செங்கன்னூர் பகவதி மாத விடாயை எப்படி அறிகிறார்கள் ? சுவையான 10 கதைகள்–17 (Post.12,774)

DEVI IN CHENGANNUR

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,774

Date uploaded in London – –  –  28 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

செங்கன்னூர்  பகவதி கோவில் பற்றி சுவையான கதைகள் தொடர்ச்சி –17

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற  108 கோவில்கள்- PART 17

PART 3 OF CHENGANNUR TEMPLE STORIES

கதை 8

ஸ்ரீ ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் (1860-1880) காலத்தில் அவரிடம்  சூரிய நாராயணன் என்பவர் பணியில் இருந்தார்.அவர் காலத்தில்தான் திருவங்கூர் ஒரு முன்னுதாரண ராஜ்யமாக மாறியது மன்னருக்கும் சூரிய நாராயணனுக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்படவே , அவரும் கம்பன் போல கோபித்துக்கொண்டு ‘உண்டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். கற்றவருக்கு சென்றவிடம் எல்லாம் சிறப்பு அல்லவா ! திருவல்லாவில் வித்துவான் பட்டத்திரி யிடம்  சென்று மந்திரம் ஒன்றைக் கற்றார். அதை செங்கன்னூர் பகவதி/ மகா தேவன் கோவிலில் உரு ஏற்றினார் ; 41 நாட்கள் ஆயின; இதே நேரத்தில் மன்னர் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது;  எப்படியாவது சூரிய நாராயணனைக்  கண்டுபிடித்து  அழைத்து வாருங்கள்   என்று உத்தரவிட்டார் மகாராஜாவின் ஆட்கள் எங்கெங்கோ தேடி, கடைசியில், பகவதி கோவிலில் அவரைக் கண்டுபிடித்து அழைத்துச் சென்றனர். அவருக்கு மன்னர் படிப்படியாக பெரிய பெரிய பதவிகளை வழங்கி கெளரவித்தார் . சூரிய நாராயணன் ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தது 3 முறையாவது செங்கன்னூருக்கு பகவதியைத் தரிசிக்க வந்துவிடுவார்.

கதை 9

கும்பகோணத்தில் ஒரு பணக்கார ராயர் இருந்தார். அவருடைய மனைவிக்கு  பேய் பிடித்தது. மலையாள

மக்கள், மன நோய் வந்துவிட்டால்  பேய் பிடித்து விட்டது என்றே சொல்லுவார்கள்;  நம்புகிறார்கள். (ALL MENTAL DISEASES ARE ATTRIBUTED TO EVIL SPIRITS; MALAYALI APPROACH).

கும்பகோணம் ராயரும் பேயோட்டும் மந்திரவதிகளை  அழைத்து ஓம் சூம் மந்திரக்காளிமலையாள பகவதி என்றெல்லாம் மந்திரம் போட்டுப் பார்த்தார். மனைவி குணம் அடையவில்லை; அவரை ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு மதுரையில் தங்கினார். அப்போது யக்ஞவேத சாஸ்திரி என்பவரைச் சந்தித்தார்; அவர் அந்த தம்பதிகளை செங்கன்னூருக்குச் சென்று பிரார்த்தியுங்கள், குணம் ஆகிவிடும் என்றார். ராயரும்   அவ்வாறே செய்தார் . கோவிலில் தினமும் புஷ்பாஞ்சலியும் பஜனையும் செய்தார்; அவருடைய மனைவி குணம் அடைந்தவுடன் அவர் அணிந்த நகைகளை எல்லாம் கோவிலுக்கே காணிக்கையாகக் கொடுத்துவிட்டார்.

கதை 10

பெருந் தச்சன் என்பவர் கேரளத்தில் உள்ள பல பெரிய கோவில்களைக் கட்டியவர் ஆவார் ; ஒரு நாள்  அவர் பம்பா நதியில் படகில் செங்கன்னூருக்கு வந்தார். பிராமணர்கள் பூஜை செய்து மிஞ்சிய பூக்களும் பழங்களும் இலைகளும் நதியில் மிதந்து வந்தன . பிராமணர்களின் பக்தியைப் பார்த்த அவர், இப்படியே போனால் பிராமணர் அல்லாதோர் இறைவனை வணங்க வாய்ப்புகள் குறையும் என்று எண்ணி கோவில் கட்டுவதில் மாறுதல்களை செய்தார். பிராமணர்கள் உட்கார்ந்து வேதம் சொல்லும் முக மண்டபத்தை வழக்கத்துக்கு மாறாக தாழ்வாக கட்டினார் . இதற்குப் பின்னர் நடந்த விபத்தில் அவர் சொந்த மகனையே இழந்தார். கீழைக் கோபுரத்தின் மேல் பகுதியில் பெரும் தச்சன் வேலை செய்து கொண்டிருந்தார் ; அப்போது அவர் கையில்  வைத்திருந்த கூர்மையான ஆயுதங்கள் கைதவறி விழுந்து, கீழே பணியாற்றிக்கொண்டிருந்த மகன் மீது விழுந்தன.மகன் உயிரும் பறி போனது.

பெரும் தச்சன் கட்டிய நம்பூதிரி இல்லங்களும் அழிந்து நம்பூதிரிகளின் எண்ணிக்கையும் விறல் விட்டு என்னும் அளவுக்கு குறைந்தன. தவறான முறையில் வடிவமைத்ததே இதற்குக் காரணம்  என்ற பழிச்சொல்லும் அவர் மீது விழுந்தது

கோவிலின் தோற்றம்

இவ்வளவு கதைகள் பின்னனியில் இருந்தாலும் பகவதியின் கருணை எல்லையற்றது.வேண்டுவோருக்கு வரம் தரும் வரத முத்திரையுடனும் அஞ்சியோருக்கு அபயம் அளிக்கும் அபய முத்திரையுடனும் தேவி காட்சி தருகிறாள்

கோவிலில் கணேசர், நீலக்ரீவன், சண்டீசன், கிருஷ்ணர் மூர்த்திகளும் உள்ளனர். வடக்குப் பக்கத்தில் ஊட்டுப் புரா  என்னும் DINING HALL டைனிங் ஹால் இருக்கிறது; கோவில் மதிலுக்கு வெளியே சக்தி குண்டம் தீர்த்தம் இருக்கிறது.

கோவில் வளாகத்தில் நிறைய அரச மரங்கள் இருக்கின்றன. மேல நடா அரச மரம் பேயோட்டுமிடமாக இருக்கிறது; சோட்டாணிக்கரா போலவே அந்த அரச மரத்தில் ஆணி அடித்தால் மன நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலில் தினமும் புஷ்பாஞ்சலி செய்வதும் குறிப்பிட்ட நாட் கள் பஜனை செய்வதும் நினைத்தை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையும்  இருக்கிறது..

மாத விடாயை எப்படி அறிகிறார்கள் ?

தேவியின் விக்கிரகம் பஞ்ச லோகம் என்னும் ஐம்பொன்னால் FIVE METAL ALLOY ஆனது. இதில் மாத விலக்கு ஏற்படுவது அதிசயமே. தேவியின் பழைய சிலை கல்லால் ஆனது; தீவிபத்தில் அது சேதம் ஆனதால் பஞ்ச லோக சிலை வைக்கப்பட்டது ;இரண்டரை அடி உயரமுள்ள விக்கிரகம் மிகவும் அழகானது !

சிவ பெருமானின் சிலையும் உருவமற்ற ஸ்வயம்பு லிங்கம்தான். ஆயினும் அந்த லிங்கத்தின் மீது அர்த்த நாரீ — பாதி ஆண்/சிவன், பாதி பெண்/பார்வதி உருவம் சார்த்தப்பட்டுள்ளது ; மூன்று அடியுள்ள அந்தக் கவசம் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

முன்னரெல்லாம்  அம்மனுக்கு மாத விடாய் MENSES  மாதம் தோறும் ஏற்பட்டதாகவும் இப்போது ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை மட்டுமே ஏற்படுவதாகவும் மேல் சாந்தி தெரிவித்தார்  அதி காலையில் கர்ப்பக் கிரகத்தைத் திறக்கும் அர்ச்சகர், தேவியின் உடைகளை வாரியரிடம் தருவார். அவர் அந்த உடைகளை பரிசோதித்து ஏதேனும் ரத்தக்கரைகளைப்  பார்த்தால் உடனே  தாழமன்  மடத்துக்கு அனுப்புவார். அதுதான் கோவில் தந்திரியின் வசிப்பிடம்.; அங்குள்ள பெண்மணி அதைப் பரிசோதித்து அது மாத விடாய் என்பதை உறுதி செய்வார்.

பின்னர் அந்த உடையை கோவில் நிர்வாகம் விற்றுவிடும். அதை வாங்க போட்டா போட்டி! கடந்த காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த வி வி கிரி, திருவாங்க்கூர் சமஸ்தான திவான் சி பி ராமசுவாமி ஐயர்  ஆகியோர் அதை விலைக்கு வாங்கினார்கள் .

