்கையில் துர்க்கை அம்மன் வழிபாடு
தெல்லிப்பளை துர்கா கோவில் பற்றி கோவில் எண் 63-ல் எழுதியுள்ளேன்
யாழ்ப்பாண நகரிலிருந்து காங் கேசன் துறை நோக்கிச் செல்லும் சாலையில் எட்டாவது மைலில் தெல்லிப்பளை துர்கா கோவில் அமைந்துள்ளது. ஏனைய சில துர்க்கை அம்மன் கோவில்களையும் தரிசிப்போம்
83. மிருசுவில் துர்க்கை அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசத்திலமைந்த மிருசுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.
84.திருகோணமலை துர்க்கை அம்மன்
திருகோணமலை, உவர்மலை துர்க்கை அம்மன் ஆலய த்திலும் ஆண்டுதோறும் பெரிய அளவில் உற்சவம் நடக்கிறது ஆலய நவதள இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பூஜைகள் 2022 மார்ச் மாதம் நடந்தது.
மேலே குறிப்பிட்ட கோவில்களுக்கு நேரில் செல்ல இயலாதவர்கள் யூ ட்யூப் YOU TUBE வாயிலாக உற்சவ நிகழ்ச்சிகளைக் காணலாம்.
–SUBHAM–
Tags – துர்க்கை அம்மன், கோவில், கண்ணகை அம்மன், மீனாட்சி அம்மன்