
Post No. 12,766
Date uploaded in London – – – 26 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 15
PART 15
கோவில் எண் 14 – செங்கன்னூர் /செங்கண்ணூர் /திருச் செங்குன்றூர் கோவில்
இந்த ஊரின் பெயரை மூன்று வித ‘ஸ்பெல்லிங்’ SPELLINGS குகளுடன் எல்லோரும் எழுதுகின்றனர் . கோவில் பற்றிய நிறைய உண்மைச் சம்பவங்கள் உள்ளன. அவைகளைக் காண்பதற்கு முன்னால் , கோவிலின் சிறப்பு அமசங்களை புல்லட் பாயிண்டுBULLET POINTS களில் காண்போம் .
கோவில் எங்கே இருக்கிறது?
.கோட்டயத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கிறது . இருப்பிடம் – ஆலப்புழை மாவட்டம் .
சிறப்பு அம்சங்கள்
அஸ்ஸாம் போலவே மாத விலக்கு MENSES OF GODDESS உள்ள கோவில் . அஸ்ஸாம் மாநில கெளஹாத்தி நகரில் அன்னை காமாக்யாவின் அதிசய கோவில் உள்ளது . ஆண்டுதோறும் அங்கு தேவிக்கு மாதவிலக்கு என்று கோவிலை மூடிவிடுடுவார்கள் . அங்கும் தேவியின் இடுப்பின் கீழ்ப்பகுதி விழுந்ததால் 51 சக்தி பீடங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது. செங்கன்னூரில் மாதம்தோறும் நடந்த பாதவிலக்கு இப்போது வருடத்தில் 3, 4 தடவை மட்டுமே ஏற்படுகிறது .
இத்தலம் விறன்மிண்ட நாயனார் அவதரித்த திருத்தலமாகும்.
தேவார வைப்புத் தலங்களில் ஒன்று .
மகாதேவர் / சிவன் கோவில் என்பதே உண்மை; ஆயினும் அம்மனின் அதிசய மாதவிடாய் காரணமாக அவள் புகழ் பரவி பகவதி/ பார்வதி கோவில் ஆகிவிட்டது.
கோவிலில் புராண, ராமாயண, மஹாபாரத சிற்பங்கள் உள்ளன
இதுதான் கோவலன் புஷ்பக விமானத்தில் வந்து கண்ணகியை சொர்க்கலோகத்துக்கு அழைத்துச் சென்ற கண்ணகியின் திருச் செங்குன்று என்றும் நம்பிக்கை உள்ளது
மஹாதேவர், பகவதி சந்நிதிகள் தவிர ஏனைய கடவுளரின் சந்நிதிகளும் உள .
கதை 1
உலகிலேயே முதல் முதலில் மக்கட் தொகை பிரச்சினை, குடியேற்றப் பிரச்சினையை கருத்திற்கொண்டது (FIRST REPORT OF POPULATION EXPLOSION AND MIGRATION) இந்துமதமே . சிவ பெருமானுக்கும் பார்வதிக்கும் இமயமலை கைலாசத்தில் திருமணம் DIVINE WEDDING நடக்க விருந்ததை ஒட்டி ஏராளமானோர குழுமிவிட்டனர். சிவன் உடனே பாப்புலேஷன் எக்ஸ்ப்ளோஷன் POPULATION EXPLOSION பற்றி சிந்தித்தார். அதே நேரத்தில் தென்னாட்டில் ஜனத்தொகை குறைவு என்பதையும் அறிந்து 18 ஜாதி மக்களை தமிழ் நாட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அகத்திய முனிவரைப் பணித்தார் (FIRST ORGANISED MIGRATION) . போகும் வழியில் விந்தியமலையை கர்வ பங்கம் செய்தல் (அதாவது மலையை மட்டம்தட்டி ரோடு போடுதல் ROADWAYS WORK), தமிழ் நாட்டில் இலக்கணம் கெட்டுக்கிடக்கும் தமிழ் மொழிக்கு இலக்கணம் அமைத்தல் (WRITING GRAMMAR OF TAMIL LANGUAGE) ஆகிய பணிகளையும் ஒப்படைத்தார். அகஸ்தியருக்கு ஒருபுறம் மகிழ்ச்சி ஒருபுறம் வருத்தம். பெரிய காரியங்களை (BIG TASKS) சிவன் தன்னை நம்பி ஒப்படைப்பதால் தன்னை அந்த அளவுக்கு சிவன் உயர்த்திவிட்டாரே என்று மகிழ்ந்தார். அதே நேராத்தில் அரிய , பெரிய திருமணத்தை , கல்யாணச் சாப்பாட்டினை MISS மிஸ் பண்ணப்போகிறோமே என்று வருத்தப்பட்டார் . சிவனிடம் முறையிட்டபோது , அன்பரே , கவலைப் படாதீரும் ; நேரடி ஒளிபரப்புச் DIRECT TELECAST ARRANGED செய்கிறேன்; திருமணத்தை தென்னாட்டில் இருந்துகொண்டே ZOOM ஜூம் வழியாகக் காண்பதற்கு அருள் புரிவேன் என்றார் அவ்வாறே நிகழ்ந்தது என்பதை திருவிளையாடல் புராணம், புறநானூற்றின் நச்சினார்க்கினியர் உரை, பாரதி பாடல் (ஆதி சிவன்பெற்று விட்டான்…..) முதலியவற்றிலிருந்து அறிகிறோம் .