மாத விலக்கிற்குப் பின்னர் கோவிலின் மூலஸ்தானம் மூன்று நாட்களுக்கு மூடப்படும் . அப்போது நாலம்பலத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் சிறிய விக்கிரகத்தை வைத்து பூஜைகள் செய்வார்கள். நாலாவது நாளன்று பெண் யானையின் மீது விக்கிரகத்தை வைத்து பம்பா நதிக்கு பவனி செல்வர். இரு புறமும் விளக்குகளை ஏந்தி பெண்கள் துணையாக வருவார்கள். அங்கே நீராட்டு நடைபெறும்; தேவியின் வருகைக்காக சிவ பெருமான் யானையின் மீது அமர்ந்து காத்திருப்பார் பின்னர் சிவன், தேவி பகவதியின் உருவங்கள் கோவிலில் அவரவர் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்பட்டு வழக்கமான பூஜைகளைச் செய்வார்கள்; இதைக் காண்பது குடும்பத்தில் கல்யாண  விஷயங்களை உண்டாகும் என்பதால் பெருந் திரளான பக்தர்கள் தரிசனத்துக்காகக் காத்திருப்பார்கள் .

—SUBHAM—-

TAGS- செங்கன்னூர், கதைகள், மாதவிலக்கு, மாதவிடாய், தேவி, பகவதி, புஷ்பாஞ்சலி

ஆதி சங்கரரின் 108 அடி உயரமுள்ள சிலை திறப்பு! (Post No.12,773)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,773

Date uploaded in London –  –  28 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ஆதி சங்கரரின் 108 அடி உயரமுள்ள சிலை திறப்பு!

ச.நாகராஜன் 

1

மத்யபிரதேசத்தின் முதல் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் அவர்கள் மத்ய பிரதேசத்தில் காந்த்வாரா மாவட்டத்தில் ஓம்காரேஸ்வரில் 108 அடி உயரமுள்ள ஆதிசங்கரரின் சிலையை 2023 செப்டம்பர் 21 ஆம் தேதி திறந்து வைத்துள்ளார்.

வரவேற்று மகிழ வைக்கும் இந்த சிலை திறப்பு விழா பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

2

12 வயது பாலகனாக இங்கு ஆதி சங்கரர் சிலை வடிவில் எழுந்தருளுகிறார்.

இந்த ஆலயம் உருவாவதற்கான செலவான ரூ 2200 கோடியை அரசு ஏற்றுள்ளது.  இது காந்த்வாரா மாவட்டத்தில் மாந்தாதா திவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஏகாத்மதா கி ப்ரதிமா – ஏகாத்மத்தின் சிலை – என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.

தனது 32 வருட ஆயுள் காலத்தில் சங்கரர் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடந்தே சென்று பாரதத்தின் ஒருமைப்பாட்டை நிரூபித்துள்ளார்.

அவர் தனது வாழ்நாள் காலத்தில் சுமார் 116 நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் பத்து உபநிடதங்களுக்கான பாஷ்யம். ப்ரஹ்ம சூத்ரம் மற்றும் பகவத்கீதைக்கான விரிவுரைகளும் அடக்கமாகும்.

3

இந்தச் சிலையை அமைக்க மாந்தாதா தீவு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

மாந்தாதா தீவு நர்மதா நதியில் அமைந்துள்ளது. இங்கு 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் ஓம்காரேஸ்வரர் தலமும் அமரேஸ்வரர் தலமும அமைந்துள்ளன.  அதுமட்டுமின்றி இது உஜ்ஜயினில் உள்ள மஹாகாலேஸ்வரர் ஜோதிர்லிங்க தலத்திற்கு சுமார் 110 கிலோமீட்டர் அருகில் உள்ளது.

14 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சைவ, வைணவ, ஜைன ஆலயங்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.

ஓம்காரேஸ்வரர் என்ற பெயருக்குத் தக்கபடி இந்தத் தீவு ஓம் வடிவில் அமைந்துள்ளது. அதனாலேயே இந்தப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

ஓம்காரேஸ்வரர் என்றால் ஓம் என்ற மந்திரத்திற்கு அதிபதி என்று பொருள்.

4

புராண வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் இதன் பெருமை நன்கு புரியும்.

சிவபிரான் ஒளிவடிவமாக ஆதியும் அந்தமுமின்றி வடிவம் எடுத்ததால் இது ஜோதிர்லிங்க தலமாக ஆனது. 12 ஜோதிர்லிங்க தலங்கள் பாரதத்தில் உள்ளன.

மகாகாலர் – உஜ்ஜயினி, சோம்நாத், நாகேஸ்வரர் – குஜராத், மல்லிகார்ஜுனர் – ஆந்திர பிரதேசம், ஓம்காரேஸ்வரர் – மத்யபிரதேசம், கேதார்நாத் – உத்தரகாண்ட், பீம்சங்கர், திரியம்பகேஸ்வரர் மற்றும் கிரிஷ்னேஸ்வரர் – மஹராஷ்டிரம், விஸ்வநாதர் – வாரணாசி, வைத்யநாதர் – ஜார்கண்ட், ராமேச்வரர் – தமிழ்நாடு ஆகியவை 12 ஜோதிர்லிங்க தலங்களாகும்.

5

மூன்று வரலாறுகள் இந்தத் தலம் பற்றி உண்டு.

முதலாவது வரலாற்றின் படி, விந்திய மலையின் தேவதையான விந்தியா சிவபிரானை தனது பாவங்கள் போக்க வணங்கவே சிவபிரான் ஓம்காரேஸ்வரராகவும் அமேரேஸ்வரராகவும் இங்கு எழுந்தருளினார்.

இரண்டாவது வரலாற்றின் படி, மாந்தாதா என்ற அரசன் சிவபிரானைத் தொழவே அவனது தீவிரமான பக்தியை  மெச்சி சிவபிரான் இங்கு எழுந்தருளினார்.

அடுத்த மூன்றாவது வரலாற்றின்படி, அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்து ஓம்காரேஸ்வரராக இங்கு எழுந்தருளினார்.

6

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முதல் அமைச்சர் திரு சிவராஜ்சிங் சௌஹான் 108 அடி உயரமுள்ள ஆதிசங்கரரின் சிலை திட்டத்தை அறிவித்தார். இத்துடன் சங்கரர் கண்காட்சி மற்றும் ஆசார்ய சங்கரர் இன்ஸ்டிடியூட் ஆஃப் அத்வைத வேதாந்தாவும் இங்கு நிறுவப்படும் என்று அவர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து 23000 கிராம பஞ்சாயத்துகளில் இதற்கான உலோகம் திரட்டும் வேலை நடைபெற்றது.

2022, ஜூன் 4ஆம் தேதி லார்ஸன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திடம் இந்த திட்டத்திற்கான பணி ஒப்படைக்கப்பட்டது.

இந்த சிலை சுமார் 500 வருடங்களுக்கும் மேலாக நீடித்து இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

7

மாந்தாதா பர்வதத்தில் தெற்கு நோக்கி நர்மதா நதியை நோக்கி இது அமைக்கப்பட்டுள்ளது. 54 அடி உள்ள பீடத்தின் மேல் 27 அடி உயரமுள்ள ஒரு தாமரை பீடத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. தாமரை பீடமோ சிவப்புவண்ணக் கல்லில் அமைந்துள்ளது.

இதன் எடை 100 டன். இதில நூற்றுக்கணக்கான கலைஞர்கள், எஞ்ஜினியர்கள், சிற்பிகள் ஈடுபட்டனர். சீனாவில் உள்ள நான்செங்கில் இதற்கான உலோக வார்ப்பு செய்யப்பட்டது.  மும்பை வழியாக கடல் மார்க்கமாக இது பத்திரமாக கொண்டு வரப்பட்டது.

சிலையின் எடை 100 டன். 75 அடி உயரமுள்ள மேடையில் இது நிறுவப்பட்டுள்ளது. 88% தாமிரம், 4% துத்தநாகம், 8% காரீயம்(டின்) கொண்டது இது. உள் அமைப்போ வலிமையான ஸ்டீலினால் அமைக்கப்பட்டிருக்கிறது.

சிலையின் அடியில் சங்கர் ஸ்தம்பம் உள்ளது. அதில் 32 மாடங்கள் ஆசார்ய சங்கரரை நினைவுறுத்தும்படி கற்சிற்பங்கள் மற்றும் மர ஸ்தூபங்களுடன் உள்ளன.

ஓவியர் வாசுதேவ காமத் இதற்கான வடிவமைப்பை நிர்மாணித்தார்.

இவருடன் பகவான் ராம்புரா என்பவரும் இணைந்து பணியாற்றினார்.

இத்துடன் பிரம்மாண்டமான கண்காட்சியும் அத்வைத இன்ஸ்டியூட்டும் அமைக்கப்படுவது பாரத தேசத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைகிறது. 22.1 ஹெக்டேர் நிலப்பரப்பில் இவை அமைக்கப்படுகின்றன.

வாழ்த்துவோம். சங்கரரை வணங்கிப் போற்றுவோம்!

***

Gandhiji explodes Vaikom Dravidian Myth! (Post No.12,722)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,772

Date uploaded in London – –  –  27 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Where is Vaikom (old spelling Vaikam)?

Vaikom is a small town in Kottayam district of Kerala. It is famous for its Mahadeva Swami temple and Vaikaththu Ashtami festival where several thousands are fed.

What is Vaikom  (Vaikam) Satyagraha?

During the Freedom Struggle, the Congress party leaders joined Mahatma Gandhi in demanding entry for all Hindus including Dalits/ Harijans into temples and approaching  roads.

Who were the people warned by Gandhiji?

