
Post No. 12,658
Date uploaded in London – – – 31 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
நவம்பர் மாத பண்டிகைகள் – 12 –தீபாவளி; 13- கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் ; 18- சூர சம்ஹாரம் , 23- சத்திய சாயிபாபா பிறந்த தினம்; 26- திருக்கார்த்திகை;
நவம்பர் மாத முகூர்த்த தினங்கள் – 16, 19, 29.
அமாவாசை -நவம்பர்13; பெளர்ணமி – 27; ஏகாதசி -8, 23
(Sri Anandamayi Ma April 30, 1896 – August 27, 1982)
ஸ்ரீ ஆனந்தமயி மா — பிறப்பு ஏப்ரல் 30, 1896 – சமாதி ஆகஸ்ட் 27, 1982
xxxxx

நவம்பர் 1 புதன் கிழமை
இன்பமும் துன்பமும் கால எல்லைக்குட்பட்டவை. அவை நீண்ட காலம் இராது ஆகையால் ஒருவர் அதனை எண்ணி கலங்க வேண்டியது இல்லை கடவுள் பற்று அதிகரிக்க ,அதிகரிக்க அடிமனத்திலிருந்து பிரார்த்தனையும் அதிகரிக்கும் . முதிர்ச்சி ஏற்படுகையில் , அந்த சக்தி உங்கள் வசப்பட்டுவிடும்.
xxx
நவம்பர் 2 வியாழக் கிழமை
ஆன்மீக வழியில் செல்லும்போது உள்ளுக்குள்ளே சில அனுபவங்கள் தோன்றாமல் , அதில் நீடித்து இருக்கமுடியாது.
Xxxx
நவம்பர் 3 வெள்ளிக் கிழமை
இங்கு தோன்றுவன எல்லாம் இறைவனின் தெய்வீக சக்தியின் காட்சிதான் — கடவுளே ஆக்க சக்திதான்.
Xxxx
நவம்பர் 4 சனிக் கிழமை
இறைவன்தான் நம் காதலன் என்பதை மறக்கும்போது , ஏனைய புலன் இன்பத்தில் நாட்டம் ஏற்படுகிறது
xxxxx
நவம்பர் 5 ஞாயிற்றுக் கிழமை
துன்பத்தை நீக்கும் ராம நாமத்தில் அராம ( அமைதியும் பதற்றமில்லாமையும்) இருக்கிறது. ராமா இல்லாத இடத்தில் வ்யராம (நோயும், பதற்றமும் ) இருக்கிறது.
Xxxx

நவம்பர் 6 திங்கட் கிழமை
நமக்கு நாமே ஆத்ம சோதனை செய்துகொண்டால் , ஒரு விஷயத்தை அறியமுடியும்; பறவைகளும் மிருகங்களும் கூடத்தான் உண்டு களிக்கின்றன.குடும்ப வாழ்வு நடத்துகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே ஆத்மாவின் உண்மை நிலையை அறிய முடியும்.இந்த வாய்ப்பினை மனிதர்கள் நழுவ விடக்கூடாது.
xxxx
நவம்பர் 7 செவ்வாய்க் கிழமை
நாம் யார் என்பதை ஒவ்வொரு நாளும் சில வினாடிகளாவது சிந்தித்துப் பார்க்கவேண்டும்.மீண்டும் மீண்டும் ரிட்டர்ன் டிக்கெட் Return ticket வாங்கிக் கொண்டே இருக்கக் கூடாது; அதாவது ஜனன- மரணம் ; உண்மையில் இது நம்முடையது அல்ல ;அதை முதலில் உணரவேண்டும்.
Xxxx
நவம்பர் 8 புதன் கிழமை
பூமிக்கு அடியில் விலையுயர்ந்த ரத்தினங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனாலும் கடின உழைப்பின் மூலமே அவைகளை அடைய முடியும்.
xxx
நவம்பர் 9 வியாழக் கிழமை
நீங்கள் எவ்வளவு பலவீனன் ஆனாலும் எந்த அளவுக்கு உங்களால் அதிகமாக இயலுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்யுங்கள். மிச்சத்தை இறைவன் செய்துகொடுப்பான்.
Xxxxx
நவம்பர் 10 வெள்ளிக் கிழமை
இறைவனிடம் எந்த நிபந்தனையும் போடாது (பரிபூரண) சரணாகதி அடைவதே மனிதனுக்கு ஆறுதல் தரும் அருமருந்து ஆகும்.
xxx
நவம்பர் 11 சனிக் கிழமை
இறைவனின் நாமமும், அவனும் ஒன்றே; அவன்தான் நாமம்.
Xxxx
நவம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை
ஒருவர் இஷ்ட தேவதையை அதிகமாக நினைக்க, நினைக்க, அந்த அளவுக்கு தெய்வ நம்பிக்கையும் அதிகரிக்கும்.
xxxxx
நவம்பர் 13 திங்கட் கிழமை
உலக ஆசாபாசங்களுக்கும் மேலே சென்றால்தான் மன அமைதி கிட்டும்.
xxxx
நவம்பர் 14 செவ்வாய்க் கிழமை
மனிதன் என்பது ஆத்மா ; ஆனால் அதை அவன் தன்னுடனும், தன் பெயருடனும் தவறாக தொடர்புபடுத்திக் கொள்கிறான்.
xxxx
நவம்பர் 15 புதன் கிழமை
உங்களுடைய துணைவரையும் குழந்தைகளையும் தெய்வீக அம்சம் கொண்டவர்களாக நினைத்து செயல்படுங்கள் ; உங்கள் மனதை அங்குமிங்கும் சிதறவிடாதீர்கள்; ஒரே குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள்.
xxxx