ஆனால் செங்கன்னூர் தல வரலாற்றில் கூடுதல் அம்சமும் உளது. அகஸ்திய மாமுனிவர், சிவன் கட்டளைப்படி SONADRI சோனாத்ரி (செங்குன்று ) மலையில் தங்கி தவம் செய்த்துக்கொண்டிருந்த போது பார்வதியும் பரமசிவனும் வந்து தங்கியதாகவும் அப்போது தேவிக்கு மாத விலக்கு (மாதவிடாய் ) ஏற்பட்டதால் 28 நாட்களுக்கு மட்டும் அம்மையப்ப னின் தரிசனம் கிடைத்ததாகவும் தல வரலாறு பகர்கிறது .
கதை 2
சிலப்பதிகாரத்தில் உள்ள கோவலன் – கண்ணகி கதையை அறியாத தமிழ் மகன் கிடையாது கோவலனை அநியாயமாகக் கொன்ற பாண்டிய மன்னரையும் அவனது மனைவியையும் HEART ATTACK ஹார்ட் அட்டாக்கில் இறக்கச் செய்துவிட்டு, மதுரை நகரில் இருந்த தீயோர் பகுதியை தீக்கிரையாக்கிவிட்டு SETTING FIRE TO MADURAI CITY கேரளத்தில் உள்ள செங்குன்று RED HILLS ஊரில் ஒரு மரத்துக்கு அடியில் நின்று தவம் செய்தாள் ; அப்போது கோவலன் விசேஷ விமானத்தில் SPECIAL PLANE வந்து இந்த ஊரில் தரை இறங்கினார். அதை காட்டில் வாழ்ந்த வேடர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து நின்றனர் கண்ணகி அதில் ஏறிக்கொண்டவுடன் அவள் DIRECT FLIGHT TO HEAVEN டைரக்ட் பிளைட்டில் சொர்க்கம் சென்றாள் . இதற்குப் பின்னர் அந்தக் காட்டுக்கு OFFICIAL ROYAL VISIT அபிஷியல் வீசிட் மேற்கொண்ட மஹாராஜா செங்குட்டுவன், அவருடைய தம்பி இளங்கோ/PRINCE , ராணியம்மா ஆகியோரிடம் காட்டு மக்கள் கதை, கதையாகச் சொன்னார்கள்; செங்குட்டுவனுக்கு ஒரே ஆச்சக்காரியம் . அடக்கடவுளே யாராவது அந்தக் கண்ணகி- கோவலன் பற்றி எழுதக்கூடாததா என்றார் மாமன்னர். அருகிலிருந்த சீத்தலைச் சாத்தனார் எனக்கு I KNOW THE FULL STORY புல் ஸ்டோரியும் தெரியும். இதோ நான் சொல்கிறேன் என்றார் . உடனே இளங்கோ எழுத்தாணியை எடுத்துக்கொண்டு பனை ஓலையில் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமாக நமக்கு யாத்துத்தந்தார். அவ்வளவு சிறப்புடையது இந்த ஊர்.
கதை 3
கர்னல் மன்றோ கண்ட அதிசயம் COL. MUNRO’S EXPERIENCE
வெள்ளைக்காரன் ஆட்சியில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான திவான் ஆக இருந்தவரின் பெயர் COL. MUNRO கர்னல் மன்றோ. அவர் தனது பணியின் ஒரு பகுதியாக மஹாதேவர்/ பகவதி கோவில் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக்கொண்டு வந்தார். தேவியின் திருப்புனித நாள் செலவு GODDESS’ MENSES EXPENSES செல்வது என்ற வரியையும் தொகையையும் பார்த்துவிட்டு வெடிச் சிரிப்பு சிரித்தார். ஏண்டா பசங்களா, யானைக்கு அல்வா வாங்கிப்போட்டதாக கணக்கு எழுதிய கதையெல்லாம் கேட்டவன் நான்; என்னையே ஏமாற்றுகிறீர்களா ? பழமும் தின்னு கொ ட்டையும் போட்டவன் நான் என்று சொல்லி பேனாவால் ஒரு கிராஸ் CROSSED OUT போட்டு இனிமேல் இதற்கெல்லாம் பணம் கிடையாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.அன்று அவருடைய மனைவிக்கும் மாதவிடாய் ஏற்பட்டது ; குழந்தைகளுக்கும் காய்சசல் வந்தது ஆனால் இடைவிடாத ரத்தப்போக்கு ஏற்பட்டவுடன் மருத்துவர்களை அழைத்து சிகிச்சை தரச் சென்னார் ; அப்படியும் அது நிற்கவில்லை; உடனே மலையாள ஜோதிட சிகாமணிகளை அழைத்து பிரஸ்னம் போட்டுப்பார்த்தார் . அதில் கிடைத்த விடை இது தெய்வக்குற்றம் ; சாந்தி செய்ய வேண்டும் என்று பதில் வந்தது அப்போது ராணி லக்ஷ்மிபாய் (1810-1814) ஆட்சி நடந்து கொண்டிருந்தது. உடனே கர்னல் மன்றோ கோவில் கணக்கை தான் ஆதரிப்பதாகவும் ஆண்டுதோறும் வேண்டிய செலவைச் செய்யலாம் என்றும் உத்தரவிட்டு, சொந்தப பணம் 700 ரூபாயையும் செலவுக்குக் கொடுத்தார் பின்னர் மனைவியும் குழந்தைகளும் சுகம் அடைந்தனர் .
மேலும் சில உண்மைச் சம்பவங்களைத் தொடர்ந்து காண்போம்.
To be continued……………………………………………….
TAGS- கேரளம், புகழ்பெற்ற ,108 கோவில்கள், PART 15, செங்கன்னூர், PART 15