Christians and Sikhs wanted to exploit the situation and show it as Anti Hindu movement. Gandhiji warned them not to interfere in Hindu matters. He drove away Christians and asked to close the free kitchens of Sikhs. He never allowed any anti God fellows.

The local Christian leadership was alienated by a statement by Gandhi asking them to keep clear from ‘a Hindu affair’ (April, 1924).[4][17] Sikh Akali activists from Amritsar had also arrived at Vaikom to establish free food kitchens to the satyagrahis (April, 1924).[17] Gandhi called for the closure of the Sikh kitchens (from Wikipedia)

I have got a beautiful book titled

THE EPIC OF TRAVANCORE, MAHADEV DESAI, NAVAJIVAN KARYALAYA, AHMEDABAD, 1937

It requires reprint because it shows the Nambudiri Brahmins, C P Ramaswami Iyer, Narayana Guru, Menons and Nairs brought about a revolution in accepting low caste Hindus entry into the temple. At last, the historical proclamation was issued by the Ruler of Travancore. No where the so called Dravidian Ramaswami Nayakkar name is mentioned. One Dr M E Nayudu from Nagerkoil and Rajaji were the Vaikom heroes from Tamil Nadu. Hundreds of participants were mentioned  except the  so called Vaikam Hero. Everyone must read the book. It is also necessary to bring the book in Tamil. Gandhiji and Mahadev Desai who accompanied him clearly mentioned the names of all important participants.

First let me give an interesting episode narrated by Mahadev Desai in the book:

“We left Pune for Trivandrum on the tenth January. Gandhiji deliberately asked young Kanu, his grand nephew,  to arm himself this time with Dilruba.

I slightly remonstrated. I said to Gandhiji:

You always object to our taking superfluous articles of luggage. Now it is my turn to object . Why add the  Dilruba this time?

We have already added the carding bow and cotton. Why this musical instrument also ?

He smiled and said,

You are right. You may drop out the carding bow if you like, but not the Dilruba. this visit to Travancore is going to be a pilgrimage. We shall have to have Tulsi Ramayan reading everywhere and sometimes, if god wills it, at public places also, and we cannot get a Dilruba there.

I was silenced.

I saw that Gandhiji was already mentally preparing himself for the great pilgrimage” – Mahadeva Desai.

The above incident shows that all those who were associated with Gandhiji in this struggle were great supporters of Hinduism and so Dravidian Nayakkar wont fit into this struggle.

(I know Tamils even erected a statue in Vaikam; but that is nothing but a political gimmick)

In the second part of the article, I will give the names and organisations as told by Gandhiji and Mahadev Desai.

Gandhiji Group with Dilruba instrument in Salt Satyagraha

In fact, the great poet Bharati was the one who inspired all these people. He sang before 1921 Freedom to Paraiahs and Pualaiyas. The two words used in the book.

PARAIYARUKKUM INGU THEEYAR PULAIYARUKKUM VIDUTHALAI; PARAVARODU KURAVARKKUM MARAVARKKUM VIDUTHALAI – Bharati

What a great Deergadarisi / prophet !

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறைய ருக்கும் இங்கு தீயர்

புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும்

மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்டதீமை யற்ற

தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

ஏழை யென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்,

இழிவு கொண்ட மனித ரென்பது

இந்தி யாவில் இல்லையே

To be continued…………………………………..

Ags- vaikam, Temple entry, Harijans, Dalits

செங்கன்னூர்  பகவதி கோவில் பற்றி சுவையான கதைகள் தொடர்ச்சி –16 (Post.12,771)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,771

Date uploaded in London – –  –  27 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற  108 கோவில்கள்- PART 16

PART 16

கோவில் எண் 14 – செங்கன்னூர் /செங்கண்ணூர் /திருச் செங்குன்றூர் கோவில் தொடர்ச்சி – part 2

முந்தைய கட்டுரையில் செங்கன்னூர் மஹாதேவர்/ பகவதி கோவில் பற்றிய 3 கதைகளைக் கேட்டோம்

அகஸ்தியர் சோனாத்ரி (Red Hills)  மலைக்கு வந்த கதை, கர்னல் மன்றோ கதை கோவலனின் மனைவி கண்ணகி திருச்செங்குன்றூர் வந்த கதைகளை சொன்னேன்.

இதோ மேலும் 6 சுவையான கதைகள் .

கதை 4

செங்கன்னூர் கிராமத்தின் தாசில்தாராக எம் சி நாராயண பிள்ளை இருந்தார் . டிசம்பர்- ஜனவரியில் 28 நாள் நடக்கும் வருடாந்திர உற்சவத்தை மிக விமரிசையாக நடத்த திட்டமிட்டார்.. 25 நாட்களுக்கு உற்சவம் தடையின்றி நிகழ்ந்தது. 26-ஆவது நாளன்று தேவியின் மாதவிடாய் துவங்கிய அறிகுறிகள் தென்படவே நாராயண பிள்ளையிடம் அர்ச்சகர்கள் சொன்னார்கள் ; பிள்ளைக்குப் பேரதிர்ச்சி ; ஆயினும் இவ்வளவு  விமரிசையாக நடந்து கொண்டிருக்கும் விழாவினை நிறுத்தராதீர்கள் என்று சொன்னார். அர்ச்சகர்களையும் மெளனம் காக்கும்படி  கட்டளையிட்டார். அனறிரவு அவருடைய மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதோடு கவலைப்படும் அளவுக்கு நிலைமை மாறியது. அவர் தேவியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தக்க பரிகாரங்களை செய்தார். பின்னர் மனைவி குணம் அடைந்தார்

கதை 5

தட்சன் (தக்கன்) என்பவன் பார்வதியின் தந்தை; மாமனார்- மருமகன் மோதலால் சிவனை அவமானப்படுத்த ஒரு பெரிய யாகத்தை ஏற்பாடு செய்தான். பார்வதிக்கு விஷயம் எட்டியது; அவள் தட்சனின் மக்கள் ஆதலால் சம்ஸ்க்ருத இலக்கணப்படி அவளை தாட்சாயினி என்றும் அழைப்பர் (மிதிலைப் பெண்ணை மைதிலி என்போம்; காந்தார நாட்டிலிருந்து வந்தவளை காந்தாரி என்போம்; ஜனகரின் மகளை ஜானகி என்போம் ; தசரதன்  மகனை தாசரதி என்போம்; இது ஸம்ஸ்க்ருதப் பெயரிடும் முறை .)

தட்சாயியினி ‘என் அப்பனை ஒரு கேள்வி கேட்டு மடக்கிவிட்டு வருகிறேன்’ என்று புறப்பட்டாள்; சிவன் சொன்னார் :

போகாதே போகாதே என் டார்லிங் /DARLING

பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் (வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படப் பாடல் போல).

அவளுக்கோ அப்பாவை ஒரு கை பார்த்துவிடவேண்டும் என்ற ஆவேசம்;.

கணவன் சொல்லியும் மீறிப்போனாள் .

டேய் உங்கப்பன் மவனே! என்னடா நினைத்ததாய் என் கணவனைப் பற்றி;  ;திரிபுரங்களையும் ஒரு சிரிப்பு சிரித்து எரித்தவன் என் கணவன்; காம வேட்கையைத் தூண்ட வந்த மன்மதனை எரித்தவன் என் கணவன் என்று டயலாக் பேசினாள் ; அகந்தையின் மறு உருவான தக்கனோ அடிப் போடீ! பைத்தியக்காரி நான் அறியாத தவனா ? சின்னஞ் சிறியவனா  (தாமரை நெஞ்சம் திரைப்படப்பாடல் ) என்று பாடினான் .

அப்பா, உன் யாகத்துக்கு முடிவு காட்டுகிறேன் என்று யாகத்தீயில்  விழுந்தாள் ; உடல் கருகியது ! உலகமே இருண்டது ! பூவுலகம் சக்தியை இழந்தது; காரணத்தை அறிந்த சிவன் உடுக்கை ஒலியை எழுப்பி புறப்பட்டார்; தக்கனைத் துவம்சம் செய்தார்; கருகிய மனைவியின் உடலைத் தூக்கிக்கொண்டு பாரத நாடே அதிரும்படி ஆடினார். சிவனின் ஆட்டத்தை அடக்கும்படி எல்லோரும் விஷ்ணுவிடம் மன்றாடினார்கள் ; சிவனின் ஆட்டத்துக்குக் காரணம் தாட்சாயியினியின்  உடல் என்பதை அறிந்து சுதர்சன சக்கரத்தை ஏவி துண்டு துண்டாக வெட்டினார் ;அப்போது தேவியின் உடற்பகுதிகள் விழுந்த இடம் எல்லாம் புனிதம் அடைந்தன . அவை விழுந்த 51 இடங்களையும் ரிஷி முனிவர்கள் கண்டறிந்து சக்திக் கேந்திரங்களை உண்டாக்கினர் ; மன்னர்களை அழைத்து கட்டிடம் கட்ட கட்டளையிட்டனர்  அப்போது தேவியின் இடுப்பின் கீழ்ப் பகுதிகள் அஸ்ஸாமில் கெளஹாத்தியிலும் கேரளத்தில் செங்கனூரிலும் விழுந்தன. ஆகையால் இந்த இரண்டு கோவில்களில் இறைவிக்கு  மாதவிலக்கு உண்டு .