நவம்பர் 16 வியாழக் கிழமை
ஒன்று இருக்கும் இடத்தில் இரண்டைக் காண்பதே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். இரண்டாகக் காண்பது வேதனை . ஒன்றாகக் காண்பதே காட்சி; அதை உணராத வரை ஜனன- மரண சுழற்சி நீடிக்கும் .
xxxx
நவம்பர் 17 வெள்ளிக் கிழமை
நீங்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருக்கிறீர்களோ அவர்களிடத்தில் சமமான அன்பைக் செலுத்துங்கள்.அப்போதுதான் நான் என்பதற்கும் நீங்கள் என்பதற்கும் நடுவில் உள்ள இடைவெளி நிரப்பப்படும் . எல்லா சமய வழிபாடும் அதே லட்சியத்தை காட்டுகிறது.
xxxxx
நவம்பர் 18 சனிக் கிழமை
புலன் இன்பம் என்பது மெதுவாகக் கொல்லும் விஷம்; அது மரணத்தை நோக்கி நம்மைச் செல்ல வைக்கிறது ; ஆகையால் மரணமில்லாப்பெரு வாழ்வு நோக்கிச் செல்லும் வழியில் செல்லுவது மனிதனின் கடமை .
XXXXXX
நவம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை
நான் யார்? என்று சிந்த்தித்துப் பாருங்கள்; உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் ; விடை கிடைக்கும் .
XXXX
நவம்பர் 20 திங்கட் கிழமை
ஒரு பெரிய மரத்தைப் பாருங்கள் அதிலிருந்து வரும் விதைகள் மேலும் பல மரங்களை உருவாக்குகின்றன. ஆனால் அவைகளில் தோன்றும் பழங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை .ஆயினும் அவற்றில் துடிக்கும் உயிர் சக்தி ஒன்றுதான்; ஆகையால் ஒரே ஆத்மாதான் எங்கும் நிறைந்துள்ளது.
XXXX
நவம்பர் 21 செவ்வாய்க் கிழமை
ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணம், பேரன்புடன் உண்மையாக உழையுங்கள்;.உங்களை படிப்படியாக முன்னேற்றுங்கள் ; எல்லாப் பணிகளிலும் தெய்வீக இருக்கட்டும்.அப்போது உங்கள் பணியும் சிறக்கும்
xxxx
நவம்பர் 22 புதன் கிழமை
ஒரு தாயார் தன் மகனை எப்படி பாலூட்டி, சீராட்டி வளர்த்து அவனை எல்லாப் புகழோடும் விளங்கும் இளைஞன் ஆக்குகிறாளோ அவ்வாறே தெய்வீக அன்னையும் ஒருவனுடைய ஆன்மீக வாழ்வில் ஒருவனை முழு வளர்ச்சி அடைய வைக்கிறாள் .
XXXX

நவம்பர் 23 வியாழக் கிழமை
துறவு என்பது பொருட்களைத் துறப்பது அல்ல; வேறு வேறு என்ற வேற்றுமையை/ பிரிவினையைத் துறப்பதே துறவு
xxx
நவம்பர் 24 வெள்ளிக் கிழமை
உலக பாசங்களால் மனிதனின் மனது களங்கமுற்றுள்ளது ஆயினும் கவலை வேண்டாம்.தூய்மையுடனும், பேரார்வத்தோடும் , நம்பிக்கையுடனும் முயன்றால் உள்ளே உறையும் ஆன்மாவை அறிவீர்கள் .
xxx
நவம்பர் 25 சனிக் கிழமை
வெளியே உள்ள, அதாவது மனைவி, மக்கள், பணம், புகழ் இவற்றால் கிடைக்கும் இன்பம் நீடித்து நிற்காது ; ஆனால் எங்கும் நிறைந்த, உன்னுள்ளேயும் உறையும் இறைவனிடத்தில் இன்பம் பெற்றால் , அது உண்மையான இன்பமாக அமையும் .
xxxxx
நவம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை
எல்லோரும் அமைதி பெறத் துடிக்கிறார்கள். ஆனால் இறைவன் என்பவன் உள்ளுக்குள்ளே இருக்கிறான் என்பதை அறியும் வரை பரி பூரண அமைதி கிட்டாது என்பது சிலருக்கே தெரிகிறது.
xxx
நவம்பர் 27 திங்கட் கிழமை
மனிதனின் கடமை சத்திய வேட்கையுடன் இருப்பதும், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும் ஆகும் ‘உண்மை’-யில் நங்கூரம் பாய்ச்சி நிற்க இயன்ற அளவுக்கு முயலுங்கள் ; தனிமையான இடத்தில் இருந்து தியானம் செய்யுங்கள் .
xxxx
நவம்பர் 28 செவ்வாய்க் கிழமை
எல்லாம் ஜோதியிலிருந்து தோன்றுகிறது; எல்லாம் ஜோதிமயம் ; நீங்களும் கூடத்தான்.
xxxx

நவம்பர் 29 புதன் கிழமை
நீங்கள் மிக உயர்ந்த லட்சியத்துக்குக் குறைவான எதையும் நாடாதீர்கள்.
xxxx
நவம்பர் 30 வியாழக் கிழமை
நான் பிறந்த போதும் இப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறேன்;முடிவே இல்லாத மண்டபத்தில் நடக்கும் படைப்பு நடனம் மாறிக்கொண்டே இருந்தாலும் , நான் அப்படியே சாஸ்வதமாகவே இருப்பேன் (வெளியில் நடக்கும் மாற்றங்கள் என்னைப் பாதிப்பது இல்லை.
—-SUBHAM—-
TAGS- மா ஆனந்தமயி, பொன்மொழிகள், நவம்பர் 2023, காலண்டர்