காளி கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 40 (Post No.12,641)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,641

Date uploaded in London – –  –  27 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 40

85.வண்ணார் பண்ணை கண்ணத்திட்டி காளி கோவில்

வண்ணை ஸ்ரீ நொச்சியம்பதி பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் ஆண்டுதோறும் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது

xxxx

கண்ணத்திட்டி காளிதேவி கோவில்  1782-ல் கட்டப்பட்டது  சிவன் கோவில் கட்டுவதற்காக வைத்தி லிங்கம் செட்டியார் அழைத்து வைத்த சிற் பிகள் இந்தக் கோவிலைக் கட்டினார்கள் . 1800 ஆம் ஆண்டில் பத்தர் குடும்பத்தினர் கோவிலை விரிவுபடுத்தினார்கள் . விஷ்வ குல பொற்கொல்லர்கள் தொடர்ந்து நிர்வகித்துவந்தனர் சிவன் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது.; சாலையில் எதிரேயுள்ள தாமரைக்குளம் இந்த இடத்துக்கு அழகு சேர்க்கிறது. மூலஸ்தானத்திலிருந்து காளி தேவி அருள்புரிகிறாள் . பரிவார தேவதைகளும் தனி சந்நிதிகளில் இருக்கின்றனர். .

ஒரு நாளைக்கு நான்கு முறை நடக்கும் நித்திய  பூஜைகளுடன் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது 21 நாள் கெளரி விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது. 1971ல் கும்பாபிஷேகம் நடந்தது .

xxxxx

86. பிட்டியம்பதி பத்ரகாளி கோவில்

யாழ் நகரில்  இருந்து எட்டுமைல் தொலைவிலுள்ள கிராமம் வட்டுக்கோட்டை. இதன் அருகிலுள்ள சங்கரத்தையில் வயல் வெளிகள் சூழ உள்ள ஆலயத்தில் பத்ரகாளி காட்சி தருகிறாள். கோவிலின் வரலாறு சுவையானது 300 ஆண்டுகளுக்கு முன்னர் நெல் வயல்களுக்கு இடையே ஒரு பெரிய புளியமரம் பந்து வளர்ந்து இருந்தது. இந்த மரம் சாகுபடிக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி,  நிலைச் சொந்தக்காரர் அதை வெட்டுவதற்குத் தீர்மானித்தார். அருகில் வட்டுக்கோட்டையிலிருந்து இதற்காக ஆட்களை அழைத்தார். அவர்கள், இந்த மரம் பற்றிக் கிராம மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை காரணமாக வெட்ட மறுத்தனர். அவர்களை அனுப்பிய பின்னர் நில உரிமையாளர் தாமே  வெட்டலாம் என்று கோடரியைத் தூக்கினார். அப்போது மரத்திலிருந்து பாய்ந்த ஒரு பாம்பு அவரை  ஓட ,ஓட  விரட்டியது. அன்று இரவு அவரது கனவில் பத்ரகாளி தோன்றி தனக்கு அங்கே கோவில் அமைக்குமாறு ஆணையிட்டாள்; அதைத் தெடர்ந்து அவர் புளிய மரத்தின் அருகில் ஒரு கொட்டகை அமைத்து காளிதேவி வழிபாட்ட்டைத் துவங்கினார். கோவிலும் படிப்படியாக வளர்ந்து பெரிதானது . அருகிலேயே படிகளுடன் கூடிய கேணி அமைக்கப்பட்டது . விநாயகர், பைரவ மூர்த்தி சந்நிதிகள் கட்டப்பட்டன அருகிலுள்ள புளிய மரத்தையும் சங்கரத்தை மக்கள் வண ங்குகின்றனர்.

 . இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம்  காளி தேவியுடன் வீரபத்ர மூர்த்தியும் இருப்பதாகும் உள்ளூர் மக்கள் உதவியுடன் ராஜநாயகம், வைரவநாதர் ஆகியோர் முன்னின்ன்று கோவிலை வளர்த்தனர்.