அஸ்ஸாம் கோவிலை ஒப்பிட்டுப் பார்த்தால் மேலும் பல ஒற்றுமைகள் விளங்கும். ஒரு வேளை பெண்களின் மாதவிலக்கு எவ்வளவு புனித மானதுமதிக்கப்பட வேண்டியது என்பதை ஆண்களுக்கு உணர்த்தவே அஸ்ஸாமிலும் கேரளத்திலும் இத்தகைய கோவில்கள் உருவாயின என்றும் சொல்லலாம். மாதவிலக்கு பற்றிய சங்க இலக்கிய பாடல்தான் இந்த வகையில் முதல் பாடல் (எனது குறுந்தொகை ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் உளது.)

கதை 6

 1724ம் ஆண்டில் நடந்த சம்பவம் .

கோவிலுக்கு அஷ்ட பந்த கலசம் நிறுவ கோவில் நிர்வாகம் முடிவு செய்ததது. கோவிலின் கீழத்தெருவில் வசித்த பிரபல ஜோதிடர் கிருஷ்ணபி ள்ளையிடம் நல்ல நேரம், நல்ல நாள் குறித்துத் தருமாறு வேண்டினர். அவரும் மீனம் மாதம் எட்டாம் நாள் நண்பகல் என்று நாள் குறித்தார். அதை உறுதிசெய்யும் வகையில் அன்று பகலில் கோவில் கோபுரம் மீது மயில் வந்தது அமரும் என்றும் சொன்னார். மணி 12 ஆயிற்று மயிலைக் காணோம்; பிள்ளையையும் நூறுக்கணக்கான மக்கள் வானத்தை பார்த்தபடி நின்றனர். விழா ஏற்பாட்டினைச் செய்தவர்களும் திகைத்து நின்றனர் . ஆனால் போட்டி ஜோதிடர் மூத்தது அங்கே இருந்தார். அவருக்கும் கிருஷ்ன பிள்ளைக்கும் ஆகாது. அந்த நேரத்தில் ஒரு ஆண்டிப் பண்டாரம் மயில் தோ கையுடன் வந்து நின்றான். இது போதுமே; தொடங்குங்கள் நிகழ்சசியினை என்றார் . சடங்குகள் முடியும் தருவாயில் கிருஷ்ண பிள்ளையும் வந்து சேர்ந்தார் அடக் கடவுளே; கெட்ட நேரத்தில் விழாவைத் துவங்கி விட்டீர்களே! இது கோவிலுக்கே ஆபத்தே  என்றார் . சில மாதங்களில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு கீழைக் கோபுரம், கூத்தம்பலம் முதலியன எரிந்து சாம்பல் ஆயின. பின்னர் சீர்திருத்த வேலைகள் ஆமை வேகத்தில் நடந்தன. திவான் வேலையில் இருந்த கர்னல் மன்றோ இந்தக் கோவிலையும், ஏனைய கோவில்களையும் அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் கொணர்ந்தார்.

கதை 7

தமிழ் நாட்டில் அந்தக்காலத்தில் சொல்லுவார்கள் : சாமிக்கு முன்னால் நின்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறேன் என்று. இதே போல கேரளத்தில் பகவதி கோவில் சத்தியமும் பிரசித்தம் . கோவிலின் மேற்கு கோபுரத்தின் வல து புறம் மேலை நடாவில் . ஒரு துவாரம் உள்ளது. யாரேனும் தான் சொல்லுவது சத்தியம் என்று காட்ட அந்த துவாரத்தில் கைவிரலை விட்டு சத்தியம் செய்வார். பொய் சொன்னால் அந்தப் பொந்திலுள்ள பாம்பு அவரைக் கடித்து சாக வைத்துவிடும் என்ற நமபிக்கையே இதற்கு காரணம். செங்கன்னூர் மேல நடா என்றால் எல்லோருக்கும் பயம்தான் !

தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒரு வைத்தியர் தானும் பாம்புக்கடிக்கு மருந்து வைத்திருப்பதாக பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார். அந்த ஊரில் ஏற்கனவே பாம்புக் கடிகளைத் தீர்த்து வந்த குலத்தில் ஒரு விதவையும் ஒரு 12 வயதுச் சிறுவனும் மட்டுமே எஞ்சி இருந்தனர். ஒரு நாள் அந்தப் பையன் கோவிலுக்கு பிராத்தனை செய்யச் சென்ற போது , கோவிலில் யாராவது நோயாளி வரமாட்டானா என்று தமிழ் வைத்தியரும் காத்திருந்தார். ஒருவர் அந்தப் பையனை அழைத்துச் சென்று இந்தப் பையன் குடும்பமும் பரம்பரை, பரம்பரையாக விஷக்கடி  வைத்தியம் செய்துவருகின்றனர் என்று சொல்லி அறிமுகப்படுத்தினார் . அவர் உடனே பையனுக்கு சவால் விடுத்தார் அந்தப் பையன் அம்மாவிடம் சென்று அம்மா புதுசா ஊருக்கு வந்த ஆள் நமக்கு எல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு சொல்றான் அம்மா என்று வருத்தத்தோடு சொன்னான். அன்றிரவு அந்தப்பையன் கனவில் ஒரு குழாயும் அதற்குள் நாகப்பாம்பும் இருப்பதாக வந்தது. நாக தேவன் இதை அந்த வைத்தியரிடம் எடுத்துச் சென்று உன் சக்தியைக்காட்டு என்று உத்தரவு வந்தது .

நாக தேவன் கனவில் சொன்னபடி குழாய் இருந்தது. மறுநாள் அந்தப் பையன் வைத்தியரிடம் சென்று இதோ பார்! பாம்பு என்று குழாயைக் காட்ட அந்த பாம்பு வெளியே குதித்து அவனைச் சுற்றி வந்து மிரட்டியது. தமிழ் வைத்தியன் பயந்து போய் மன்னிப்புக் கேட்டவுடன் பாம்புக்கு சின்னப்பையன் கட்டளையிடவே அவன் சொ ன்னபடி பாம்பும் குழாய்க்குள் சென்றது. அந்தக் குழாயை அவன் மேல நடாவில் புதைத்து வைத்தான். அதுதான் இன்றுவரை சத்தியப் பிரமாண துவாரமாக இருக்கிறது  தமிழ் வைத்தியன் தான் கொண்டு வந்த பாம்புக்கடி மருந்துகளைக் குழி தோண்டி புதைத்துவிட்டு நடையைக் கட்டினான். இப்போதும் மக்கள் அந்தக் குழியின் மீது நின்று பிராத்திக்கிறார்கள் அப்படிச் செய்தால் பாம்புக் கடி பயம் வராது.

To be continued……………………………….

–subham—

Tags– செங்கன்னூர், கதைகள், விஷக்கடி வைத்தியம். பாம்பு, தட்சன் கதை, கெளஹாத்தி போலவே ; உடலின் கீழ்ப்பகுதி, 51 சக்திக் கேந்திரங்கள்

அதீத உளவியலும் அதிசயங்கள் கண்ட அறிஞர்களும்! (Post No.12,770)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,770

Date uploaded in London –  –  27 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 1 அதீத உளவியலும் அதிசயங்கள் கண்ட அறிஞர்களும்! 

இமானுவேல் ஸ்வீடன்பர்க்

ச.நாகராஜன்

 பிரபல டைரக்டரும் கதாசிரியரும் பத்திரிகை ஆசிரியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் விந்தை மனிதர்கள், விந்தைப் பெண்மணிகள் பற்றிய ஒரு கட்டுரைத் தொடரை எழுதி வந்தேன்.

இந்தத் தொடரில் மேஜிக் மன்னன் ஹௌடினி, மேஜிக் நிபுணர் அலெக்ஸாண்டர் ஹெர்மன், உல்ப் மெஸ்ஸிங், ரஸ்புடீன், எட்கர் கேஸ், மெஸ்மர், க்விம்பி, அரிகோ, ஹோம், எக்லிங்டன், முல்டூன், லியனார்டோ டாவின்சி, மைக்கேல் காக்லின், சீரோ, ஜான் டீ, நாஸ்டர்டாம், நெல்ஸன் பால்மர், ராபின் வின்போ, சார்லஸ் ஃபோர்ட், யூரி கெல்லர், ஆரூட ராணி லெனார்மனா, ஜீன் டிக்ஸன், ஃபாக்ஸ் சகோதரிகள், ஃப்ளோரென்ஸ் குக், மேடம் ப்ளாவட்ஸ்கி, பெட்டி ஷைன், ஜோன் குய்க்வி, ஜோயன்னா சௌத்காட் ஆகியோர் பற்றி சுவையான தகவல்களைத் தந்தேன்.

இது தவிர பாக்யாவில் ஒன்பது வருடங்கள் தொடர்ந்த அறிவியல் துளிகள் தொடரில் கார்ல் ஜங் உள்ளிட்ட இன்னும் பலரைப் பற்றிய விவரங்களைத் தர முடிந்தது.

என்றாலும் கூட அதீத உளவியலையும், ஆவி உலகையும் ஆராய்ந்த ஏராளமானோரின் பட்டியல் மிக நீண்ட ஒன்று.

நம்ப முடியாத ஆனால் நிஜமாகவே நடந்த பல விஷயங்களை இந்த அறிஞர்கள் ஆராய்ந்தனர்; உலகிற்குத் தங்கள். முடிவுகளை அறிவித்தனர்.

