
Date uploaded in London – – 28 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

Quiz Serial Number- 116
1.நாமக்கல் பெயரைச் சொன்னவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் மேதை யார் ?
XXXX
2.நாமக்கல் கோவிலில் உறையும் தெய்வங்கள் யார் ?
XXX
3.நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலின் சிறப்புகள் என்ன?
XXX
4.நாமக்கல்லில் உள்ள மற்றோரு கோவிலான ஆஞ்சனேயர் கோவிலின் சிறப்பு என்ன ?
XXX
5. நாமக்கல் கோட்டையில் என்ன இருக்கிறது? யார் இதைக் கட்டினார்கள் ?
xxxx
6. இந்தக் குன்று பற்றிய கதை என்ன ?
xxxx
7.இந்த நகரை முட்டை நகரம் என்று அழைப்பது ஏன்?
xxxx
8. நாமக்கல் எங்கே இருக்கிறது ?
xxxx
9.நாமக்கல் அருகிலுள்ள மலையும் , நதியும் எவை ? தொடர்புடைய கவிஞரும் கடை ஏழு வள்ளலும் யாவர்?
xxxx
10.நாமக்கல்லில் என்ன உற்சவம் நடக்கும்?
xxxx
விடைகள்

1.கணித மேதை ராமானுஜன் ; அவர் பிறந்தது ஈரோட்டில்; ஆயினும் அவருடைய குல தெய்வமான நாமகிரிப்பேட்டை தாயார்தான் தனக்கு கனவில் , கணித அற்புதங்களை வெளிப்படுத்தினார் என்கிறார்.
XXX
2.பிரதான தெய்வம் நரசிம்மர் ; அவர் கைகளில் சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் காணலாம். அவரது பாதத்தின் கீழ், சூரியனும் சந்திரனும் இரண்டு தனித்தனி உருவங்களில் சித்தரிக்கப்படுகின்றன. சிவனும் பிரம்மாவும் இருபுறமும் காணப்படுகின்றனர். எனவே இக்கோயில் திரிமூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. நாமகிரி தாயார் மற்றும் லக்ஷ்மி நாராயணா ஆகிய இரு சன்னதிகளில் அமர்ந்துள்ளனர். பிரதான கோவிலுக்கு மேலே ரங்கநாதருக்கு சன்னதி உள்ளது.
XXXX
3.இது பாண்டியர் கால கோவில் ; 1200 ஆண்டுகளுக்கு முந்தையது . மலையைக் குடைந்து கட்டப்பட்டுள்ளது. கல் தூண்களும் சிற்பங்களும் நிறைந்தது .
XXXX
4. நாமக்கல் பெருமாளை நோக்கி கைகூப்பிய வண்ணம் மிகப்பெரிய ஹனுமார் (அனுமன்) சிலை நின்ற வடிவத்தில் இருக்கிறது. இதன் உயரம் 22 அடி. அடி முதல் முடி வரை 18 அடி உயரம் . 1500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது. அனுமார் கோவிலுக்கு கூரை கிடையாது.
XXX

5.நாமக்கல் கோட்டை 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரே கல்லாலான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் ஓரு கோயிலும், மசூதியும் உள்ளன. தற்காலத்தில் இந்தக் கோட்டை தமிழக அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோட்டை 16ஆம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரான ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது. பின்னர் திப்பு சுல்தான் இந்தக் கோட்டையைப் பயன்படுத்தினான் .மலையின் கிழக்கு பகுதியில் அரங்கநாதர் கோவிலும் மேற்கு பகுதியில் நரசிம்மர் கோவிலும் உள்ளன. இக்கோவில்களை கி.பி. 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
xxxx
6. ராமாயணக் கதையில் அரிய மூலிகைகளைக் கொண்ட சஞ்சீவி மலையை அனுமன் கொண்டுவந்த சம்பவம் வருகிறது . அப்போது அவர் கொண்டுவந்த ஒரு சாளக்கிராமக் கல்லை கீழே வைக்க அதை மீண்டும் எடுக்க முடியவில்லை; அதுவே குன்றாக வளர்ந்துவிட்டது .
xxxx
7.தமிழ் நாட்டிலுள்ள கோழிப் பண்ணைகளில் 75 சதவிகிதம் நாமக்கல் வட்டாரத்தில்தான் இருக்கின்றன. சுமார் 7 கோடி கோழிகள் மூலம் ஒவ்வொரு நாளும் 50 கோடி முட்டைகள் கிடைக்கின்றன.
xxxx
8.ஏறத்தாழ தமிழ் நாட்டின் மத்தியில் உள்ளது. வடக்கில் சேலமும் தெற்கில் கரூரும் உள்ளன . சேலத்திலிருந்து 52 கிமீ; கரூரிலிருந்து சுமார் 40 கி.மீ.
xxxx


9. கொல்லி மலை; காவிரி நதி ; கடையெழு வள்ளல் — வல்வில் ஓரி ; நாமக்கல் கவிஞர் –ராமலிங்கம் பிள்ளை
xxxxx
10. பங்குனி உத்தர உற்சவம் சிறப்பாக நடக்கும் ; அப்பொழுது இறைவனின் வீதி உலா நடைபெறும் . கோவில் உற்சவம் தவிர வல்வில் ஓரி உற்சவ மும் நடைபெறுகிறது .
—சுபம்—
tags- நாமக்கல் , கவிஞர், ஆஞ்சனேயர், கோட்டை , கணித மேதை, ராமானுஜன், ஓரி, கொல்லிமலை, நரசிம்மர் கோவில்