இலங்கையில் பிராமணர் ஆட்சி – PART 1 (Post No.12,686)

Ramayana Tour Route  in Sri Lanka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,686

Date uploaded in London – –  –  8 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கையில் பிராமணர் ஆட்சி – PART 1

பிராமணர்கள் யார் என்று வில்லியம் ஹண்டர் சொல்கிறார் ,

“உலக வரலாற்றின் ஆரம்ப கட்டத்திலேயே தங்களுக்கு சட்ட திட்டங்களை வகுத்துக்கொண்டு கட்டுக்கோப்புடன் வாழ்ந்த ஒரு பிரிவினரை  பிராமணர்கள் என்று அழைக்கின்றனர் . தன்னடக்கமும், தனி பண்பாடும் அதன் முக்கிய அம்சங்கள். அவர்கள் தங்கள் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டதாலும், இளம் வயதிலேயே கல்யாணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்றதாலும் , போர் முனைகளில் இளம் வயதிலேயே இறக்காததாலும்  அவர்களுடைய மிகச் சிறந்த குணங்களை, மிக மிக அதிக அளவில் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றனர்” — ஸர் வில்லியம் வில்சன்  ஹண்டர் (1840-1900)

SIR Willam Wilson Hunter, known for his work The Imperial Gazetteer of India

xxx

2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்கத் தமிழ் நூல்கள் பிராமணர் பற்றி செப்புவது யாதெனின்,

“இவர்கள் வீடுகளில் முத்தீ (Three different Fire Altars) வளர்த்து வழிபட்டனர் . வேதங்களை ஓதி வேள்விகள் செய்தனர். சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களை வழிபட்டனர். விவாதங்களில் பங்கு கொண்டனர் ; அவர்களுடைய வீடுகள் தூய்மையாகவும், எளிமையாகவும் இருந்தன.. இரண்டு மன்னர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டால், பிராமண தூதர்களை மட்டுமே அனுப்பி அறிவிப்புகளை வெளியிட்டனர் . நாய்களும் கோழிகளும் நுழைய முடியாத சுத்தமான தெருக்களில் வசித்தனர். மரக்கறி உணவை உண்டனர்.”

xxx

இதே காலத்திலும் இதற்கு முன்னரும் இலங்கையில் பிராமணர்கள் வசித்ததாக மிகவும் பழைய பெளத்த மத நூல்கள் எழுதியுள்ளன .

அசோகர், 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட எல்லா கல்வெட்டுகளிலும் பிராமணஸ்ரமண என்றே எழுதினார். அதாவது பிராமணர்களையே முதலில் குறிப்பிட்டு விட்டு பெளத்த, சமணர்களைக் குறிப்பிடுவார்.

இலங்கையில் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் காலடி எடுத்தும் வைக்கும் முன்னரே பிராமணர்கள் வாசித்ததை இலங்கை  வரலாற்று நூல்கள் காட்டுகின்றன.

பிராமணர் ஆட்சி Brahmin’s Rule in Sri Lanka

விஜயன் இறந்தவுடன் இலங்கையை ஆள தகுதியுடைய அரசர்கள் இல்லை. தமிழ் நாட்டிலிருந்து ஒரு க்ஷத்ரிய வம்ச மன்னரை அல்லது இளவரசரை கொண்டுவருவதற்கு அமைச்சர்கள் முடிவு செய்தனர். அப்போது ஓராண்டுக் காலத்துக்கு உபதிஸ்ஸ Upatissa 505- 504 BCE என்ற பிராமணர் தலைமையில் ஆட்சி நடந்தது. எப்போதுமே பிராமணர்தான்  முதல் மந்திரியாக இருக்க முடியும் ..அந்தப்  பிராமணர் அனுராதபுரத்துக்கு வடக்கிலுள்ள கம்பீரா நதிக்கரையில் உபதிஸ்ஸ காம என்ற கிராமத்தை உண்டாகிக்கினார் .

கிராமம் Grama என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை சிங்களத்தில் காம gama என்றும் ஆங்கிலத்தில் காம் Gham என்றும் உச்சரிப்பர் . பிரிட்டன் முழுதும் நிறைய ஊர்கள் காம் (Birmingham, Nottingham, Eastham etc) என்றே முடிவடையும்.