இவர்களில் இன்னும் சிலரைப் பற்றி அறிமுகம் செய்வதே இந்தத் தொடரின் நோக்கம்.

உள்ளே நுழைவோம்; இன்னும் சிலரைப் பார்ப்போம்.

இமானுவேல் ஸ்வீடன்பர்க்

இமானுவேல் ஸ்வீடன்பர்க் (Emanuel Swedenborg – 1688-1772) ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு எஞ்ஜினியர், தத்துவஞானி, இறையியல் வல்லுநர், அதீத உளவியலாளர்.

பைபிளில் உள்ள உரைகளுக்கு அவர் புதிய விளக்கங்களை அளித்தார். இதனால் நியூ சர்ச் உருவானது.

இவர் ஆவிகள் உலகத்தை நன்கு அறிந்தவர். ஆகவே பல அதிசய சம்பவங்களை இவரால் செய்து காண்பிக்க முடிந்தது.

ஏராளமான சம்பவங்களில் இங்கு சிலவற்றைப் பார்ப்போம்.

இது 1759ஆம் ஆண்டு நடந்தது. கோதன்பர்க்கில் ஒரு வீட்டில் பார்ட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஸ்வீடன்பர்க், 420 கிலோமீட்டர் தள்ளி உள்ள ஸ்டாக்ஹோமில் இருந்த தனது வீட்டருகில் தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி வருவதாக உணர்ந்தார். பிறகு சற்று நேரத்தில் தீயானது தனது மூன்று வீட்டிற்கு முன்னால் அணைக்கப்பட்டு விட்டதாக உணர்ந்து அமைதியானார். அவர் மனக்கண்ணில் கண்ட காட்சி பின்னால் சரிபார்க்கப்பட்டு உண்மைதான் என்று அறியப்பட்டது. எமில் க்ளீன் (Emil Kleen) என்ற மருத்துவர் இது ஒரு கட்டுக்கதை என்று நினைத்தவர் தீவிரமாக விசாரணை செய்து ஆராய ஆரம்பித்தார். அது உண்மை என்பது தெரிய வந்தது. இதை எப்படி பகுத்தறிவு மூலம் விளக்குவது என்று அவருக்குப் புரியவில்லை; திகைத்தார்.

இன்னொரு சம்பவமும் 1759இல் நடந்தது. இது பற்றி அதிகம் பேசாமல்

ஸ்வீடன்பர்க் மௌனம் சாதித்தார். ஏனெனில் இது ப்ரஷ்யா ராணி லூசியா உல்ரிகா (Queen Lousia Ulrika) மற்றும் அவரது காலம் சென்ற இளவரசர் விஹெல்ம் (Prince Wilhelm of Prussia) சம்பந்தப்பட்ட விஷயம்!  ராணியும் இளவரசரும் தோல்வி அடைந்த ஒரு சதிவேலையில் ஈடுபட்டிருந்தனர். இறந்துபோன இளவரசர் ஆவியைத் தொடர்பு கொண்டு இளவரசரிடமிருந்து ராணி அறிய வேண்டிய விஷயத்தைக் கேட்டு அவருக்குச் சொன்னார் ஸ்வீடன்பர்க். ‘நான் சுலபமாக ஏமாறுபவள் இல்லை’ என்று ராணி கூறினார். ஸ்வீடன்பர்க் கூறிய விஷயம் மிகச் சரியாகவே இருந்தது.

மூன்றாவது சம்பவம் இது:

ஸ்வீடனில் நியமிக்கப்பட்ட நெதர்லாந்தை சேர்ந்த தூதுவரின் விதவை மனைவி தான் வாங்கிய ஒரு வெள்ளிப்பாத்திரத்திற்கான பில்லைக் காணவில்லை என்று தேட ஆரம்பித்தார். வெள்ளிப்பாத்திரத்தைச் செய்த வியாபாரியோ அந்தப் பாத்திரத்திற்கான பணம் தனக்கு வரவில்லை என்றும் வந்திருப்பதாக இருந்தால் பில் இருக்க வேண்டுமே என்றும் ஆணித்தரமாக வாதிட்டார். ஸ்வீடன்பர்க்கிற்கு இந்த விவரம் தெரிய வந்தது. உடனே அவர் தூதரின் ஆவியோடு தொடர்பு கொண்டார். பில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும் அறிந்தார். அதை அவரது விதவை மனைவிடம் கூற அவர் அந்த இடத்தில் இருந்த பில்லை எடுத்து வியாபாரியிடம் காட்ட பிரச்சினை முடிவுக்கு வந்தது. இன்னொரு கூற்றின் படி ஸ்வீடன்பர்க் தூதரிடம் அவரது மனைவியின் பிரச்சினையை விளக்கியதாகவும் அன்று இரவு தூதர் தனது மனைவியின் கனவில் வந்து பில் இருக்கும் இடத்தைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இப்படி ஏராளமான சம்பவங்கள் ஸ்வீடன்பர்க் வாழ்க்கையில் உண்டு.

அவரது ஹெவன் அண்ட் ஹெல் (Heaven and Hell) என்ற புத்தகம் ஏராளமானோரால் படிக்கப்பட்ட புத்தகம்.

இவரைப் பற்றித் தொடர்ந்து ஏராளமான நூல்கள் இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன.

ஆவி உலகம் உண்டு என்பதையும் இறந்த ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டியவர் ஸ்வீடன்பர்க்!

இவர் ஒரு விந்தை மனிதர் தானே!

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 31 (Post No.12,769)- Last Part

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,769

Date uploaded in London – –  –  26 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I skipped 50,51,52,53,54, 55 so that my translation coincides with at least one book. Now I am covering them.

Each Nitisataka bookhas extra slokas and so the numbers did not coincide. So I am giving the leftout/ unused slokas here

From Tamil Book

ஞாயத் தொழில் செய்தல் நல்லவுயிர்க்காபத்துத்

தோயினும் செய்யாத் தொழில் இயற்றல் – கேயு மனங்

கொள்ளாதிருத்தல் கொடியோரை வேண்டாமை

தள்ளரிய தோழனையும் தான் வேண்டி -உள்ளமுவந்

தெள்ள வேனு மிரவாமை என்றென்றும்

விள்ளரு மாபத்து மேவிடினும் – எள்ளலிலா

ஆண்மை குறையாமை ஆன்றோர்க் கனுகூலம்

கேண்மையுடன் செய்து கிளர்ந்திடுதல் மாண்புலவிந்

நற்குணங்க ளெல்லாமும்  நல்லோர்க் கியற்கையாம் .

மற்றோருவரான வருவதன்று 

xxxxx

பேராசை தீது  பிசினக் குணத்தாலே

தீராத பாவஞ் செறியுமே — நேரான

உண்மையிருந்தால் உயர் தவமேன் தூய மனத்

தண்மையிருந்தாலேன்  தலந்தொழுதல் ஒண்மைமிகு

நன்மையிருந்தால் நலம்பெறலாம்  நல்ல பெருந்தமை

யிருந்தாலழ கேன்  தக்கவித்தை- வ ன்மை

இருந்தால் தனமேன் இழிந்தவபகீர்த்தி

இருந்தால் இறப்பேன் இயல்பு

xxxxx

பகமிலா மங்கை பருவப்பெண் லால்விச்

சுகமிலா ஆணழகன் தோன்றுஞ்ச்கமுலாம்

பொன்னாசை மன்னன் பொருந்துவறு மைக்குணவான்

மன்னுசெல்வன்  தன்பால் மருவுதுட் டன்

பொன்னிவளர் த்தாமரையிலாத் தடாகம் இவரெழுவர்

நாமாநைய விருப்பார் 

Xxxxx

Consumption does not leave the moon, though he is the repository of nectar, the lord of medicinal herbs, followed by Satabhisak (a hundred physicians, a constellation by the name) and the crown-jewel of Shiva. By whom can the miserable effects of fate be overcome?

அமுத மிருப்பிடம்  ஒளஷத ராஜன்

அமித வயித்தியரார்வார் — இமவான்

மருகற் கணி யா மதியுங் கயநோய்

பெருகி விதியால ழிவான்  பீடு

சந்திரன் தான் அமிர்த தாரகையின் இருப்பிடம் மூலிகைகளின் இறைவன் அவனே தேய்நது போகிறான்; சத பிஷக் என்ற நட்சத்திரக் கூட்டத்துக்கு 100 டாக்டர்கள் என்று பொருள்; அவனைப் பின்பற்றும் சந்திரனுக்கே இந்த வியாதி என்றால் விதியின் செ ய்கைகளை யாரால் தடுக்க முடியும்?—93??

