Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit -3 (Post No.12,651)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,651

Date uploaded in London – –  –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நான்கு மொழிகளில் பர்த்ருஹரியின் நீதி சதகம் – 3 ; Part 3

Slokam 7

பர்த்ருஹரி எழுதிய நீதி சதகத்தில் முட்டாள்கள் வாய் திறக்காமல் இருப்பது நலம் பயக்கும் என்று மொழிகிறார்.

வான் புகழ் வள்ளுவமுனும்  தமிழ் வேதம் என்று புகழப்படும் திருக்குறளிலும் அதையே செப்புவார்:-

கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன்

சொல்லாதிருக்கப் பெறின் (குறள் 403)

கற்றறிந்த மக்கள் முன்னிலையில், கல்லாத முட்டாள்கள் வாய் திறவாமல் மவுனம் காத்தால் அந்த இடத்தில் அவர்களும் நல்லவர்களாகத் தோன்றுவார்கள்.

स्वायत्तम् एकान्तगुणं विधात्रा
विनिर्मितं छादनम् अज्ञतायाः ।
विशेषा‌अतः सर्वविदां समाजे
विभूषणं मौनम् अपण्डितानाम् ॥ 1.7 ॥

ஸ்வாயத்தம் ஏகாந்த்ஹிதம் (குணம்) விதாத்ரா

விநிர்மிதம் சாதனமக்ஞதாயாஹா

விஷேஷதஹ ஸர்வவிதாம் ஸமாஜே

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம்

—பர்த்ருஹரி நீதி சதகம்1-7

ஒருவனுடைய அறியாமையை மறைப்பதற்காக மூடர்களுக்கு மௌனம் என்னும் வரத்தை பிரம்மா அருளியிருக்கிறார். விஷயம் தெரிந்த அறிஞர்களிடையே முட்டாள்களின் அணிகலன் (ஆபரணம்) இந்த மௌனம்தான் (1-7).

முட்டாள் கள் பேசினால் அவர்கள் குட்டு வெளிப்படும் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொன்ன கதை ஆகிவிடும்.

மூடறியாமை தனை மூடுவதற்கே பிரமன்

பீடுபெறு மோனம் பிறப்பித்தான் மூடரெலாம்

மூதுணர்ந்தோர் முன்னிலையில் மோனஞ் சாதித்தலே

தீதிலழ காகுஞ் சிறந்து — 7

xxxxxxxx

Slokam 8


यदा किञ्चिज्ज्ञो‌உहं द्विप इव मदान्धः समभवं
तदा सर्वज्ञो‌உस्मीत्यभवदवलिप्तं मम मनः
यदा किञ्चित्किञ्चिद्बुधजनसकाशादवगतं
तदा मूर्खो‌உस्मीति ज्वर इव मदो मे व्यपगतः ॥ 1.8 ॥

யதா கிஞ்சிஜ்ஜோஹம் கஜ (த்விப) இவ மதாந்தஹ ஸமபவம்

ததா ஸர்வஞோஸ்மீத்யபவதவலிப்தம் ம்ம மனஹ

யதா கிஞ்சித்கிஞ்சித்புதஜன ஸகாசாதவகதம்

ததா மூர்க்கோஸ்மீதி ஜ்வர இவ மதோ மே வ்யபகதஹ

–பர்த்ருஹரி நீதி சதகம் 1-8

எனக்கு கொஞ்சம் அறிவு இருந்த போது நான் யானை போல மதம் பிடித்து அலைந்தேன்; அந்த நேரத்தில் நான் அனைத்தும் அறிந்தவன் என்று நினைத்தேன்; ஆனால் அறிஞர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தைக் கிரஹித்தபோது, நான் அறிவிலி என்பது விளங்கியது; காய்ச்சல் விலகுவது போல எனது கர்வமும் விலகி ஓடியது (1-8).

இதோ வள்ளுவரின் கூற்று

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு — குறள் 1110

நல்ல அணிகளை அணிந்த இந்தப் பெண்ணை பொருந்தும் தோறும்,

அந்த இன்பத்தின் மஹிமை தெரிவது எப்படி இருக்கிறதென்றால், நூல்களை படிக்கப் படிக்க இவ்வளவு காலம் நம் அறியாமையைக் காண்பது போல இருக்கிறது.

கொஞ்ச மதியானான் குஞ்சரம் போலேமாந்து

விஞ்சும் விவேகியென மேவினேன் — மிஞ்சு மதி

உத்தமற் பால் பெற்றபின்னர் உள்ளகந்தை விட்டறிந்தேன்

எத்தனை நாள் மூடனாமென்று -8

Xxxxxx

Slokam 9

कृमिकुलचित्तं लालाक्लिन्नं विगन्धिजुगुप्सितं
निरुपमरसं प्रीत्या खादन्नरास्थि निरामिषम् ।
सुरपतिम् अपि श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम् ॥ 1.9 ॥

க்ருமிகுலசிதம் லாலாக்லின்னம் விக்ன்ந்திஜுகுப்ஸிதம்

நிருபமரஸ்ம்ப்ரீத்யா காதன்னராஸ்திநிராமிஷம்

ஸுரபதிம் அபி ஸ்வா பார்ஸ்வத்வம்  விலோக்ய ந சங்க்தே

ந ஹி கணயதி க்ஷுதோ ஜந்துஹு பரிக்ரஹFபலகுதாம் 1-9

கிருமிகள் உடைய , சதைப் பற்றில்லாத, காய்ந்த நாற்றமுள்ள அழுக்கான எலும்புத் துண்டை நக்கும் நாய் தனது எச்சிலை அதில் ருசித்துவிட்டு, எலும்புதான் சுவை தருகிறது என்று நினைப்பது போல(1-9).

புழுத்த கழுதையின் புல்லெலும்பை நாய்தன்

கழுத்தை மிகநீட்டிக் கடிக்கும் – வழுத்துஞ் சீர்த்

தேவேந்திரன் வரினும் தேராது கீழுயிர்கள்

ஆவா வா புன்மையுணரா – 9

  Tags – Bhartruhari , Nitisataka , part-3 ,முட்டாள்கள் , மவுனம்கர்வம்,

Leave a comment

Leave a comment