17 வருடங்களில் 17 அறிவுரைகள்! (Post No.13,001)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.001

Date uploaded in London – — 12 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஆரோக்கிய மாத இதழ் ஹெல்த்கேர் பிப்ரவரி 2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

17 வருடங்களில் 17 அறிவுரைகள்!

ச.நாகராஜன்

மரியா பொபோவா (Maria Popova) என்ற பெண்மணியால் 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி The Marginalian என்ற இணையதள இதழ் ஆரம்பிக்கப்பட்டது.

பத்திரிகைகள் வெளியிடும் சாதாரணமான கட்டுரைகளை விட வித்தியாசமான தெர்தெடுக்கப்பட்ட நல்ல கட்டுரைகளை மரியா வெளியிடுகிறார்.

17 ஆண்டுகளை வெற்றிகரமாக இந்த இதழ் கடந்து விட்டது. தனது 17 ஆண்டு பத்திரிகை அனுபவத்தில் தான் கற்ற சிறந்த 17 அறிவுரைகளைத் தொகுத்து 2024 ஆரம்பிக்கவிருக்கும் தருணத்தில் அவர் வழங்கியிருக்கிறார்.

அந்தக் கட்டுரையின் சுருக்கம் தான் இது: 

1. மற்றவர்களிடம் கடன் வாங்கிய கருத்துக்களை வைத்து வாழ்க்கையை நடத்த வேண்டாம். பொதுவாக, அவற்றை நமது வழிகாட்டும் நெறிகளாக வைத்துக் கொண்டு அதையொட்டியே நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம். அதை விட்டு விடுங்கள். சிறிது சங்கடமாக இருந்தாலும் கூட உங்களது மனதை மாற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கையை சீராக்கும் உண்மையான எண்ணங்களில் உங்கள் கருத்தைச் செலுத்துங்கள்.

2. பெரும் புகழுக்காகவோ அல்லது பணத்திற்காகவோ அல்லது அந்தஸ்திற்காகவோ எதையும் செய்ய வேண்டாம்.
“அந்தஸ்து என்பது ஒரு சக்தி வாய்ந்த காந்தம். அது நீங்கள் அனுபவிக்கும் உங்கள் நம்பிக்கைகளை கூட வளைத்து விடும்” என்கிறார் பால் க்ரஹாம் (Paul Graham).

அந்தஸ்து நீங்கள் விரும்புவதைச் செய்ய விடாது. நீங்கள் எதை விரும்பவேண்டுமோ அதை விரும்பச் செய்து விடும். ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்

3.  பெருந்தன்மையுடன் தாராளமாக இருங்கள். உங்கள் நேரம், உங்களின் ஆதார வளம் ஆகியவற்றை நன்கு பெருந்தன்மையுடன் மற்றவருக்குக் கொடுங்கள். முக்கியமாக வார்த்தைகளில் கஞ்சத்தனம் வேண்டாம். எதையும் விமரிசிப்பது சுபலம். ஆனால் வாழ்த்துவது கஷ்டம். அனைத்தையும் புரிந்துகொள்ளுங்கள். அனைவரையும் உங்களைப் புரிந்துகொள்ளச் செய்யுங்கள்.

4. உங்கள் வாழ்க்கையில் சில அமைதி நேர பாக்கெட்டுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி செய்யுங்கள். சைக்கிளில் சிறிது தூரம் செல்லுங்கள். மிகச் சிறந்த கருத்துக்கள் இந்த நேரத்தில் தான் உருவாகின்றன. ஆழ்நிலை மனத்திலிருந்து வரும் சிறந்த கருத்துக்களைப் பெறுங்கள். தூக்கத்தைப் பொருத்த மட்டில் ஒரு ஒழுக்க நியதியைக் கடைப்பிடியுங்கள். வேலையிலும் அதே போல ஒரு நியதியைக் கடைப்பிடியுங்கள். உங்கள் உயிரையும் ஆரோக்கியத்தையும் விட எது தான் சிறந்ததாக இருக்க முடியும்?

5. “மற்றவர்கள் தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லும் போது அதை நம்புங்கள். ஆனால் அவர்கள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று சொல்லும் போது அதை நம்பாதீர்கள்” என்கிறார் மாயா ஆஞ்சலோ (Maya Angelou). உங்களைப் பற்றி நன்கு அறிந்தவர் நீங்கள் ஒருவரே தான். உங்களின் நேர்மைத் திறம் பற்றி உங்கள் மனச்சாட்சி மட்டுமே அறியும்.

6. நமது சமுதாயம் நம்மை நமது திறனாலும், சம்பாதிக்கும் பணத்தாலும், இதையோ அதையோ செய்வதாலும் தான் மதிக்கிறது. உற்பத்தித்திறன் என்பது இந்தக் காலத்திய நடைமுறையாகி விட்டது. ஆனால் அதுவே தான் எல்லாம் என்பது நம்மை சந்தோஷம் அடைவதிலிருந்தும்  வாழ்க்கையை என்ன என்று புரிந்துகொள்வதிலிருந்தும் தடுக்கிறது. நாம் வாழ்நாளை எப்படிக் கழிக்கிறோம் என்பதே நமது வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைச் சொல்கிறது.