xxxxxx

From Sanskrit

मज्जत्वम्भसि यातु मेरुशिखरं शत्रून् जयत्वावहे

        वाणिज्यं कृषिसेवने च सकला विद्याः कलाः शिक्षताम् ।

आकाशं विपुलं प्रयातु खगवत्कृत्वा प्रयत्नं परं

        नाभाव्यं भवतीह कर्मवशतो भाव्यस्य नाशः कुतः ॥ १०२॥

भीमं वनं भवति तस्य पुरं प्रधानं

        सर्वो जनः स्वजनतामुपयाति तस्य ।

कृत्स्ना च भूर्भवति सन्निधिरत्नपूर्णा

        यस्यास्ति पूर्वसुकृतं विपुलं नरस्य ॥ १०३॥

को लाभो गुणिसङ्गमः किमसुखं प्राज्ञेतरैः सङ्गतिः

        का हानिः समयच्युतिर्निपुणता का धर्मतत्त्वे रतिः ।

कः शूरो विजितेन्द्रियः प्रियतमा कानुव्रता किं धनं

        विद्या किं सुखमप्रवासगमनं राज्यं किमाज्ञाफलम् ॥ १०४॥

अप्रियवचनदरिद्रैः प्रियवचनाढ्यैः स्वदारपरितुष्टैः ।

परपरिवादनिवृत्तैः क्वचित्क्वचिन्मण्डिता वसुधा ॥  १०५॥

कदर्थितस्यापि हि धैर्यवृत्तेर्न शक्यते धैर्यगुणः प्रमार्ष्टुम् ।

अधोमुखस्यापि कृतस्य वन्हेर्नाधः शिखा याति कदाचिदेव ॥ १०६॥

कान्ताकटाक्षविशिखा न लुनन्ति यस्य

        चित्तं न निर्दहति कोपकृशानितापः ।

कर्षन्ति भूरिविषयाश्च न लोभपाशै-

        र्लोकत्रयं जयति कृत्स्नमिदं स धीरः ॥ १०७॥

एकेनापि हि शूरेण पादाक्रान्तं महीतलम् ।

क्रियते भास्करेणेव स्फारस्फुरिततेजसा ॥ १०८॥

वह्निस्तस्य जलायते जलनिधिः कुल्यायते तत्क्षणात्

        मेरुः स्वल्पशिलायते मृगपतिः सद्यः कुरङ्गायते ।

व्यालो माल्यगुणायते विषरसः पीयूषवर्षायते

        यस्याङ्गेऽखिललोकवल्लभतमं शीलं समुन्मीलति ॥ १०९॥

लज्जागुणौघजननीं जननीमिव स्वां

        अत्यन्तशुद्धहृदयामनुवर्तमानाम् ।

तेजस्विनः सुखमसूनपि सन्त्यजन्ति

        सत्यव्रतव्यसनिनो न पुनः प्रतिज्ञाम् ॥ ११०॥

xxxxxx

From English

84. The quality of courage of a brave person cannot be erased even when he is perturbed, just as even the flame of a fire that is made to face downwards never flows downwards.

85. He is a courageous man, who conquers the three worlds, whose heart is not wounded by the dart-like glances of beautiful women, who is not consumed by the heat of the fire of anger, and whom the mighty sense-objects do not lure with snares of greed.

86. Even if struck down with blows from a hand, a ball only rebounds. Generally the misfortunes of those of good conduct are temporary.

87. It is good even when this body is shattered amidst rocks, falling upon some uneven ground from the tall peak of a great mountain, or that one’s hand is thrust into the mouth of the king of snakes with a sharp bite, or falling into fire (occurs), as long as loss of character is not acquired.

88. Fire becomes like water, the ocean a creek (instantly), Meru a small rock, the lion (at once) a deer, the snake a garland, and poison a shower of ambrosia, to him in whose person good character, dear to the entire world, manifests.

xxxxx

From Hindi book

 —-subham——-

 Tags- Bhartruhari, Nitisataka, Missed slokas, extra slokas

Divine Wedding in London : 2500 Devotees Attended Udayalur Bhagavathar Bhajan (Post No.12,768)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,768

Date uploaded in London – –  –  26 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

For the fourth year the Radha Madhav Kalyana Mahotsav was celebrated in London in a grand manner where over 2500 devotees attended. A registered charity organises it every year. This year it was celebrated in Sattavis Patidar Centre in Wembley (part of greater London).

Top most Sampradhaya Bhajan singer Udayalur Dr Kalyanaraman lead the three day wedding event with his beautiful team of musicians. The team travelled all the way from Chennai and visited Reading, Manchester, Birmingham, Slough and other places to perform Bhajans in the past two weeks.

On 24, 25 and 26th November 2023, the wedding was organised in London.

On Saturday and Sunday over 1000 people attended the events each day. All the devotees had good feast on all the three days. Devotees contributed their mite whole heartedly. A committee was planning the event at weekly gatherings of well wishers for the past three months. Several London businesses also contributed and made the event a success.

Though there are scores of young and old volunteers who worked very hard for the success of the event, all appreciated the dedicated service of Rajagopalan (Raj Iyer) and Mrs Meena Rajagopalan, M Rajagopalan (rajja) and Mrs Uma Rajagopalan, Suubu Iyer alias Subrahmanyam and Mrs Gayathri Subrahmanyam, Chandrasekhar and Purnima Chandrasekhar,Balasubrahmanyam and Mrs Padma Balsubrahmanyam of Ilford, N.Ganesan, and Mahesh.

It was the fourth year that devotees came forward with same enthusiasm. Dr Udayalur has a brilliant team with Brigha Balasubrahmanyam and Mridanghist and Harmonium player.  The Divine Wedding of Sri Madhav with Sow Radha is considered auspicious by all the Hindus. Dr Udayalur Kalyanaraman also mentioned that all the good wishes of every family will be fulfilled after attending today’s wedding. He was in all praise for the organisers and participants for their chanting of the Divine Names.

A remarkable thing is that the devotees travelled over 200 miles from all the four directions in the U K to attend the holy wedding.

Please see my attached pictures :

— subham—-

Tags- Divine Wedding, London, Radha Madhav, 2500 devotees, Dr Udaiyalur Kalyanaraman

Three Kings of Sri Lanka : Rare Pictures from 100 Year Old Book (Post No.12,767)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,767

Date uploaded in London – –  –  26 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

XXXXX

 More pictures are taken from 100 year old book on Ceylon/  Sri Lanka; pictures of Three great kings statues are also in the book

Duththa gamini, Parakrama Bahu and Valagambahu

–subham—

Kings pictures, Sri Lanka, Ceylon, Duttagamini, Parakrama Bahu

செங்கன்னூர்  பகவதி கோவில் பற்றி சுவையான கதைகள் – part 15 (Post No.12,766)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,766

Date uploaded in London – –  –  26 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற  108 கோவில்கள்- PART 15

PART 15

கோவில் எண் 14 – செங்கன்னூர் /செங்கண்ணூர் /திருச் செங்குன்றூர் கோவில்

இந்த ஊரின் பெயரை மூன்று வித ‘ஸ்பெல்லிங்’ SPELLINGS குகளுடன் எல்லோரும் எழுதுகின்றனர் . கோவில் பற்றிய நிறைய உண்மைச் சம்பவங்கள் உள்ளன. அவைகளைக் காண்பதற்கு முன்னால் , கோவிலின் சிறப்பு அமசங்களை புல்லட் பாயிண்டுBULLET POINTS களில் காண்போம் .

கோவில் எங்கே இருக்கிறது?

.கோட்டயத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கிறது . இருப்பிடம் – ஆலப்புழை மாவட்டம் .

சிறப்பு அம்சங்கள்

அஸ்ஸாம் போலவே மாத விலக்கு MENSES OF GODDESS உள்ள கோவில் . அஸ்ஸாம் மாநில கெளஹாத்தி நகரில் அன்னை காமாக்யாவின் அதிசய கோவில் உள்ளது . ஆண்டுதோறும் அங்கு தேவிக்கு மாதவிலக்கு என்று கோவிலை மூடிவிடுடுவார்கள் . அங்கும் தேவியின் இடுப்பின் கீழ்ப்பகுதி விழுந்ததால் 51 சக்தி பீடங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது. செங்கன்னூரில் மாதம்தோறும் நடந்த பாதவிலக்கு இப்போது வருடத்தில் 3, 4 தடவை மட்டுமே ஏற்படுகிறது .

இத்தலம் விறன்மிண்ட நாயனார் அவதரித்த திருத்தலமாகும்.

தேவார வைப்புத் தலங்களில் ஒன்று .

மகாதேவர் / சிவன் கோவில் என்பதே உண்மை; ஆயினும் அம்மனின் அதிசய மாதவிடாய் காரணமாக அவள் புகழ் பரவி பகவதி/ பார்வதி கோவில் ஆகிவிட்டது.

கோவிலில் புராணராமாயண, மஹாபாரத சிற்பங்கள் உள்ளன

இதுதான் கோவலன் புஷ்பக விமானத்தில் வந்து கண்ணகியை சொர்க்கலோகத்துக்கு அழைத்துச் சென்ற கண்ணகியின் திருச் செங்குன்று என்றும் நம்பிக்கை உள்ளது

மஹாதேவர், பகவதி சந்நிதிகள் தவிர ஏனைய கடவுளரின் சந்நிதிகளும் உள .