பாண்டுகாபயன் (437- 367 BCE) பதவி ஏற்கும் வரை  அந்த கிராமமே தலைநகர் ; பின்னர் அனுராதபுரம் தலை நகர் ஆயிற்று.

நாகர் என்ற பெயரில் முடியும் 20 புலவர்கள் பழந் தமிழ் நாட்டில் வசித்தனர். அவர்களும் பிராமணர்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இலங்கையை ஆண்ட ஸ்ரீ நாகன் (189- 209 CE) பிராமண குலத்தில் பிறந்தவன் அவன் 20 ஆண்டுகள் நாட்டை ஆண்டான் அதற்கு முன்னர்  அவனுடைய மைத்துனன் குஞ்ச நாக, ஒரே ஆண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தான் .ஸ்ரீ நாகன்,  மகன் வொஹரிக திஸ்ஸ Voharika Tissa புதிய சட்டங்களை நடை முறைக்குக் கொண்டுவந்தான். உடலில் காயங்கள் ஏற்படுத்தினால் அதுவும் தண்டனைக்குரிய குற்றமே என்று சட்டம் கொணர்ந்தான் ( இது மனு ஸ்ம்ருதியிலும் உள்ளது ).

இந்த பிராமண ஆட்சி 50 ஆண்டுகளுக்கு நீடித்தது .

இதற்குப் பின்னர் சில நூற்றாண்டுகள் உருண்டோடின. சீனாவிலிருந்து வந்த தூதனை வரவேற்க இலங்கை மன்னன் 30 கப்பல்களுடன் ஒரு பிராமணனை அனுப்பினான். இது நடந்தது கிபி CE  607ல். சுமார் 140 ஆண்டுகளுக்குப் பின்னர் CE 746-ம் ஆண்டில் ஒரு பிராமணர் சீனாவுக்கு அனுப்பப்பட்டார். அவர் புத்த மத பிரக்ஞா சூத்திரத்தையும் 40 கட்டு பருத்தித் துணியையும் எடுத்துக் கொண்டு சென்றார்.

போர்ச்சுகீசிய ஆட்சிக்காலத்திலும் மன்னர்கள் பிராமண தூதர்களையே பயன்படுத்தினர். அவர்கள் சத்தியத்தை மீறாதவர்கள்லஞ்சம்  கொடுத்து அவர்களை வசப்படுத்த முடியாது ; ரகசியத்தை வேறு யாருக்கும் சொல்லாமல் செயல்படுவர் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். ஏழாவது புவனேக பாஹு தன்னுடை பேரன் தர்ம பால ஆட்சிக்கு எந்த ஊறும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பிராமணர் மூலம் லிஸ்பன் நகருக்கு பேரனின் சிலையை, அனுப்பிவைத்தார் . அங்கிருந்தவாறே போர்ச்சுகீசிய மன்னர் தனது பேரனின் பட்டாபிஷேகத்தை அங்கீகரிக்க இந்த ஏற்பாடு.

லிஸ்பன் Lisbon, Capital of Portugal , போர்ச்சுகல்  நாட்டின் தலைநகர் .

Xxx

பிராமண ஆசீர்வாதம்

மன்னர்கள் தலை வணங்குவது  இரண்டு முறைதான்; கோவிலில் இறைவனுக்கு முன், சிரம்தாழ்த்தி வணங்குவார்கள் ; பிராமணர்கள் மந்திரம் சொல்லி ஆசீர்வதிக்கும் பொழுது  மன்னர்கள் , சிரம் தாழ்த்தி, கரம் குவித்து வணங்குவார்கள் ; இதை புறநானூற்றில் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாட்டை ஆண்ட முதுகுடுமிப் பெருவழுதி இரண்டு முறை மட்டுமே தலை வணங்குவான் என்று புலவர் பாடுகிறார். நமது காலத்திலேயே யாருக்கும் தலை வணங்காத முதலமைச்சர் ஜெயலலிதா, துக்ளக் பத்திரிகை ஆசிரியர்  சோ ராமசாமி மற்றும் அவருடைய மனைவியின்  கால்களில் விழுந்து ஆசீர்வாதம்  வாங்கியதைப்  பார்த்தோம்.

இவ்விஷயத்தில் முதலாவது இரண்டாவது ராஜ சிம்மர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் காண்போம் .

தொடரும்……………………………………………

Tags- இலங்கை, பிராமணர், ஆட்சி, பகுதி 1

Leave a comment

Leave a comment