ஹிட்லர் அழைத்த விஸ்வநாத சாஸ்திரி! இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்! (Post No.12,686)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,686

Date uploaded in London – –  –  8 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!

அத்தியாயம் 17

ஹிட்லர் அழைத்த விஸ்வநாத சாஸ்திரி!

ச.நாகராஜன்

பகுதி 21

பிரம்ம ஶ்ரீ தண்டிபட்லா விஸ்வநாத சாஸ்திரி என்பவர் ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்.  சிறந்த வேத விற்பன்னர். வியாகரணத்தில் நிபுணர்.

அவரை சில ஜெர்மானிய விஞ்ஞானிகள் 1938ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வருமாறு அழைத்தனர். எதற்காக?

சில சம்ஸ்கிருத துதிகளில் உள்ள அர்த்தத்தைச் சரியாக விளக்குமாறு அவரை ஜெர்மனிக்கு அழைத்தனர்.

யஜுர் வேதம் மற்றும் அதர்வண வேதத்தில் உள்ள மந்திரங்கள் இவை.

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் போரில் பயன்படுத்த ராக்கட்டுகள் மற்றும் விண்ணில் ஏவும் ஆயுதங்களை எப்படித் தயாரிப்பது என்று ஜெர்மானிய விஞ்ஞானிகள் ஹிட்லரின் உத்தரவின் பேரில் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர். அவர்களுக்கு இப்படிப்பட்ட அபூர்வ ஆயுதங்களைத் தயாரிக்கும் முறைகள் விரிவாகவும் நுட்பமாகவும் ஹிந்து வேதங்களில் இருப்பதாகத் தெரிய வந்தது.

உடனே இதில் நிபுணர் யார் என்பதை ஆராய ஆரம்பித்தனர். விஸ்வநாத சாஸ்திரியைப் பற்றி அவர்கள் அறிந்தனர். அவர் இளமையிலேயே மேதையாக விளங்கியவர். தர்க்கம், இலக்கணம், மீமாம்ஸை உள்ளிட்ட அனைத்திலும் வல்லவர். யஜுர் வேதத்தில் கர்ம காண்ட பாகத்திலும் அதர்வண வேதத்தில் ப்ரயோக பாகத்திலும் அவர் தேர்ந்தவர்.

குறிப்பிட்ட சில ரகசிய மந்திரங்களின் உள் அர்த்தத்தை விளக்கமாகச் சொல்லுமாறு அவர் கோரப்பட்டார்.

நாஜிகள் தங்களது வி-8 ராக்கட்டுகளுக்கான பல்ஸ் ஜெட் எஞ்ஜின்களை (PULSE-JET ENGINES FOR V-8 ROCKET) முதலில் உருவாக்கியவர்கள். இதை ‘பஸ் பாம்ப்’ (BUZZ BOMBS) என்பார்கள்.

இந்த வகை ராக்கெட்டுகளை உருவாக்க இந்திய மற்றும் திபெத்தைச் சேர்ந்த அறிஞர்களால் மட்டுமே முடியும் என்பதை நாஜி விஞ்ஞானிகள் உணர்ந்தனர். ஆகவே ஆயிரத்திதொள்ளாயிரத்து முப்பதுகளில் அவர்கள் சரியான அறிஞரைத் தேட ஆரம்பித்து இறுதியில் விஸ்வநாத சாஸ்திரியே உகந்த அறிஞர் என்று முடிவு செய்தனர்.

அவரை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றனர். அவர் அங்கேயே வாழ்ந்தார்.

அவரது படம் இன்னும் ஜெர்மனியில் பிராங்க்பர்ட் பல்கலைக்கழகத்தில் மாட்டப்பட்டிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு சீனர்கள் லாஸாவில் சில சுவடிகளைக் கண்டுபிடித்தனர். அதில் விண்கலம் அமைக்கும் முறை பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. அவற்றை மொழிபெயர்க்க சண்டிகர் பல்கலைக் கழகத்திற்கு அந்தச் சுவடிகளை அனுப்பினர்.

லகிமா என்ற அமைப்பின் படி ஆன்டி கிராவிடேஷனல் எனப்படும் புவி ஈர்ப்பு எதிர் விசை எல்லா ஈர்ப்பு விசைகளையும் எதிர்த்து நிற்கும் வல்லமை படைத்தது.

சித்திகள் எட்டில் இந்த லகிமாவும் ஒன்று. இதில் வல்லவர்கள் புவி ஈர்ப்பு விசையை மீறி ஆகாயத்தில் உயர எழும்பலாம்; பறக்கலாம்.

இராமாயணத்தில் ஹனுமான் ஆகாயத்தில் உயர எழும்பி மிக அதிக வேகத்தில் பறந்ததை நாம் படிக்க முடிகிறது.

இந்திய விஞ்ஞானிகள் இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. ஆனால் உலகளாவிய விதத்தில் பல நாடுகளின் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தை இந்திய சாஸ்திரங்களின் மீது செலுத்துகின்றனர்.

இப்படிப்பட்ட சம்பவங்களில் விஸ்வநாத சாஸ்திரி ஜெர்மனிக்கு அழைக்கப்பட்ட சம்பவமும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக அமைகிறது.

***

Leave a comment

Leave a comment