கதை 1

உலகிலேயே முதல் முதலில் மக்கட் தொகை பிரச்சினை, குடியேற்றப் பிரச்சினையை கருத்திற்கொண்டது  (FIRST REPORT OF POPULATION EXPLOSION AND MIGRATION) இந்துமதமே . சிவ பெருமானுக்கும் பார்வதிக்கும் இமயமலை கைலாசத்தில் திருமணம் DIVINE WEDDING நடக்க விருந்ததை ஒட்டி ஏராளமானோர குழுமிவிட்டனர். சிவன் உடனே பாப்புலேஷன் எக்ஸ்ப்ளோஷன் POPULATION EXPLOSION பற்றி சிந்தித்தார். அதே நேரத்தில் தென்னாட்டில் ஜனத்தொகை குறைவு என்பதையும் அறிந்து 18 ஜாதி மக்களை தமிழ் நாட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அகத்திய முனிவரைப் பணித்தார் (FIRST ORGANISED MIGRATION) . போகும் வழியில் விந்தியமலையை கர்வ பங்கம் செய்தல் (அதாவது மலையை மட்டம்தட்டி ரோடு போடுதல் ROADWAYS WORK), தமிழ் நாட்டில் இலக்கணம் கெட்டுக்கிடக்கும் தமிழ் மொழிக்கு இலக்கணம் அமைத்தல் (WRITING GRAMMAR OF TAMIL LANGUAGE) ஆகிய பணிகளையும் ஒப்படைத்தார். அகஸ்தியருக்கு ஒருபுறம் மகிழ்ச்சி ஒருபுறம் வருத்தம். பெரிய காரியங்களை (BIG TASKS) சிவன் தன்னை நம்பி ஒப்படைப்பதால் தன்னை அந்த அளவுக்கு சிவன் உயர்த்திவிட்டாரே என்று மகிழ்ந்தார். அதே நேராத்தில் அரிய , பெரிய திருமணத்தை , கல்யாணச் சாப்பாட்டினை MISS மிஸ் பண்ணப்போகிறோமே என்று வருத்தப்பட்டார் . சிவனிடம் முறையிட்டபோது , அன்பரே , கவலைப் படாதீரும் ; நேரடி ஒளிபரப்புச் DIRECT TELECAST ARRANGED  செய்கிறேன்; திருமணத்தை தென்னாட்டில் இருந்துகொண்டே ZOOM ஜூம் வழியாகக் காண்பதற்கு அருள் புரிவேன் என்றார் அவ்வாறே நிகழ்ந்தது என்பதை திருவிளையாடல் புராணம்புறநானூற்றின் நச்சினார்க்கினியர் உரை, பாரதி பாடல் (ஆதி சிவன்பெற்று விட்டான்…..) முதலியவற்றிலிருந்து அறிகிறோம் .

ஆனால் செங்கன்னூர் தல வரலாற்றில் கூடுதல் அம்சமும் உளது. அகஸ்திய மாமுனிவர், சிவன் கட்டளைப்படி SONADRI சோனாத்ரி (செங்குன்று ) மலையில் தங்கி தவம் செய்த்துக்கொண்டிருந்த போது பார்வதியும் பரமசிவனும் வந்து தங்கியதாகவும் அப்போது தேவிக்கு மாத விலக்கு (மாதவிடாய் ) ஏற்பட்டதால் 28 நாட்களுக்கு மட்டும்  அம்மையப்ப னின் தரிசனம் கிடைத்ததாகவும் தல வரலாறு பகர்கிறது .

கதை 2

சிலப்பதிகாரத்தில் உள்ள கோவலன் – கண்ணகி கதையை அறியாத தமிழ் மகன் கிடையாது கோவலனை அநியாயமாகக் கொன்ற பாண்டிய மன்னரையும் அவனது மனைவியையும் HEART ATTACK ஹார்ட் அட்டாக்கில் இறக்கச் செய்துவிட்டு, மதுரை நகரில் இருந்த தீயோர் பகுதியை தீக்கிரையாக்கிவிட்டு SETTING FIRE TO MADURAI CITY கேரளத்தில் உள்ள செங்குன்று RED HILLS  ஊரில் ஒரு மரத்துக்கு அடியில் நின்று தவம் செய்தாள் ; அப்போது கோவலன் விசேஷ விமானத்தில் SPECIAL PLANE வந்து இந்த ஊரில் தரை இறங்கினார். அதை காட்டில் வாழ்ந்த வேடர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து நின்றனர் கண்ணகி அதில் ஏறிக்கொண்டவுடன் அவள் DIRECT FLIGHT TO HEAVEN டைரக்ட் பிளைட்டில் சொர்க்கம் சென்றாள் . இதற்குப் பின்னர் அந்தக் காட்டுக்கு OFFICIAL ROYAL VISIT அபிஷியல் வீசிட் மேற்கொண்ட மஹாராஜா செங்குட்டுவன், அவருடைய தம்பி இளங்கோ/PRINCE , ராணியம்மா ஆகியோரிடம் காட்டு மக்கள் கதை, கதையாகச் சொன்னார்கள்; செங்குட்டுவனுக்கு ஒரே ஆச்சக்காரியம் . அடக்கடவுளே யாராவது அந்தக் கண்ணகி- கோவலன் பற்றி  எழுதக்கூடாததா என்றார் மாமன்னர். அருகிலிருந்த சீத்தலைச் சாத்தனார் எனக்கு I KNOW THE FULL STORY புல் ஸ்டோரியும் தெரியும். இதோ நான் சொல்கிறேன் என்றார் . உடனே இளங்கோ எழுத்தாணியை எடுத்துக்கொண்டு பனை ஓலையில் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமாக நமக்கு யாத்துத்தந்தார். அவ்வளவு சிறப்புடையது இந்த ஊர்.

கதை 3

கர்னல் மன்றோ கண்ட அதிசயம் COL. MUNRO’S EXPERIENCE 

வெள்ளைக்காரன் ஆட்சியில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான திவான் ஆக இருந்தவரின் பெயர் COL. MUNRO கர்னல் மன்றோ. அவர் தனது பணியின் ஒரு பகுதியாக மஹாதேவர்/ பகவதி கோவில் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக்கொண்டு வந்தார். தேவியின் திருப்புனித நாள் செலவு GODDESS’ MENSES EXPENSES செல்வது என்ற வரியையும்  தொகையையும் பார்த்துவிட்டு வெடிச் சிரிப்பு சிரித்தார். ஏண்டா பசங்களா, யானைக்கு அல்வா வாங்கிப்போட்டதாக கணக்கு எழுதிய கதையெல்லாம் கேட்டவன் நான்என்னையே ஏமாற்றுகிறீர்களா பழமும் தின்னு கொ ட்டையும் போட்டவன் நான் என்று சொல்லி பேனாவால் ஒரு கிராஸ் CROSSED OUT போட்டு இனிமேல் இதற்கெல்லாம் பணம் கிடையாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.அன்று  அவருடைய மனைவிக்கும் மாதவிடாய் ஏற்பட்டது ; குழந்தைகளுக்கும் காய்சசல் வந்தது  ஆனால் இடைவிடாத ரத்தப்போக்கு ஏற்பட்டவுடன் மருத்துவர்களை அழைத்து சிகிச்சை தரச் சென்னார் ; அப்படியும் அது நிற்கவில்லை; உடனே மலையாள ஜோதிட சிகாமணிகளை அழைத்து பிரஸ்னம் போட்டுப்பார்த்தார் . அதில் கிடைத்த விடை இது தெய்வக்குற்றம் ; சாந்தி செய்ய வேண்டும் என்று பதில் வந்தது அப்போது ராணி லக்ஷ்மிபாய் (1810-1814) ஆட்சி நடந்து கொண்டிருந்தது. உடனே கர்னல் மன்றோ கோவில் கணக்கை  தான் ஆதரிப்பதாகவும் ஆண்டுதோறும் வேண்டிய செலவைச் செய்யலாம் என்றும் உத்தரவிட்டு,  சொந்தப பணம் 700 ரூபாயையும் செலவுக்குக் கொடுத்தார் பின்னர் மனைவியும் குழந்தைகளும் சுகம் அடைந்தனர் .

மேலும் சில உண்மைச் சம்பவங்களைத் தொடர்ந்து காண்போம்.

To be continued……………………………………………….

TAGS- கேரளம், புகழ்பெற்ற ,108 கோவில்கள், PART 15, செங்கன்னூர், PART 15

கீர்த்தி மிக்க திருக்கார்த்திகை தீபம்!-part 2 (Post No.12,765)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,765

Date uploaded in London –  –  26 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

22-11-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

26-11-23 அன்று திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் ஏற்றப்படும். கட்டுரை இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

கீர்த்தி மிக்க திருக்கார்த்திகை தீபம்!

இரண்டாம் பகுதி

ச.நாகராஜன்

திருவண்ணாமலை தீபம்

பஞ்சபூத தலங்களில் அக்கினி தலமாக விளங்கும் திருவண்ணாமலை தலத்தை நினைத்தாலேயே முக்திப் பேற்றைப் பெறுவர் என்பது அறநூல்கள் தரும் அற்புத உண்மை. இந்தத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு அனைவரும் அறிந்த ஒன்றே!

ஒருமுறை தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி பிரம்மா, திருமால் ஆகியோருக்கு இடையே எழ, சிவபிரான் அவர்களிடம் தனது அடியையோ முடியையோ யார் காண்கிறாரோ அவரே பெரியவர் என்று கூறினார். அவர் பெரும் ஜோதிப்பிழம்பாகத் தோன்ற பிரம்மா, திருமால் இருவராலும் அடி, முடியைக் காண இயலவில்லை. இருவரின் அகங்காரம் அழிந்து பட அந்தக் கணத்தில் ஜோதிப் பிழம்பிலிருந்து சிவபிரான் சிவலிங்கத் திருவுருவில் வெளி வந்தார். ஜோதிப் பிழம்பே அருணாசலம் ஆனது.