7. நல்லதை அடைய எத்தனை நாள் ஆனாலும் சரி தான், அதற்காகப் பொறுத்திருங்கள். ஒரே நாளில் வெற்றி என்பது ஒரு போலியான கட்டுக்கதை. டக்கென்று மலரானது மலர்ந்து விடுவதில்லை. அதற்குரிய காலத்தை அது எடுத்துக் கொள்கிறதல்லவா?

8. எது உங்களை உற்சாகப்படுத்தி உங்களை உயரத்தூக்கி விடுகிறது என்பதை கவனியுங்கள். எவர்களது சிந்தனை, நூல்கள், பேச்சு, உரையாடல் உங்களை ஊக்குவிக்கிறது? அதை அடிக்கடி நாடுங்கள்.

9. இலட்சியவாதியாக இருக்க பயப்படாதீர்கள். நமது வாழ்க்கையில் நமது குறிக்கோள் அனைவரையும் மேலேற்றுவது தான். அவர்களைக் கீழே இறக்கி விடுவதல்ல. நல்ல இலட்சியத்தைக் கடைப்பிடியுங்கள். பண்பாட்டை உயர்த்துங்கள்.

10. சிடுசிடுப்பான எரிந்து விழும் தன்மையை எதிர்த்து நில்லுங்கள். கெட்ட விமரிசனங்கள் ஆக்க பூர்வமான திறமையை அழிக்கிறது. உற்சாகத்துடனும் தர்க்கரீதியான நம்பிக்கையுடனும் வாழ்பவர்களை ஆதரியுங்கள்.

11. ‘Pi’  பற்றிய அபூர்வமான கவிதையை நிச்சயம் படியுங்கள். நமது வாழ்க்கை வரைபடங்கள், நமது பிரபஞ்சம் பற்றிய கருத்துக்கள் உள்ளாகவும் வெளியாகவும் எப்படி இருக்கிறது என்பதை கேள்வி கேட்டு அறியுங்கள்.

12. அற்புதமான வாழ்க்கை வாழ்ந்தோர் ஏராளமான உள்ளனர். அவர்களைப் பற்றி அறியலாம்; அப்படியே வாழ முயலலாம்.

13. மன்னித்து விடுங்கள். மன்னித்துக் கொண்டே இருங்கள். மீண்டும் மன்னித்து விடுங்கள். உற்சாகமான உறவுகள் கடலின் மேலே மிதக்கும் படகு போல. ஆனால் ஆழ்கடலின் அடியில் இருளில் செல்லும் சப்மரீன்களும் உள்ளன. மன்னிப்பு என்பது ஒரு இரசவாதம். அது ஆழ்கடலில் மூழ்கி இருக்கும் சப்மரீனை மேலே எழ வைக்கிறது.

14. வாழ்க்கையை அனுபவியுங்கள். சின்னக் குழந்தை ஷூவை எடுத்து சரியான காலில் போடுவது போல, வானத்தை ஒரு சிறிய கலர் க்ரேயானால் குழந்தை காகிதத்தில் வரைய முயல்வது போலச் செயல்படுங்கள்.

வாழ்க்கையில் சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவியுங்கள். அன்றாட நிகழ்ச்சிகளில் உங்களை மகிழ்ச்சிப் படுத்தும் ஏராளமான சிறுசிறு விஷயங்கள் உள்ளன. அவற்றை இனம் காணுங்கள்.

15. இன்றைய நிலையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அதைவிடப் பன்மடங்கு பெரிதாக வளர்ந்து விடுங்கள்.

16. தன்னைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு விடுங்கள். உங்களிடமிருந்து வெளியே வாருங்கள்.

17. நீங்கள் கற்பனை செய்தபடியோ அல்லது நம்பிக்கொண்டிருக்கும் படியோ ஒவ்வொரு விஷயமும் நடக்காது. வாழ்க்கையில் ஏமாற்றங்கள் உண்டு. ஏமாற்றங்களே திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும். வால்ட் விட்மனின் இந்தக் கவிதை வரிகளைப்

படியுங்கள். உடைந்துபோன அவரது மனமே உலகம் போற்றும் இந்தக் Leaves of Grass என்ற கவிதையை உருவாக்கி விட்டது.

Sometimes with one I love I fill myself with rage for fear I effuse
unreturn’d love,
But now I think there is no unreturn’d love, the pay is certain one
way or another,

(I loved a certain person ardently and my love was not return’d,
Yet out of that I have written these songs.)

(நான் ஒருவரை வெகுவாக நேசித்தேன். ஆனால் எனது அன்பு அவரால் திருப்பிச் செலுத்தப்படவில்லை. என்றாலும் கூட அதனால் தான் நான் இந்த பாடல்களை எழுதினேன்)

***

Leave a comment

Leave a comment