பத்ரகாளி சமேதராக வீரபத்ரர் வணங்கப்படுதற்குப்பின்னால் , ஒரு கதை உள்ளது. புராண  காலத்தில் தக்கன் என்பவன் அதிகார ஆணவத்தால் தலைவிரித்தா டிய போது அவனது கொட்டத்தை அடக்க சிவபெருமான் வீர பத்திரரையும் , பார்வதி தேவி பத்ரகாளியையும் படைத்தார்கள் . அத்துடன் தக்கன் ஆட்டம் அடங்கியது

இங்கு மார்ச் மாதம் அறுவடை முடிந்தவுடன் கோவில் விழா நடைபெறுகிறது. ஆனி உத்தரம், பங்குனி உத்தரத்தை ஒட்டி இரண்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

xxxx

87.வீர மாகாளி அம்மன் கோவில்; சரசாலை

யாழ்ப்பாண  சாவாகச்சேரியிலிருந்து  சில மைல்களில் சரசாலை உள்ளது. இங்கு வீர மாகாளி அம்மன் கோவில் இருக்கிறது   சில நூற்றாண்டு களுக்கு முன்னால்  கதிவேலவர் என்பவர் தமிழ்நாட்டிலுள்ள தலங்களுக்கு யாத்திரை சென்றார்.. தில்லையில் காளி அமான் கோவில் மிகவும் பிரசித்தமானது. சிதம்பரத்திலிருந்து திரும்பிவருகையில் காளி தேவி சிலை ஒன்றி னை கொண்டு வந்து நாவல் மரத்தடியில் பிரதிஷ்டை செய்தார். தில்லை காளி அம்மனைச் சுற்றி கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. கர்ப்பக்கிரகத்தில் பெரிய காளி  விக்கிரகம் இருக்கிறது  பிரகாரத்தில் பழைய தில்லை காளியை வைத்தனர்.

Xxxx

செல்வச் சந்நிதி- கதிர்காம பாத யாத்திரை

தமிழ்நாட்டில்  பழனி, ஆந்திரத்தில் திருப்பதி முதலிய தலங்களுக்கு பக்தர்கள் வண்டி வாகனம் ஏதுமில்லாமல் பாத யாத்திரை செய்து ஆண்டவனை வணங்குவதை  இன்றும் காண்கிறோம். இது போல இலங்கையில் பிரசித்தமானது கதிர்காம யாத்திரை. இப்போதும் பக்தர்கள் நடந்தே கதிர்காம யாத்திரையை மேற்கொள்கின்றனர் யாழ்ப்பாணத்துக்கு வடக்கில் 20 மைல் தொலைவில் செல்வச் சந்நிதி முருகன் கோவில் இருக்கிறது அங்கிருந்து ஆண்டுதோறும் புறப்படும்  பாதயாத்திரை பற்றிய செய்தி இதோ

May 6 , 2023

வரலாற்றுச்  சிறப்பு மிக்க கதிர்காம ஆடிப்  பெருவிழாவுக்கு யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் பாத யாத்திரை சனிக்கிழமை புறப்பட்டது .பாத யாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தலைமையில் இந்த யாத்திரை நடைபெறுகிறது செல்வச் சந்நிதி ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற விசேட பூசையினைத் தொடர்ந்து, மோகன் சுவாமியால் கதிர்காம பாத யாத்திரைக் குழுத் தலைவரிடம் வேலாயுதம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7 மாவட்டங்களிலும் உள்ள 98 ஆலயங்களைத்  தரிசித்து46 நாட்களில் 815 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, கதிர்காம ஆலயத்துக்கு இந்த பாத யாத்திரை சென்றடையும்.

இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாத யாத்திரையாக இது கருதப்படுகிறது. :-

–subham

Tags – -கதிர்காம பாத யாத்திரை, வீர மாகாளி அம்மன், கோவில், பத்ரகாளி, கண்ணத்திட்டி காளி

Leave a comment

Leave a comment