இந்த மலையைப் பற்றி பகவான் ரமண மஹரிஷி கூறுகையில், ‘கைலாயத்தில் சிவன் உறைகிறார். ஆனால் இந்த மலையே சிவபிரான் தான்” என்று கூறியருளினார். ஆக இங்கு கிரிவலம் பெரும் சிறப்பைப் பெறுகிறது.

இங்கு கார்த்திகை தீபத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். இறைவனின் கர்ப்பக்ருஹத்தில் கற்பூரம் ஏற்றப்பட அதிலிருந்து ஒரு மடக்கில் (அகல்) நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்படுகிறது. நந்திதேவர் முன்னிலையில் ஏற்றப்படும் ஐந்து நெய்விளக்குகள் பஞ்ச மூர்த்தங்களைக் குறிக்கும். அம்மன் சந்நிதியில் ஏற்றப்படும் ஐந்து நெய்த்திரி மடக்குகள் பஞ்ச சக்தியைக் குறிக்கும். மாலையில் அனைத்து தீபங்களும் ஒன்று சேர்க்கப்பட்டு, அனைத்தும் இறைவனில் ஐக்கியம் என்ற உண்மையைப் புலப்படுத்தும். அன்று மட்டும் ஆண்டு முழுவதும் வெளிவராத அர்த்தநாரீஸ்வரர் திருவீதி உலா வருவார்.

சிவபிரானின் இடப்பாகத்தில் அன்னை இடம் பெற்றது கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளிலே தான். 

ஒன்று சேர்க்கப்பட்ட தீபங்கள் கொடிமரம் அருகே அடையாளமாக அசைக்கப்பட மலை மீது தீபம் ஏற்றப்படும்.

பல மைல் தூரம் தெரியும் இதைப் பார்த்தாலேயே அனைத்துப் பாவங்களும் போகும். நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்.

ஐந்து அடி உயரமுள்ள பிரம்மாண்டமான கொப்பரையில் பசுக்களின் நெய் தாரை தாரையாக ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்பட லட்சக்கணக்கான மக்கள் அதை தரிசித்து வழிபடுவது இன்றளவு நடக்கும் ஒரு தெய்வீக நிகழ்வாகும்.

வள்ளலார் விளக்கும் தீப மகிமை

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற தாரக மந்திரத்தை வழங்கிய வள்ளலார் பெருமான், இல்லத்தில் தீபம் ஏற்றுவதன் முக்கியத்துவத்தைப் பலவாறாக விளக்கியுள்ளார். அவற்றில் ஒரு சிறு பகுதி இது (அவரது சொற்களிலேயே தரப்படுகிறது) :-

“இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கப்படாது. ஏனெனில், அப்படியிருந்தால் அது ஆயுள் நஷ்டத்தை உண்டுபண்ணும் ஆகையால் நாம் வாழுகிற வீட்டில் தீபத்தை வைத்து ஆயுளை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.”

“தீபத்தில், ஒளி, சோபை, பிரகாசம் என்ற மூன்றில் பிரகாசம் காரண அக்கினி. சோபை காரணகாரிய அக்கினி. ஒளி காரிய அக்கினி.”

 ஆயுளை தீர்க்கமாக்கும் தீபமேற்றுதல் குறித்த முழு விளக்கத்தையும் அவரது உபதேசக் குறிப்புகளில் காணலாம்.

நட்சத்திரமாலை விளக்குகள்

பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி வரை உள்ள ஆலயங்களில் தினமும் ஏற்றப்படும் தீப வகைகள் ஏராளம். விளக்குகளில் மட்டும் சுமார் ஐநூறு வகைகள் உண்டு. இவை அனைத்துமே நலம் தருபவையே. ஒளிச் சுடர் விளக்குகள் ஆங்காங்கே உள்ள மக்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்ய ஏற்றப்படுகின்றன.

ஆலயங்களுக்குச் செல்வோர் இறைவனைத் தொழும் போது ஏற்படும் நலன்களை இந்த விளக்குகள் தூண்டி விடுகின்றன. இந்த வகையில் எடுத்துக்காட்டாக, ஒரே ஒரு தலத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.

பாண்டி வளநாட்டில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ளதும் பழம்பெரும் நூல்களால் போற்றிப் புகழப்படுவதுமாகிய ஒரு சிவத் தலம் திருப்பெருந்துறை ஆகும்.

இந்தத் திருக்கோயிலில் இடப்படும் தீப வகைகள் சிறப்புப் பெயர் பெற்று விளங்குகின்றன.

அவையாவன:

நட்சத்திரமாலை : இதிலுள்ள தீபங்கள் இருபத்தேழு. சக்கரத்தில் இருபத்துநான்கு. மேலே மூன்று. இது இங்குள்ள ஆறு சபைகளுள் ஒன்றான ஆனந்தசபையின் மூலஸ்தானத்திற்குப் பின்னால் உள்ளது.

கலா தீபம் : இதிலுள்ள தீபங்கள் ஐந்து. இது சித் சபையில் உள்ளது.

வர்ண தீபம் : வர்ணம் என்றால் எழுத்து என்று பொருள். இதில் உள்ள தீபங்கள் ஐம்பத்தொன்று. இது சத்சபையில் உள்ளது.

தத்துவ தீபம் : இதிலுள்ள தீபங்கள் முப்பத்தாறு. இது தேவ சபையிலுள்ளது. முப்பத்தாறு தத்துவங்களை  இவை குறிக்கின்றன.

புவன தீபம் : இதிலுள்ள தீபங்கள் 224. இது தேவ சபையில் தத்துவ தீபத்திற்கு முன்னேயுள்ளது. இதனை தீப மாலை என்றும் கூறுவர்.

புவனம் 224ஐக் குறிப்பது புவனதீபம்.

பத தீபம் : இதிலுள்ள தீபங்கள் எண்பத்தொன்று. இது இங்குள்ள குதிரைச் சேவகர்க்குப் பின் உள்ளது. பதங்கள் எண்பத்தொன்றைக் குறிப்பது பத தீபம்.

மஹாபாரதத்தில் தீபதானம் பற்றிய விளக்கம்

தானங்களில் தீப தான மகிமையைப் பற்றி பீஷ்மர் தர்மபுத்திரருக்கு விளக்கும் போது சுக்ராசாரியாருக்கும் பலிக்கும் இடையே நடந்த உரையாடலைக் குறிப்பிடுகிறார்.

“தனக்கு மேன்மையை விரும்புபவன் கோவிலிலும் சபாமண்டபத்திலும் நாற்சந்தியிலும் மலையிலும், உயர்ந்த மரத்திலும் தீபங்களை நித்தியமாக வைக்க வேண்டும். தீபம் வைக்கும் மனிதன் மனித குலத்திற்கே பிரகாசமாகவும் பரிசுத்த ஆத்மாவாகவும் பெயர் பெற்றவனாக இருந்து தேஜோலோகத்தை அடைவான். தீபத்தை தானமாகக் கொடுப்பவன் சொர்க்கலோகத்தில் தீபமாலைகளின் நடுவில் விளங்குவான்.” இன்னும் அதிக விவரங்களை மகாபாரதம், அநுசாஸன பர்வம் 155வது அத்தியாயத்தில் படிக்கலாம்.

 கார்த்திகை தீப வெண்பா

காஞ்சிபுரம் புராணிகர் சோணாசல பாரதியார் (1859-1925) இயற்றிய திருவண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா தீப மகிமைகளை விளக்கும் ஒரு அற்புதமான நூல். இதில் தீபம் ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள் சிறந்த வரலாறுகளுடனும் உண்மை சம்பவங்களுடனும் குறிப்பிடப்படுகின்றன. காப்புப் பாடலுடன் நூறு வெண்பாக்கள் அடங்கிய இந்த நூலைப் படிக்கும் அனைவரும் உடனே தீபம் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டு அனைத்து நலன்களையும் பெறுவர் என்பதில் ஐயமில்லை.

இதை இணையதளத்தில் www.projectmadurai.org என்ற தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ் மங்கையர் அவசியம் படிக்க வேண்டிய ஒரு அரிய தமிழ்ச் செல்வம் இது.

இதில் இறுதியாக வரும் இரு பாடல்கள் இதோ:

சிந்தா மணிகாம தேனு பதுமநிதி
யுந்தாழ்ந் தவருக்கருள்செ யுந்தீப-நந்தா
வியப்புள்ள சோணமலை மேற்றிய நல்ல
பயப்புள்ள கார்த்திகைத்தீ பம்.
புத்திதருந் தீபநல்ல புத்திரசம் பத்துமுதல்
சித்தீதருந் தீபஞ்சிவதீபஞ்-சத்திக்
குயிராகுஞ் சோணமலை யோங்கிவளர் ஞானப்
பயிராகுங் கார்த்திகைத்தீ பம்.தீபம் ஏற்றுவோம். பதினாறு பேறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோம்.தீப மங்கள ஜோதி நமோ நம!

குறிப்பு : மாலைமலர் நாளிதழில் 7-12-2019 இதழில் வெளியாகியுள்ள

‘திருவிளக்கு ஏற்றுவோம், செல்வச் சிகரம் ஏறுவோம்!’ கட்டுரையை இங்கு நினைவு கூரலாம். இதை இணையதளத்தில், கட்டுரை தலைப்புகட்டுரையாளர் பெயரைப் பதிவிட்டு எப்போதும் படிக்கலாம்தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

***