உஜ்ஜைனி நகரில் வேத கடிகாரம் (Post No.13,045)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,045

Date uploaded in London – –   27 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

உஜ்ஜைனி நகரில் வேத கடிகாரம்

உலகிலேயே முதல் தடவையாக வேத கடிகாரம் ஒன்று மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜைனி (UJJAIN)  நகரில் நிறுவப்பட்டுள்ளது. இது

இந்திய தேசீய நேரம் Indian Standard Time (IST)  , க்ரினீச் நேரம் Greenwich Mean Time (GMT).  ஆகிவற்றோடு வேத கால பஞ்சாங்கம் போல முஹுர்த்தம், நாழிகை, முதலிய தகவல்களையும் அளிக்கும். ஜோதிடத்திலும் சமயச் சடங்குகளிலும் நம்பிக்கை கொண்டோருக்கு இது மிக அவசியம் ஆகும்

உஜ்ஜைனி நகரம் பல விஷயங்களில் புகழ் பெற்றது. ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. ஜந்தர் மந்தர் என்னும் 300 ஆண்டுப் பழமையான வானாராய்ச்சிக் கூடம் உள்ள இடம். மேலும் கிரினீச் முதலிய கோடுகளை வெள்ளைக்காரர்கள் நிர்ணயிப்பதற்கு முன்னரே மகர ரேகை செல்லும் இடம் உஜ்ஜைனி என்று இந்துக்கள் கண்டு பிடித்தனர். அதையே நாட்டின் மையமாகக் கருதினர். இன்றும் இந்திய தேசீய நேரம் அதை வைத்தே கணக்கிடப்படுகிறது.

.85 அடி உயர கோபுரத்தின்மேல் ஜந்தர் மந்தர் வானாராய்ச்சிக் கூடத்திற்குள் இந்தக்க கடிகாரம் கட்டப்பட்டுள்ளது. மார்ச் முதல் தேதியில் பிரதமர் நரேந்திர மோடி இதைத்திறந்து வைக்கிறார்..

இது கிரகங்களில் நிலையையும், கிரகணம் முதலியன வரப்போவதையும் கணக்கிட்டுக்குக் காட்டிவிடும்

இந்துக்களின் நாள்,  காலை சூரிய உதயத்திலிருந்தது மறுநாள் சூரிய உதயம் வரை கணக்கிடப்படுகிறது . அதன் அடிப்படையிலேயே இந்தக் கடிகாரமும் இயங்கும்.

இதன் அருகே அரசாங்கத்தின் ஜிவாஜி வானோக்கு நிலையமும் இருக்கிறது .

ஒரு முகூர்த்தம் 48 நிமிடங்கள் ஆகும். ஒருநாளில் 30  முகூர்த்தங்கள் இருக்கும் . சூரிய உதயத்தின்போது துவங்கி 30  மணிகளைக் காட்டும் ; அதாவது ஒருநாளில் 30 மணிகள் ; ஒரு மணிக்கு 48 நிமிடம்

நாழிகை வாய்ப்பாடு

ஒரு நாழிகை – 24  நிமிடங்கள்

ஒரு முகூர்த்தம் – 48  நிமிடங்கள்

ஒரு நாள் – 60  நாழிகை அல்லது 30  முகூர்த்தம்

இந்தக் கடிகாரத்தைக் கட்டுவதற்கு 1-62  கோடி ரூபாய் செலவானது. இதை மொபைல்போன் முதலியவற்றிலும் பார்க்கும்படி வசதிகள் செய்யப்பட்டுள்ளன .

–Subham—

Tags=- உஜ்ஜைனி , வேத கடிகாரம் ,

Leave a comment

1 Comment

  1. Balasubramanian Ammunni's avatar

    Balasubramanian Ammunni

     /  February 27, 2024

    I wish you could have also told us how to get this in the cell phone for foreign Indians usintheir cell phone and getting information about muhurta etc.,

Leave a comment